பதிவுலக நண்பர் மாதவராஜ் துவக்கி வைத்து, உலகமெங்கும் சுற்றும் இந்த தொடர் பதிவில் என்னையும் மாட்டி விட்ட நவாஸ் அவர்களுக்கு நன்றி, இதோட விதிமுறைகள் இப்போ எல்லோருக்கும் மனப்பாடம் ஆகியிருக்கும்.
இதோ எனது பத்துக்கு பத்து:
1. அரசியல்
பிடித்தவர்கள் : ஜெயலலிதா (டைனமிக் பெர்ஸனாலிட்டி), ஸ்டாலின் (சுறுசுறுப்பாக ஏதாச்சும் செய்கிறார்)
பிடிக்காதவர்கள் : பெரிய லிஸ்ட்டே இருக்கு
2. எழுத்து :
பிடித்தவர்கள்: சுஜாதா, பாலகுமாரன் (கல்லூரி நாட்களில் நிறைய படித்ததுண்டு)
பிடிக்காதவர்: அப்படின்னு சொல்கிற அளவுக்கு விவரம் இல்லைங்க
3.திரைப்பட பாடலாசிரியர்கள்:
பிடித்தவர்கள் : வைரமுத்து (எப்போதும்), டி. ராஜேந்தர் (அப்போது)பிடிக்காதவர் : குத்துப்பாடல்கள் எழுதும் யாவரும்
4.நகைச்சுவை நடிகர்
பிடித்தவர் : வடிவேலு
பிடிக்காதவர் : கவுண்டமணி
5. நடிகர்
பிடித்தவர்: கமல்
பிடிக்காதவர்: சிம்பு
6. நடிகை
பிடித்தவர் : நதியா (அப்போது)
பிடிக்காதவர் : பாவம் அவங்களெல்லாம் கோவிச்சுக்குவாகளே
7.தொழில் அதிபர்கள்
பிடித்தவர்கள்: இரா. க. சந்திரமோகன் (அருன் ஐஸ் கிரீம்ஸ்), முகமது மீரான் (ரேனால்ட்ஸ் பேணா) உழைப்பாலும், தன்னம்பிக்கையினாலும் உயர்ந்தவர்கள்
பிடிக்காதவர்கள்: மக்களின் உழைப்பை சுரண்டுபவர்கள்
8. குடும்பத் தலைவர்
பிடித்தவர்: நான் தான்
பிடிக்காதவர்: அதுவும் நாந்தானுங்க
9. பதிவுலகம்
பிடித்தது: புதியவர்கள், புதுமைகள், ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள்.
பிடிக்காதது: அவசியமில்லாத தனிமனித தாக்குதல்கள், தேவையில்லாத விவாதங்கள்
10. உணர்வு
பிடித்தது: சுயமுயற்சியால் அடையும் மகிழ்ச்சி
பிடிக்காதது: அம்மகிழ்ச்சியால் எல்லை மீறல்
ஊர் வழக்கப்படி இதை விட கலக்கலா பதிவினை தொடரும்படி நல்ல நண்பர்கள் சிலரை அழைக்கணுமாம்.
நான் அழைக்கப்போவது:
அன்பின் அண்ணன் இராகவன் நைஜீரியா
சமையலை பிடிபிடின்னு பிடிக்கும் ஜலீலா அக்கா
கோவச்சுக்காம பதிலளியுங்க ப்ளீஸ்.........
Subscribe to:
Post Comments (Atom)
50 comments
தகவல்கள் நல்ல இருக்கு, நல்ல சிந்தனை.
ஷஃபி.அனைத்து பதில்களும் நச்.
நாங்களும் பத்துக்கு 10 போட்டுயிருக்கோமுல்ல
என் பதிலும் உங்க பதிலும் சில ஒற்றுமை
[குடுபத்தலைவன்,, சூப்பர்..[
நல்ல பதில்கள் கொடுத்துள்ளீர்கள்!
கேள்விகள் சில மாற்றப் பட்டுள்ளனவா?
ஷஃபி எனக்குப்பிடிசதில் 80% ஒத்துப்போகுது, அதேசமயம் பிடிக்கும்/பிடிக்காது ஏன் என்ற காரணத்தையும் ஒரு வரியில் சொன்னால் நல்லாயிருக்கும்
கேள்விகளை ஆளாலுக்கு இஷ்டப்படி மாற்றிக்கிறாங்கப்பா
//குடும்பத் தலைவர்
பிடித்தவர்: நான் தான்
பிடிக்காதவர்: அதுவும் நாந்தானுங்க//
இதுலே ஏதோ ஒன்று தவறாக கொடுக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது, தங்கமனி படிக்கமாட்டாங்க என்ற ஒரே தைரியம்தான் அது????
//சிங்கக்குட்டி said...
தகவல்கள் நல்ல இருக்கு, நல்ல சிந்தனை.//
நன்றி சிங்கக்குட்டி
//அன்புடன் மலிக்கா said...
ஷஃபி.அனைத்து பதில்களும் நச்.
நாங்களும் பத்துக்கு 10 போட்டுயிருக்கோமுல்ல
என் பதிலும் உங்க பதிலும் சில ஒற்றுமை
[குடுபத்தலைவன்,, சூப்பர்..//
ஆமாம் மலிக்கா, மிக்க மகிழ்ச்சி, நன்றி.
அதுசரி பத்து போட்டாச்சா!
பிடித்தவர் : வடிவேலு
பிடிக்காதவர் : கவுண்டமணி - சேம் ப்ளட்
குடும்பத் தலைவர்
பிடித்தவர்: நான் தான்
பிடிக்காதவர்: அதுவும் நாந்தானுங்க
ஸ்ப்லிட் பெர்ஸ்னாலிட்டியோ.
