|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 5:17 PM

<>எண்ண அலைகள்

Filed Under () By SUFFIX at 5:17 PM

மாடி வீடு,
கோடிகளும் உண்டு.
கெஞ்சாத இடமில்லை,
குழந்தையில்லா ஒரு குறை தான்!

கோடி வீடு
குழந்தைகள் குதூகலம்.
கூரையில்லா குடிசை,
குறை அதுமட்டுந்தான்!

கையில் கணிணி
கை நிறைய காசு
கற்றான் என்னவோ?
சுற்றுகிறான் ஊரெங்கும்!
கண்பட்டு பயனென்ன‌?
கல்லாதது என் குறை தான்!

கால்களை நான்‌ வ‌ருத்தி,
கடத்தியது போதுமடா,
காலமெல்லாம் தெருக்கடையில்
திகட்டியது என் வாழ்க்கை!

ப‌டித்தேன் ப‌ட்ட‌மெல்லாம்
ப‌ற‌ந்தேன் ஊரெல்லாம்,
உற‌வுகளை பார்ப்ப‌தோ
வ‌ருடமொரு முறை தான்!

ப‌ட்டாடை ப‌ல்லாயிர‌ம்
ப‌ல்லிளித்தாய் ப‌க‌ட்டைக்க‌ண்டு!
பாலாடைக்காணா ப‌சிவ‌யிறு,
பார்க்க‌ ம‌ற‌ந்த‌தேன்
ப‌க்க‌த்து வீட்டில்!

ப‌ழ‌குவ‌த‌ற்க்குள் பெற்ற‌ இன்பம்,
ப‌ழ‌ங்க‌தையாய் ஆக்கி வைத்தாய்,
தொலை நோக்கென வாதித்து
தொலைத்தாய் தொடங்கியதை!

எண்ண‌ ஓட்ட‌ங்க‌ள்
ஓடுது பார் அங்குமிங்கும்,
இருக்கும் அடுத்தோரை
ஆராய்வதை நிறுத்திவிடு!

களைந்திடுவோம் காழ்ப்புணர்வை
கண்டிடுவோம் அக‌ம‌கிழ்வை
வேடமிட்டது போதும்
வெறுத்திடுவோம் இவ்விழிச்செய‌லை!

43 comments

நட்புடன் ஜமால் on July 22, 2009 at 9:12 AM  

குழந்தையில்லா ஒரு குறை!

‘தான்’ என்று போட்டு இருக்கீங்க ரொம்ப சிம்பிளா ...

வேதனையானது தான் ...


SUFFIX on July 22, 2009 at 9:33 AM  

//நட்புடன் ஜமால் said...
குழந்தையில்லா ஒரு குறை!

‘தான்’ என்று போட்டு இருக்கீங்க ரொம்ப சிம்பிளா ...

வேதனையானது தான் ...//

நன்றி ஜமால். ஓவ்வொருவருக்கும் ஒரு குறை, அவரவர் பார்வையில் அது பெரிது, மற்றவருக்கு எளிது.


நட்புடன் ஜமால் on July 22, 2009 at 9:38 AM  

கூறையில்லா குடிசை

கண்பட்டு பயனென்ன‌?
கல்லாதது

காலமெல்லாம் தெருக்கடையில்
திகட்டியது என் வாழ்க்கை!

]]

கஷ்ட்டமான நிலைகள் தாம்


நட்புடன் ஜமால் on July 22, 2009 at 9:45 AM  

உற‌வுகளை பார்ப்ப‌தோ
வ‌ருடமொரு முறை தான்! ]]

வெளி நாட்டு வாழ்பவர்களின் அவலநிலை


நட்புடன் ஜமால் on July 22, 2009 at 9:47 AM  

களைந்திடுவோம் காழ்ப்புணர்வை
கண்டிடுவோம் அக‌ம‌கிழ்வை
வேடமிட்டது போதும்
வெறுத்திடுவோம் இவ்விழிச்செய‌லை!]]


துவக்கத்தில் எதிர்மறை கவிதையாக இருந்தது

முடிவில் அருமையாக சொல்லிட்டீங்க


அ.மு.செய்யது on July 22, 2009 at 10:46 AM  

//மாடி வீடு,
கோடிகளும் உண்டு.
கெஞ்சாத இடமில்லை,
குழந்தையில்லா ஒரு குறை தான்!

