ஜித்தா ஃபவுன்ட்டெயின் (ஜித்தா - சவூதி அரேபியாவின் வர்த்தக நகரம்), வெள்ளொளியாய் விண்ணை நோக்கி பாய்ச்சிடும் அழகை வீட்டிலிருந்தே ரசிக்க முடியும், இருந்தாலும் சிறிய மகன் ஒரு நாளைக்கு அது அருகில் போய் பார்க்க வேண்டுமென ஒரே பிடிவாதம், சென்ற வாரம் அருகில் சென்று பார்த்தோம் (பாதுகாப்பு காரணமாக மிகவும் அருகில் செல்ல முடியாது). இது பற்றிய சில தகவல்கள்:
உலகிலேயே மிக உயரமானதும் கடல் நீரை பயன்படுத்தும் ஒரே நீரூற்றாகும், கடல் மட்டத்திலிருந்து 312 மீட்டர் உயரத்திற்க்கு நீரை பாய்ச்சி அடிக்கிறது (ஈஃபில் டவரை விட உயரம்). இவ்வளவு உந்துதலுடன் செயல்படுவதற்க்கு இதன் பின்னனியில் இருக்கும் பொறியியல் துறையின் பங்கினை நாம் நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.
சக்தி வாய்ந்த பம்புகள், மற்றும் பைப்புகளை கடலுக்கு அடியிலேயே ஐந்து மாடி உயரத்திற்க்கு ஒரு கட்டிடம் போல் அமைத்து அதற்க்கு மேல் இவை யாவும் பொருத்தி இருக்கின்றார்களாம். இந்த ப்ம்ப் ஹவுஸ் கட்ட 7,000 டன் கான்க்ரீட் பயன்படுத்தியுள்ளார்கள்.
மணிக்கு 375 கிலோமீட்டர் வேகத்தில், வினாடிக்கு 1,250 லிட்டர் நீர் வெளியேறுகிறதாம். தரையிலிருந்து புறப்பட்டு நீர் அதிகபட்ச உயரம் வரை செல்லும் நீரின் எடை 18 டன்கள். இரவு நேரங்களில் ஒளியூட்ட 500 சக்தி வாய்ந்த மிண் விளக்குகள் சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நீரூற்று, 1985ம் வருடம் கட்டி முடிக்கப்பட்டு,இது வரை எந்த ஒரு பிரச்ணைகளும் இல்லையாம், வருடா வருடம் ஒரு முறை Planned Shutdownக்காக நிறுத்தி வைக்கபடுமாம்.
இந்த நீரூற்று கின்னஸ் ரிக்கார்டில் இடம் பெற்று இருக்காம்.
அப்புறம் என்ன ஜித்தாவுக்கு வந்தா உங்க கண்ணுல படாம இருக்காது இந்த ஃபவுன்ட்டெயின், அப்போ நான் சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தால் சரி!!
48 comments
அருமையா விளக்கத்துடன் அற்புதமா எழுதி இருக்கீங்க ஷஃபி.
தகவல்களுக்கு நன்றி ஷஃபி.
நல்ல பதிவு ஷஃபி...!
ஜித்தா ன்னு வெறுமனே சொன்னா எப்படி ..?
எந்த நாட்டில ,எங்க இருக்குன்னு சொன்னா நல்லா இருக்குமே ..?
//S.A. நவாஸுதீன் said...
அருமையா விளக்கத்துடன் அற்புதமா எழுதி இருக்கீங்க ஷஃபி//
நன்றி நவாஸ், தினமும் நாம் இந்த ஃபவுன்ட்டைனைப் பார்க்கிறோம், ஆனா பதிவில் போடனும்னு நினைச்சப்போ நமகே அறியாத தகவல்கள் கிடைக்கிறது.
//இராகவன் நைஜிரியா said...
தகவல்களுக்கு நன்றி ஷஃபி//
நன்றி அண்ணா, நீங்க ஜித்தா வாங்க இந்த பவுன்ட்டைன் மேலேயே ஒரு பதிவர் சந்திப்பு நடத்திடலாம்!!
