|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 10:02 PM

<>இப்படிக்கு கவிதை

Filed Under () By SUFFIX at 10:02 PM



நறுக்கினார் போல் நாலே வரிகள்
நான்காயிரம் மொழிப்பெயர்ப்பு
நானூறு பொழிப்புரைப்பு
விவ‌ர‌மானோர் விவாதிக்க,
அற்றோரோ ஆமோதித்தர்!

கவிதை கைக்குட்டைத்தான்,
கரை புரன்டது காவிரியாய்
வார்த்தை விளையாட்டாய்
விளையாடியது அவர் நாவால்

எதுகை மோனையாய் எடுத்துரைத்து
இசையோடு இழைத்து எனை
இனிதே இன்புற்றார்
பார்த்த‌லும், கேட்ட‌லும், ப‌கிர்த‌லும்
நாள் முழுதும் அவருட‌ன் நான்

மஞ்சனையில் வஞ்சனையாய்
கெஞ்சியே குழைந்திடுவார்
கொஞ்சியே காதலதன்னை
கவிதையால் கழைந்திடுவார்

அடுக்கடுக்காய் ஆயிர‌ம்பொய்
அத்தனையும் கவிதைத்தானாம்

க‌ய‌ல் விழிகளிரன்டை
க‌ளவாடினார் எனை வைத்து
காத‌ல் ம‌ழை பெயச்செய்தார்
க‌ருங்கூந்த‌ல் கார்மேக‌மாம்

சிதைத்தார் செவ்வித‌ழை
செந்தேனது,
புல‌வ‌ன் நானென்றார்
செம்மேனியாள் செய‌லிழந்தாள்
அங்கேயும் நானிருந்தேன்

காதலோ காமமோ
காத்திருப்பேன் க‌விதையாய்
கனக்கிலடங்கா கனா உனக்கு,
கட்டவிழ் நானி நிற்ப்பேன்

ந‌ங்கூர‌மாய் ந‌ம் ந‌ட்பு,
இருத்திவிடு
இரும்புச்ச‌ங்கிலியாய் எனை இனைத்து

வீரமும் தீரமும்
வெகுன்டெழட்டும் வைர வரிகளாய்
தடைகளை தகர்த்தெறி
எரிக்கட்டும் உன் எழுத்துக்கள்

...இப்ப‌டிக்கு க‌விதை



39 comments

நட்புடன் ஜமால் on July 7, 2009 at 10:19 AM  

கவிதை பாடிய கவிதை ...

அருமை ...


SUFFIX on July 7, 2009 at 10:26 AM  

நன்றி ஜமால், சிறகடிக்க சிறுமுயற்சி செய்கிரேன்!!


சிநேகிதன் அக்பர் on July 7, 2009 at 10:41 AM  

அருமையான கவிதை.

எப்படி உங்களால் மட்டும்.


அப்துல்மாலிக் on July 7, 2009 at 10:45 AM  

கவிதையை கலாய்க்க ஒரு கவிதை

இது ஷாஃபியால் மட்டுமே முடியும்

நல்ல எழுத்து முன்னேற்றம் வாழ்த்துக்கள்


நட்புடன் ஜமால் on July 7, 2009 at 10:48 AM  

கவிதை கைக்குட்டைத்தான்,
கரை புரன்டது காவிரியாய்
வார்த்தை விளையாட்டாய்
விளையாடியது அவர் நாவால்\\

அருமை ...


SUFFIX on July 7, 2009 at 10:52 AM  

//அபுஅஃப்ஸர் said...
கவிதையை கலாய்க்க ஒரு கவிதை

இது ஷாஃபியால் மட்டுமே முடியும்//

அப்படியெல்லாம் சொல்லிப்புடாதிய அபூ, உங்களைப்போன்ற நன்பர்களின் தோட்டத்தில் மேய்ந்ததின் விளைவே என் எழுத்துக்கள்


SUFFIX on July 7, 2009 at 10:55 AM  

//நட்புடன் ஜமால் said...
கவிதை கைக்குட்டைத்தான்,
கரை புரன்டது காவிரியாய்
வார்த்தை விளையாட்டாய்
விளையாடியது அவர் நாவால்\\

அருமை ...//

உங்களுக்கு தெரியாததா கைக்குட்டையை பற்றி.


