|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!

தாயிஃப், நாங்கள் இருக்கும் ஜெத்தாவிலிருந்து 80 கி.மி. தூரத்தில் இருக்கும் ஒரு மலை பிரதேசம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,800 மீ உயரம். நமதூர் ஊட்டி போன்று குளிராக இல்லயென்றாலும், அனல் பறக்கும் பாலைவனத்தில் ஒதுங்க நிழல் கிடைத்தார்போல் ஒரு இதம். கடந்த‌ வெள்ளிக்கிழமை சிறிய ஒரு பிக்னிக் சென்று வந்தோம். நிறைய பார்க்க வேண்டியவைகள் இருந்தாலும், நேரம் இன்மை காரணமாக கேபிள் காரில் மட்டுமே செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

தரை மட்டத்திலிருந்து அழகிய சாலை வசதி மலையைச் சுற்றி வடிவமைத்து இருக்கின்றனர், மிகவும் பாதுகாப்புடன் அமைத்திருப்பது பாராட்டுக்குறியது. அதன் அழகிலும், நேர்த்தியிலும் எங்களைப் போன்ற அயல் நாட்டினர்களின் திறமையும், உழைப்பும் நூறு சதிவிகிதம் கொட்டி கிடக்கின்றதென்பது மறுக்க முடியாது உண்மை.

கேபிள் காரிலிருந்து கிளிக்கியவைகளில் சில, நமது நண்பர்களுக்காக:

37 comments

நட்புடன் ஜமால் on August 12, 2009 at 10:18 AM  

அனல் பறக்கும் பாலைவனத்தில் ஒதுங்க நிழல் கிடைத்தார்போல் ஒரு இதம்.]]

படிக்கசொல்லவே சும்மா இதமா இருக்கு

போட்டோஸ் அருமை.

Jaleela Kamal on August 12, 2009 at 10:35 AM  

//அப்பா மலையுடன் அந்த ரோடு அருமையா இருக்கு.
போட்டா எல்லாம் அருமை, கேபிள் கார் பார்த்ததும் அதில் நான் உட்கார்ந்து ரோட்டை எட்டி பார்ப்பது போல் ஒரு பிரமை ...../

ஷபி என் பிளாக்கில் முகப்பில் என் இரண்டு பிள்ளைகள் போட்டோ கூட கேபிள் காரில் எடுத்தது தான்.

அப்துல்மாலிக் on August 12, 2009 at 12:03 PM  

கேபிள் கார்லே போய் கேபிள் டீவீ ரேஞ்சுக்கு ஃபோட்டோஸ் போட்டு கலக்கிட்டீங்க‌

அப்துல்மாலிக் on August 12, 2009 at 12:05 PM  

//தாயிஃப், நாங்கள் இருக்கும் ஜெத்தாவிலிருந்து 80 கி.மி. தூரத்தில் இருக்கும் ஒரு மலை பிரதேசம்/

கடந்த முறை நான் உம்ரா வந்திருந்தபோது இங்கு செல்வதாக பிளான்..............

ஒரு ஷாக் சம்பவத்தால் எல்லாமே கேன்ஷல் ஆகிவிட்டது

ஷ‌ஃபி இந்த பதிவை பார்த்தவுடன் நிச்சயம் ஒரு பயண்ம் மேற்கொள்ளவேண்டும் என்ற தவிப்பு அதிகமாகிவிட்டது

அப்துல்மாலிக் on August 12, 2009 at 12:06 PM  

//எங்களைப் போன்ற அயல் நாட்டினர்களின் திறமையும், உழைப்பும் நூறு சதிவிகிதம் கொட்டி கிடக்கின்றதென்பது மறுக்க முடியாது உண்மை. //

நிச்சயம் மறக்க முடியாது

இந்த உழைப்புலே 20% நம்ம நாட்டுலே காட்டினால் இதைவிட உயர்ந்த இடத்துக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது

நல்ல பகிர்வு ஷஃபி

S.A. நவாஸுதீன் on August 12, 2009 at 1:04 PM  

படங்கள் எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு ஷ‌ஃபி.

