Picture Source : http://www.insidesocal.com/tomhoffarth/customer-service.jpg
தற்பொழுது எந்த ஒரு பொருள் வாங்கினாலும் அதன் உறையில் அவங்க கம்பெனி info@xyz என மின்னஞ்சல் முகவரி காணப்படுகிறது. இது எந்த அளவுக்கு நமக்கு உதவுகிறது. என்னுடைய அனுபவங்கள் சில.
ஒரு முறை செய்தித் தாளில் விளம்பரம், கேனான் கேமரா வாங்கினால் அதனுடன் மேலுறை இலவசமா கொடுக்குறோம்னு, ஷோ ரூமில் கேமரா வாங்கப்போனபோது அப்படியெல்லாம் எங்களுக்கு ஒரு ஆணை வரவில்லை, எங்களுக்குத் தெரியாதுன்னு சொன்னாங்க. விவாதித்து உபயோகம் இல்லையென பட்டது, அன்றைக்கே கேனானோட info முகவரிக்கு விளக்கத்துடன் என்னுடைய கைபேசி எண்ணையும் கொடுத்தேன். அடுத்த நாளே ஷோரூமில் இருந்து அழைப்பு வந்தது, தாங்களின் புகார் தலைமை அலுவலகத்திற்கு கிடைத்தது,இந்த சலுகையில் முதல் நாளாக இருந்ததால் சிறிய குழப்பம், தாங்கள் உடனே வந்து உறையினை வாங்கிக் கொள்ளுங்கள். அட பரவாயில்லையே..!!
USB Pen Drive வருவதற்கு முன்னால், ப்ளாப்பி உபயோகப்படுத்திக் கொண்டிருந்த காலம், கடைக்கு போய் Imation ஒரு பெட்டி (10 ப்ளாப்பி)வாங்கினேன். பெட்டிய திறந்து பார்த்தால் அதில் ஒட்டக்கூடியா லேபிலைக் காணோம், அடக் கொடுமையே, உடனே infoக்கு ஒரு மின்னஞ்சல் தட்டு, நான் வாங்கிய பெட்டியின் Reference Number கொடுத்தேன். லேபில் இல்லாததற்கு என்ன காரணம், மறதியா, இல்லை இனி அதை தனியா போட்டு காசு சம்பாதிக்க போறீங்களா. அந்த மின்னஞ்சல் கனடா போய்ட்டு அங்கிருந்து துபாய் அலுவலகம் சென்று அங்கிருந்து பதில் வந்திருந்தது, பிழையாக இது நிகழ்ந்திருக்கலாம் அதனால் லேபிலகள் கூரியரில் அனுப்பியிருப்பதாகவும் கூறியிருந்தார்கள். மூன்று நாளைக்கு பிறகு ஒரு Aramex பாக்கெட் வந்திருந்தது, நான் வாங்கியதோ 10 ப்ளாப்பிகள் தான், ஆனால் அவர்கள் 100க்கு மேல் அனுப்பியிருந்தார்கள்!! அவர்களை பாராட்டி ஒரு பதில் அனுப்பினேன். கனடா மேளாலருக்கோ மிக்க மகிழ்ச்சி, அன்று முதல் நாங்க ரெண்டு பேரும் நல்லா தோஸ்து ஆயிட்டோம்கிறது வேறு கதை.
எங்கள் நிறுவனத்தின் info மின்னஞ்சல்களை நிர்வகிக்கும் பொறுப்பு ஒரு வருடம் (2007) என்னிடம் இருந்தது, சராசரியாக ஒரு நாளைக்கு 200 மின்னஞ்சல்கள் வரும், பெரும்பாலும் பணிகள் வேண்டியே (Recruitment)வரும், மற்றவை (Customers) வாடிக்கையாள்ர்கள், (Suppliers) வழங்குவோர் இப்படி நிறைய வருவதுண்டு, ஆனால் அனைத்தும் சரியாக முறைப்படுத்தப்பட்டு சரியான இடத்திற்கு அனுப்பி வைக்கபடும். We never ignore!!
