அயல் நாடு சென்று, இந்தியா நாட்டில் நீங்கள் இழந்தது என்ன? அங்கு அடைந்தது என்ன?
அடிக்கடி எனக்குள் கேட்டு விடை தெரிந்தும் தெரியாதது போல் பதினான்கு வருடங்கள் உருண்டோடி விட்டது.
இந்தக் கேள்விக்கான விடையை நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென தோழி தமிழ் அரசியின் விண்ணப்பம். தமிழரசி, தீக்குள் விரல் வைத்து, மகா கவி பாரதியுடன் விவாதித்து நம்மை வியப்பில் ஆழ்த்தியதை போல என்னால் முடியாவிட்டாலும், முயற்சி செய்து இருக்கின்றேன், படித்து பாருங்களேன்.
பெற்றதையும், பெறாததையும் ஆராய்வதற்க்கு முன், நான் ஏன் அயல் நாடு வந்தேன் என சிறிது எண்ணிப்பார்க்கின்றேன், கல்லூரியில் பட்டப்படிப்பு, அதனிடையே ஒரு பட்டயப்படிப்பு, பட்டம் பெற்றவுடன், மேலும் படிப்பைத் தொடர்வதா, அல்லது வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்க்குள் நுழைந்து விடுவோமா என ஒரு சிறிய மனப் போராட்டம்.
இதற்க்கிடையே அவன் என்ன படித்தான், இவன் என்ன செஞ்சான், அதோ அந்த ரெண்டு மாடி கட்டி, காரெல்லாம் வச்சிருக்காருள்ள அவரு படிச்சது வெரும் அஞ்சாங்கிளாஸ் தானாம், இப்படி எண்ண ஓட்டங்கள்.
சரி வேலைக்கு போக வேண்டியது தான், அப்ப்டியே மேற்க்கொண்டு படிப்பதானால் பிறகு படித்துக் கொள்வோம் என வேலை தேடும் படலம் தொடங்கியது.
அங்கும் இங்குமாய் சில மாதங்கள் ஓடியது, அடப்போப்பா, நீ எப்போ உள்ளூரில சம்பாதிச்சு, வாழ்க்கையில செட்டில் ஆகப்போறே, பேசாம வெளி நாட்டிற்க்கு முயற்சி பண்ணுப்பா அதான் உன்னோட எல்லா சொந்தங்களும் இருக்காங்கள்ள, இதுவே பெரும்பான்மையானவர்களின் அறிவுரை, ஆவல், வேண்டுகோள்.
சரி ஏற்பாடும் செய்தாகிவிட்டது, வெளி நாடு போவோம், சில வருடங்கள் சம்பாதிப்போம், அப்புறம் ஊருக்கு வந்து செட்டிலாகி விட வேண்டியது தான், எல்லோரைப்போல நானும் தீர்மானித்துக் கொன்டேன். நினைக்கும் போது நல்லாத்தான் இருக்கு.
சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்தில் உட்கார்ந்து, சொந்தங்களை விட்டு, வீட்டையும் நாட்டையும் பிரிந்து, பல எண்ணங்களை, கணவுகளை சுமந்த என்னை விமானம் தன் கடமைக்காக சுமந்து பறந்தது.
விமானம் தரையிறங்கி முதன்முறையாக ஒரு அயல் நாட்டிற்க்குள் நுழைகிறேன், ஆயிரம் கணவுகளுடன்.
விமான நிலையத்தில் பல முகங்கள், இந்தியா, பாக்கிஸ்த்தான், பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டினரே அதிகமாக காணப்படனர், அதிலும் என்னைவிட வயதில் பலமடங்கு மூத்தவர்களே அதிகம். வாடிய முகத்துடன் பலர், என்னைப்போன்று எதையோ தேடும் பரபரப்புடன் சில இளைஞர்கள், தங்களது மனைவி, குழந்தைகளுடன் சிறிது மகிழ்ச்சியுடன் சிலர் அங்கும் இங்கும். இதில் நான் யாராக எதிர் காலத்தில் இருக்கப் போகிறேன், என்னுள் பல சிந்தனைகள்.
