|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!

சமீபத்தில் என்னுடைய வலைப்பதிவிற்க்கு புதிய வார்ப்புரு (Template) மாற்றலாம் என‌, பச்சை நிறத்திலேயே வேறு ஏதாவது நல்ல வடிவமைப்பு கிடைக்குமா என தேடியபோது, கிடைத்தது தான் தற்போது நீங்கள் காணும் இந்த புதிய தோற்றம்.(பிடிச்சுருக்கா?)

இயற்க்கையென்றாலே பசுமையல்லவா? ஏன் நமது வலைப்பூவே நாம் நினைத்த நல்ல‌ கருத்தை நமது நண்பர்களுக்குச் சொல்லக் கூடாது, என சிந்தித்ததே இந்த பசுமை நிறமும், பக்கத்தில் காணும் சிறு படங்களும், குறுந்தகவல்களும். (ரொம்பவே யோசிக்கிறாங்கய்யா).

நீங்கள் படிக்கப் போகும் இந்த ஆக்கம், எங்களது நிறுவனத்தின் Paperless Office Campaignக்காக சென்ற வருடம் எழுதியது, இயன்ற‌ வரை மொழிபெயர்த்து வழங்குகிறேன்.‍

இது என்ன ஒரு தாள் தானேன்னு நினைத்து நாம இஷ்டத்திற்க்கு அடித்தும், கிழித்தும் தள்ளுகிறோம், ஆனால் இதன் பின்னனியில் நமது நிறுவனத்திற்க்கு விழைவிக்கும் நஷடங்களையோ, நமது சுற்றுப்புறச் சூழலுக்கு நாம் ஏற்படுத்தும் பாதகங்களையோ நாம் சிந்திப்பதேயில்லை.

சிலரை கவனித்தீர்களென்றால் தனக்கு வருகின்ற மின்னஞ்சல் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் பிரின்ட் எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதை சரியாக கூட படித்து இருக்கமாட்டார் கொஞ்சங்கூட யோசிக்காமல் ச‌ர்ர்ரென்று கிழித்து தூக்கி எறிவார்கள். இதனால் எத்தனை நஷ்டம், என்ன நம்ம வீட்டு பணமா போகப்போகிறது என‌ அவர்களுக்கு நினைப்பு!! (இனிமேலாவது திருந்துங்களேன்...)

சமீபத்தில் அமேரிக்காவில் எடுத்த ஆய்வினில் கண்ட சில புள்ளி விவரங்கள்:
  • ஒரு காகித்தின் விலை ஒரு ரூபாய் என்றால் அதனை அச்சிடுதல், நகல் எடுத்தல், வினியோகித்தல், பத்திரப்படுத்துதல் போன்ற சங்கிலித்தொடர்பான‌ செலவுகளே முப்பது மடங்கு ஆகிறதாம்.

  • சராசரியாக ஒரு ஊழியர் ஒரு வருடத்திற்க்கு பத்தாயிரம் காகிதங்கள் உபயோக்கின்றாராம்.
  • அமேரிக்காவில் மட்டும் வருடத்திற்க்கு 3.7 மில்லியன் டன் காகிதங்கள் அலுவலகங்களில் மட்டும் உபயோகிக்கப்படுகிறது.
  • காகித் தொழிற்ச்சாலைகளுக்கு மட்டும் 12 சதவிகதம் எரிபொருள் செல‌வு செய்யப்படுகிறதாம்.
  • ஒரு காகிதம் தயாரிக்க ஒரு குவளை தண்ணீர் தேவைப்படுகிறதாம்.
  • சிட்டி குரூப் நிறுவனம், இனி பிரின்ட் அல்லது நகல் எடுப்பவர்கள், தாளின் இரண்டு பக்கங்களிலுமே அச்சிட வேண்டும் என்று ஒரு சுற்றரிக்கை விட்டதாம், இந்த ஒரு சிறு முயற்சியால் அவர்கள் சேமித்த தொகை ஆண்டிற்க்கு ஏழு லட்சம் டாலர்கள்!!