எங்கள் நிறுவனத்தின் info மின்னஞ்சல்களை நிர்வகிக்கும் பொறுப்பு ஒரு வருடம் (2007) என்னிடம் இருந்தது, சராசரியாக ஒரு நாளைக்கு 200 மின்னஞ்சல்கள் வரும், பெரும்பாலும் பணிகள் வேண்டியே (Recruitment)வரும், மற்றவை (Customers) வாடிக்கையாள்ர்கள், (Suppliers) வழங்குவோர் இப்படி நிறைய வருவதுண்டு, ஆனால் அனைத்தும் சரியாக முறைப்படுத்தப்பட்டு சரியான இடத்திற்கு அனுப்பி வைக்கபடும். We never ignore!!
"Never divorce a customer, unless you are willing to face the consequences"
78 comments
//கனடா மேளாலருக்கோ மிக்க மகிழ்ச்சி, அன்று முதல் நாங்க ரெண்டு பேரும் நல்லா தோஸ்து ஆயிட்டோம்கிறது வேறு கதை.//
கனடாவில ஒரு ரெண்டு ஏக்கரா நஞ்ச பாத்து வாங்க ஏற்பாடு செஞ்சதே அவர வச்சுத்தானே, அதச் சொல்லவே இல்லையே!!
இந்த மாதிரி நொட்ட நொள்ளச் சொல்றவங்களுக்குன்னே வச்சிருக்கிறதுதான் info@mail.com !!
உங்கள உங்க ஆப்பீஸ்ல அதுக்கு பொறுப்பியா வச்சதுக்கப்புறம்தான் இப்படி மெயில் மேல மெயிலா அனுப்புறத நிறுத்தினீங்க!!
நுகர்வோர் விழிப்புணர்ச்சி அருமையாய் விளக்கி இருக்கிறீர்கள்.
ஹா ஹா ஹா. என்னாச்சு ஷஃபி.
கேமரா கவர் இல்லைன்னா ஓகே. கிடைச்சது ரொம்ப சந்தோசம். ஃப்லாப்பி லேபில் இல்லேன்னு மெயில் அனுப்புனீங்களா.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆனாலும் அந்த கம்ப்ளைண்ட்டையும் மதிச்சு கூரியர்ல அனுப்பி வைத்த இமேஷன் கம்பெனிக்காரன எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
கேமரா கவர் இல்லைன்னா ஓகே. கிடைச்சது ரொம்ப சந்தோசம். ஃப்லாப்பி லேபில் இல்லேன்னு மெயில் அனுப்புனீங்களா. எஸ்.ஏ.நவாஸுதீன்
அந்த பேச்சுக்கெ இடமில்லை.5 ரூபாய்க்கு மிட்டாய் வாங்கினாலும் 5 லட்சத்துக்கு பிளாட் வாங்கினாலும் நுகர்வோர் நுகர்வோரே.....
S.A. நவாஸுதீன் said...
ஹா ஹா ஹா. என்னாச்சு ஷஃபி.
கேமரா கவர் இல்லைன்னா ஓகே. கிடைச்சது ரொம்ப சந்தோசம். ஃப்லாப்பி லேபில் இல்லேன்னு மெயில் அனுப்புனீங்களா.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆனாலும் அந்த கம்ப்ளைண்ட்டையும் மதிச்சு கூரியர்ல அனுப்பி வைத்த இமேஷன் கம்பெனிக்காரன எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
repetttttttttttttttttttttu
ஆஹா... உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாமே சரியா நடக்குது...
நடத்துங்க.. நடந்துங்க..
// தற்பொழுது எந்த ஒரு பொருள் வாங்கினாலும் //
இப்போதும் பொருள் வாங்கறீங்கன்னு நாங்க தெரிஞ்சுகிட்டோமில்ல
நன்றி... நோட் பண்ணிகிட்டேன்... இனிமேல் மெயில் அனுப்பிட வேண்டியதுதான் ..
// அதன் உறையில் அவங்க கம்பெனி info@xyz என மின்னஞ்சல் முகவரி காணப்படுகிறது. //
info@xyz.com அப்படின்னு இருக்கும்...