கோடி வீடு
குழந்தைகள் குதூகளம்.
கூறையில்லா குடிசை,
குறை அதுமட்டுந்தான்!//

அழகான கவிதை

இதை படித்தவுடன், டாக்டர் மு.வரதராசனாரின் "குறட்டை ஒலி" சிறுகதை நினைவுக்கு வந்தது.

வாய்ப்பு கிடைத்தால் வாசித்து பார்க்கவும்.


Anonymous on July 22, 2009 at 10:51 AM  

உங்கள் காதை எட்டுமளவு கை தட்ட ஆசை....இயலவில்லை எழுத்துக்களில் எழுப்புகிறேன் ஓசை...
கோடி இருக்கும் இடத்தில் குழந்தையில்லை குழந்தை இருக்குமிடத்தில் கூறையில்லை...வலியை வடிவமைத்து கவியாய் கதை பாடிவிட்டீர்... வாழ்த்துக்கள் ஷஃபி


S.A. நவாஸுதீன் on July 22, 2009 at 12:45 PM  

மாடி வீடு,
கோடிகளும் உண்டு.
கெஞ்சாத இடமில்லை,
குழந்தையில்லா ஒரு குறை தான்!
கோடி வீடுகுழந்தைகள் குதூகளம்.கூறையில்லா குடிசை,குறை அதுமட்டுந்தான்!

சூப்பரா சொல்லிட்டீங்க.


S.A. நவாஸுதீன் on July 22, 2009 at 12:47 PM  

காலமெல்லாம் தெருக்கடையில்தி கட்டியது என் வாழ்க்கை!

சீரியசான விஷயத்தை சிம்பிளான வரிகள்ள சொல்லிட்டீங்க. அருமை


S.A. நவாஸுதீன் on July 22, 2009 at 12:49 PM  

அடுத்தோரைஆராய்வதை நிறுத்திவிடு!
களைந்திடுவோம் காழ்ப்புணர்வை கண்டிடுவோம் அக‌ம‌கிழ்வை வேடமிட்டது போதும் வெறுத்திடுவோம் இவ்விழிச்செய‌லை!

கலக்குங்க. ரொம்ப நல்லா இருக்கு


rose on July 22, 2009 at 12:50 PM  

ஊரெல்லாம்,உற‌வுகளை பார்ப்ப‌தோவ‌ருடமொரு முறை தான்!
\\
அவல நிலைதான்


rose on July 22, 2009 at 12:51 PM  

ப‌ழ‌குவ‌த‌ற்க்குள் பெற்ற‌ இன்பம்,ப‌ழ‌ங்க‌தையாய் ஆக்கி வைத்தாய்,
\\
அழகு


rose on July 22, 2009 at 12:54 PM  

இந்த வாரம் என்னாச்சுப்பா தலைவா, அண்ணாக்குலாம் ஒரே feelinga இருக்கு


SUFFIX on July 22, 2009 at 1:15 PM  

// நட்புடன் ஜமால் said...
களைந்திடுவோம் காழ்ப்புணர்வை
கண்டிடுவோம் அக‌ம‌கிழ்வை
வேடமிட்டது போதும்
வெறுத்திடுவோம் இவ்விழிச்செய‌லை!]]


துவக்கத்தில் எதிர்மறை கவிதையாக இருந்தது

முடிவில் அருமையாக சொல்லிட்டீங்க//

நன்றி ஜமால், முடுவில் ஏதாவது மெசேஜ் வைக்கனும்னு தோன்றியது.


SUFFIX on July 22, 2009 at 1:23 PM  

//அ.மு.செய்யது said...
//மாடி வீடு,
கோடிகளும் உண்டு.
கெஞ்சாத இடமில்லை,
குழந்தையில்லா ஒரு குறை தான்!

கோடி வீடு
குழந்தைகள் குதூகளம்.
கூறையில்லா குடிசை,
குறை அதுமட்டுந்தான்!//

அழகான கவிதை

இதை படித்தவுடன், டாக்டர் மு.வரதராசனாரின் "குறட்டை ஒலி" சிறுகதை நினைவுக்கு வந்தது.