//ஜீவன் said...
நல்ல பதிவு ஷஃபி...!
ஜித்தா ன்னு வெறுமனே சொன்னா எப்படி ..?
எந்த நாட்டில ,எங்க இருக்குன்னு சொன்னா நல்லா இருக்குமே ..?//
சாரி, என்ன செய்ய, சவூதியில் 15 வருடம் ஆகப்போவுது, இதுவும் நம்மூர் மாதிரியே ஆயிடுச்சு, ஜித்தா சவுதியலதான் இருக்குங்கிறதே மறந்துடுச்சு தலைவரே!!
//ஜீவன் said...
நல்ல பதிவு ஷஃபி...!
ஜித்தா ன்னு வெறுமனே சொன்னா எப்படி ..?
எந்த நாட்டில ,எங்க இருக்குன்னு சொன்னா நல்லா இருக்குமே ..?//
சொல்லியாச்சுங்கோ, அறிவுரைக்கு நன்றி தலைவரே!!
ஒ..எனக்கு இதுநாள் வரை அதை பற்றி தெரியாது...என்னுடைய அப்பா 20 வருடங்களாக சவுதியில் தான் வேலை பார்த்தார்...ஆனால் பார்த்து இருப்பார என்று தெரியவில்லை..
சூப்பர்ப் பதிவு.
//Geetha Achal said...
ஒ..எனக்கு இதுநாள் வரை அதை பற்றி தெரியாது...என்னுடைய அப்பா 20 வருடங்களாக சவுதியில் தான் வேலை பார்த்தார்...ஆனால் பார்த்து இருப்பார என்று தெரியவில்லை..
சூப்பர்ப் பதிவு.//
ஓ..அப்படியா, ஜித்தாவிலிருந்தால் நிச்சயமாக பார்த்திருப்பார், கடல் ஓரத்திலிருந்து பார்க்கும்பொழுது மிக மிக அழகாக இருக்கும்.
naanga ellam unga blogla than pakka mudium
இன்ஷா அல்லாஹ்..ஜித்தா வந்தா சேர்ந்து போயி பார்ப்போம் !!
நல்ல விளக்கங்களுடன் பதிவு அருமை ப்ரதர்!!
//அப்புறம் என்ன ஜித்தாவுக்கு வந்தா உங்க கண்ணுல படாம இருக்காது//
டிக்கெட் எடுத்து அனுப்புங்க
பச்சை நிறமே பச்சை நிறமே...சூப்பராக இருக்கின்றது...
ஐ! இது சூப்பரா இருக்கே..
நன்றி!
நல்ல பகிர்வு தல
நானும் வந்தப்போ பார்க்கமுடியாமல் போய்விட்டது.
ஷார்ஜாவுலேயும் இருக்கு ஆனால் தண்ணீர் உள்ளேவிட்டு நீர்த்தேக்கத்தில் வெச்சிருக்காங்க, இந்தளவுக்கு பெரியதும் இல்லை.
கடலுக்கு நடுவில் காண குளிர்ச்சியா இருக்கு
// gayathri said...
naanga ellam unga blogla than pakka mudium//
நன்றி காயத்ரி, ஒரு நாள் நீஙகளும் நேரில பார்க்க நேரிடலாம்.
//அ.மு.செய்யது said...
இன்ஷா அல்லாஹ்..ஜித்தா வந்தா சேர்ந்து போயி பார்ப்போம் !!//
இன்ஷா அல்லாஹ், சீக்கிரம் வாங்க செய்யது.
// Mrs.Menagasathia said...
நல்ல விளக்கங்களுடன் பதிவு அருமை ப்ரதர்!//
நன்றிமா
//நசரேயன் said...
//அப்புறம் என்ன ஜித்தாவுக்கு வந்தா உங்க கண்ணுல படாம இருக்காது//
டிக்கெட் எடுத்து அனுப்புங்க//
டிக்கட்டை நேரிலேயே கொண்டு வந்து தந்துடுறேன், ஊருக்கு வர நீங்க ஒரு டிக்கட் எடுத்து அனுப்புங்களேன்.