அங்கிருந்த பெரும்பாலோர்களில் அதிகமானோர் இந்தியர்களாக இருந்தது, சற்று பெருமையாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. ஆனால், இந்தியர்களுக்கு இங்கும் நல்ல பெயர் இருக்கவே செய்கிறது, அதற்க்கு நான் அறிந்த காரணங்கள் சில, திறமையானவர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் அதிகமான சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதவர்கள், மொத்ததில் நிறுவாகத்தினருக்கு தலைவலி கொடுக்காதவர்கள்!!.நாட்கள் உருண்டோடியது, ஒரு நாள் என் நெருங்கிய நண்பனிடமிருந்து அழைப்பு, அவனுக்கு திருமணமாம், எப்படியாவது வந்து கலந்துக்கொள் என பிடவாதமான வேண்டுகோள், ஆம், சோழனிலும், பல்லவனிலும் ஒன்றாய் சுற்றித்திரிந்து, வீட்டிலிருக்கும் நேரம் போக இது போன்ற நட்புக்களுடேனேயே கழித்த நாட்கள் மறக்க முடியுமா என்ன? வாழ்வின் முக்கியமான நிகழ்வு, மாப்பிள்ளைத் தோழனாய் நான் இருந்திருக்க வேண்டும், ஆனால் எனை அறியாமல் அவனது திருமணமும் நடந்தது, அவனும் சில மாதங்களில் அமேரிக்கா, ஆஸ்திரேலியா எனப் பயணம், ஆக அவனை கல்லூரி நாட்களில் சந்தித்தது.
அடுத்த சில மாதங்களில் என்னை அருமையோடு, அன்போடும், பாசத்தோடும் போற்றி வளர்த்த தாத்தா, பாட்டி இவ்வுலகத்திலிருந்து பிரிந்தது, அவர்கள் எனக்காக செய்த பிராத்தணைகள், தியாகங்கள் இவையெல்லாம் இனி கிடைக்குமா? பிழைக்க வந்த ஒரே காரணத்திற்க்காக, இது போன்ற உணர்வுகளை அடக்கி, பரிமாற முடியாமல் முடங்கிப் போனதை நினைத்து பல தடவை ஏங்கியதுண்டு.
இதனை அடுத்து பல மகிழ்ச்சியான நிகழ்வுகள், சோகமான சம்பவங்கள், தொலைபேசியிலேயே வாழ்த்துக்களும், ஆறுதல்களும் பரிமாறப்பட்டு நாட்கள் ஓடுகிறது.
தமிழரசி கொடுத்த தலைப்பினை, எனது மனைவியிடத்திலும் காட்டினேன், அவர்களும் தன் பங்குக்கு கூறிய பல விடயங்களில், சில:
குழந்தைகளுக்கு தரமான கல்வி முறை, ஆம் இங்கு நாம் கொடுக்கும் பள்ளிக் கூட கட்டணத்திற்க்கும் தரத்திற்க்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம்.
மருத்துவ வசதிகள், நாம் நாட்டைப்போல திறமையான மருத்துவ வசதியை வேறு எங்கும் பெற முடியுமா?
ஆக இழந்தது பலவானாலும், ஈடு செய்ய முடியாத இழப்பு, சொந்தங்கள் மற்றும் நட்புக்களின் பாசம், அதனை அருகில் இருந்து அனுபவிக்க முடியாமை. எத்தனை காசு கொடுத்தாலும் திரும்ப பெற முடியாத இழப்பு!!
இந்த இழப்புகளுக்கிடையேயும், அடைந்தது சில சில்லரைகள், போதும் என்ற மனம் என்று வருமோ என அந்த நாளுக்காக காத்திருக்கின்றேன். ஒன்றைப் பெற வேறொன்றை இழந்து தானே ஆக வேண்டும்!! இது தாங்க நிஜம்.. Reality!!
இன்னும் வளர்க்க விரும்பவில்லை, ஏற்கனவே தாமதம் என தமிழ் டீச்சர் கோபத்தில் இருக்காங்க, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள இது போதுமென்று நினைக்கின்றேன்.
மிக்க நன்றி அரசி!!
நன்றிகள் நட்புக்களே!!
52 comments
ரொம்ப எளிமையாக
இயல்பை சொல்லியிருக்கீங்க
வலிகள் பலவுண்டு
சிலரேனும் சந்தோஷம் நமது இந்த பிரயாணத்தில்.
//இந்த இழப்புகளுக்கிடையேயும், அடைந்தது சில சில்லரைகள், போதும் என்ற மனம் என்று வருமோ என அந்த நாளுக்காக காத்திருக்கின்றேன். ஒன்றைப் பெற வேறொன்றை இழந்து தானே ஆக வேண்டும்!! இது தாங்க நிஜம்.. Reality!!//
ஷபி இது ரொம்ப வே சரி
ரொம்ப மனதை சித்ததரித்து எழுதி இருக்கீஙக
வெளி நாடு வாழ்க்கையே இப்படிதானா?
நன்றாகவே இருக்கிறது நண்பரே! மிக எளிமையாக நேரில் கதைத்தது போல ஒரு உணர்வு. நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான். என்ன பெரிய வியாதி வந்தாலும் இங்கிலாந்தில் இருப்பவர் கூட இந்தியாவுக்குத்தான் ஓடுகிறார்கள்.