// ஒரு முறை செய்தித் தாளில் விளம்பரம், கேனான் கேமரா வாங்கினால் அதனுடன் மேலுறை இலவசமா கொடுக்குறோம்னு, ஷோ ரூமில் கேமரா வாங்கப்போனபோது அப்படியெல்லாம் எங்களுக்கு ஒரு ஆணை வரவில்லை, எங்களுக்குத் தெரியாதுன்னு சொன்னாங்க. //
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், தம்பி ஷஃபி புதுசா கேனன் கேமிரா வாங்கியிருக்கார்...
சரி சரி... இப்படியெல்லாம் சொல்லனுமா...
நான் கேமிரா வாங்கியிருக்கேன் அப்படின்னு சொன்னா நாங்க புரிஞ்சுகிட மாட்டோமா என்ன?
// 10 ப்ளாப்பிகள் தான், ஆனால் அவர்கள் 100க்கு மேல் அனுப்பியிருந்தார்கள்!! //
ஓ உங்களைப் பத்தி நல்லா தெரிஞ்சு இருக்காங்க...
அப்ப அப்ப நிறைய ஓட்டுவீங்க...ச் சே... ஒட்டுவீங்க அப்படின்னு... அதான் 100 அனுப்பிச்சிட்டாங்க போலிருக்கு
// எங்கள் நிறுவனத்தின் info மின்னஞ்சல்களை நிர்வகிக்கும் பொறுப்பு ஒரு வருடம் (2007) என்னிடம் இருந்தது, //
ஒரு வருஷத்தில் அடிச்ச கூத்தில அவங்களே ... அய்யா சாமி நீ வேற இடத்தில் உட்காருன்னு தூக்கிட்டாங்களா?
gayathri said...
S.A. நவாஸுதீன் said...
ஹா ஹா ஹா. என்னாச்சு ஷஃபி.
கேமரா கவர் இல்லைன்னா ஓகே. கிடைச்சது ரொம்ப சந்தோசம். ஃப்லாப்பி லேபில் இல்லேன்னு மெயில் அனுப்புனீங்களா.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆனாலும் அந்த கம்ப்ளைண்ட்டையும் மதிச்சு கூரியர்ல அனுப்பி வைத்த இமேஷன் கம்பெனிக்காரன எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
repetttttttttttttttttttttu
///////////////////////////////////
repetukku repeattu:)
நல்ல இடுகை..இனி நானும் வாங்கும் பொருளில் குறையிருப்பின் info@ க்கு
தெரியப்படுத்துகிறேன்..நன்றிங்க.
// ஹுஸைனம்மா said...
கனடாவில ஒரு ரெண்டு ஏக்கரா நஞ்ச பாத்து வாங்க ஏற்பாடு செஞ்சதே அவர வச்சுத்தானே, அதச் சொல்லவே இல்லையே!!//
கிடைச்ச லேபிலகள் உங்கள் மாதிரி "ரொம்ப நல்லவங்க" கிட்டே நல்ல விலைக்கு விற்றதும் சொல்லவே இல்லை!!
//goma said...
நுகர்வோர் விழிப்புணர்ச்சி அருமையாய் விளக்கி இருக்கிறீர்கள்//
உங்க அடக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி!!
//S.A. நவாஸுதீன் said...
. ஃப்லாப்பி லேபில் இல்லேன்னு மெயில் அனுப்புனீங்களா.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
இப்பவாவது பதிவு, இடுகை, பின்னூட்டம்னு பொழுது போகுது, அப்போ இப்படி தானே டைம் பாஸ் பண்ணினோம் பாஸ்!!
//goma said...
5 ரூபாய்க்கு மிட்டாய் வாங்கினாலும் 5 லட்சத்துக்கு பிளாட் வாங்கினாலும் நுகர்வோர் நுகர்வோரே...//
சபாஷ் அக்கா, நம்ம ஏரியாவுல விவரமாத்தேன் இருப்பிய.
//gayathri said...
repetttttttttttttttttttttu//
வாம்மா காயு, நீங்களும் இனி இப்படிப்பட்ட கஷ்டமராத்தான் இருக்கணும்.
//இராகவன் நைஜிரியா said...
நடத்துங்க.. நடந்துங்க.//
அண்ணே நைஜிரியாவில் நீங்க ஒரு நுகர்வோர் கழகம் தொடங்கி அதுக்கு தலைவரா இருந்தா என்ன?