S.A. நவாஸுதீன் on August 12, 2009 at 1:04 PM  

நமதூர் ஊட்டி போன்று குளிராக இல்லயென்றாலும், அனல் பறக்கும் பாலைவனத்தில் ஒதுங்க நிழல் கிடைத்தார்போல் ஒரு இதம்

தாயிஃப் சவுதி அரேபியாவின் ஊட்டி என்றால் அபஹா சவுதி அரேபியாவின் சிம்லா மாதிரி.

S.A. நவாஸுதீன் on August 12, 2009 at 1:07 PM  

அபுஅஃப்ஸர் said...

ஷ‌ஃபி இந்த பதிவை பார்த்தவுடன் நிச்சயம் ஒரு பயண்ம் மேற்கொள்ளவேண்டும் என்ற தவிப்பு அதிகமாகிவிட்டது

மச்சான் தாயிஃப் போறேன்னு சொன்னால் சென்னைல கீழ்பாக்கம் போறேன்னு சொல்ற மாதிரி டோய். (ஏன்னா, அதுதான் சவுதியின் கீழ்பாக்கம்)

SUFFIX on August 12, 2009 at 1:33 PM  

//நட்புடன் ஜமால் said...
அனல் பறக்கும் பாலைவனத்தில் ஒதுங்க நிழல் கிடைத்தார்போல் ஒரு இதம்.]]

படிக்கசொல்லவே சும்மா இதமா இருக்கு

போட்டோஸ் அருமை.//

நன்றி ஜமால், இங்கே இப்போது கோடை, அதனால் மக்கள் கூட்டம் அங்கே ஜே ஜே!!

SUFFIX on August 12, 2009 at 1:35 PM  

//Jaleela said...
//அப்பா மலையுடன் அந்த ரோடு அருமையா இருக்கு.
போட்டா எல்லாம் அருமை, கேபிள் கார் பார்த்ததும் அதில் நான் உட்கார்ந்து ரோட்டை எட்டி பார்ப்பது போல் ஒரு பிரமை ...../

ஷபி என் பிளாக்கில் முகப்பில் என் இரண்டு பிள்ளைகள் போட்டோ கூட கேபிள் காரில் எடுத்தது தான்.//

ஓ அப்படியா, எங்கே துபாயில் உள்ள கேபிள் காரில் எடுத்தீங்களா?

SUFFIX on August 12, 2009 at 1:36 PM  

//அபுஅஃப்ஸர் said...
கேபிள் கார்லே போய் கேபிள் டீவீ ரேஞ்சுக்கு ஃபோட்டோஸ் போட்டு கலக்கிட்டீங்க‌//

எல்லாம் உங்களுக்காகத்தான் அபூ

SUFFIX on August 12, 2009 at 1:37 PM  

//அபுஅஃப்ஸர் said...

ஷ‌ஃபி இந்த பதிவை பார்த்தவுடன் நிச்சயம் ஒரு பயண்ம் மேற்கொள்ளவேண்டும் என்ற தவிப்பு அதிகமாகிவிட்டது//

இறைவன் நாடினால் அடுத்த முறை நாம் அனைவரும் செல்வோம் அபூ!!

SUFFIX on August 12, 2009 at 1:40 PM  

//அபுஅஃப்ஸர் said...
//எங்களைப் போன்ற அயல் நாட்டினர்களின் திறமையும், உழைப்பும் நூறு சதிவிகிதம் கொட்டி கிடக்கின்றதென்பது மறுக்க முடியாது உண்மை. //

நிச்சயம் மறக்க முடியாது

இந்த உழைப்புலே 20% நம்ம நாட்டுலே காட்டினால் இதைவிட உயர்ந்த இடத்துக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது

நல்ல பகிர்வு ஷஃபி//

ஆமாம் அபூ, நான் பல முறை இங்கு நிகழும் துரிதமான கட்டிட மற்றும் சாலை பராமரிப்பு வேலைகளைக் கண்டு ஆச்சர்யப்படுவதுண்டு, இதற்க்கு நம் நாட்டின் அரசியல்வாதிகளின் கொள்கை, கொள்ளைகளாக இருக்கலாமோ?