வெளிநாட்டு வாழ்க்கை ரொம்ப வே தனிமை சோகமானது.
நிறைய வீட்டு நலன்களுக்ககாக வ்ந்து இங்கு சம்பாதிப்பவர்களில், லேபர்களின் வாழ்க்கை படு மோசம்,
//இந்த இழப்புகளுக்கிடையேயும், அடைந்தது சில சில்லரைகள், போதும் என்ற மனம் என்று வருமோ என அந்த நாளுக்காக காத்திருக்கின்றேன். ஒன்றைப் பெற வேறொன்றை இழந்து தானே ஆக வேண்டும்!! இது தாங்க நிஜம்.. Reality!!// உண்மை ஷஃபி.
நல்லதொரு பகிர்வு.
யாராவது ஊரிலிருந்து வெளிநாட்டுக்கு வந்தார்கள் என்றால் ரொம்ப கழ்டமா இருக்கும் அதே அவர்கள் ஊருக்கு போரேன் என்று பயனம் சொல்லும் போது , அப்பாடா குடும்பத்தோடு சந்தோஷமாய் இருக்கட்டும் என்று,எனக்குரொம்ப சந்தோஷமாய் இருக்கும்
மனசு வலிக்குது ஷஃபி!
உணர்ந்தவர்களுக்கு தான் அதன் அர்த்தம் புரியும்!
//சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்தில் உட்கார்ந்து, சொந்தங்களை விட்டு, வீட்டையும் நாட்டையும் பிரிந்து, பல எண்ணங்களை, கணவுகளை சுமந்த என்னை விமானம் தன் கடமைக்காக சுமந்து பறந்தது.//
சுமக்கும் கனவுகள் பலருக்கும் கனவாகவே முடிந்து விடும் போது, ஏதோ சில சில்லரையாவது தேத்த முடிந்தது சந்தோஷம்!
வெளி நாட்டில் வேலைப் பார்க்கும் பலருக்கும் இருக்கும் உள்ளதை அப்படியே எக்ஸ்ரே எடுத்த மாதிரி சொல்லியிருக்கின்றீர்கள்.
பணம் சம்பாதிக்கின்றோம் என்பதைத் தவிர, சுற்றம், நட்பு, பந்தம், பாசம் எல்லாவற்றையும் அதற்காக விலையாகக் கொடுக்கின்றோம்.
ஜலீலா அவர்கள் சொன்னது மாதிரி, தொழிலார்கள் நிலைமை மிக மோசம்.
// இழந்தது பலவானாலும், ஈடு செய்ய முடியாத இழப்பு, சொந்தங்கள் மற்றும் நட்புக்களின் பாசம், அதனை அருகில் இருந்து அனுபவிக்க முடியாமை. எத்தனை காசு கொடுத்தாலும் திரும்ப பெற முடியாத இழப்பு!//
:(
வருத்தமாயிருக்கு சஃபி
எப்போடா ஊருக்குபோவோம்ன்னு இருக்கு
வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் நாம் நிறைய இழக்கிறோம்.நிறைய கற்று கொள்கிறோம்.
பல சிந்தனைகளை ஏற்படுத்தியது உங்கள் பதிவு.
இத்தனை வலிகள் கொண்டது என அறிந்து கொடுத்தேனோ அறியாமல் கொடுத்தேனோ தெரியவில்லை.... நாங்கள் நினைத்துக் கொள்வோம் ஐய்யோ வெளி நாட்டில் இருக்காங்க அவங்களுக்கு என்ன என்று? ஆனால் உங்கள் மனங்களை எங்கள் பொறாமை உள்ளங்கள் படிப்பதேயில்லை......
நவாஸ் புள்ளி விவரத்தோடு தம் கருத்தை தெரிவித்து வலியோடு அதிர்ச்சியும் தந்தார் இன்றைய இந்தியாவின் நிலைப்பாட்டை.. நீங்கள் வரிகளால் மனங்களின் தவிப்பை தவிர்க்க முடியாத சூழலில் உங்கள் அன்னிய நாட்டு வாழ்க்கை பயணத்தை தொடர்வதை சொல்லியிருக்கீங்க.....