//MAK said...
நன்றி... நோட் பண்ணிகிட்டேன்... இனிமேல் மெயில் அனுப்பிட வேண்டியதுதான் .//
தேங்க்ஸ்...ஆமாம் நிச்சயமா ரிப்ளை பண்ணுவாங்க.
//இராகவன் நைஜிரியா said...
/
அப்ப அப்ப நிறைய ஓட்டுவீங்க...ச் சே... ஒட்டுவீங்க அப்படின்னு... //
உஙகளுக்கு எத்தனை லேபில்கள் வேணும் அண்ணா? ஸ்டாம்பு ஒட்டாத கவரில் அனுப்பி வைக்கிறேன்.
// இராகவன் நைஜிரியா said...
ஒரு வருஷத்தில் அடிச்ச கூத்தில அவங்களே ... அய்யா சாமி நீ வேற இடத்தில் உட்காருன்னு தூக்கிட்டாங்களா?//
அப்போ பத்தோடு பதினொன்னா நான் செய்த வேலை, இப்போ இதுக்குன்னு ஒரு பெண் ஊழியர நியமித்து, அவங்களோட வேலை இது மட்டுமே!!
// Annam said...//
நீங்களும் ரிப்பீட்டு கழகமா?
//பூங்குன்றன்.வே said...
நல்ல இடுகை..இனி நானும் வாங்கும் பொருளில் குறையிருப்பின் info@ க்கு
தெரியப்படுத்துகிறேன்..நன்றிங்க//
மிக்க மகிழ்ச்சி பூங்குன்றன். ஊருக்கு நல்லபடியா போய்விட்டு வாங்க. வாழ்த்துக்கள்.
எங்கள் நிறுவனத்தின் info மின்னஞ்சல்களை நிர்வகிக்கும் பொறுப்பு ஒரு வருடம் (2007) என்னிடம் இருந்தது, சராசரியாக ஒரு நாளைக்கு 200 மின்னஞ்சல்கள் வரும், பெரும்பாலும் பணிகள் வேண்டியே (Recruitment)வரும், மற்றவை (Customers) வாடிக்கையாள்ர்கள், (Suppliers) வழங்குவோர் இப்படி நிறைய வருவதுண்டு, ஆனால் அனைத்தும் சரியாக முறைப்படுத்தப்பட்டு சரியான இடத்திற்கு அனுப்பி வைக்கபடும். We never ignore!! ............இவ்வளவு நல்லா சேவை செஞ்சும் கம்பெனி ஒரு வருஷத்தில் உங்கள் சேவையை இக்னோர் பண்ணிச்சா இல்லா promotionaa? தொடர்ந்து petition பீதாம்பரமா இருங்க.
நல்ல பகிர்வு.
ஆகா மொத்தத்தில் புது கேமிரா :-) , சோ அடுத்த இடுகை அதில் படம் பிடித்த படங்கள்தானே :-)
///petition பீதாம்பரம்///
சித்ராவுக்கு நன்றி. ஹா ஹா ஹா
//இவ்வளவு நல்லா சேவை செஞ்சும் கம்பெனி ஒரு வருஷத்தில் உங்கள் சேவையை இக்னோர் பண்ணிச்சா இல்லா promotionaa? தொடர்ந்து petition பீதாம்பரமா இருங்க.//
பதில் பின்னூட்டத்தில் இருக்கு சித்ரா, நல்லா வெக்கிறாங்கய்யா பேரு!!
//சிங்கக்குட்டி said...
நல்ல பகிர்வு.
ஆகா மொத்தத்தில் புது கேமிரா :-) , சோ அடுத்த இடுகை அதில் படம் பிடித்த படங்கள்தானே :-)//
முயற்சிக்கிறேன் நண்பா.
// S.A. நவாஸுதீன் said...
///petition பீதாம்பரம்///
சித்ராவுக்கு நன்றி. ஹா ஹா //
விரைவில் சித்ராவுக்கு ஒரு நல்ல பெயர் சூட்டி மகிழ்வோம்.
நான் இதுவரை பயன்படுத்தியதில்லை. இனி விடப்போவதில்லை.
நன்றி ஷஃபி.
customer satisfaction very important!!!
