|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!

சமீபத்தில் ISO AUDIT டிரெய்னிங் "யான்பு ரெடிசன்" ஹோட்டலில் நடந்தது. நான் கஷடப்பட்டு கை வலிக்க பதிவு எழுதுவத பார்த்து ராஸா வந்து கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் எடுப்பான்னு அன்பான அழைப்பு வேறு, நாமதான் அன்புக்கு கட்டுப்பட்டவாங்களாச்சே, தட்டாமெ தலையாட்டிவிட்டு வெற்றிகரமாக போய் வந்தோம்.

முதல் நாள் வகுப்பு முடிந்ததும், எல்லோரும் சாப்பிட இங்கே வாங்கன்னு ஒருத்தர் அழைச்சிட்டு போனார், நான் அதை ரொம்பவும் டீடெய்லா சொல்லி உங்கள ஜொல்ல விரும்பல, ஆனால் பறப்பன, நடப்பன, நீந்துவன என எல்லாம் 'வாவா..வாவா..கண்ணா வா' என்னைப் பார்த்து பாடுவது மாதிரியே இருந்தது.

சரி மேட்டருக்கு வர்ரேன், உணவுகள் எல்லாம் ஒரு வரிசையில் வகைவகையாக இருக்க , அந்த கண்ணாடி மேசை மேல் குப்பை மாதிரி போட்டு வச்சிருந்தாங்க, அங்கே இருந்த பையனிடம் என்னப்பா இதுன்னு கேட்டேன், சார் உங்க கண்ணாடிய கழட்டிட்டு கலைக் கண்ணோட‌ இத பாருங்க,அப்போ புரியும்!! "டேய் என்னங்கடா இது" கேட்க்க தோணுச்சு, டேய் ஷஃபி அடக்கி வாசி, இப்பொத்தான் சூப், சலட் எடுத்து முதல் சுற்று தொடங்கியிருக்கே, இன்னும் அஞ்சு சுற்று, அதுக்கு அப்புறம் கேக், ஜூஸ் வேறு இருக்கு...கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போயுடும்.. சுதாரிச்சு.. அட ஆமா ரொம்ப அழகா இருக்கு, என்னே ஒரு கலை நயம்!! (மாறிருவோம்ல..ஹி..ஹி).



நல்ல ரவுன்டு கட்டிட்டு ஒரு Meal பார்வை, ஏதாவது விட்ட குறை, தொட்ட குறை இருக்கான்னு No chance, அப்படியே லன்ச்சிட்டு வரும்போது எதிரில் ஒரு மேஜை, அதோட கால்கள் என்ன்மோ பாசி பிடித்தார்போல, அதற்க்கு அருகில் காய்ந்த குச்சிகளையெல்லாம் ஒன்னா சேர்த்து ஒரு சாடியில், சரி கலை நயம்!! நடத்துங்கய்யா நடத்துங்க!!




இன்னும் கொஞ்ச தூரம் நடந்து வந்தா எதிரில் இரண்டு பழைய பானை. இரண்டு மாசத்துக்கு முன்னாடி தங்கமணி ரெண்டு பழைய பானையைத்தந்து ஆஃபிஸ் போகும்போது இதை குமாமாவில் (குப்பைத்தோட்டி) போட்டுட்டு போங்கன்னு சொன்னது ஞாபகம் வந்தது. இவிங்க கிட்டே கொடுத்து முப்பது ரூபாய் பானையை முன்னூறு டாலராக்கியிருக்கலாம். டூ லேட்..நீங்க வேனும்னா முயற்சி செய்யுங்களேன்?




அப்படியே வெளியே வந்தால், அழகான பசுமை, நடுவே ஒரு பட்டுப்போன மரம், இது எப்பவோ விறகு ஆகி இருக்க வேண்டியது, ரேடிசன் உபயத்தால் உயர்ந்து நிற்க்கிறது.


