ஆமா, நாம எல்லோரும் எறும்பு மாதிரி இருக்கணுமாம், குறுகுறு..துறுதுறுன்னு, இதை நான் சொல்லலை, பிரபல எறும்பியல் வல்லுணர் சொன்னதை கொஞ்ச நாளைக்கு முன்னாடி படிச்சேன். பாருங்க ஒருத்தர் எறும்பு பின்னாடியே போய் அதுக என்ன செய்யுதுன்னு பார்த்து, அதை எல்லாம் நமக்கு விளக்கமா சொல்லி இருக்கிறார். எறும்புங்களுக்கு நான்கு வகையான அபார குணம் இருக்காம். முதலாவது, அதுங்க எல்லாம் மேல ஏறும், கீழ இறங்கும், அப்படி போவும், இப்படி போவும், ஆமா, அது எங்க போகனும்னு நினைச்சுதோ அங்கே போயே தீரும், வச்ச குறி தப்பாது.
இரண்டாவது அதுங்க என்ன செய்யும்னா, கோடை காலத்தில குளிர் காலத்த்ற்க்கான தயாரிப்புகள செய்யும், ஆமா எப்படியோ கோடை முடிஞ்சுறும், அப்புறம் குளிர் காலத்தில அவ்ளோ சுலபமா வெளிய போய் சுற்றித் திரிந்து சாப்பிட முடியாது, அதனால அதுங்க முன் கூட்டியே ரொம்ப சமத்தா யோசிச்சு குளிர் காலத்துக்காக தயார் ஆயிடுமாம்.
மூன்றாவது குளிர் காலத்தில் கோடை காலத்தைப் பற்றி யோசிக்குமாம், அட எங்கே தான் இருக்கோ மூளை இதுங்களுக்கு, இப்படி யோசிச்சுக்கிட்டே இருக்குதய்யா!! இம்பூட்டு பெரிய மூளைய வச்சு நீங்க எப்பவாவது இப்படி யோசிச்சு இருக்கிங்களா? சரி, விஷயத்துக்கு வருவோம், ஆமாங்க, இந்த குளிர் காலம் சீக்கிரம் முடிஞ்சிடும்,அதனால் உள்ளேயே முடங்கி கிடக்காம, அப்ப்போ வெளிய வந்து எட்டி எட்டி பார்த்துட்டு போவுமாம், வெயில் அடிக்க ஆரம்பிச்சுடுச்சா, குளிர் குறஞ்சி இருக்கான்னு ஆய்வு செஞ்சுக்கிட்டே இருக்குமாம், வெயில் அடிக்க ஆரம்பிச்சது நம்மளுக்கு தெரியுதோ இல்லையோ, நம்ம எறும்புக்கு தெரிஞ்சு, தூங்க்கிட்டு இருக்கிற நம்ம பயபுல்லைங்க காலர்ல இழைஞ்சு வந்து எழுப்பிடும். அவ்ளோ உஷார்!!
நாலாவதும், முக்கியமானதும், இதையாவது கவனமா படிங்க, கோடை காலத்தில் எவ்ளோதான் அதுங்க சேர்த்து வைக்கும்? "எவ்ளோ கூடுதுலா முடியுமோ அவ்ளோ" ஆமா "All that possible they can".
பாருங்க ஒரு சின்ன எறும்பு சின்ன மூளைய வச்சு என்னனென்ன டகாலகடி வேலையெல்லாம் செய்யுது. நீங்க என்ன செய்யப் போறீங்க, ஒன்னும் இல்லாட்டி ரெண்டு, மூனு பின்னூட்டங்களையாவது போடுங்கப்பு!!
டிஸ்கி : NEVER GIVE UP, LOOK AHEAD, STAY POSITIVE AND DO ALL YOU CAN!!
41 comments
எறும்பை பார்த்து நாம் கத்துக்க நல்ல விஷயங்கள் இருக்கு ப்ரதர்.பகிர்வுக்கு நன்றி!!
ரொம்ப சாதுரியமா எறும்பை பத்தி சொல்லிட்டு.....
நைசா அட! அட! என்ன ஒரு மூளை ஷாபிக்கு :-)
ஆனா ஷாபி நீங்க சொல்லறது என்னவோ உண்மைதான்.
எறும்புக்கு இருக்குற மூளை யாருக்கு இருக்கு.
நல்ல பகிர்வு!
அந்த 'டகால்டி' ஹா ஹா ஹா!
ஆஃபிஸ்ல தூங்கும்போது காதுல புகுந்த எறும்பு இதத்தான் சொல்லிட்டு போச்சா.
ரெண்டு..
மூணு..
// ஒன்னும் இல்லாட்டி ரெண்டு, மூனு பின்னூட்டங்களையாவது போடுங்கப்பு!! //
நீங்க சொன்ன மாதிரி பின்னூட்டம் போட்டுட்டேன். இப்ப சந்தோஷமா?