நல்ல பதிவு
தெரிந்து கொள்ள வேண்டியது ...
அட இப்படியெல்லாம் கூட இருக்கா.
நல்ல சேவைதான்.
ஆமா கேமரா எத்தனை மெகா பிக்சல் ஷஃபி.
//அனைத்தும் சரியாக முறைப்படுத்தப்பட்டு சரியான இடத்திற்கு அனுப்பி வைக்கபடும்//
நீங்க ரெம்ப நல்லவரு
உன் வீட்டு கண்ணாடி ஆனாலும் கூட முன் நின்று பார்த்தால் தான் முகம் காட்ட கூடும் ...
---------------
பயனுள்ள இடுக்கை.
நல்ல பதிவு . பயனுள்ள தகவல்கள்.
அட லேபிள் இல்லன்னு மெயில் பண்ணீங்களா?
அதுவும் கனடா,துபாய் போய் மெயில் ரிப்லேவா ம்ம் பேஷ் பேஷ்.
நல்ல பயனுள்ள இடுகை, இந்த பதிவ படித்தவர்களுக்கு நல்லதொரு விழுப்புணர்சி , இனி கொஞ்சம் உஷாரா செக் பண்ணி வாங்குவார்கள்
//கனடாவில ஒரு ரெண்டு ஏக்கரா நஞ்ச பாத்து வாங்க ஏற்பாடு செஞ்சதே அவர வச்சுத்தானே, அதச் சொல்லவே இல்லையே!!//
ஹா ஹுஸைன்னாம்மாவுக்கு ரொம்ப தான் குசும்பு
My Tamizh is getting really rusty'...took lot of time to read this post'...
Kuddos to Canada manager...
Consumer's right, Copyright, Right to Information...kind of awareness need to be spread...
சூப்பர்ங்க அப்படித்தான் இருக்குனும்...காசு கொடுத்தா வாங்குற பொருள்ல ஏதாச்சும் பிரச்சனைன்னா அவனுங்க பதில் சொல்லியே ஆகனும்... நான் இதுவரைக்கு அப்படி அனுப்பனது கிடையாது. பதில்வருமா வராதான்னு நினைச்சேன் பண்றதில்லை.
//WE NEVER IGNORE//
சூப்பர்...இப்படித்தான் இருக்கனும்
CUSTOMER IS GOD - MAHATHMA GHANDI
//வாங்கியதோ 10 ப்ளாப்பிகள் தான், ஆனால் அவர்கள் 100க்கு மேல் அனுப்பியிருந்தார்கள்!! //
தல இப்போவெல்லாம் யாரும் ஃபிளாப்பீ பயன்படுத்தவில்லை, அதனால் எதுக்கு அங்கெ குப்பையா வைக்கனும்னு நினைத்து உங்களுக்கு அனுப்பிவிட்டானுங்க, இதை பெரிசா சொல்லி ஒரு பதிவு வேறு ஹி ஹி ஹி???
நல்ல பதிவு தல
புத்தாண்டு வாழ்த்துக்கள் சஃபிக்ஸ்!
ஷ்ஃபி பார்க்க அப்பாவி மாதிரி இருந்துகிட்டு..யப்பா பெரிய வம்பு புடிச்ச ஆளுதான் நீங்க....
ஒரு முறை செய்தித் தாளில் விளம்பரம், கேனான் கேமரா வாங்கினால் அதனுடன் மேலுறை இலவசமா கொடுக்குறோம்னு, ஷோ ரூமில் கேமரா வாங்கப்போனபோது அப்படியெல்லாம் எங்களுக்கு ஒரு ஆணை வரவில்லை, எங்களுக்குத் தெரியாதுன்னு சொன்னாங்க. விவாதித்து உபயோகம் இல்லையென பட்டது, அன்றைக்கே கேனானோட info முகவரிக்கு விளக்கத்துடன் என்னுடைய கைபேசி எண்ணையும் கொடுத்தேன். அடுத்த நாளே ஷோரூமில் இருந்து அழைப்பு வந்தது, தாங்களின் புகார் தலைமை அலுவலகத்திற்கு கிடைத்தது,இந்த சலுகையில் முதல் நாளாக இருந்ததால் சிறிய குழப்பம், தாங்கள் உடனே வந்து உறையினை வாங்கிக் கொள்ளுங்கள். அட பரவாயில்லையே..!!