அப்துல்மாலிக் on July 7, 2009 at 10:58 AM  

//நறுக்கினார் போல் நாலே வரிகள்
நான்காயிரம் மொழிப்பெயர்ப்பு//

கவிதைகள் இப்படியும் இல்லை இப்படித்தான் இருக்கும் இதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை இந்த கவிதையை படித்து வியந்தேன்

வித்தியாசமான சிந்தனை

இப்படிதான் பொத்திவைத்த அனைத்தும் வெள்ளம்போல் கரைபுரண்டு............


சப்ராஸ் அபூ பக்கர் on July 7, 2009 at 10:59 AM  

////மஞ்சனையில் வஞ்சனையாய்
கெஞ்சியே குழைந்திடுவார்
கொஞ்சியே காதலதன்னை
கவிதையால் கழைந்திடுவார்////

மனதைத் தொட்ட வரிகள்.....

வாழ்த்துக்கள் அண்ணா......


SUFFIX on July 7, 2009 at 11:11 AM  

////மஞ்சனையில் வஞ்சனையாய்
கெஞ்சியே குழைந்திடுவார்
கொஞ்சியே காதலதன்னை
கவிதையால் கழைந்திடுவார்////

மனதைத் தொட்ட வரிகள்.....

வாழ்த்துக்கள் அண்ணா......//

வந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி சர்ஃப்!!


SUFFIX on July 7, 2009 at 11:14 AM  

//அபுஅஃப்ஸர் said...
//நறுக்கினார் போல் நாலே வரிகள்
நான்காயிரம் மொழிப்பெயர்ப்பு//

கவிதைகள் இப்படியும் இல்லை இப்படித்தான் இருக்கும் இதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை இந்த கவிதையை படித்து வியந்தேன்

வித்தியாசமான சிந்தனை

இப்படிதான் பொத்திவைத்த அனைத்தும் வெள்ளம்போல் கரைபுரண்டு............//

ஆமாம் அபூ, முற்றிலும் உண்மை, அதுக்குத்தான் சிந்தனை ஊற்றுன்னு சொன்னாங்களோ?


S.A. நவாஸுதீன் on July 7, 2009 at 11:44 AM  

கவிதை சொல்லிய கவிதை - ரொம்ப நல்லா இருக்கு ஷஃபி.


S.A. நவாஸுதீன் on July 7, 2009 at 11:47 AM  

கவிதை கைக்குட்டைத்தான்,
கரை புரன்டது காவிரியாய்

நல்ல சிந்தனை. அசத்துங்க. (நான் மறத்தமிழன். அதான் நமக்கு காவிரி வரமாட்டேங்குது. ஹி ஹி ஹி)


sakthi on July 7, 2009 at 11:47 AM  

க‌ய‌ல் விழிகளிரன்டை
க‌ளவாடினார் எனை வைத்து
காத‌ல் ம‌ழை பெயச்செய்தார்
க‌ருங்கூந்த‌ல் கார்மேக‌மாம்


அருமை


SUFFIX on July 7, 2009 at 11:55 AM  

//S.A. நவாஸுதீன் said...
கவிதை கைக்குட்டைத்தான்,
கரை புரன்டது காவிரியாய்

நல்ல சிந்தனை. அசத்துங்க. (நான் மறத்தமிழன். அதான் நமக்கு காவிரி வரமாட்டேங்குது. ஹி ஹி ஹி)//

கவிதையிலாவது ஓடவிடுவோம்


SUFFIX on July 7, 2009 at 11:59 AM  

//sakthi said...
க‌ய‌ல் விழிகளிரன்டை
க‌ளவாடினார் எனை வைத்து
காத‌ல் ம‌ழை பெயச்செய்தார்
க‌ருங்கூந்த‌ல் கார்மேக‌மாம்


அருமை//

நன்றி சக்தி. பிறந்த நாள் வாழ்த்துக்களும், உங்கள் பதிவு வலைச்சரத்தில் வந்தமைக்கும் பாராட்டுக்களும்.


RAMYA on July 7, 2009 at 12:52 PM  

ஷாஃபி கவிதை அற்புதம்!

என் தோழி தமிழால் எனக்கு அறிமுகப் படுத்திய புதுக் கவிதை நீங்கள்!

வாழ்த்துக்கள்!!