//அங்கிருந்த பெரும்பாலோர்களில் அதிகமானோர் இந்தியர்களாக இருந்தது, சற்று பெருமையாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. ஆனால், இந்தியர்களுக்கு இங்கும் நல்ல பெயர் இருக்கவே செய்கிறது, அதற்க்கு நான் அறிந்த காரணங்கள் சில, திறமையானவர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் அதிகமான சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதவர்கள், மொத்ததில் நிறுவாகத்தினருக்கு தலைவலி கொடுக்காதவர்கள்!!.//
பெருமைக்குரிய விஷயம்..தலை தூக்கி கர்வப்படனும்..ஆனால் இதே இவர்கள் தம் தாய் திரு நாட்டில் இதை கடைப்பிடிப்பதில்லை நேரம் தவறாமை கடமை தவறாமை முழுமையான உழைப்பு இப்படி இதையெல்லாம் இங்கும் புரிந்தால் நலமே....
சிறிய தொகுப்பாக இருந்தாலும் தெளிவாக சொல்லியிருக்கீங்க....
//ஆக இழந்தது பலவானாலும், ஈடு செய்ய முடியாத இழப்பு, சொந்தங்கள் மற்றும் நட்புக்களின் பாசம், அதனை அருகில் இருந்து அனுபவிக்க முடியாமை. எத்தனை காசு கொடுத்தாலும் திரும்ப பெற முடியாத இழப்பு!!//
ஆமாம் வருந்தச் செய்யும் உண்மை வலிக்கச் செய்தாலும் வாழ்ந்தாக வேண்டுமே.....
//
இந்த இழப்புகளுக்கிடையேயும், அடைந்தது சில சில்லரைகள், போதும் என்ற மனம் என்று வருமோ என அந்த நாளுக்காக காத்திருக்கின்றேன். ஒன்றைப் பெற வேறொன்றை இழந்து தானே ஆக வேண்டும்!! இது தாங்க நிஜம்.. Reality!!//
வாழ்வின் எதார்த்த நிலை...வருந்தாதீர்கள்..அன்பு எங்கிருந்தாலும் பகிரக் கூடிய வலிமை வாய்ந்தது.... இந்த பிரிவும் வலியும் ஒருவருக்காக மற்றொருவர் வாழும் போது நிறைவையே தருகிறது....
வெளிநாட்டு வாழ்க்கையின் வரிகளை... ..அருமை.. சுகமான சுமைகள்..
//பிழைக்க வந்த ஒரே காரணத்திற்க்காக, இது போன்ற உணர்வுகளை அடக்கி, பரிமாற முடியாமல் முடங்கிப் போனதை நினைத்து பல தடவை ஏங்கியதுண்டு.//
உண்மையிலே..மனம் வலிக்கிறது
//அவன் என்ன படித்தான், இவன் என்ன செஞ்சான், அதோ அந்த ரெண்டு மாடி கட்டி, காரெல்லாம் வச்சிருக்காருள்ள அவரு படிச்சது வெரும் அஞ்சாங்கிளாஸ் தானாம்,//
இப்படிதான் வருங்கால சந்ததினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிப்போனது
//அடப்போப்பா, நீ எப்போ உள்ளூரில சம்பாதிச்சு, வாழ்க்கையில செட்டில் ஆகப்போறே, பேசாம வெளி நாட்டிற்க்கு முயற்சி பண்ணுப்பா //
இப்படிதான் உசுப்பேத்திவிட்டு உருப்படாம பண்ணிட்டானுங்க முன் வழிகாட்டிகள், உள்ளூரில் திருப்தியான வேலை கிடைத்தாலும் ஏதோ ஒன்று குறைவது மாதிரி இருக்கும்.
//இதில் நான் யாராக எதிர் காலத்தில் இருக்கப் போகிறேன்,/
இந்த கேள்வி ஞானம் வந்துட்டாலே முன்னேற வாய்ப்பு இருக்கு
//பல மகிழ்ச்சியான நிகழ்வுகள், சோகமான சம்பவங்கள், தொலைபேசியிலேயே வாழ்த்துக்களும், ஆறுதல்களும் பரிமாறப்பட்டு நாட்கள் ஓடுகிறது//
இதுதான் உண்மையான வெளிநாடு வாழ்வோரின் வாழ்க்கை நிலமை
//குழந்தைகளுக்கு தரமான கல்வி முறை, ஆம் இங்கு நாம் கொடுக்கும் பள்ளிக் கூட கட்டணத்திற்க்கும் தரத்திற்க்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம்//
இந்தியாவிலும் கல்வி வியாபாரமாகிப்போனது தெரியாதா ஷாஃபி... உலகம் முழுதும் இதுதான் நல்ல பிஸினெஸ்
நல்ல பகிர்தல்... நம்மை நாமே ஆறுதல் படுத்திக்கொள்வதை தவிர வேறு ஏதுமில்லை
//வெளி நாடு போவோம், சில வருடங்கள் சம்பாதிப்போம், அப்புறம் ஊருக்கு வந்து செட்டிலாகி விட வேண்டியது தான், //
செட்டிலாகிவிடவேண்டியதுதான்???????????? நிறைய கேள்விகள், யாராவது செட்டில் ஆனார்களா?