இவை யாவற்றையும் உற்று நோக்கியபோது எனக்கு தோண்றியது "பொருள் எப்படிப் பட்டவையாக இருந்தாலும் அது இருக்கும் இடம், அதனை சரியான முறையில் அனைவரும் கவரும் விதமாக வடிவமைக்கும் திறமை (Presentation+Creativity), இவை ஒன்றாக சேரும்போது குப்பை மேட்டையும் கோபுரமாக்கி காட்டலாம்.

அப்புறம் இந்த பகுதிகளில் ஈத்தப்பழம் (Dates) காய்க்கும் பருவ நிலை, சந்தை முழுதும் செங்காய்கள், இன்னும் சில நாட்களே கிடைக்கும் என்பதால் மக்கள் கூடை கூடையாக அள்ளி செல்கின்றனர்.



சரி இது எல்லாம் இருக்கட்டும் நீ அங்கே போய், கொட்டிக்கிட்டதும், ஊர் சுத்தினதும் போக டிரெய்னிங்கள என்ன படிச்சென்னு கேட்கிறவங்களுக்கு, இதோ இந்த படம், இந்த மாவை தான் மூனு நாளும் அரைச்சிக்குட்டு இருந்தோம்.




42 comments

Anonymous on August 5, 2009 at 1:16 PM  

முதல்ல இன்னுமா இந்த உலகம் உங்களை நம்புது?...யப்பா தாங்கலைப்பா....ட்ரெயினிங் போறேன்னு சொல்லிட்டு போய் மூனு நாளா அரைச்சா மாவு இதானா?


Anonymous on August 5, 2009 at 1:17 PM  

எங்கப் போனாலும் வயத்துக்கு வஞ்சனையில்லை....


Anonymous on August 5, 2009 at 1:20 PM  

உண்மைத் தான் ஷ்ஃபி...முதல் படமே அந்த கண்ணாடி டேபிளுக்கு அழகு சேர்பதாய் தான் இருக்கிறது அந்த நிறமும் அதன் அலங்காரமும்....

இதை நாம் முயற்சி எடுத்து பண்ணா சிரிப்போம் எவனாவது பணக்காரன் எதை செய்தாலும் அது க்ளாஸ் ஸ்டைல் என ப்ளோ பண்ணுவோம்...எல்லாம் நம் பார்வையின் நேர்த்தியிலும் அதை பராமரிப்பதிலும் தான் சதாரணம் கூட அசதாரணமாய் மிளிரும்....


Anonymous on August 5, 2009 at 1:22 PM  

இங்கு உங்களையும் பாராட்டனும் இதை ரசித்து படம் பிடித்து கொண்டு வந்து இருப்பதும் ரசனைக்குரிய விஷயமே..எல்லாமே அணுகுவதில் தான் அழகேயிருக்கு....


SUFFIX on August 5, 2009 at 2:16 PM  

//தமிழரசி said...
முதல்ல இன்னுமா இந்த உலகம் உங்களை நம்புது?...யப்பா தாங்கலைப்பா....ட்ரெயினிங் போறேன்னு சொல்லிட்டு போய் மூனு நாளா அரைச்சா மாவு இதானா?//

உங்களை நம்புற உலகம் தான், என்னையும்!!


SUFFIX on August 5, 2009 at 2:22 PM  

//தமிழரசி said...
எங்கப் போனாலும் வயத்துக்கு வஞ்சனையில்லை....//

அத முதல்ல டீடெய்லா தெரிஞ்சுகிட்டுத் தான் அட்டென்டென்ஸ் போட்டோம்


SUFFIX on August 5, 2009 at 2:26 PM  

//தமிழரசி said...
இங்கு உங்களையும் பாராட்டனும் இதை ரசித்து படம் பிடித்து கொண்டு வந்து இருப்பதும் ரசனைக்குரிய விஷயமே..எல்லாமே அணுகுவதில் தான் அழகேயிருக்கு....//

பாராட்டுக்களுக்கு நன்றி அரசி, இந்த முறை நன்றாக நான்கு பின்னியதற்க்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்!!