வாய்ப்பு கிடைத்தால் வாசித்து பார்க்கவும்.//

நன்றி செய்யது, பெரிய பெரிய வார்த்தைகளெல்லாம் சொல்லுகிறீர்கள், அடுத்த முறை சென்னைக்கு செல்லும்போது நீங்கள் கூறியது போன்ற புத்தகங்களை தேடி வாங்கி வர வேண்டும்


SUFFIX on July 22, 2009 at 1:29 PM  

//தமிழரசி said...
உங்கள் காதை எட்டுமளவு கை தட்ட ஆசை....இயலவில்லை எழுத்துக்களில் எழுப்புகிறேன் ஓசை...
கோடி இருக்கும் இடத்தில் குழந்தையில்லை குழந்தை இருக்குமிடத்தில் கூறையில்லை...வலியை வடிவமைத்து கவியாய் கதை பாடிவிட்டீர்... வாழ்த்துக்கள் ஷஃபி//

உங்கள் கைதட்டு ஓசையை விட உங்கள் எழுத்தக்கள் ஓசைத்தான் எங்களின் தூன்டுகோள். நன்றி அரசி!!


SUFFIX on July 22, 2009 at 1:37 PM  

//S.A. நவாஸுதீன் said...
காலமெல்லாம் தெருக்கடையில்தி கட்டியது என் வாழ்க்கை!

சீரியசான விஷயத்தை சிம்பிளான வரிகள்ள சொல்லிட்டீங்க. அருமை//

ஆமாம் சில பேர் அடிக்கடி புலம்புவதை கேட்டிருப்போம், அதையே கொஞ்சம் கவி நடையில்...


SUFFIX on July 22, 2009 at 1:38 PM  

//S.A. நவாஸுதீன் said...


கலக்குங்க. ரொம்ப நல்லா இருக்கு//

நன்றி நவாஸ்


SUFFIX on July 22, 2009 at 1:39 PM  

//rose said...
ப‌ழ‌குவ‌த‌ற்க்குள் பெற்ற‌ இன்பம்,ப‌ழ‌ங்க‌தையாய் ஆக்கி வைத்தாய்,
\\
அழகு//

நன்றி ரோஸ்


SUFFIX on July 22, 2009 at 1:41 PM  

//rose said...
இந்த வாரம் என்னாச்சுப்பா தலைவா, அண்ணாக்குலாம் ஒரே feelinga இருக்கு//

Feelings வாரமோ என்னவோ!!


அதிரை அபூபக்கர் on July 22, 2009 at 2:13 PM  

//கோடி வீடுகுழந்தைகள் குதூகளம்.கூறையில்லா குடிசை,குறை அதுமட்டுந்தான்!//
நல்ல கருத்துள்ள வரிகள்..... நன்றாக உள்ளது...


SUFFIX on July 22, 2009 at 2:40 PM  

அதிரை அபூபக்கர் said...
//கோடி வீடுகுழந்தைகள் குதூகளம்.கூறையில்லா குடிசை,குறை அதுமட்டுந்தான்!//
நல்ல கருத்துள்ள வரிகள்..... நன்றாக உள்ளது...//

நன்றி அபூபக்கர்


அப்துல்மாலிக் on July 22, 2009 at 2:42 PM  

நவீனத்துவ கவிதைகளின் வெளிப்பாடு

இருவேறு எதிர்மறை பிரிவுகளை கையாண்ட விதம் அருமை

தெருக்கோடியையும், கோடியையும் ஒட்டவைக்க முயற்சி செய்யப்பட்டள்ளது

வாரம் ஒரு பதிவு போட்டாலும் க்ளாஸா இருக்கு


அப்துல்மாலிக் on July 22, 2009 at 2:44 PM  

//rose said...
இந்த வாரம் என்னாச்சுப்பா தலைவா, அண்ணாக்குலாம் ஒரே feelinga இருக்கு
//