SUFFIX on July 7, 2009 at 12:57 PM  

மிக்க நன்றி ரம்யா. வருகைக்கும் பாராட்டுக்களுக்கும்


rose on July 7, 2009 at 1:12 PM  

அடுக்கடுக்காய் ஆயிர‌ம்பொய்
அத்தனையும் கவிதைத்தானாம்

\\
super


rose on July 7, 2009 at 1:13 PM  

vazththukkal safi


SUFFIX on July 7, 2009 at 1:21 PM  

// rose said...
அடுக்கடுக்காய் ஆயிர‌ம்பொய்
அத்தனையும் கவிதைத்தானாம்

\\
super

rose said...
vazththukkal safi//

மெய்யாகவே ரொம்ப தேங்க்ஸ்ப்பா


SUMAZLA/சுமஜ்லா on July 7, 2009 at 1:53 PM  

என்ன அழகான வரிகள்! நானும் என்னென்னமோ எழுதுகிறேன், இது போல புதுக்கவிதை படைக்க வரமாட்டீங்குதே!

//மஞ்சனையில் வஞ்சனையாய்
கெஞ்சியே குழைந்திடுவார்
கொஞ்சியே காதலதன்னை
கவிதையால் கழைந்திடுவார்//

நான் ரசித்த வரிகள். பொய் என்பது சொல்பவனுக்கும் தெரியும். கேட்பவளுக்கும் தெரியும். ஆனால் அந்த பொய்யில் தான் எத்துணை இன்பம். பொய்யும் மெய்யும் கலந்திருப்பதால் தானோ, அதைக் கலவி என்கிறோம்?!


முனைவர் இரா.குணசீலன் on July 7, 2009 at 2:00 PM  

ம்.....
நன்றாகவுள்ளது......


SUFFIX on July 7, 2009 at 2:09 PM  

//SUMAZLA/சுமஜ்லா said...
என்ன அழகான வரிகள்! நானும் என்னென்னமோ எழுதுகிறேன், இது போல புதுக்கவிதை படைக்க வரமாட்டீங்குதே!//

இப்படியெல்லாம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்காதீர்கள்


SUFFIX on July 7, 2009 at 2:10 PM  

//முனைவர்.இரா.குணசீலன் said...
ம்.....
நன்றாகவுள்ளது......//

நன்றி முனைவரே!!


SUFFIX on July 7, 2009 at 2:24 PM  

SUMAZLA/சுமஜ்லா said...
//மஞ்சனையில் வஞ்சனையாய்
கெஞ்சியே குழைந்திடுவார்
கொஞ்சியே காதலதன்னை
கவிதையால் கழைந்திடுவார்//

நான் ரசித்த வரிகள். பொய் என்பது சொல்பவனுக்கும் தெரியும். கேட்பவளுக்கும் தெரியும். ஆனால் அந்த பொய்யில் தான் எத்துணை இன்பம். பொய்யும் மெய்யும் கலந்திருப்பதால் தானோ, அதைக் கலவி என்கிறோம்?!//


கவிதையின் தனிச்சுவையே அதுதானே அக்கா, ப‌டிப்போர் திறமையின் ஆழத்தை பொருத்தது, சில சமயம் நாம் ஒன்று நினைத்து எழுதியிருப்போம், ஆனால் அதனுள் அர்த்தத்தை மற்றவர்கள் சுட்டிக்காட்டும்போது, அடடா..ன்னு தோனும். (இப்படித்தான் ஓட்டிக்கிட்டிருக்கியாலான்னு கேட்டுப்புடாதிய)


sakthi on July 8, 2009 at 3:57 AM  

நறுக்கினார் போல் நாலே வரிகள்
நான்காயிரம் மொழிப்பெயர்ப்பு
நானூறு பொழிப்புரைப்பு
விவ‌ர‌மானோர் விவாதிக்க,
அற்றோரோ ஆமோதித்தர்!

ஆரம்ப வரிகளில் அசத்தலாய்


sakthi on July 8, 2009 at 3:58 AM  

கவிதை கைக்குட்டைத்தான்,
கரை புரன்டது காவிரியாய்
வார்த்தை விளையாட்டாய்
விளையாடியது அவர் நாவால்

செந்தமிழில்.....


sakthi on July 8, 2009 at 3:59 AM  

எதுகை மோனையாய் எடுத்துரைத்து
இசையோடு இழைத்து எனை
இனிதே இன்புற்றார்
பார்த்த‌லும், கேட்ட‌லும், ப‌கிர்த‌லும்
நாள் முழுதும் அவருட‌ன் நான்

என்னங்க இப்படி எல்லாம் எழுதி என்னை இனி கவிதை எனும் பெயரில் மொக்கை போடுவதற்கு யோசிக்க வெச்சுட்டீங்க....