//Geetha Achal said...
பச்சை நிறமே பச்சை நிறமே...சூப்பராக இருக்கின்றது..//
ஆமாம் சிறு பசுமை புரட்சி! Thanks.
// நாஸியா said...
ஐ! இது சூப்பரா இருக்கே..
நன்றி!//
நன்றி நாஸியா, துபாய் போகும்போது, ஃபிளைட்ல இருந்து இந்த ஃப்வுன்ட்டெயின் தெரியுதான்னு எட்டி பாருங்க!!
//அபுஅஃப்ஸர் said...
நல்ல பகிர்வு தல
நானும் வந்தப்போ பார்க்கமுடியாமல் போய்விட்டது.
ஷார்ஜாவுலேயும் இருக்கு ஆனால் தண்ணீர் உள்ளேவிட்டு நீர்த்தேக்கத்தில் வெச்சிருக்காங்க, இந்தளவுக்கு பெரியதும் இல்லை.
கடலுக்கு நடுவில் காண குளிர்ச்சியா இருக்கு//
இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை வாங்க, பட்டாணி சுண்டலும் வாங்கிக்கிட்டு ஒன்னா சேர்ந்து போவோம் தல.
நான் எண்பதுகளில் ஜித்தாவில் இருந்தபோது எங்கள் வீடு இதன் அருகாமையில்தான் இருந்தது. மிக நன்றாக இருக்கும். பக்கத்தில் எப்படிப் போய்ப் பார்த்தீர்கள், படகிலா?
// Hussainamma said...
நான் எண்பதுகளில் ஜித்தாவில் இருந்தபோது எங்கள் வீடு இதன் அருகாமையில்தான் இருந்தது. மிக நன்றாக இருக்கும். பக்கத்தில் எப்படிப் போய்ப் பார்த்தீர்கள், படகிலா?//
படகில் அந்தப் பக்கம் போக அனுமதி இல்லை, அருகில் அரண்மனை இருக்கே அதனால தான் போல.
ஓ...
நான் முதல் முறையாக இந்த தகவலை படிக்கின்றேன்.
அப்புறம் . . .
மிக எளிமையான நடை... நிறைய எழுதுங்கள்.
நல்ல விளக்கத்துடன் கூடிய அருமையான பதிவு
ம்ம் நல்லாத்தான் இருக்கு. என்று நேரில் பார்க்க ம்டுயுமோ
நசரேயன் கூறியது போல் செய்தால் நன்றாக இருக்குமோன்னு நினைக்கிறேன்
உங்க பதில் என்ன:)
அருமை உங்கள் வலையின் வழியாக எங்க வீட்டிற்கு "ஜித்தா" வந்து விட்டது போன்ற உணர்வை அடைந்தேன்!
// " உழவன் " " Uzhavan " said...
ஓ.//
ஓ போட்டதற்க்கு நன்றி!!
//r.selvakkumar said...
நான் முதல் முறையாக இந்த தகவலை படிக்கின்றேன்.
அப்புறம் . . .
மிக எளிமையான நடை... நிறைய எழுதுங்கள்.//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
//RAMYA said...
நல்ல விளக்கத்துடன் கூடிய அருமையான பதிவு
ம்ம் நல்லாத்தான் இருக்கு. என்று நேரில் பார்க்க ம்டுயுமோ
நசரேயன் கூறியது போல் செய்தால் நன்றாக இருக்குமோன்னு நினைக்கிறேன்
உங்க பதில் என்ன:)
அருமை உங்கள் வலையின் வழியாக எங்க வீட்டிற்கு "ஜித்தா" வந்து விட்டது போன்ற உணர்வை அடைந்தேன்!//
நன்றி ரம்யா, டிக்கட் தானே அனுப்பிட்டா போச்சு!!
நல்ல பகிர்வு ஷஃபி.
பார்வைகள் ரசித்தாடுவதற்கும்
அதைகண்டு மனங்கள் மகிழ்ந்தாடுவதற்கும் எத்தனை வினோதங்களையும், எத்தனை வியப்புமிகு வடிவங்களையும், படைத்து இதையெல்லாம் கண்டுகளிக்க கண்களும் தந்த இறைவனுக்கே புகழனைத்தும்...