SUFFIX on August 12, 2009 at 1:42 PM  

//S.A. நவாஸுதீன் said...
படங்கள் எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு ஷ‌ஃபி.//

வாங்க நவாஸ், நன்றி!! டிஜிட்டல் கேமராவாக இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்!!

அதிரை அபூபக்கர் on August 12, 2009 at 1:43 PM  
This comment has been removed by the author.

SUFFIX on August 12, 2009 at 1:44 PM  

//S.A. நவாஸுதீன் said...
நமதூர் ஊட்டி போன்று குளிராக இல்லயென்றாலும், அனல் பறக்கும் பாலைவனத்தில் ஒதுங்க நிழல் கிடைத்தார்போல் ஒரு இதம்

தாயிஃப் சவுதி அரேபியாவின் ஊட்டி என்றால் அபஹா சவுதி அரேபியாவின் சிம்லா மாதிரி.//

அப்படியா அதையும் பார்த்துடலாம்!!

அதிரை அபூபக்கர் on August 12, 2009 at 1:44 PM  

உங்களது பயணங்களின் எடுத்த புகைப்படங்கள் அருமை...

rose on August 12, 2009 at 1:46 PM  

ஃபோட்டோ எல்லாம் சூப்பர்

SUFFIX on August 12, 2009 at 1:46 PM  

//S.A. நவாஸுதீன் said...
அபுஅஃப்ஸர் said...

ஷ‌ஃபி இந்த பதிவை பார்த்தவுடன் நிச்சயம் ஒரு பயண்ம் மேற்கொள்ளவேண்டும் என்ற தவிப்பு அதிகமாகிவிட்டது

மச்சான் தாயிஃப் போறேன்னு சொன்னால் சென்னைல கீழ்பாக்கம் போறேன்னு சொல்ற மாதிரி டோய். (ஏன்னா, அதுதான் சவுதியின் கீழ்பாக்கம்)//

அபூ பயந்துராதீங்க, இந்த நவாஸ் எப்போதும் இப்படித்தான்!!

rose on August 12, 2009 at 1:47 PM  

S.A. நவாஸுதீன் said...
அபுஅஃப்ஸர் said...

ஷ‌ஃபி இந்த பதிவை பார்த்தவுடன் நிச்சயம் ஒரு பயண்ம் மேற்கொள்ளவேண்டும் என்ற தவிப்பு அதிகமாகிவிட்டது

மச்சான் தாயிஃப் போறேன்னு சொன்னால் சென்னைல கீழ்பாக்கம் போறேன்னு சொல்ற மாதிரி டோய். (ஏன்னா, அதுதான் சவுதியின் கீழ்பாக்கம்)

\\
ஹா ஹா ஹா

SUFFIX on August 12, 2009 at 1:48 PM  

//அதிரை அபூபக்கர் said...
உங்களது பயணங்களின் எடுத்த புகைப்படங்கள் அருமை...//

நன்றி அபூபக்கர்!!

rose on August 12, 2009 at 1:48 PM  

ஷ‌ஃபிக்ஸ் said...
//S.A. நவாஸுதீன் said...
அபுஅஃப்ஸர் said...

ஷ‌ஃபி இந்த பதிவை பார்த்தவுடன் நிச்சயம் ஒரு பயண்ம் மேற்கொள்ளவேண்டும் என்ற தவிப்பு அதிகமாகிவிட்டது

மச்சான் தாயிஃப் போறேன்னு சொன்னால் சென்னைல கீழ்பாக்கம் போறேன்னு சொல்ற மாதிரி டோய். (ஏன்னா, அதுதான் சவுதியின் கீழ்பாக்கம்)//

அபூ பயந்துராதீங்க, இந்த நவாஸ் எப்போதும் இப்படித்தான்!!

\\
என்ன ஷஃபி அண்ணா தலைவாவ பார்த்து இப்படிதானு சொல்லிட்டிங்க

SUFFIX on August 12, 2009 at 1:50 PM  

//rose said...
ஃபோட்டோ எல்லாம் சூப்பர்//

நன்றி ரோஸ்!!

SUFFIX on August 12, 2009 at 1:51 PM  

// rose said...