அலுவலகங்களில் காகிதங்களின் உபயோகத்தை தவிர்க்க முடியாதென்றாலும், இயன்ற வரை குறைவாக பயன்படுத்த முயற்சிப்போமே!!


அனைவருக்கும் தெரிந்தவை தான் இந்த குறிப்புகள், சற்று நினைவூட்டுவதற்க்காக்:

  • எப்பொழுதும் தாளின் இரண்டு பக்கங்களிலும் (double sided) பிரின்ட் செய்யுங்கள்.
  • பெரும்பாலும் மின்னஞ்சல்கள் பிரின்ட் எடுக்க வேண்டிய அவசிய்ம் இருக்காது, அப்படியே வேண்டுமென்றால் தேவையான பகுதியை மட்டும் எடுக்கலாம்.
  • பழைய பிரின்ட் எடுத்து, தேவையில்லாத ஆவனங்களை, வேறு பல உபயோகத்திற்க்காக் பயன்படுத்தலாம் (கிறுக்குவது, நோட்ஸ் எழுதுவது, கவிதை எழுத..?)
  • பிரின்ட் எடுப்பதற்க்கு முன், மானிட்டேரிலேயே லேஅவுட், மற்றும் ஃபார்மேட்டுகளை (Print preview) சரி பார்த்து பின்னர் பிரின்ட் எடுக்கலாம்.
  • எழுத்துக்களின் அளவை (Font size) குறைத்து, பக்கங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.
  • முடிந்தால் ஒவ்வொருவரும் Electronic Filing System வைத்துக் கொளவது நல்லது. ஏதாவது ஆவணம் தேவைப்பட்டால் உடனே தேடி எடுத்து, மின்னஞ்சல் மூலம் அனுப்பவதற்க்கும் இலகுவாக இருக்கும்.

"THINK BEFORE YOU INK"

33 comments

S.A. நவாஸுதீன் on August 24, 2009 at 2:34 PM  

பார்த்து ஷ‌ஃபி. இதையே பிரிண்ட் போட்டு எல்லாருக்கும் கொடுத்துடப் போறாங்க.

நல்ல விஷயம்தான்.


Anonymous on August 24, 2009 at 2:44 PM  

நல்ல பதிவு சிறந்த பதிவு உபயோகமான பதிவு...ஆம் இதோடு நிறைவடைந்து விடுகிறது கடமை...இதில் எத்தனை பேர் இதை செயலாற்றப் போகிறோம்..இதில் எத்தனை நிதர்சனமான உண்மைகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது..இதை நாம் படிப்பதோடு அல்லாமல் நம்முடைய குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கனும்...ஷஃபிக்காகவாவது நம்மில் சிலராவது இதை கடைப்பிடிக்கணும்.....ஏன்னா இதை இதை அவர் பதிவிட்டதற்காக அவர் நினைவாக இந்த பழக்கம் இருக்கட்டுமே....


SUFFIX on August 24, 2009 at 4:20 PM  

மக்களுக்கு பழக்கமாயிடுச்சு, மாற்றுவது கடினந்தான், இருந்தாலும் முயற்சி செய்யலாமே!! கருத்துக்கு நன்றி நவாஸ்.


SUFFIX on August 24, 2009 at 4:24 PM  

//தமிழரசி said...
நல்ல பதிவு சிறந்த பதிவு உபயோகமான பதிவு...ஆம் இதோடு நிறைவடைந்து விடுகிறது கடமை...இதில் எத்தனை பேர் இதை செயலாற்றப் போகிறோம்..இதில் எத்தனை நிதர்சனமான உண்மைகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது..இதை நாம் படிப்பதோடு அல்லாமல் நம்முடைய குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கனும்...ஷஃபிக்காகவாவது நம்மில் சிலராவது இதை கடைப்பிடிக்கணும்.....ஏன்னா இதை இதை அவர் பதிவிட்டதற்காக அவர் நினைவாக இந்த பழக்கம் இருக்கட்டுமே....//

மிக்க மகிழ்ச்சி அரசி, நான் பதிவிட்ட கருத்துக்களுக்கு தங்களின் ஆழமான எழுத்தோசை பின்னூட்டம் நிச்சயம் அனைவரையும் சென்றடையும். நன்றியம்மா!!