நட்புடன் ஜமால் on August 5, 2009 at 3:56 PM  

பதிவு எழுதுவத பார்த்து

தட்டாமெ தலையாட்டிவிட்டு]]



துவக்கமே தூள் பன்றியேப்பா ...


நட்புடன் ஜமால் on August 5, 2009 at 4:50 PM  

பறப்பன, நடப்பன, நீந்துவன என எல்லாம் 'வாவா..வாவா..கண்ணா வா' என்னைப் பார்த்து பாடுவது மாதிரியே இருந்தது.
]]

ஜொள்ளலைன்னு சொல்லி ஜொள்றியேப்பா ... ;)


நட்புடன் ஜமால் on August 5, 2009 at 5:07 PM  

இன்னும் அஞ்சு சுற்று, அதுக்கு அப்புறம் கேக், ஜூஸ் வேறு இருக்கு]]


அந்த ஊர்ல டேபில சுத்தனுமா ;)


SUFFIX on August 5, 2009 at 5:13 PM  

// நட்புடன் ஜமால் said...
பறப்பன, நடப்பன, நீந்துவன என எல்லாம் 'வாவா..வாவா..கண்ணா வா' என்னைப் பார்த்து பாடுவது மாதிரியே இருந்தது.
]]

ஜொள்ளலைன்னு சொல்லி ஜொள்றியேப்பா ... ;)//

இந்த சிறிய இன்ட்ரோவுக்கே இப்படின்னா விளக்கமா சொன்னா அம்புட்டுதேன்.


SUFFIX on August 5, 2009 at 5:18 PM  

//நட்புடன் ஜமால் said...
இன்னும் அஞ்சு சுற்று, அதுக்கு அப்புறம் கேக், ஜூஸ் வேறு இருக்கு]]


அந்த ஊர்ல டேபில சுத்தனுமா ;)//

டேபிள் சுத்தினா நாமளும் அது பின்னாடி பருந்தாட்டம் நாமளும் சுத்தி வருவோம்ல.


நட்புடன் ஜமால் on August 5, 2009 at 5:34 PM  

டூ லேட்]]

அம்மனி கூட டூ - வா...


நட்புடன் ஜமால் on August 5, 2009 at 5:36 PM  

அப்படியே வெளியே வந்தால், அழகான பசுமை, நடுவே ஒரு பட்டுப்போன மரம், இது எப்பவோ விறகு ஆகி இருக்க வேண்டியது, ரேடிசன் உபயத்தால் உயர்ந்து நிற்க்கிறது.
]]

ஹா ஹா ஹா

என்னே ஒரு (கொ)கலை பார்வை.


SUFFIX on August 5, 2009 at 5:43 PM  

// நட்புடன் ஜமால் said...
டூ லேட்]]

அம்மனி கூட டூ - வா...//

அம்மணி ஒன் தான்!!


sakthi on August 5, 2009 at 6:37 PM  

நாமதான் அன்புக்கு கட்டுப்பட்டவாங்களாச்சே, தட்டாமெ தலையாட்டிவிட்டு வெற்றிகரமாக போய் வந்தோம்.
முதல் நாள் வகுப்பு முடிந்ததும், எல்லோரும் சாப்பிட இங்கே வாங்கன்னு ஒருத்தர் அழைச்சிட்டு போனார், நான் அதை ரொம்பவும் டீடெய்லா சொல்லி உங்கள ஜொல்ல விரும்பல,

எவ்வள்வு நல்ல எண்ணம்


sakthi on August 5, 2009 at 6:37 PM  

அட ஆமா ரொம்ப அழகா இருக்கு, என்னே ஒரு கலை நயம்!! (மாறிருவோம்ல..ஹி..ஹி).

அதானே பார்த்தேன்


sakthi on August 5, 2009 at 6:38 PM  

(Presentation+Creativity), இவை ஒன்றாக சேரும்போது குப்பை மேட்டையும் கோபுரமாக்கி காட்டலாம்.