கைக்குட்டையை பார்சல் அனுப்புங்க தொடச்சிக்கிடட்டும்


SUFFIX on July 22, 2009 at 2:51 PM  

அபுஅஃப்ஸர் said...
நவீனத்துவ கவிதைகளின் வெளிப்பாடு

//இருவேறு எதிர்மறை பிரிவுகளை கையாண்ட விதம் அருமை

தெருக்கோடியையும், கோடியையும் ஒட்டவைக்க முயற்சி செய்யப்பட்டள்ளது

வாரம் ஒரு பதிவு போட்டாலும் க்ளாஸா இருக்கு//

வாங்க அபூ, எங்கடா போய்ட்டாருன்னு தேடிக்கிட்டு இருந்தேன்!! ரொம்ப நன்றிப்பா


SUFFIX on July 22, 2009 at 2:52 PM  

//அபுஅஃப்ஸர் said...
//rose said...
இந்த வாரம் என்னாச்சுப்பா தலைவா, அண்ணாக்குலாம் ஒரே feelinga இருக்கு
//

கைக்குட்டையை பார்சல் அனுப்புங்க தொடச்சிக்கிடட்டும்//

கைக்குட்டை ஸ்பான்ஸர்னு அபூ பேர போட்டு விடுங்கள்


அப்துல்மாலிக் on July 22, 2009 at 3:10 PM  

//எண்ண‌ ஓட்ட‌ங்க‌ள்ஓடுது பார் அங்குமிங்கும்,இருக்கும் அடுத்தோரைஆராய்வதை நிறுத்திவிடு!
/

இதை மட்டும் செய்தாலே போதும் தானாகவே முன்னேரலாம்...

அருமையா சொல்லிருக்கீங்க‌

தமிழிஷ்லேயும், தமிழ்மணத்துலேயும் இணைத்தால் இந்த கவிதை நிறைய பேரிடம் போய் சேரும் என்பது என் அவா


அப்துல்மாலிக் on July 22, 2009 at 3:11 PM  

//கைக்குட்டை ஸ்பான்ஸர்னு அபூ பேர போட்டு விடுங்கள்//

பாவி மக்கா ஸ்பான்சர் பண்ணுறதுக்கு ஒரு அளவே இல்லியா????????


SUFFIX on July 22, 2009 at 3:23 PM  

//அபுஅஃப்ஸர் said...
//எண்ண‌ ஓட்ட‌ங்க‌ள்ஓடுது பார் அங்குமிங்கும்,இருக்கும் அடுத்தோரைஆராய்வதை நிறுத்திவிடு!
/

இதை மட்டும் செய்தாலே போதும் தானாகவே முன்னேரலாம்...

அருமையா சொல்லிருக்கீங்க‌

தமிழிஷ்லேயும், தமிழ்மணத்துலேயும் இணைத்தால் இந்த கவிதை நிறைய பேரிடம் போய் சேரும் என்பது என் அவா//

உங்கள் அவா எங்களுக்கு அல்வா, தங்கள் பரிந்துறைக்கு நன்றி, முயற்சி செய்கிறேன்.


SUFFIX on July 22, 2009 at 3:24 PM  

//அபுஅஃப்ஸர் said...
//கைக்குட்டை ஸ்பான்ஸர்னு அபூ பேர போட்டு விடுங்கள்//

பாவி மக்கா ஸ்பான்சர் பண்ணுறதுக்கு ஒரு அளவே இல்லியா????????//

கைக்குட்டை தானேன்னு சந்தோஷப்படுங்க, நாட்ல இப்போ எதுதுக்கோ ஸ்பான்ஸர் பன்றாங்க‌


rose on July 22, 2009 at 5:56 PM  

photo fentastic anna


rose on July 22, 2009 at 6:00 PM  

அபுஅஃப்ஸர் said...
//rose said...
இந்த வாரம் என்னாச்சுப்பா தலைவா, அண்ணாக்குலாம் ஒரே feelinga இருக்கு
//

கைக்குட்டையை பார்சல் அனுப்புங்க தொடச்சிக்கிடட்டும்

\\
இதோ (பழம்)மிடம் சொல்லிவிடுகிறேன்.


அப்துல்மாலிக் on July 22, 2009 at 9:17 PM  

//rose said...
அபுஅஃப்ஸர் said...
//rose said...
இந்த வாரம் என்னாச்சுப்பா தலைவா, அண்ணாக்குலாம் ஒரே feelinga இருக்கு
//

கைக்குட்டையை பார்சல் அனுப்புங்க தொடச்சிக்கிடட்டும்

\\
இதோ (பழம்)மிடம் சொல்லிவிடுகிறேன்
//

சொன்னவுடன் காயாகிடுமா?