எறும்பைப் பற்றி சுறு சுறுப்பாக ஒரு இடுகை.
வெரி குட்.. கீப் இட் அப்.
என்ன அண்ணா. எத்தனை எறும்புன்னு எண்றீங்களா?
//Mrs.Menagasathia said...
எறும்பை பார்த்து நாம் கத்துக்க நல்ல விஷயங்கள் இருக்கு ப்ரதர்.பகிர்வுக்கு நன்றி!!//
ஆமாங்க நான் கூட ஒரு டியூஷன் வச்சுக்கலாம்னு இருக்கேன், முதல் பின்னூட்டத்திற்க்கு நன்றிங்க
//RAMYA said...
அந்த 'டகால்டி' ஹா ஹா ஹா//
சுறுசுறுப்பா எறும்பு மாதிரி மூணு பின்னூட்டங்கள் போட்டிங்களே!! பேஷ் பேஷ்!!
The Ant Bully - படம் பாருங்க ஷஃபி. அசத்தலா இருக்கும். அனிமேட்டட் மூவி. ரொம்ப சுவாரசியமா இருக்கும்
// S.A. நவாஸுதீன் said...
ஆஃபிஸ்ல தூங்கும்போது காதுல புகுந்த எறும்பு இதத்தான் சொல்லிட்டு போச்சா.//
ஆமா உங்கள மாதிரி ஆழ நிலை தியானம் செய்ய நான் இன்னும் பழகலை நவாஸ்
// இராகவன் நைஜிரியா said...
எறும்பைப் பற்றி சுறு சுறுப்பாக ஒரு இடுகை.
வெரி குட்.. கீப் இட் அப்.//
நன்றி அண்ணா, அங்கே அலுவலகத்தில் எப்படி எறும்புத்தொல்லைகள் இருக்கா?
ரொம்ப சூப்பரான பதிவு
சொல்வதே ஆமை போல் அசையாதே அந்த எறும்பை போல சுறு சுறுப்பா இரு என்பார்கள்.
நம்ம ஷபியும் எறும்பு போல சுறு சுறூப்பு போல அதான் சூப்பரான பதிவை எல்லோருக்கும் கொடுத்து இருக்கிறார்.
//ஆஃபிஸ்ல தூங்கும்போது காதுல புகுந்த எறும்பு இதத்தான் சொல்லிட்டு போச்சா.//
நவாஸ் சரியான காமடி தான்
எறும்புக்கு தூக்கமும் கிடையாது
இன்னும் நிறைய கத்துகிடலாம்
ட்ராஃபிக் ரூல்ஸ் ஃபாலோ பண்ற ஒரே ஆள் எறும்பு மட்டும்தான்
சின்னஎறும்பு வசந்த்
இன்று ஒரு தகவலா ....??? தொடர்க !!!
ரொம்ப நன்றி! எனக்கு எண்ணு தெரில, எறும்பு யானை ஜோக்கு நினைவுக்கு வருது
நாங்க மின்னூட்டம் போடறது இருக்கட்டும்; எறும்பு பத்தி பேசற நீங்க பதிவுகள் அடிக்கடி போடுங்க!!
//கோடை காலத்தில குளிர் காலத்த்ற்க்கான தயாரிப்புகள செய்யும், ஆமா எப்படியோ கோடை முடிஞ்சுறும், அப்புறம் குளிர் காலத்தில அவ்ளோ சுலபமா வெளிய போய் சுற்றித் திரிந்து சாப்பிட முடியாது, அதனால அதுங்க முன் கூட்டியே ரொம்ப சமத்தா யோசிச்சு குளிர் காலத்துக்காக தயார் ஆயிடுமாம்.
//
இந்த கதையை தான் என் மகனுக்கு school Story telling competetion சொல்லிக்கொடுத்தேன், the Hunt and Goshiper
//மூன்றாவது குளிர் காலத்தில் கோடை காலத்தைப் பற்றி யோசிக்குமாம்//
நாம நாளைபற்றி யோசிச்சால் இன்னிக்கு சந்தோஷமாக இருக்க முடியாது சொல்லிருக்காங்க, அப்போ என்னாத்தான் செய்யுறது
இதுலேர்ந்து என்னா தெரியுதுனா????
உங்க குழந்தைகளுக்கு நேற்று பாடம் சொல்லிக்கொடுத்தீரோ? அப்படியே உல்டாவா பதிவும் பொட்டாச்சு ஹ ஹ
இருந்தாலும் தேவையான ஒன்று
//பாருங்க ஒரு சின்ன எறும்பு சின்ன மூளைய வச்சு என்னனென்ன டகாலகடி வேலையெல்லாம் செய்யுது//
அப்போ பெரிய மூளை இருந்தா?????
அப்போ நம்மால்ங்க ஏன் சின்ன மூளை(புத்தி)யுள்ளவனு திட்டுறாங்க... ?