உரிமைக்காக போராடுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே...சும்மா இல்லாமல் பதிவா போட்டு எங்களை வேறு உசிப்பேத்தனுமா?
கடைக்கு போய் Imation ஒரு பெட்டி (10 ப்ளாப்பி)வாங்கினேன். பெட்டிய திறந்து பார்த்தால் அதில் ஒட்டக்கூடியா லேபிலைக் காணோம், அடக் கொடுமையே, உடனே infoக்கு ஒரு மின்னஞ்சல் தட்டு, நான் வாங்கிய பெட்டியின் Reference Number கொடுத்தேன். லேபில் இல்லாததற்கு என்ன காரணம், மறதியா, இல்லை இனி அதை தனியா போட்டு காசு சம்பாதிக்க போறீங்களா. அந்த மின்னஞ்சல் கனடா போய்ட்டு அங்கிருந்து துபாய் அலுவலகம் சென்று அங்கிருந்து பதில் வந்திருந்தது, பிழையாக இது நிகழ்ந்திருக்கலாம் அதனால் லேபிலகள் கூரியரில் அனுப்பியிருப்பதாகவும் கூறியிருந்தார்கள்
ஆபிஸ்ல வேலைன்னு எதுனா பார்த்தால் தானே நீயும் நவாஸும்..அதான் இப்படி வீட்டு வேலையெல்லாம் ஆபீஸ் நேரத்தில பார்த்துகிட்டு இருக்கீங்க போல...
நான் வாங்கியதோ 10 ப்ளாப்பிகள் தான், ஆனால் அவர்கள் 100க்கு மேல் அனுப்பியிருந்தார்கள்!! அவர்களை பாராட்டி ஒரு பதில் அனுப்பினேன்.
அதான உங்க ஞாயம் இங்க இல்லை தேவைக்கு மேல அனுப்பினா நல்லவர் இப்ப செம தோஸ்தா? நல்லவரா இருந்தால் மிச்சம் 90ரிடர்ன் பண்ணனும்...
ஹெல்லோ ஷ்ஃபி போன கமெண்டை கண்டிப்பா போடனும் இல்லைன்னா அடுத்த பதிவு உங்களை பத்தி தான்...
ஹைய்யா 50 போட்டாச்சு வரட்டா?
ஷஃபி முதல் முறையா உங்க தளத்துக்கு வர்றேன்
புதுமையான அருமையான பகிர்வு
//பீர் | Peer said...
நான் இதுவரை பயன்படுத்தியதில்லை. இனி விடப்போவதில்லை//
ஆமாம் பீர் முயற்சி செய்யுங்கள்!!
//suvaiyaana suvai said...
customer satisfaction very important!!!//
Thanks you are rite!!
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல பதிவு
தெரிந்து கொள்ள வேண்டியது ...//
நன்றி ஸ்டார்ஜன்.
//அக்பர் said...
அட இப்படியெல்லாம் கூட இருக்கா.
நல்ல சேவைதான்.
ஆமா கேமரா எத்தனை மெகா பிக்சல் ஷஃபி.//
ஆமாம் அக்பர், இப்படியெல்லாம் இருக்குப்பா!! அப்போழுது 5 அது தான் லேட்டஸ்ட்...
//நசரேயன் said...
நீங்க ரெம்ப நல்லவரு//
நீங்க மெகா நல்லவரு!!
அருமையான பகிர்வு மக்கா.
ஐ.ஐ.டி.பேராசிரியர் ஒருவர் ஒரு ரூபாய் பேருந்தில் மிச்சம் தரவில்லை என கேஸ் போட்டு வெற்றி அடைந்த சம்பவம்(சிவகங்கை காரராக்கும்!!!) ,நண்பர்,தம்பி வாயிலாக அறிந்த அனுபவம் நினைவு படுத்தியது,இந்த பதிவு.
நல்ல நடையில்,எனக்கும்கூட புரியும்படி விளக்குவதுதான் உங்கள் speciality!
great!hatts oof!
//நட்புடன் ஜமால் said...