ஹா ஹா ஹா//

இந்த மாதிரியெல்லாம் சிரிக்காதிங்க அபூவைப் பார்த்து!!

rose on August 12, 2009 at 1:52 PM  

ஷ‌ஃபிக்ஸ் said...
// rose said...

ஹா ஹா ஹா//

இந்த மாதிரியெல்லாம் சிரிக்காதிங்க அபூவைப் பார்த்து!!

\\
ஹி ஹி ஹி அப்போ இப்படி சிரிக்கலாமா?

SUFFIX on August 12, 2009 at 1:53 PM  

//rose said...

\\
என்ன ஷஃபி அண்ணா தலைவாவ பார்த்து இப்படிதானு சொல்லிட்டிங்க//

இதை விட ஒரு படி மேல போய் வேறு என்ன சொல்ல வேண்டும்?

rose on August 12, 2009 at 1:54 PM  

ஷ‌ஃபிக்ஸ் said...
//rose said...

\\
என்ன ஷஃபி அண்ணா தலைவாவ பார்த்து இப்படிதானு சொல்லிட்டிங்க//

இதை விட ஒரு படி மேல போய் வேறு என்ன சொல்ல வேண்டும்?

\\
தலைவா ரொம்ப நல்லவருருருருனு சொல்லுங்க அண்ணா

SUFFIX on August 12, 2009 at 2:13 PM  

rose said...
ஷ‌ஃபிக்ஸ் said...
//rose said...

\\
என்ன ஷஃபி அண்ணா தலைவாவ பார்த்து இப்படிதானு சொல்லிட்டிங்க//

இதை விட ஒரு படி மேல போய் வேறு என்ன சொல்ல வேண்டும்?

\\
தலைவா ரொம்ப நல்லவருருருருனு சொல்லுங்க அண்ணா//

என்னைய ரொம்ப ஃபோர்ஸ் பன்னாதிங்க‌

Jaleela Kamal on August 12, 2009 at 3:30 PM  

இல்ல ஷபி அது சிங்கப்பூரில் எடுத்தது.

இப்ப கூட மறுபடி பார்த்தா உங்கள் முதல் போட்டோ கேபிள் காரில் உட்கார்ந்து கொண்டு சாலையை எட்டி பார்ப்பது போல் இருக்கு.

நானும் இப்ப ஊர் போய் வந்தப்ப சில போட்டோக்கள் எடுத்து வந்துள்ளேன்

SUFFIX on August 12, 2009 at 3:37 PM  

//Jaleela said...
இல்ல ஷபி அது சிங்கப்பூரில் எடுத்தது.

இப்ப கூட மறுபடி பார்த்தா உங்கள் முதல் போட்டோ கேபிள் காரில் உட்கார்ந்து கொண்டு சாலையை எட்டி பார்ப்பது போல் இருக்கு.

நானும் இப்ப ஊர் போய் வந்தப்ப சில போட்டோக்கள் எடுத்து வந்துள்ளேன்//

ஒ..அது சரி, உங்க ஊரிலும் கேபிள் கார் வந்துடுச்சா, எங்க ஊரில கேபிள் இருக்கு, கார் இருக்கு, ஆனா இன்னும் கேபிள் கார் வரலை!!ஹீ..ஹி.

அப்துல்மாலிக் on August 12, 2009 at 4:14 PM  

என்னய வெச்சி காமெடி.... கீமடி....?

அப்துல்மாலிக் on August 12, 2009 at 4:15 PM  

//S.A. நவாஸுதீன் said...
அபுஅஃப்ஸர் said...

ஷ‌ஃபி இந்த பதிவை பார்த்தவுடன் நிச்சயம் ஒரு பயண்ம் மேற்கொள்ளவேண்டும் என்ற தவிப்பு அதிகமாகிவிட்டது

மச்சான் தாயிஃப் போறேன்னு சொன்னால் சென்னைல கீழ்பாக்கம் போறேன்னு சொல்ற மாதிரி டோய். (ஏன்னா, அதுதான் சவுதியின் கீழ்பாக்கம்)
//

அப்போ ஷ‌ஃபி கீழ்ப்பாக்க‌ம்தான் போனாரா? எங்கேயோ எடுத்த‌ ஃபோட்டோவை போட்டு ந‌ம்ம‌ளையெல்லாம்???? ஹெ ஹெ

SUFFIX on August 12, 2009 at 4:25 PM  

//அபுஅஃப்ஸர் said...
//S.A. நவாஸுதீன் said...
அபுஅஃப்ஸர் said...