ஜெஸ்வந்தி - Jeswanthy on July 23, 2009 at 3:24 PM  

அழகான கவிதை நண்பரே! கருத்துள்ளது.'குதூகளம்' என்பது
'குதூகலம் ' என்று மாற்றி விடுங்கள்.


சிநேகிதன் அக்பர் on July 23, 2009 at 3:58 PM  

அருமையான வரிகள்.
இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசை.


SUFFIX on July 23, 2009 at 7:15 PM  

//ஜெஸ்வந்தி said...
அழகான கவிதை நண்பரே! கருத்துள்ளது.//
'குதூகளம்' என்பது
'குதூகலம் ' என்று மாற்றி விடுங்கள்.
நன்றி ஜெஸ்!! பிழையை திருத்திவிட்டேன் .


SUFFIX on July 23, 2009 at 7:16 PM  

//அக்பர் said...
அருமையான வரிகள்.
இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசை.//

வந்து ரசித்தமைக்கு நன்றி அக்பர்


"உழவன்" "Uzhavan" on July 24, 2009 at 11:08 AM  

களைந்திடுவோம் காழ்ப்புணர்வை

கண்டிடுவோம் அக‌ம‌கிழ்வை

வேடமிட்டது போதும்

வெறுத்திடுவோம் இவ்விழிச்செய‌லை!//

நல்ல வரிகள். வாழ்த்துக்கள்.

"கூரை" - சரிசெய்துகொள்ளூங்கள் நண்பரே.


rose on July 24, 2009 at 4:36 PM  

அபுஅஃப்ஸர் said...
//rose said...
அபுஅஃப்ஸர் said...
//rose said...
இந்த வாரம் என்னாச்சுப்பா தலைவா, அண்ணாக்குலாம் ஒரே feelinga இருக்கு
//

கைக்குட்டையை பார்சல் அனுப்புங்க தொடச்சிக்கிடட்டும்

\\
இதோ (பழம்)மிடம் சொல்லிவிடுகிறேன்
//

சொன்னவுடன் காயாகிடுமா?

\\
அது உங்களுக்குத்தான் தெறியும்.


SUMAZLA/சுமஜ்லா on July 24, 2009 at 5:26 PM  

ம்...எண்ணவோட்டத்தை அப்படியே கவிதையாக்கிட்டிங்க! அழகாக உள்ளது, வார்த்தையோட்டம்!

உங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன், வந்து பார்த்து, அழைப்பை ஏற்று, பதில் தாருங்கள்.


SUFFIX on July 25, 2009 at 9:16 AM  

//" உழவன் " " Uzhavan " said...
களைந்திடுவோம் காழ்ப்புணர்வை

கண்டிடுவோம் அக‌ம‌கிழ்வை

வேடமிட்டது போதும்

வெறுத்திடுவோம் இவ்விழிச்செய‌லை!//

நல்ல வரிகள். வாழ்த்துக்கள்.

"கூரை" - சரிசெய்துகொள்ளூங்கள் நண்பரே.//

நன்றி உழவரே! கூரையின் குறையை சரிசெஞ்சுடுறேன்


SUFFIX on July 25, 2009 at 9:24 AM  

//SUMAZLA/சுமஜ்லா said...
ம்...எண்ணவோட்டத்தை அப்படியே கவிதையாக்கிட்டிங்க! அழகாக உள்ளது, வார்த்தையோட்டம்!

உங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன், வந்து பார்த்து, அழைப்பை ஏற்று, பதில் தாருங்கள்.//

நன்றி சகோதரி. பொறுப்புடன் பதிலளிக்க முயற்சி செய்கின்றேன்.


அ.மு.செய்யது on July 26, 2009 at 5:51 AM  

//வாழ்க்கை இரு 'கை'களில். இறை நம்பிக்'கை', தன்னம்பிக்'கை'. இவ்விரு கைகளைக் கொன்டு, எந்தச் செயலையும் எளிதாக அனுகினால், எப்பொழுதும் சிறப்பே!!//

இந்த பதில்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு !!!

வாழ்த்துக்கள் ஷஃபிக்ஸ்..

உங்க‌ளுக்கு ஒரு மின்ன‌ஞ்ச‌ல் அனுப்பியிருக்கிறேன்.பாருங்க‌ள்.