உன் வீட்டு கண்ணாடி ஆனாலும் கூட முன் நின்று பார்த்தால் தான் முகம் காட்ட கூடும் ...
---------------
பயனுள்ள இடுக்கை.//
நன்றி ஜமால், தங்களுடைய கருத்தும் சூப்பர்!!
//malarvizhi said...
நல்ல பதிவு . பயனுள்ள தகவல்கள்//
நன்றிங்க malarvizhi.
//Jaleela said...
அட லேபிள் இல்லன்னு மெயில் பண்ணீங்களா?
அதுவும் கனடா,துபாய் போய் மெயில் ரிப்லேவா ம்ம் பேஷ் பேஷ்.
நல்ல பயனுள்ள இடுகை, இந்த பதிவ படித்தவர்களுக்கு நல்லதொரு விழுப்புணர்சி , இனி கொஞ்சம் உஷாரா செக் பண்ணி வாங்குவார்கள்//
ஆமாம் ரியல்லி, ரிப்ளை பார்த்ததும் எனக்கே ஆச்சர்யம், பரவாயில்லை நம்ம (சாரி என்னை) மாதிரியே எல்லோரும் வேலை செய்றாங்களே!!
// Jaleela said...
//கனடாவில ஒரு ரெண்டு ஏக்கரா நஞ்ச பாத்து வாங்க ஏற்பாடு செஞ்சதே அவர வச்சுத்தானே, அதச் சொல்லவே இல்லையே!!//
ஹா ஹுஸைன்னாம்மாவுக்கு ரொம்ப தான் குசும்பு//
ஆமாங்க, தாங்க முடியல, உங்க ஏரியாவுல தான் இருக்காங்க, பார்த்துக்குங்க.
//Malar Gandhi said...
My Tamizh is getting really rusty'...took lot of time to read this post'...
Kuddos to Canada manager...
Consumer's right, Copyright, Right to Information...kind of awareness need to be spread...//
Thank you Malar, I appreciate your effort to read my post. Keep on visiting!!
//நாஞ்சில் பிரதாப் said...
சூப்பர்ங்க அப்படித்தான் இருக்குனும்...காசு கொடுத்தா வாங்குற பொருள்ல ஏதாச்சும் பிரச்சனைன்னா அவனுங்க பதில் சொல்லியே ஆகனும்... நான் இதுவரைக்கு அப்படி அனுப்பனது கிடையாது. பதில்வருமா வராதான்னு நினைச்சேன் பண்றதில்லை.
//WE NEVER IGNORE//
சூப்பர்...இப்படித்தான் இருக்கனும்
CUSTOMER IS GOD - MAHATHMA GHANDI//
முதல் வருகைக்கும் அழகிய கருத்துக்கும் மிக்க நன்றி நாஞ்சிலாரே!!
//அபுஅஃப்ஸர் said...
//வாங்கியதோ 10 ப்ளாப்பிகள் தான், ஆனால் அவர்கள் 100க்கு மேல் அனுப்பியிருந்தார்கள்!! //
தல இப்போவெல்லாம் யாரும் ஃபிளாப்பீ பயன்படுத்தவில்லை, அதனால் எதுக்கு அங்கெ குப்பையா வைக்கனும்னு நினைத்து உங்களுக்கு அனுப்பிவிட்டானுங்க, இதை பெரிசா சொல்லி ஒரு பதிவு வேறு ஹி ஹி ஹி???
நல்ல பதிவு தல//
அப்போ பிளேஷ ட்ரைவ் வராத காலம், அவங்களோட சின்சியரிட்டின்னு தான் நினைக்கிறேன்.
//தேவன் மாயம் said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் சஃபிக்ஸ்!//
மிக்க மகிழ்ச்சி டாக்டர். உங்களுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
/தமிழரசி said...
ஷ்ஃபி பார்க்க அப்பாவி மாதிரி இருந்துகிட்டு..யப்பா பெரிய வம்பு புடிச்ச ஆளுதான் நீங்க....//
ஆமா பாத்துக்குங்க, கவிதையெல்லாம் இனி சரியா எழுதணும், இல்லாட்டி மெமோ வந்துடும்.
//தமிழரசி said...