எத்தனைபேர் செட்டிலாகவேண்டும் என்று நாடு சென்று கஷ்டப்பட்டு மீண்டும் வரவேண்டும் என்று முயற்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள்??????????
உண்மை உண்மை முற்றிலும் உண்மைகள்.
நமது அயல் நாட்டு வாழ்க்கை - இங்கு கிடைத்தது அங்கும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இங்கு வந்ததால் இழந்தது எங்கும் கிடைக்க வாய்ப்பில்லை.
இதற்க்கிடையே அவன் என்ன படித்தான், இவன் என்ன செஞ்சான், அதோ அந்த ரெண்டு மாடி கட்டி, காரெல்லாம் வச்சிருக்காருள்ள அவரு படிச்சது வெரும் அஞ்சாங்கிளாஸ் தானாம், இப்படி எண்ண ஓட்டங்கள்.
************************
இப்படி சொல்லி சொல்லிதான் உடம்பு ரணகளம் ஆயிடுச்சு.
இந்தியர்களுக்கு இங்கும் நல்ல பெயர் இருக்கவே செய்கிறது, அதற்கு நான் அறிந்த காரணங்கள் சில, திறமையானவர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் அதிகமான சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதவர்கள், மொத்ததில் நிறுவாகத்தினருக்கு தலைவலி கொடுக்காதவர்கள்!!.
****************************
நானும்தான், நானும்தான்
இந்த இழப்புகளுக்கிடையேயும், அடைந்தது சில சில்லரைகள், போதும் என்ற மனம் என்று வருமோ என அந்த நாளுக்காக காத்திருக்கின்றேன். ஒன்றைப் பெற வேறொன்றை இழந்து தானே ஆக வேண்டும்!! இது தாங்க நிஜம்.. Reality!!
********************
இப்படியே பதினான்கு வருடங்கள் ஓடிப்போச்சு
//நட்புடன் ஜமால் said...
ரொம்ப எளிமையாக
இயல்பை சொல்லியிருக்கீங்க
வலிகள் பலவுண்டு
சிலரேனும் சந்தோஷம் நமது இந்த பிரயாணத்தில்.//
நன்றி ஜமால், வலிகள் நிரைந்த சிக்கலான பயணம் தான், அனுபவித்ததும் உண்டு, கண்டதும் உண்டு, பகிர்வின் நோக்கம் கருதி எளிமையாக சொல்லி இருக்கின்றேன்.
//Jaleela said...
ஷபி இது ரொம்ப வே சரி
ரொம்ப மனதை சித்ததரித்து எழுதி இருக்கீஙக//
நன்றி ஜலீலா!! ஏதோ தேடலில் இங்கு வந்தோம், தேடல் தொடர்கிறது.
// Mrs.Faizakader said...
வெளி நாடு வாழ்க்கையே இப்படிதானா?//
இது ஒரு Tip of the iceberg, இன்னும் ஆழமாக சிந்தித்தால், கண்ணீர் தான் மிஞ்சும்.
//Jaleela said...
வெளிநாட்டு வாழ்க்கை ரொம்ப வே தனிமை சோகமானது.
நிறைய வீட்டு நலன்களுக்ககாக வ்ந்து இங்கு சம்பாதிப்பவர்களில், லேபர்களின் வாழ்க்கை படு மோசம்,//
ஆமாம், சில சமயம் இவர்களின் வாழ்க்கை நிலையையும், வருமானத்தையும் கேட்கும்போது, இதையோ, இதைவிட அதிகமாகவோ தன் தாய் நாட்டிலேயே உழைத்து பெற்று இருக்கலாமே என தோண்றும்.
//ஜெஸ்வந்தி said...
நன்றாகவே இருக்கிறது நண்பரே! மிக எளிமையாக நேரில் கதைத்தது போல ஒரு உணர்வு. நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான். என்ன பெரிய வியாதி வந்தாலும் இங்கிலாந்தில் இருப்பவர் கூட இந்தியாவுக்குத்தான் ஓடுகிறார்கள்.//
கருத்துக்கு நன்றி ஜெஸ்
//Jaleela said...
யாராவது ஊரிலிருந்து வெளிநாட்டுக்கு வந்தார்கள் என்றால் ரொம்ப கழ்டமா இருக்கும் அதே அவர்கள் ஊருக்கு போரேன் என்று பயனம் சொல்லும் போது , அப்பாடா குடும்பத்தோடு சந்தோஷமாய் இருக்கட்டும் என்று,எனக்குரொம்ப சந்தோஷமாய் இருக்கும்//
நல்ல கருணை உள்ளம் உங்களுக்கு.