எங்க படைப்புகள் போல


அப்துல்மாலிக் on August 5, 2009 at 6:47 PM  

//குறிப்பிட்ட அனைத்துக்கும் மயங்கா இதயம் எது?

அருமை வாழ்த்துக்கள்//

ஹூம் நாமளும்தான் இருக்கோம்... இப்படியெல்லாம் சொல்லி........


அப்துல்மாலிக் on August 5, 2009 at 6:48 PM  

//சார் உங்க கண்ணாடிய கழட்டிட்டு கலைக் கண்ணோட‌ இத பாருங்க,அப்போ புரியும்!!//

அப்போ கண்ணாடி போட்டவர்களுக்கெல்லாம் கலைநோக்கு இல்லியா..? ஆட்டோ வந்துடப்போகுது


அப்துல்மாலிக் on August 5, 2009 at 6:49 PM  

//இப்பொத்தான் சூப், சலட் எடுத்து முதல் சுற்று தொடங்கியிருக்கே, இன்னும் அஞ்சு சுற்று, அதுக்கு அப்புறம் கேக், ஜூஸ் வேறு இருக்கு...//

இம்ஹூம் இதெல்லாம் இருந்தாதானே டிரெயினிங்க் போன திருப்தி வரும்

கடைசிலே வெச்சாங்களா விருந்து....


அப்துல்மாலிக் on August 5, 2009 at 6:50 PM  

//நல்ல ரவுன்டு கட்டிட்டு ஒரு Meal பார்வை, ஏதாவது விட்ட குறை, தொட்ட குறை இருக்கான்னு //

பிளேட்டெல்லாம் இருந்திருக்குமே... அதையும் லபக்கிடவேண்டியதுதானே ஹி ஹி


அப்துல்மாலிக் on August 5, 2009 at 6:51 PM  

//அனைவரும் கவரும் விதமாக வடிவமைக்கும் திறமை (Presentation+Creativitய்), //

என்னைமாதிரினு சொல்ல வாரீங்க... ரொம்பா புகழாதீங்க‌


அப்துல்மாலிக் on August 5, 2009 at 6:52 PM  

//தமிழரசி said...
எங்கப் போனாலும் வயத்துக்கு வஞ்சனையில்லை....
//

அங்கே பார்சல் வரலியா.. எங்களுக்கெல்லாம் அனுப்பிவெச்சிருக்காரு


அ.மு.செய்யது on August 5, 2009 at 9:45 PM  

அரைச்ச மாவப் பத்தி ஒரு அஞ்சு வரி எழுதிர்ந்தீங்கன்னா அதுவே துறை சார்ந்த பதிவா ஆயிருக்கும்.

இப்படி கலைக்கண்ணோட ஒரு படைப்ப போட்டு அசத்திர்கீங்க.ஜூப்பரு.


SUFFIX on August 6, 2009 at 7:58 AM  

//sakthi said...
(Presentation+Creativity), இவை ஒன்றாக சேரும்போது குப்பை மேட்டையும் கோபுரமாக்கி காட்டலாம்.


எங்க படைப்புகள் போல//

ஆமாம் எங்க படைப்புகள் போல‌


SUFFIX on August 6, 2009 at 7:59 AM  

ஷ‌ஃபிக்ஸ் said...
// நட்புடன் ஜமால் said...
டூ லேட்]]

அம்மனி கூட டூ - வா...//

இது வரைக்கும் இல்லைப்பா, நீங்க வந்து தொடங்கி வைக்காம இருந்தா சரி, ந்ல்லா கெளப்புறாங்கய்யா பீதிய‌


SUFFIX on August 6, 2009 at 8:03 AM  

//அபுஅஃப்ஸர் said...
//இப்பொத்தான் சூப், சலட் எடுத்து முதல் சுற்று தொடங்கியிருக்கே, இன்னும் அஞ்சு சுற்று, அதுக்கு அப்புறம் கேக், ஜூஸ் வேறு இருக்கு...//