நட்புடன் ஜமால் on August 24, 2009 at 6:57 PM  

குளுமையாக இருக்குங்க

பதிவும் விடயமும்.


sakthi on August 24, 2009 at 8:14 PM  

சிலரை கவனித்தீர்களென்றால் தனக்கு வருகின்ற மின்னஞ்சல் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் பிரின்ட் எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதை சரியாக கூட படித்து இருக்கமாட்டார் கொஞ்சங்கூட யோசிக்காமல் ச‌ர்ர்ரென்று கிழித்து தூக்கி எறிவார்கள்.

அப்படியா???

உபயோகமுள்ள பதிவு சகோ


அப்துல்மாலிக் on August 24, 2009 at 11:17 PM  

அப்படியா?

நல்லது..

செய்ய‌னும் ஆனா செய்ய‌ தோணாது....


அ.மு.செய்யது on August 25, 2009 at 6:21 AM  

"வார்ப்புரு" எனக்கு இந்த வார்த்தை புதிது.புதிய வார்ப்புருலேயே ஒரு நல்ல செய்தியை தந்து அசத்தியிருக்கிறீர்கள்.

வாழ்த்துகள்.


அதிரை அபூபக்கர் on August 25, 2009 at 8:46 AM  

உங்க வளவடிவமைப்பு பசுமையாக இருக்கிறது.. தகவலும் கூட...


ஊர்சுற்றி on August 25, 2009 at 10:57 AM  

கட்டாயம் எல்லோரும் கடைபிடிக்க வேண்டியது... நல்ல தகவல்களுடன் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

நான் பேப்பரை உபயோகித்தே பல காலம் ஆகிவிட்டது. எனது நாட்குறிப்பை எழுதுவதைத் தவிர்த்து. :)


SUFFIX on August 25, 2009 at 11:49 AM  

//நட்புடன் ஜமால் said...
குளுமையாக இருக்குங்க

பதிவும் விடயமும்.//

நன்றி ஜமால் நீங்க கொடுத்த சுட்டியில் சிக்கியது தான் இந்த புதிய வடிவமைப்பு!!


SUFFIX on August 25, 2009 at 11:51 AM  

//sakthi said...
சிலரை கவனித்தீர்களென்றால் தனக்கு வருகின்ற மின்னஞ்சல் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் பிரின்ட் எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதை சரியாக கூட படித்து இருக்கமாட்டார் கொஞ்சங்கூட யோசிக்காமல் ச‌ர்ர்ரென்று கிழித்து தூக்கி எறிவார்கள்.

அப்படியா???

உபயோகமுள்ள பதிவு சகோ//

ஆமாம் சக்தி, எங்க அலுவலகத்தில் சில பேர் இருக்காங்க இந்த மாதிரி, எத்தனை தடவை சொன்னாலும்...உஹூம்!!


SUFFIX on August 25, 2009 at 11:53 AM  

//அபுஅஃப்ஸர் said...
அப்படியா?

நல்லது..

செய்ய‌னும் ஆனா செய்ய‌ தோணாது....//

தோணாதா? இருங்க, அடுத்த முறை பேப்பர கட் பன்னுனீங்கன்னா, சம்பளத்தை கட் பண்ணுவோம்!!