//SUMAZLA/சுமஜ்லா said...
மனசு வலிக்குது ஷஃபி!
உணர்ந்தவர்களுக்கு தான் அதன் அர்த்தம் புரியும்!
//சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்தில் உட்கார்ந்து, சொந்தங்களை விட்டு, வீட்டையும் நாட்டையும் பிரிந்து, பல எண்ணங்களை, கணவுகளை சுமந்த என்னை விமானம் தன் கடமைக்காக சுமந்து பறந்தது.//
சுமக்கும் கனவுகள் பலருக்கும் கனவாகவே முடிந்து விடும் போது, ஏதோ சில சில்லரையாவது தேத்த முடிந்தது சந்தோஷம்!//
ஆமாம் வந்ததற்க்கு ஏதோ கொஞ்சமாவது...
// இராகவன் நைஜிரியா said...
வெளி நாட்டில் வேலைப் பார்க்கும் பலருக்கும் இருக்கும் உள்ளதை அப்படியே எக்ஸ்ரே எடுத்த மாதிரி சொல்லியிருக்கின்றீர்கள்.
பணம் சம்பாதிக்கின்றோம் என்பதைத் தவிர, சுற்றம், நட்பு, பந்தம், பாசம் எல்லாவற்றையும் அதற்காக விலையாகக் கொடுக்கின்றோம்.
ஜலீலா அவர்கள் சொன்னது மாதிரி, தொழிலார்கள் நிலைமை மிக மோசம்.//
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி அண்ணா.
//பிரியமுடன்...வசந்த் said...
// இழந்தது பலவானாலும், ஈடு செய்ய முடியாத இழப்பு, சொந்தங்கள் மற்றும் நட்புக்களின் பாசம், அதனை அருகில் இருந்து அனுபவிக்க முடியாமை. எத்தனை காசு கொடுத்தாலும் திரும்ப பெற முடியாத இழப்பு!//
:(
வருத்தமாயிருக்கு சஃபி
எப்போடா ஊருக்குபோவோம்ன்னு இருக்கு//
புரிகிறது வஸந்த், விரைவில் திருமணம், தேட்டம் அதிகமாகவே இருக்கும். All the best.
//அ.மு.செய்யது said...
வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் நாம் நிறைய இழக்கிறோம்.நிறைய கற்று கொள்கிறோம்.
பல சிந்தனைகளை ஏற்படுத்தியது உங்கள் பதிவு.//
கருத்துக்கு நன்றி செய்யது, அயல் நாடு செல்லலாம், ஆனால் வாழ்வை அங்கேயே போக்கி விடக்கூடாது.
//தமிழரசி said...
இத்தனை வலிகள் கொண்டது என அறிந்து கொடுத்தேனோ அறியாமல் கொடுத்தேனோ தெரியவில்லை.... நாங்கள் நினைத்துக் கொள்வோம் ஐய்யோ வெளி நாட்டில் இருக்காங்க அவங்களுக்கு என்ன என்று? ஆனால் உங்கள் மனங்களை எங்கள் பொறாமை உள்ளங்கள் படிப்பதேயில்லை......//
நோ.. நீங்கள் கொடுத்த தலைப்பில் எனக்கு மகிழ்ச்சியே, அக்கரைக்கு இக்கரை பச்சை!! எங்க ஊரில ஒரு பழ்மொழி சொல்வாங்க, கட்ட வெளக்கமார இருந்தாலும் அது கப்ப வெளக்க்மார இருக்கனுமாம்.
எளிமையான முறையில் நன்றாகச் சொன்னிர்கள்
தரம்
தமிழரசி said...
//அங்கிருந்த பெரும்பாலோர்களில் அதிகமானோர் இந்தியர்களாக இருந்தது, சற்று பெருமையாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. ஆனால், இந்தியர்களுக்கு இங்கும் நல்ல பெயர் இருக்கவே செய்கிறது, அதற்க்கு நான் அறிந்த காரணங்கள் சில, திறமையானவர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் அதிகமான சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதவர்கள், மொத்ததில் நிறுவாகத்தினருக்கு தலைவலி கொடுக்காதவர்கள்!!.//
பெருமைக்குரிய விஷயம்..தலை தூக்கி கர்வப்படனும்..ஆனால் இதே இவர்கள் தம் தாய் திரு நாட்டில் இதை கடைப்பிடிப்பதில்லை நேரம் தவறாமை கடமை தவறாமை முழுமையான உழைப்பு இப்படி இதையெல்லாம் இங்கும் புரிந்தால் நலமே....//
சென்ற முறை சென்னையில் ஒருவரை சந்தித்தேன், தன்னோட பைக்கில் முன்னாடியும், பின்னாடியும் காய், கனிகளை நிறைத்து, கோயம்பேட்டிலிருந்து தனது வீடு வரை தினமும் கொண்டு வந்து ஒரு சிறு கடை வைத்து அழகாக தனது குடும்பத்தை நடத்தி வருகிறார், அவருடைய முகத்தில் ஒரு சோர்வோ, அயர்வோ இல்லை, பழகி விட்டார் போலும், இது போல உழைக்கத் தயாராக இருந்தால் எங்கும் மகிழ்வைப் பெற முடியும்!!