இம்ஹூம் இதெல்லாம் இருந்தாதானே டிரெயினிங்க் போன திருப்தி வரும்

கடைசிலே வெச்சாங்களா விருந்து....//

செவிக்கு உணவு அருந்திவிட்டுத்தான் வயிற்றுக்கு, இல்லைனா யார் அந்த குறட்டை சத்ததை சமாளிப்பது


SUFFIX on August 6, 2009 at 8:05 AM  

//அபுஅஃப்ஸர் said...
//நல்ல ரவுன்டு கட்டிட்டு ஒரு Meal பார்வை, ஏதாவது விட்ட குறை, தொட்ட குறை இருக்கான்னு //

பிளேட்டெல்லாம் இருந்திருக்குமே... அதையும் லபக்கிடவேண்டியதுதானே ஹி ஹி//

தாம் இந்த துறையில் வாங்கிய பட்டங்கள் யாவும் நாம் அறிவோம், உங்க அளவுக்கு இல்லைப்பா நானு.


SUFFIX on August 6, 2009 at 8:08 AM  

//அபுஅஃப்ஸர் said...
//தமிழரசி said...
எங்கப் போனாலும் வயத்துக்கு வஞ்சனையில்லை....
//

அங்கே பார்சல் வரலியா.. எங்களுக்கெல்லாம் அனுப்பிவெச்சிருக்காரு//

அரசியையாவது ஏதாவது சொல்லி சமாளிச்சுரலாம், ஆனால் உங்களை!?, அப்புறம் துபாயிலிருந்து பாய சுருட்டிக்கிட்டு பாய்ஞ்சு வந்துருவியலே, அதுதான் பார்சல்!!


SUFFIX on August 6, 2009 at 8:12 AM  

//அ.மு.செய்யது said...
அரைச்ச மாவப் பத்தி ஒரு அஞ்சு வரி எழுதிர்ந்தீங்கன்னா அதுவே துறை சார்ந்த பதிவா ஆயிருக்கும்.

இப்படி கலைக்கண்ணோட ஒரு படைப்ப போட்டு அசத்திர்கீங்க.ஜூப்பரு.//

நன்றி செய்யது, முன்பு நாம் மட்டும் பார்த்து ரசித்தவைகள் அல்லது ரசிக்காதவைகளாகக்கூட இருக்கலாம், ஆனால் தற்பொழுது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு நிறைவும், நிறைய தகவல்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது


S.A. நவாஸுதீன் on August 6, 2009 at 8:31 AM  

எத்தனை கிலோ வெயிட் ஏறி இருக்கு ஹபீபி


S.A. நவாஸுதீன் on August 6, 2009 at 8:31 AM  

நாமெல்லாம் செமினார் போறதே அதுக்குதானே. நம்மள நம்ம்ம்ம்பி அனுப்புற மக்களை சொல்லணும்


சிநேகிதன் அக்பர் on August 6, 2009 at 9:24 AM  

கலைக்கண்ணோடு படம் எடுத்து எங்களையும் ரசிக்க வைத்து விட்டீர்கள்.


சிநேகிதன் அக்பர் on August 6, 2009 at 9:26 AM  

இன்னும் இரண்டு பதிவு பாக்கியிருக்கு.

1. சாப்பிட்டதை விலாவரியா எழுதனும்.

2. என்ன டிரைனிங் கொடுத்தாங்க என்பதையும் முழுசா எழுதனும்.


சிங்கக்குட்டி on August 7, 2009 at 2:53 PM  

//பொருள் எப்படிப் பட்டவையாக இருந்தாலும் அது இருக்கும் இடம்// அட இந்த இடம் நல்லா இருக்கே...:-)) அத விட உங்களையும் நம்பி ஒருத்தன் ட்ரெயினிங் அனுப்புனான் பாருங்க...


Jaleela Kamal on August 8, 2009 at 9:34 AM  

நெஜமாவே அந்த குப்பையை அங்கு வைத்ததால் மவுசு ரொம்பவே அதிகமா இருக்கு.