உரிமைக்காக போராடுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே...சும்மா இல்லாமல் பதிவா போட்டு எங்களை வேறு உசிப்பேத்தனுமா?//
நீங்களும் முயற்சி பண்ணுங்க, ஆட்டோ வராமல் இருக்கணும்.
//தமிழரசி said...
ஆபிஸ்ல வேலைன்னு எதுனா பார்த்தால் தானே நீயும் நவாஸும்..அதான் இப்படி வீட்டு வேலையெல்லாம் ஆபீஸ் நேரத்தில பார்த்துகிட்டு இருக்கீங்க போல...//
என்னது வீட்டு வேலையா? பிளாப்பிய வச்சு சாம்பார், கூட்டா செய்றோம், நவாஸ் வாட் இஸ் திஸ்?
//தமிழரசி said...
அதான உங்க ஞாயம் இங்க இல்லை தேவைக்கு மேல அனுப்பினா நல்லவர் இப்ப செம தோஸ்தா? நல்லவரா இருந்தால் மிச்சம் 90ரிடர்ன் பண்ணனும்...//
இந்த நல்லவன் மேல இப்படி ஒரு பழியா? அவங்களே அந்த கொரியரில் நூறு அனுப்பியிருப்பதாக சொல்லி இருந்தாங்க அரசி, அலுவலகத்திலேயே மற்ற டிபார்ட்மென்ட்களுக்கு அனுப்பினேன்.
//தமிழரசி said...
ஹைய்யா 50 போட்டாச்சு வரட்டா?//
Thank you அரசி!!
//thenammailakshmanan said...
ஷஃபி முதல் முறையா உங்க தளத்துக்கு வர்றேன்
புதுமையான அருமையான பகிர்வு//
முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க, தொடர்ந்து வாருங்கள்.
//பா.ராஜாராம் said...
அருமையான பகிர்வு மக்கா.
ஐ.ஐ.டி.பேராசிரியர் ஒருவர் ஒரு ரூபாய் பேருந்தில் மிச்சம் தரவில்லை என கேஸ் போட்டு வெற்றி அடைந்த சம்பவம்(சிவகங்கை காரராக்கும்!!!) ,நண்பர்,தம்பி வாயிலாக அறிந்த அனுபவம் நினைவு படுத்தியது,இந்த பதிவு.
நல்ல நடையில்,எனக்கும்கூட புரியும்படி விளக்குவதுதான் உங்கள் speciality!//
மிக்க மகிழ்ச்சி அண்ணே, தங்களைப் போன்றோரிடம் பாராட்டு பெறுவது ஒரு பெருமை தான்!! நன்றிகள் பல.
நல்ல விசயம்.. நானும் இந்த மாதிரி எதுல .காம் ந்னு போட்டிருந்தாலும் ( சரி சரி .ஆர்ஜ் போட்டிருந்தாலும் தான்) உடனே அங்க போய் படிப்பேன்..
ஆனா எதுக்கும் கடிதம் எழுதியதில்லை..தேவைப்பட்டா இனி எழுதறேன் உங்க ஐடியாபடி..
//முத்துலெட்சுமி/muthuletchumi said...
நல்ல விசயம்.. நானும் இந்த மாதிரி எதுல .காம் ந்னு போட்டிருந்தாலும் ( சரி சரி .ஆர்ஜ் போட்டிருந்தாலும் தான்) உடனே அங்க போய் படிப்பேன்..
ஆனா எதுக்கும் கடிதம் எழுதியதில்லை..தேவைப்பட்டா இனி எழுதறேன் உங்க ஐடியாபடி..//
அப்படியா, மிக்க மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி.
"Sundaikaai ka panam sumai kooli mukkaal panam"
indha pala mozhiketha sambavam. verum stickeroda po vendiyadhu, Ana ippo 100 floppy....
Almost all MNC's who are well established with ISO standards would do as such in order to maintain their customer satisfaction rating.
My earlier company use to return even 1$ overpayments to customers by cheques. But the fact is that to process a cheque would cost 5$.
Initially I wondered why do we do that. But later in the end of the month we got customer satisfaction rating 5++++ which definitely worth it.
நல்ல பகிர்வு.
Post a Comment