இதுமட்டுமில்லாம, எறும்பு எங்க போனாலும் திரும்ப தன்னோட வீட்டுக்கேவும் கரெட்டா வந்திருமாம்.
// Jaleela said...
ரொம்ப சூப்பரான பதிவு
சொல்வதே ஆமை போல் அசையாதே அந்த எறும்பை போல சுறு சுறுப்பா இரு என்பார்கள்.//
நன்றிங்க ஜலீலா, நாங்க எறும்பாட்டம் இருக்கோமோ இல்லையோ, நீங்க எறும்பு மாதிரி நிஜமாகவே உழைக்கிறீங்க. Keep it up.
ரொம்ப நல்ல பகிர்வு. நன்றி :-)
// பிரியமுடன்...வசந்த் said...
எறும்புக்கு தூக்கமும் கிடையாது
இன்னும் நிறைய கத்துகிடலாம்
ட்ராஃபிக் ரூல்ஸ் ஃபாலோ பண்ற ஒரே ஆள் எறும்பு மட்டும்தான்
சின்னஎறும்பு வசந்த்//
நன்றி சுறு சுறு குரும்பு வசந்த்!!
// அ.மு.செய்யது said...
இன்று ஒரு தகவலா ....??? தொடர்க !!//
ஹா..ஹா.. நன்றி செய்யது
//நாஸியா said...
ரொம்ப நன்றி! எனக்கு எண்ணு தெரில, எறும்பு யானை ஜோக்கு நினைவுக்கு வரு//
அப்படியா அந்த ஜோக் என்னன்னு ஒரு நாளைக்கு சொல்லிடுங்க
//அபுஅஃப்ஸர் said...
//மூன்றாவது குளிர் காலத்தில் கோடை காலத்தைப் பற்றி யோசிக்குமாம்//
நாம நாளைபற்றி யோசிச்சால் இன்னிக்கு சந்தோஷமாக இருக்க முடியாது சொல்லிருக்காங்க, அப்போ என்னாத்தான் செய்யுறது//
அது வேற சொல்லிட்டாங்களா, கன்ஃப்யூஸ் ஆகாமே பார்த்து நடந்துக்கோங்க தல!!
//" உழவன் " " Uzhavan " said...
இதுமட்டுமில்லாம, எறும்பு எங்க போனாலும் திரும்ப தன்னோட வீட்டுக்கேவும் கரெட்டா வந்திருமாம்//
தகவலுக்கு நன்றி உழவரே!!
// சிங்கக்குட்டி said...
ரொம்ப நல்ல பகிர்வு. நன்றி :-)//
நன்றி சிங்கக்குட்டி!!
// ஹுஸைனம்மா said...
நாங்க மின்னூட்டம் போடறது இருக்கட்டும்; எறும்பு பத்தி பேசற நீங்க பதிவுகள் அடிக்கடி போடுங்க!//
ஹுசைனம்மா சின்ன எறும்பெ இப்படியெல்லாம் மிரட்டாதிங்க ஆமா!!
சுறுசுறுப்பா சுறுசுறுப்பை சொல்லிகொடுகிறதுபோல்
சட்டென்று எறும்பு பாடம் படிக்கோனுமுன்னு விரும்பினா
உடனே நம்ம ஷஃபிகிட்ட டியூஷன் எடுத்தாபோதுங்க..
//அன்புடன் மலிக்கா said...
சுறுசுறுப்பா சுறுசுறுப்பை சொல்லிகொடுகிறதுபோல்
சட்டென்று எறும்பு பாடம் படிக்கோனுமுன்னு விரும்பினா
உடனே நம்ம ஷஃபிகிட்ட டியூஷன் எடுத்தாபோதுங்க..//
சரிங்கோ, நீங்களே பீஸ் எவ்ளோன்னும் சொல்லிடுங்குங்குகோ!!
நல்ல பகிர்வு ஷஃபி.
‘ரமல்’ எறும்பு தானே ?
குர்ஆன்லையும் நிறைய சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன் எறும்பு பற்றி.
ஹாரூன் யஹ்யா தலத்தில் பார்த்ததாக ஞாபகம். - மறுக்கா பார்த்து சரியா சொல்றேன்.
நீங்க என்ன செய்யப் போறீங்க, ஒன்னும் இல்லாட்டி ரெண்டு, மூனு பின்னூட்டங்களையாவது போடுங்கப்பு!!]]
ஹா ஹா ஹா ...
நட்புடன் ஜமால் said...
நல்ல பகிர்வு ஷஃபி.
//‘ரமல்’ எறும்பு தானே ?
குர்ஆன்லையும் நிறைய சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன் எறும்பு பற்றி.
ஹாரூன் யஹ்யா தலத்தில் பார்த்ததாக ஞாபகம். - மறுக்கா பார்த்து சரியா சொல்றேன்.//
ஆமாம் ஜமால், அத்தியாயம் 27 அந்நம்ல்!! நினைவூட்டியதற்க்கு நன்றிப்பா.
Post a Comment