எண்ணங்களில் கண்டு மகிழ்ந்து
தேன்மொழிகள் உண்டு களித்து
தேடுதலில் தீண்டி உணர்ந்து
காடு, கடல், மலை கடந்து
காற்றில் வரும் அவள் சுவாசம் நுகர்ந்து
ரகசியமாய் அகமகிழ்ந்து
சுழலும் கிரகம் சுற்றித் திரிந்து
அவளை தேடி, நானும் தொலைந்து
வலுவிழந்து, கண்ணயர்ந்தேன்!!
இதோ,
மதி மயக்கி எனக்குள் புகுந்து
ஆழ்மனதினுள்ளே கசிந்து
ஆளுகையில் எனை கொணர்ந்து
மகுடம் சூடி
'அவள்' செய்த
மற்றுமொரு மாயையிது!!
33 comments
வரிகள் எல்லாமே நல்லாயிருக்குங்க..
நல்ல கவிதை நன்றி.
வாவ்..நல்லா இருக்கு ஷஃபி..மூச்சு விடாம படிச்சி முடிச்சிட்டேன்..!!
மெல்லிய காதலை மலரின் இதழ் கொண்டு வருடியது போன்ற காதல் கவிதை...
உங்களின் இப்படிக்கு கவிதைக்கு பிறகு மீண்டும் மலர்ந்த உங்கள் தோட்டத்துக்கு மலர் நல்ல மறுமணம் தருகிறது.....
சஃபி தொடர்ந்து இது மாதிரியான கவிதைகளை எதிர்பார்க்கிறோம்.....
நல்ல கவிதை ஷஃபிக்ஸ்!!
காதலின் கிரக்கத்தில் மிதக்கும் தாங்கள் அதை மாயை என்று சொல்லிருப்பது ரொம்ப பொருத்தமே
நிஜத்திலும் நிழலிலும் அது ஒரு வகை மாயை போதைதான்.........
//அவளை தேடி, நானும் தொலைந்து
வலுவிழந்து, கண்ணயர்ந்தேன்!!
//
இங்கேயும் தேடல்தானா... ம்ம் நல்லா தேடுங்கோ
//மதி மயக்கி எனக்குள் புகுந்து
ஆழ்மனதினுள்ளே கசிந்து
ஆளுகையில் எனை கொணர்ந்து
மகுடம் சூடி
//
நல்ல சொல்லாடல்...
அ.மு.செய்யது சொன்னதுப்போல் ஒரே மூச்சில் படிக்கும் ஆர்வத்தை கொடுக்கிறது கவிதை வரிகள்
இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம்
படிக்கும் போதே, காதல் ஒரு மாயையாய் நம்மை சூழுவது போன்ற உணர்வு! பெண்டாஸ்டிக் ஷபி!
அழகிய கவிதை வாழ்த்துக்கள்
மிக அருமை ஷஃபி.
செய்யது சொன்னது போல்
ஒரே மூச்சில் சந்தம் பாடியது போல் படித்து முடித்தாயிற்று.
நல்ல அருமையான கவிதை,
பிளாக் ஒப்பன் செய்ததும் ரொம்ப நீட் அன்ட் கிளீனா இருக்கு,
கவிதை கலக்கலா இருக்கு ஷஃபி. எல்லாரும் சொன்ன மாத்ரி நானும் மூச்சு விடாம படிச்சி முடிச்சிட்டேன்
/Mrs.Faizakader said...
வரிகள் எல்லாமே நல்லாயிருக்குங்க..//
நன்றி சகோதரி
//சிங்கக்குட்டி said...
நல்ல கவிதை நன்றி.//
வாங்க சிங்கக் குட்டி.
//அ.மு.செய்யது said...
வாவ்..நல்லா இருக்கு ஷஃபி..மூச்சு விடாம படிச்சி முடிச்சிட்டேன்..!!//
ரொம்ப சந்தோஷம்ப்பா செய்யது.
//தமிழரசி said...
மெல்லிய காதலை மலரின் இதழ் கொண்டு வருடியது போன்ற காதல் கவிதை...
உங்களின் இப்படிக்கு கவிதைக்கு பிறகு மீண்டும் மலர்ந்த உங்கள் தோட்டத்துக்கு மலர் நல்ல மறுமணம் தருகிறது.....//
வாருங்கள் கவியின் அரசியே. ஏதோ சிறிய முயற்சியால் சிறு கவிதை, ரசித்ததிற்க்கு மிக்க மகிழ்ச்சி.