//நட்புடன் ஜமால் said...
நல்ல பகிர்வு ஷஃபி//
நன்றி ஜமால்
//அன்புடன் மலிக்கா said...
பார்வைகள் ரசித்தாடுவதற்கும்
அதைகண்டு மனங்கள் மகிழ்ந்தாடுவதற்கும் எத்தனை வினோதங்களையும், எத்தனை வியப்புமிகு வடிவங்களையும், படைத்து இதையெல்லாம் கண்டுகளிக்க கண்களும் தந்த இறைவனுக்கே புகழனைத்தும்..//
அருமையாக சொன்னீங்க மலிக்கா
ஷஃபிக்ஸ் சூப்பரான துல்லியமா எடுத்து எழுதியிருக்கீங்க அங்க போய் பார்க்க முடிய வில்லை என்றாலும் இங்கிருந்து உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்.
எங்க டாடியும் ஜித்தாவில் தான் 10 வருடம் வேலை பார்த்தார்கள், ஆனால் அங்கு சென்றிருக்க வாய்ப்பில்ல்லை. என் கணவரும் முன்பு அங்கு தான் வேலை பார்த்தார் கேட்டு பார்க்கிறேன்.
இதில் பார்க்கும் போதே நேரில் சென்று பார்க்க வேண்டும் போல் இருக்கு.
சூப்பரான, நல்ல பதிவு.
//Jaleela said...
ஷஃபிக்ஸ் சூப்பரான துல்லியமா எடுத்து எழுதியிருக்கீங்க அங்க போய் பார்க்க முடிய வில்லை என்றாலும் இங்கிருந்து உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்.
எங்க டாடியும் ஜித்தாவில் தான் 10 வருடம் வேலை பார்த்தார்கள், ஆனால் அங்கு சென்றிருக்க வாய்ப்பில்ல்லை. என் கணவரும் முன்பு அங்கு தான் வேலை பார்த்தார் கேட்டு பார்க்கிறேன்.
இதில் பார்க்கும் போதே நேரில் சென்று பார்க்க வேண்டும் போல் இருக்கு.
சூப்பரான, நல்ல பதிவு.//
ஜித்தாவில் இருந்திருந்தால் நிச்சயமாக பார்த்திருப்பார்கள், கேட்டுப் பாருங்கள், கருத்துக்கு நன்றி!!
pala varusam saudila kuppa kottura romba perukku ithu theriyaathu....
payanulla Thahaval......
ஜித்தாவுல ஃபிளைட் இறங்குனா கண்ணுக்குள்ள ஹரம்ஷெரீப்தான் நிக்கிது. நேரா அங்கதான் ஓடத் தோணுது. ஒவ்வோரு முறையும் ஜித்தாவையும் சுத்திப்பார்க்கனும்னு நினைக்கிறது,ஆனால் மெக்காவிலேயே பொழுது கழிந்து விடுகின்றது. இன்ஷா அல்லாஹ் இந்தமுறை வரும்போது பார்ப்போம் :)
அருமையான பகிர்வு சபிக்ஸ்.இவ்வளவு விபரங்கள் எங்கிருந்து திரட்டினீர்கள்?இன்னும் அருகில் போய் பார்க்கலை மக்கா.விமானத்தில் இருந்து பார்த்துதான்.அடுத்த முறை வரும் போது உங்களுடன்,நவாசுடன் போக வாய்க்கிறதான்னு பார்க்கலாம்.
//abu shyma said...
pala varusam saudila kuppa kottura romba perukku ithu theriyaathu....
payanulla Thahaval....//
எனக்கும் புதிய தகவல்கள் தான் நண்பரே, இந்த இடுகை இடும்போது, செய்தித்தாள்கள் மற்றும் இணையத்தில் தேடிய எடுத்தது.
//ரஹ்மான் said...