SUFFIX on August 25, 2009 at 11:54 AM  

//அ.மு.செய்யது said...
"வார்ப்புரு" எனக்கு இந்த வார்த்தை புதிது.புதிய வார்ப்புருலேயே ஒரு நல்ல செய்தியை தந்து அசத்தியிருக்கிறீர்கள்.

வாழ்த்துகள்.//

நன்றி செய்யது, எனக்கும் புதியது தான்!!


SUFFIX on August 25, 2009 at 11:55 AM  

//அதிரை அபூபக்கர் said...
உங்க வளவடிவமைப்பு பசுமையாக இருக்கிறது.. தகவலும் கூட...//

நன்றி அபூபக்கர், ஒரு சிறிய பசுமை புரட்சி!!


SUFFIX on August 25, 2009 at 11:57 AM  

//ஊர்சுற்றி said...
கட்டாயம் எல்லோரும் கடைபிடிக்க வேண்டியது... நல்ல தகவல்களுடன் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

நான் பேப்பரை உபயோகித்தே பல காலம் ஆகிவிட்டது. எனது நாட்குறிப்பை எழுதுவதைத் தவிர்த்து. :)//

நன்றி நண்பரே, கேட்பதற்க்கே மகிழ்ச்சியாக இருக்கிறது


ப்ரியமுடன் வசந்த் on August 25, 2009 at 9:56 PM  

அருமையான இடுகை சஃபி

சபாஷ்............


Jaleela Kamal on August 26, 2009 at 9:28 AM  

நல்ல தகவல், எல்லோருக்கும் பயனுள்ள தகவல் நாங்களும் வேஸ்ட் பண்ணுவதில்லை,

புது டிசைன் ரொம்ப சூப்பர். ரொம்ப நல்ல இருக்கு.


SUFFIX on August 26, 2009 at 10:52 AM  

//பிரியமுடன்...வசந்த் said...
அருமையான இடுகை சஃபி

சபாஷ்............//

நன்றி வஸ்ந்த்!!தொடரும் உங்கள் ஆதரவிற்க்கு.


SUFFIX on August 26, 2009 at 10:53 AM  

//Jaleela said...
நல்ல தகவல், எல்லோருக்கும் பயனுள்ள தகவல் நாங்களும் வேஸ்ட் பண்ணுவதில்லை,

புது டிசைன் ரொம்ப சூப்பர். ரொம்ப நல்ல இருக்கு.//

நன்றி ஜலீலா அக்கா


gayathri on August 26, 2009 at 4:22 PM  

anna templete supara iruku

nalla vizayatha pathiva pottu irukenga


SUMAZLA/சுமஜ்லா on August 27, 2009 at 2:42 AM  

அருமையான பதிவு! அருமையான டெம்ப்ளேட்! நானும் இப்போ, பேப்பர்லெஸ்ஸா மாறிட்டு இருக்கேன். எழுதுவதை விட வேகமாக டைப்புவதால், எல்லாமே நேரடி டைப்புதான். இப்போ கவிதையை கூட இப்படியாக்கும் பழகிட்டு வர்ரேன்.


உங்களுக்கு ஒரு டெம்ப்ளேட் செய்து தரலையேனு எனக்கு மனசு உறுத்துது...ஆனா, என் சூழ்நிலை, தவிர அடுத்தவர் டேஸ்ட் புரியாம, கேட்கிறார் என்று மெனக்கெட்டு செய்து கொடுத்து, அதை பல பேர் உபயோகிக்கவே இல்லை. அவர்களுடைய டேஸ்ட்டும் என் டேஸ்ட்டும் ஒத்து போகலை, அதனால் அவர்களை சொல்லியும் குத்தமில்லை. முக்கியமா அதனால் தான் நான் யாருக்கும் செய்து தருவதையே விட்டு விட்டேன்.