// பிரியமுடன்...வசந்த் said...
சஃபி தொடர்ந்து இது மாதிரியான கவிதைகளை எதிர்பார்க்கிறோம்.....//
அபுஅஃப்ஸர் said...
//மதி மயக்கி எனக்குள் புகுந்து
ஆழ்மனதினுள்ளே கசிந்து
ஆளுகையில் எனை கொணர்ந்து
மகுடம் சூடி
//
நல்ல சொல்லாடல்...
அ.மு.செய்யது சொன்னதுப்போல் ஒரே மூச்சில் படிக்கும் ஆர்வத்தை கொடுக்கிறது கவிதை வரிகள்
இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம்//
நன்றி வஸ்ந்த் & அபூ, தொடரும் ஆதரவிற்க்கு நன்றிகள். முயற்சி செய்கிறேன்ப்பா.
//Mrs.Menagasathia said...
நல்ல கவிதை ஷஃபிக்ஸ்!!//
நன்றி சகோதரி
//அபுஅஃப்ஸர் said...
காதலின் கிரக்கத்தில் மிதக்கும் தாங்கள் அதை மாயை என்று சொல்லிருப்பது ரொம்ப பொருத்தமே
நிஜத்திலும் நிழலிலும் அது ஒரு வகை மாயை போதைதான்.........//
ஏதோ பெரியவங்க நீங்க சொல்றீங்க அப்போ சரியாத்தேன் இருக்கும்.
//அபுஅஃப்ஸர் said...
//அவளை தேடி, நானும் தொலைந்து
வலுவிழந்து, கண்ணயர்ந்தேன்!!
//
இங்கேயும் தேடல்தானா... ம்ம் நல்லா தேடுங்கோ//
ஆமாம்ப்பா இது ஒரு புரியாத கூகிள்!!
//SUMAZLA/சுமஜ்லா said...
படிக்கும் போதே, காதல் ஒரு மாயையாய் நம்மை சூழுவது போன்ற உணர்வு! பெண்டாஸ்டிக் ஷபி!//
மிக்க மகிழ்ச்சி ரசித்ததிற்க்கு. நன்றிங்க
//Malikka said...
அழகிய கவிதை வாழ்த்துக்கள்//
நன்றிங்க
//நட்புடன் ஜமால் said...
மிக அருமை ஷஃபி.
செய்யது சொன்னது போல்
ஒரே மூச்சில் சந்தம் பாடியது போல் படித்து முடித்தாயிற்று.//
மிக்க மகிழ்ச்சி ஜமால், எழுதும்பொழுது இல்லாத மகிழ்ச்சி தாங்கள் அனைவரின் பின்னூட்டங்களை படிக்கும்போது ஏற்படுகிறது
//Jaleela said...
நல்ல அருமையான கவிதை,
பிளாக் ஒப்பன் செய்ததும் ரொம்ப நீட் அன்ட் கிளீனா இருக்கு,//
வாங்க அக்கா, ரமலான் சமையல் குறிப்புகளிலே தூள் கிளப்பிக்கிட்டு இருக்கிங்க.
//S.A. நவாஸுதீன் said...
கவிதை கலக்கலா இருக்கு ஷஃபி. எல்லாரும் சொன்ன மாத்ரி நானும் மூச்சு விடாம படிச்சி முடிச்சிட்டேன்//
அது சரி, நன்றி நவாஸ்.
எங்க பக்கம் வருவதற்கு யாருக்கும் தடையில்லை.
எனவே பயப்படாமல் அடிக்கடி வந்து போகலாம்.
வாங்க வாங்க.......வந்து கொண்டே இருங்க.
இங்கு கதவே இல்ல ........
என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.
http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html
என்றும் அன்புடன் - சிங்கக்குட்டி
வார்த்தைகள் விளையாடுகின்றன
//சிங்கக்குட்டி said...
என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.
http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html
என்றும் அன்புடன் - சிங்கக்குட்டி
//தங்கள் அன்பான விருதுக்கு நன்றி சிங்கக்குட்டி
//உழவன் " " Uzhavan " said...
வார்த்தைகள் விளையாடுகின்றன//
நன்றி உழவர் தோழரே!!
உங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். வந்து தொடருங்கள்.....http://eniniyaillam.blogspot.com/2009/09/blog-post.html
Post a Comment