உங்களுக்கு என் பதிவில் என் நன்றி
http://tamilbazaar.blogspot.com/2009/11/blog-post_4578.html//
நன்றி ரஹ்மான் வாழ்த்துக்கள்.
// எம்.எம்.அப்துல்லா said...
ஜித்தாவுல ஃபிளைட் இறங்குனா கண்ணுக்குள்ள ஹரம்ஷெரீப்தான் நிக்கிது. நேரா அங்கதான் ஓடத் தோணுது. ஒவ்வோரு முறையும் ஜித்தாவையும் சுத்திப்பார்க்கனும்னு நினைக்கிறது,ஆனால் மெக்காவிலேயே பொழுது கழிந்து விடுகின்றது. இன்ஷா அல்லாஹ் இந்தமுறை வரும்போது பார்ப்போம் :)//
வாருங்கள் அப்துல்லா, தங்களைப் பற்றி அந்த மூவர் மூலம் கேள்விப் பட்டுள்ளேன், இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை ஜித்தா வந்தால் கண்டிப்பாக தொடர்பு கொள்ளுங்கள், சந்திப்போம்.
// பா.ராஜாராம் said...
அருமையான பகிர்வு சபிக்ஸ்.இவ்வளவு விபரங்கள் எங்கிருந்து திரட்டினீர்கள்?இன்னும் அருகில் போய் பார்க்கலை மக்கா.விமானத்தில் இருந்து பார்த்துதான்.அடுத்த முறை வரும் போது உங்களுடன்,நவாசுடன் போக வாய்க்கிறதான்னு பார்க்கலாம்.//
வாங்க அண்ணே, விரைவில் சந்திப்போம்.
கண்ணுக்குள்ள கொண்டு வந்துட்டீங்க ஜித்தாவ?
ரொம்ப நன்றி சார்.
ஆமா ஜித்தான்னா அரபியில பாட்டியாமே?உண்மையா?ஏன்? விளக்க முடியுமா?
நீங்க இருக்குறது ஜித்தான்னு சொல்லுறீங்க,ஆனா புரொபைல்ல இந்தியான்னு இருக்கு?புரியலையா சார்.
அருண் சங்கர்:
நான் ஜெத்தா வந்தபோது ஒருமுறை பார்த்திருக்கிறேன். ரமதான் சமயம் என்று நினைவு. ரசிக்கும்படியாக எழுதியுள்ளீர்கள் ஷஃபி. இப்பொழுது பெங்களூரில் செட்டில் ஆனாலும் எனக்கு நல்ல பல நண்பர்களை அளித்தது சவுதியில் (ரியாத்) இருந்த நாட்கள் தான். உங்கள் எழுதுக்களை எல்லாம் படிக்கும் போது பழைய நினைவுகள் வருவதுடன், நேரில் சந்தித்து அளவளாவுவது போல் உள்ளது. மகிழ்ச்சி. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
//பாத்திமா ஜொஹ்ரா said...
கண்ணுக்குள்ள கொண்டு வந்துட்டீங்க ஜித்தாவ?
ரொம்ப நன்றி சார்//
மிக்க மகிழ்ச்சி, நீங்கள் ஜித்தா வந்திருக்கிங்களா?
// அருண்சங்கர் said...
அருண் சங்கர்:
நான் ஜெத்தா வந்தபோது ஒருமுறை பார்த்திருக்கிறேன். ரமதான் சமயம் என்று நினைவு. ரசிக்கும்படியாக எழுதியுள்ளீர்கள் ஷஃபி. இப்பொழுது பெங்களூரில் செட்டில் ஆனாலும் எனக்கு நல்ல பல நண்பர்களை அளித்தது சவுதியில் (ரியாத்) இருந்த நாட்கள் தான். உங்கள் எழுதுக்களை எல்லாம் படிக்கும் போது பழைய நினைவுகள் வருவதுடன், நேரில் சந்தித்து அளவளாவுவது போல் உள்ளது. மகிழ்ச்சி. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.//
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அருண், உண்மைதான் அயல் நாட்டு வாழ்க்கை புதிய பல நண்பர்களை தந்திருக்கிறது.
Post a Comment