தமிழரசி said...
//
இந்த இழப்புகளுக்கிடையேயும், அடைந்தது சில சில்லரைகள், போதும் என்ற மனம் என்று வருமோ என அந்த நாளுக்காக காத்திருக்கின்றேன். ஒன்றைப் பெற வேறொன்றை இழந்து தானே ஆக வேண்டும்!! இது தாங்க நிஜம்.. Reality!!//
வாழ்வின் எதார்த்த நிலை...வருந்தாதீர்கள்..அன்பு எங்கிருந்தாலும் பகிரக் கூடிய வலிமை வாய்ந்தது.... இந்த பிரிவும் வலியும் ஒருவருக்காக மற்றொருவர் வாழும் போது நிறைவையே தருகிறது....//
எனக்கும் எழுதத் தெரியுமென்று தங்களுக்குத் தோண்றி, எனை எழுத வைத்தமைக்கு நன்றிகள் அரசி.
//அதிரை அபூபக்கர் said...
வெளிநாட்டு வாழ்க்கையின் வரிகளை... ..அருமை.. சுகமான சுமைகள்..//
நன்றி அபூபக்கர்
//அபுஅஃப்ஸர் said...
//வெளி நாடு போவோம், சில வருடங்கள் சம்பாதிப்போம், அப்புறம் ஊருக்கு வந்து செட்டிலாகி விட வேண்டியது தான், //
செட்டிலாகிவிடவேண்டியதுதான்???????????? நிறைய கேள்விகள், யாராவது செட்டில் ஆனார்களா?
எத்தனைபேர் செட்டிலாகவேண்டும் என்று நாடு சென்று கஷ்டப்பட்டு மீண்டும் வரவேண்டும் என்று முயற்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள்?????????//
எல்லாம் சூழ்நிலை தான் அபூ, தேவைகள் இன்னது தான் என நமக்கே தெரியவில்லை, ஒரு காலத்தில் ஆடம்பரமாய் புழங்கப்பட்ட பொருட்கள், தற்பொழுது அத்தியாவிசயாமாக்கி விட்டோம். இனி என்று திருந்துவது, தாங்கள் சொன்னது போல நமக்கு நாமெ ஆறுதல்!!
// Jaleela said...
யாராவது ஊரிலிருந்து வெளிநாட்டுக்கு வந்தார்கள் என்றால் ரொம்ப கழ்டமா இருக்கும் அதே அவர்கள் ஊருக்கு போரேன் என்று பயனம் சொல்லும் போது , அப்பாடா குடும்பத்தோடு சந்தோஷமாய் இருக்கட்டும் என்று,எனக்குரொம்ப சந்தோஷமாய் இருக்கும்//
எனக்கும் திருமணம் முடிந்து சரியாக நூறு நாட்கள் தான் ஊரில் இருந்தேன், அதன் பிறகு தனிமையில் ஒரு வருடம் தவித்த நாட்களை வார்த்தைகளில் சொல்ல முடியாது!! கொடுமையிலும் கொடுமை!! அப்பொழுது செல் போன், இன்டர்னெட் போன்ற வசதிகளும் இல்லை, கடிதம், தொலை பேசியிலேயே காலமும், காசும் கழிந்தது.
//அபுஅஃப்ஸர் said...
இந்தியாவிலும் கல்வி வியாபாரமாகிப்போனது தெரியாதா ஷாஃபி... உலகம் முழுதும் இதுதான் நல்ல பிஸினெஸ்//
சென்னையில் ஒரு நண்பர் சொன்னார், அவருக்கு பிறக்கப் போகும் தனது குழந்தைக்கு இப்போதே அடையாறில் இருக்கும் ஒரு பள்ளியில் பதிவு செய்து வைத்து விட்டாராம். இது எல்லாம் ரொம்ப ஓவர்!!
//சிங்கக்குட்டி said...
உண்மை உண்மை முற்றிலும் உண்மைகள்.//
உங்கள் ஆணித்தரமான கருத்தை வரவேற்க்கின்றோம் நண்பரே.