ம்ம் ட்ரெயிங் சொல்லி போய் செமம் கட்டு போல.

அந்த குப்பை மட்டும் நம்மூர் வீடுகளில் இருந்துச்சி அவ்வளவு தான் ஏரியாவே குப்பயாகிடும்.

அந்த ஒத்தமாரமும், தனியா நின்ன வெட்டி சாச்சுடுவாங்க>

இருக்க வேண்டிய இடத்தில் இருந்ததால். மரத்துக்கும் . அந்த இடத்துக்குமே தனி அழகு கிடைத்துவிட்டது...


SUFFIX on August 8, 2009 at 12:35 PM  

//S.A. நவாஸுதீன் said...
எத்தனை கிலோ வெயிட் ஏறி இருக்கு ஹபீபி//

விடுவோமா? அதான் அங்கேயே நீச்சல் குளம் இருக்கே, கஷட்டப்பட்டு நீச்சல் அடித்து வெயிட்ட நார்மலுக்கு கொன்டுவந்து அடுத்த நாளைக்கு ரெடியாயிடுவோம்ல‌


SUFFIX on August 8, 2009 at 12:37 PM  

//அக்பர் said...
கலைக்கண்ணோடு படம் எடுத்து எங்களையும் ரசிக்க வைத்து விட்டீர்கள்.//

நாங்க ருசித்ததை ரசித்தற்க்கு நன்றி அக்பர்


SUFFIX on August 8, 2009 at 12:41 PM  

//அக்பர் said...
இன்னும் இரண்டு பதிவு பாக்கியிருக்கு.

1. சாப்பிட்டதை விலாவரியா எழுதனும்.

2. என்ன டிரைனிங் கொடுத்தாங்க என்பதையும் முழுசா எழுதனும்.//

1. இது மாதிரியெல்லாம் ரிஸ்க் எடுத்து கேள்வி கேட்க்காதிங்க!! அப்புறம் வயிற்று வந்துடும்.

2. அதை டேடிசன் ஹோட்டல் ரிசப்ஷனிஷ்ட் எழுதுவார், ஏன்னா நாங்க படிச்ச எல்லாத்தையும் அங்கேயே வச்சுட்டு வந்துட்டோம்


SUFFIX on August 8, 2009 at 12:43 PM  

//Jaleela said...
நெஜமாவே அந்த குப்பையை அங்கு வைத்ததால் மவுசு ரொம்பவே அதிகமா இருக்கு.

ம்ம் ட்ரெயிங் சொல்லி போய் செமம் கட்டு போல.

அந்த குப்பை மட்டும் நம்மூர் வீடுகளில் இருந்துச்சி அவ்வளவு தான் ஏரியாவே குப்பயாகிடும்.

அந்த ஒத்தமாரமும், தனியா நின்ன வெட்டி சாச்சுடுவாங்க>

இருக்க வேண்டிய இடத்தில் இருந்ததால். மரத்துக்கும் . அந்த இடத்துக்குமே தனி அழகு கிடைத்துவிட்டது...//

இப்படித்தான் பல பொருட்கள் சந்தையில் சக்கைப்போடு போடுகின்றன, எல்லாம் ஒரு டெக்னிக்குத்தேன்.


SUFFIX on August 8, 2009 at 12:46 PM  

//சிங்கக்குட்டி said...
//பொருள் எப்படிப் பட்டவையாக இருந்தாலும் அது இருக்கும் இடம்// அட இந்த இடம் நல்லா இருக்கே...:-)) அத விட உங்களையும் நம்பி ஒருத்தன் ட்ரெயினிங் அனுப்புனான் பாருங்க...//

S.A. நவாஸுதீன் said...
நாமெல்லாம் செமினார் போறதே அதுக்குதானே. நம்மள நம்ம்ம்ம்பி அனுப்புற மக்களை சொல்லணும்//

ஒரு செமினார் போனவங்களோட மனசு இன்னொரு செமினார் போனவங்களுக்கு தான் தெரியும்