ஷ‌ஃபி இந்த பதிவை பார்த்தவுடன் நிச்சயம் ஒரு பயண்ம் மேற்கொள்ளவேண்டும் என்ற தவிப்பு அதிகமாகிவிட்டது

மச்சான் தாயிஃப் போறேன்னு சொன்னால் சென்னைல கீழ்பாக்கம் போறேன்னு சொல்ற மாதிரி டோய். (ஏன்னா, அதுதான் சவுதியின் கீழ்பாக்கம்)
//

அப்போ ஷ‌ஃபி கீழ்ப்பாக்க‌ம்தான் போனாரா? எங்கேயோ எடுத்த‌ ஃபோட்டோவை போட்டு ந‌ம்ம‌ளையெல்லாம்???? ஹெ ஹெ//

நீங்களும் வாங்க ரீபார்மட் செஞ்சுருவோம்!!

அ.மு.செய்யது on August 12, 2009 at 7:52 PM  

போட்டோக்கள் அருமை ஷஃபி...குறிப்பாக பழைய பாதை போட்டோ அரிய புகைப்படம்.

தாயிஃப் நகரம் என்றவுடனே நம் நபி (ஸல்) அவர்கள் அங்கு சென்று அங்குள்ள காஃபிர்களால் கல்லடி பட்டு தலைமுதல் கால்வரை ரத்தம் சொட்ட சொட்ட உயிரே போய்விடும் நிலையிலும் அம்மக்களை இறைவனிடம் மன்னிக்க கோரிய சம்பவம் சட்டென நினைவுக்கு வரும்.

அப்துல்மாலிக் on August 12, 2009 at 9:27 PM  

வடிவேலு ஒரு படத்துலே சொல்றதுபோல் ஒரு சட்டி சோற்றை அப்படியே கவுத்திப்போட்டு ஒரு சட்டி சாம்பாரை ஊத்தி கொளச்சி அடிக்கலாம், சீப்பை எடுத்து தலைவாரிக்கலாம் இதெல்லாம் நடு ரோட்டுலே தான்....

அதை நிரூபிக்கும் விதமாக ரோடுகள் இருக்கின்றன, நிச்சயம் இந்த உழைப்பெல்லாம் நம்மையே சாரும்....

நட்புடன் ஜமால் on August 13, 2009 at 2:49 AM  

தாயிஃப் நகரம் என்றவுடனே நம் நபி (ஸல்) அவர்கள் அங்கு சென்று அங்குள்ள காஃபிர்களால் கல்லடி பட்டு தலைமுதல் கால்வரை ரத்தம் சொட்ட சொட்ட உயிரே போய்விடும் நிலையிலும் அம்மக்களை இறைவனிடம் மன்னிக்க கோரிய சம்பவம் சட்டென நினைவுக்கு வரும்.]]

இதே தான் எனக்கும்

SUFFIX on August 13, 2009 at 8:50 AM  

//அ.மு.செய்யது said...
போட்டோக்கள் அருமை ஷஃபி...குறிப்பாக பழைய பாதை போட்டோ அரிய புகைப்படம்.

தாயிஃப் நகரம் என்றவுடனே நம் நபி (ஸல்) அவர்கள் அங்கு சென்று அங்குள்ள காஃபிர்களால் கல்லடி பட்டு தலைமுதல் கால்வரை ரத்தம் சொட்ட சொட்ட உயிரே போய்விடும் நிலையிலும் அம்மக்களை இறைவனிடம் மன்னிக்க கோரிய சம்பவம் சட்டென நினைவுக்கு வரும்.//

//நட்புடன் ஜமால் said...

இதே தான் எனக்கும்//

அங்கே நபிகள் காலத்தில் கட்டப்பட்ட பள்ளி, இன்னும் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் நிறைய இருக்கிறதாம், இறைவன் நாடினால் அடுத்த முறை சென்று பார்க்க வேண்டும்.