//S.A. நவாஸுதீன் said...
நமது அயல் நாட்டு வாழ்க்கை - இங்கு கிடைத்தது அங்கும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இங்கு வந்ததால் இழந்தது எங்கும் கிடைக்க வாய்ப்பில்லை.//
உண்மையான தத்துவம்!!
//S.A. நவாஸுதீன் said...
இந்தியர்களுக்கு இங்கும் நல்ல பெயர் இருக்கவே செய்கிறது, அதற்கு நான் அறிந்த காரணங்கள் சில, திறமையானவர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் அதிகமான சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதவர்கள், மொத்ததில் நிறுவாகத்தினருக்கு தலைவலி கொடுக்காதவர்கள்!!.
****************************
நானும்தான், நானும்தான்//
அப்படியா!! தமிழரசி என்ன சொல்வாங்களோ?
//ஒன்றைப் பெற வேறொன்றை இழந்து தானே ஆக வேண்டும்!! இது தாங்க நிஜம்.. Reality!!//உண்மையான உண்மை...
நல்லது கெட்டதுக்கு என்று ஒன்றும் போகமுடியாமல் இருப்பது மிகவும் கஷ்டம் தான்..
நான் திருமணான புதிதில் இங்கு யூஸ் வந்தது...பாருங்க எனக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஓடிவிட்டது...இன்னும் இந்தியா பயணம் போகவில்லை...அதே போல யாரும் எங்களை பார்க்கவும் இங்கு இன்னும் வரவில்லை...(எதோ கடவுள் புண்ணியதினால் முதல் தடவையாக என்னுடைய குழந்தையினை பார்க்க அம்மா இந்த வாரம் இங்கு யூஸ் வாராங்க...)
குழந்தை பிறந்தது கூட இங்கு யூஸில் தான்...யாருடைய உதவியும் இல்லாம...நான் என்னுடைய கணவரும் மட்டுமே பார்த்துகிட்டோம்..
இப்போ நினைக்கும் பொழுது கூட சில சமயம் எப்படி இவ்வளவு தைரியமாக இருந்தோம் என வியப்பு..
வெளிநாடுகளில் வாழ்வதில் ஒரு கஷ்டம் என்றால் அதனால் நான் பெற்ற பயன்கள் சில இருக்க தான் செய்கின்றது...
தனியாக வாழ்வதினால் வாழ்கையில் முன்னேறவேண்டும், தன்னம்பிக்கை, தைரியும், அனைத்தையும் விட எதையும் தாங்கும் இதயம் வந்துவிடுகின்றது...
பெரிய பதிவாகிவிட்டது...நன்றி ஷஃபிக்ஸ்
//Geetha Achal said...

பெரிய பதிவாகிவிட்டது...நன்றி ஷஃபிக்ஸ்//
தங்களுடைய கருத்துக்களை விளக்கமாக பகிர்ந்ததற்க்கு நன்றி கீதா.
முத்ன் முறை இங்கு வந்த போது ஒரு வகை இனம்புஇயாத பயமும் பதட்டமும் இருந்தது நான் ரியாய்து வந்தவுடன் எனது நண்பனிடம் சென்றபோது எனக்கும் ஷபிக் என்ற பெஅயரில் ஒரு இந்திய நண்பர அறிமுகமானார் மதிய கிழ்க்கு வாழ்கை பற்றிய முதல் அறிவுரையும் அவரிடம் இருந்து கிடைத்தது ..................
என்னுடைய இப்போதைய எல்லா நண்பர்களும் வட இந்தியர்கள் மிக நல்ல மனிதர்கள்
என்னத்த சொல்ல :-( ஏதோ பொழப்ப ஓட்டனும்ல
//தியாவின் பேனா said...
எளிமையான முறையில் நன்றாகச் சொன்னிர்கள்
தரம்//
நன்றி பேனா நண்பரே!!
வெளிநாட்டு வாழ்க்கையில் பணம், சந்தோஷம், என்றசிலதை பெருகிறோம் ஆனால்
பந்தபாசம் சொந்தம் சோகம் என பலதை இழக்கிறோம்,
இழந்தைவைகளில் சில கிடைத்துவிடுகிறது ஆனால் இறந்தவர்கள்? கடைசிநேரத்தில் முகங்கூட காணமுடியாத வலிகள்
மனதை ரணமாய் வேகவைக்கிறது
அயல்நாட்டு வாழ்க்கை அல்லல்
சிலநேரம் மகிழ்ச்சித்துள்ளல்
மிக அருமை ஷஃபி தாங்களின் வெளிநாட்டுப்பாடம்
Post a Comment