sakthi on August 27, 2009 at 12:01 PM  

ஒரு சிறிய பரிசு

http://veetupura.blogspot.com/


SUFFIX on August 27, 2009 at 3:27 PM  

//yathri said...
anna templete supara iruku

nalla vizayatha pathiva pottu irukenga//

நன்றி காயத்ரி


SUFFIX on August 27, 2009 at 3:40 PM  

SUMAZLA/சுமஜ்லா said...
//அருமையான பதிவு! அருமையான டெம்ப்ளேட்! நானும் இப்போ, பேப்பர்லெஸ்ஸா மாறிட்டு இருக்கேன். எழுதுவதை விட வேகமாக டைப்புவதால், எல்லாமே நேரடி டைப்புதான். இப்போ கவிதையை கூட இப்படியாக்கும் பழகிட்டு வர்ரேன்.//

நன்றி சகோதரி!! ஆமாம் கவிதை எழுதிய காலம் போய் டைப்புற காலமா போயிடுச்சு.


//உங்களுக்கு ஒரு டெம்ப்ளேட் செய்து தரலையேனு எனக்கு மனசு உறுத்துது...ஆனா, என் சூழ்நிலை, தவிர அடுத்தவர் டேஸ்ட் புரியாம, கேட்கிறார் என்று மெனக்கெட்டு செய்து கொடுத்து, அதை பல பேர் உபயோகிக்கவே இல்லை. அவர்களுடைய டேஸ்ட்டும் என் டேஸ்ட்டும் ஒத்து போகலை, அதனால் அவர்களை சொல்லியும் குத்தமில்லை. முக்கியமா அதனால் தான் நான் யாருக்கும் செய்து தருவதையே விட்டு விட்டேன்.//

அய்ய்ய்யோ அப்படியெல்லாம் சொல்லாதிங்க, இதுக்கு எதுக்கு மனசு உறுத்த வேண்டும், உங்களுடைய உணர்வு புரிகிறது. நன்றியம்மா.


SUFFIX on August 27, 2009 at 3:46 PM  

//sakthi said...
ஒரு சிறிய பரிசு

http://veetupura.blogspot.com/
பல‌ நன்றிகளுடன் ஏற்றுக் கொள்கிறேன்.


"உழவன்" "Uzhavan" on August 28, 2009 at 8:35 AM  

மிகச் சரியே.. எங்கள் அலுவலகத்திலும் இதே கொள்கைதான்.


சிங்கக்குட்டி on August 28, 2009 at 5:53 PM  

நல்ல பதிவு ஷ‌ஃபிக்ஸ்.


Unknown on August 28, 2009 at 6:46 PM  

உங்கள் வலைப்பூவும் கண்ணுக்கு பசுமையாக அழகாக இருக்கு. நீங்கள் சொன்ன தகவலும் பயனுள்ளதாக இருக்கு.


SUFFIX on August 29, 2009 at 11:38 AM  

//" உழவன் " " Uzhavan " said...
மிகச் சரியே.. எங்கள் அலுவலகத்திலும் இதே கொள்கைதான்.//

மகிழ்ச்சி தலைவரே!!


SUFFIX on August 29, 2009 at 11:39 AM  

//சிங்கக்குட்டி said...
நல்ல பதிவு ஷ‌ஃபிக்ஸ்.//

நன்றி சிங்கக்குட்டி


SUFFIX on August 29, 2009 at 11:41 AM  

//Mrs.Faizakader said...
உங்கள் வலைப்பூவும் கண்ணுக்கு பசுமையாக அழகாக இருக்கு. நீங்கள் சொன்ன தகவலும் பயனுள்ளதாக இருக்கு.//

அப்படியா, மிக்க மகிழ்ச்சி. நன்றி சகோதரி.


சிங்கக்குட்டி on September 1, 2009 at 2:32 PM  

பதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் அன்பு பரிசு.

http://s1023.photobucket.com/albums/af360/singakkutti/?action=view&current=singakkutti-awad.gif

(உங்களுக்காவே பச்சை நிறம் இதில்)

நன்றி.