இனி கவிதை எழுதலாம வேண்டாமன்னு யோசிக்கிறேன்....


Anonymous on July 8, 2009 at 8:09 AM  

WOWWWWWWWWWWWWWWWWWWW..

என்னே உன் கவிதையின் சுவை...

புகழவே தோன்றுகிறது பகல்வதற்கு வார்த்தையில்லை...இது தான் கவிதையென்று எடுத்தியம்புவது போல்...புத்தாடையிட்டு புது மெருகேறி அரங்கேறியது காதல் காவியமொன்று...

இதில் எது தேன் எதை ரசித்” தேன்” எனத் தெரியவில்லை தித்துக்கிறது தெவிட்டாதது தான் இதன் பெருமை..வாசிக்க வந்தேன் ஏனோ வசித்தே விட்டேன் வார்த்தைகளில்...

பெருமிதக்கிறேன் என் தம்பி எனக் கொண்டதில்....மேலும் தழைக்க வாழ்த்துக்கள் தம்பி....


SUFFIX on July 8, 2009 at 8:41 AM  

//sakthi said...
எதுகை மோனையாய் எடுத்துரைத்து
இசையோடு இழைத்து எனை
இனிதே இன்புற்றார்
பார்த்த‌லும், கேட்ட‌லும், ப‌கிர்த‌லும்
நாள் முழுதும் அவருட‌ன் நான்

என்னங்க இப்படி எல்லாம் எழுதி என்னை இனி கவிதை எனும் பெயரில் மொக்கை போடுவதற்கு யோசிக்க வெச்சுட்டீங்க....

இனி கவிதை எழுதலாம வேண்டாமன்னு யோசிக்கிறேன்....//

மொக்கை போட்டாலும் எதுகை மோனையோட போடுங்க, கவுஜயா வொர்க் அவுட் ஆகும்னு சொல்றேன்..ரொம்ப யோசிக்காதிங்கம்மா


SUFFIX on July 8, 2009 at 8:54 AM  

//தமிழரசி said...
WOWWWWWWWWWWWWWWWWWWW..

என்னே உன் கவிதையின் சுவை...

புகழவே தோன்றுகிறது பகல்வதற்கு வார்த்தையில்லை...இது தான் கவிதையென்று எடுத்தியம்புவது போல்...புத்தாடையிட்டு புது மெருகேறி அரங்கேறியது காதல் காவியமொன்று...

இதில் எது தேன் எதை ரசித்” தேன்” எனத் தெரியவில்லை தித்துக்கிறது தெவிட்டாதது தான் இதன் பெருமை..வாசிக்க வந்தேன் ஏனோ வசித்தே விட்டேன் வார்த்தைகளில்...

பெருமிதக்கிறேன் என் தம்பி எனக் கொண்டதில்....மேலும் தழைக்க வாழ்த்துக்கள் தம்பி....//

நன்றி அக்கா, வாசித்து, வசித்து, யோசித்து, பெருங்கவி பாடிச்சென்றமைக்கு!!


Starjan (ஸ்டார்ஜன்) on July 8, 2009 at 11:35 AM  

நல்ல கவிதை சூப்பர்


SUFFIX on July 8, 2009 at 11:39 AM  

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல கவிதை சூப்பர்//

நன்றி ஸ்டார்


ப்ரியமுடன் வசந்த் on July 8, 2009 at 7:17 PM  

ஷ்ஷ் அம்மாடியாவ்
நல்ல கவித்திறமை ஷஃபிக்ஸ்


SUFFIX on July 8, 2009 at 8:45 PM  

//பிரியமுடன்.........வசந்த் said...
ஷ்ஷ் அம்மாடியாவ்
நல்ல கவித்திறமை ஷஃபிக்ஸ்//

மிக்க நன்றி வஸந்த்...இனி அடிக்கடி சந்திப்போம் (அந்த 'க்ஸ்' எடுத்துருங்க, 'ஷ‌ஃபி' தான் என்னோட‌ பேரு)


சிநேகிதன் அக்பர் on July 10, 2009 at 10:35 PM  

அக்பர் said...
அருமையான கவிதை.

எப்படி உங்களால் மட்டும்


mukesh on July 11, 2009 at 10:02 AM  

nalla kavithai,

shafi, ithaanai naaal yengerunthai....


அன்புடன் மலிக்கா on September 24, 2009 at 3:03 PM  

கவிதையாய் இனித்தது கவிதை