//RAMYA said...
நல்ல பதில்கள் கொடுத்துள்ளீர்கள்!
கேள்விகள் சில மாற்றப் பட்டுள்ளனவா?//
நண்பர்களின் ஒவ்வொரு பதிவிலும் வெவ்வேறான கேள்விகளையே காண்கிறேன், தப்புங்களா? பஞ்சாயத்துல என்ன முடிவோ அதுக்கு கட்டுப்புடுறோமுங்க!!
//அபுஅஃப்ஸர் said...
ஷஃபி எனக்குப்பிடிசதில் 80% ஒத்துப்போகுது, அதேசமயம் பிடிக்கும்/பிடிக்காது ஏன் என்ற காரணத்தையும் ஒரு வரியில் சொன்னால் நல்லாயிருக்கும்//
உங்களுக்கு புரியாததா தல
//அபுஅஃப்ஸர் said...
கேள்விகளை ஆளாலுக்கு இஷ்டப்படி மாற்றிக்கிறாங்கப்பா
//குடும்பத் தலைவர்
பிடித்தவர்: நான் தான்
பிடிக்காதவர்: அதுவும் நாந்தானுங்க//
இதுலே ஏதோ ஒன்று தவறாக கொடுக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது, தங்கமனி படிக்கமாட்டாங்க என்ற ஒரே தைரியம்தான் அது????//
இதில ஃபுல் மார்க் வாங்கி பாஸ் ஆனவங்க யாரும் இருக்காங்களா?
//S.A. நவாஸுதீன் said...
அதுசரி பத்து போட்டாச்சா!
பிடித்தவர் : வடிவேலு
பிடிக்காதவர் : கவுண்டமணி - சேம் ப்ளட்
குடும்பத் தலைவர்
பிடித்தவர்: நான் தான்
பிடிக்காதவர்: அதுவும் நாந்தானுங்க
ஸ்ப்லிட் பெர்ஸ்னாலிட்டியோ.//
ஹா ஹா..அப்ப்போ அந்தப் பக்கம், இந்தப் பக்கமும் மாறும்.
/பிடித்தவர்கள் : ஜெயலலிதா (டைனமிக் பெர்ஸனாலிட்டி), ஸ்டாலின் (சுறுசுறுப்பாக ஏதாச்சும் செய்கிறார்)//
ரெண்டு பேரையும் சொன்னதால ஆட்டோ வர்றதுல இருந்து தப்பிச்சுகிட்டீங்க!!
//ஹுஸைனம்மா said...
/பிடித்தவர்கள் : ஜெயலலிதா (டைனமிக் பெர்ஸனாலிட்டி), ஸ்டாலின் (சுறுசுறுப்பாக ஏதாச்சும் செய்கிறார்)//
ரெண்டு பேரையும் சொன்னதால ஆட்டோ வர்றதுல இருந்து தப்பிச்சுகிட்டீங்க!!//
அப்போ மாட்டு வண்டி வருமா?
//10. உணர்வு
பிடித்தது: சுயமுயற்சியால் அடையும் மகிழ்ச்சி
பிடிக்காதது: அம்மகிழ்ச்சியால் எல்லை மீறல்
//
நச்!
வித்தியாசமா எழுதியிருக்கீங்க.
ஆமா கவுண்டமணி புடிக்காதா? பெட்ராமாக்ஸ் லைட் காமெடி கேட்டா எங்க வீடே அதிரும்!!
ரேய்னோல்ட்ஸ் முஹம்மது மீரான் ஸ்ரீ வைகுண்டதுக்காரறு தானே? அவரு படிச்ச பள்ளிக்கூடத்த எங்க மாமி காமிச்சாங்க..
//அக்பர் said...
//10. உணர்வு
பிடித்தது: சுயமுயற்சியால் அடையும் மகிழ்ச்சி
பிடிக்காதது: அம்மகிழ்ச்சியால் எல்லை மீறல்
//
நச்!
வித்தியாசமா எழுதியிருக்கீங்//
நன்றி அக்பர்!!
//நாஸியா said...
ஆமா கவுண்டமணி புடிக்காதா? பெட்ராமாக்ஸ் லைட் காமெடி கேட்டா எங்க வீடே அதிரும்!!
ரேய்னோல்ட்ஸ் முஹம்மது மீரான் ஸ்ரீ வைகுண்டதுக்காரறு தானே? அவரு படிச்ச பள்ளிக்கூடத்த எங்க மாமி காமிச்சாங்க.//
ஆமாம் அது ஒரு நல்ல ஜோக் தான், ஆனா காட்டுக் கத்தல் கத்துவாரே, அது தான் எனக்கு பிடிக்காது.
மீரான் எந்த ஊருன்னு தெரியாது, அவருடைய தொழில் நுணுக்கங்களை ஒரு புத்தகத்தில் படித்தேன், பதிவிடும்போது நினைவில் வந்ததது, போட்டாச்சு.
ஆஹா... தம்பி என்னை மாட்டி விட்டுடீங்களா..
நடக்கட்டும்.. போடுகின்றேன்..கொஞ்சம் மெதுவாகத்தான் போடணும்.
// இதோ எனது பத்துக்கு பத்து: //
பத்துக்கு பத்தும் பாஸ்
// பிடிக்காதவர்கள் : பெரிய லிஸ்ட்டே இருக்கு //
தனியா ஒரு இடுகைப் போட்டுவிட வேண்டியதுதானே..
// பிடிக்காதவர்: சிம்பு //
நடிகர்... அப்படின்னு போட்டுட்டு... இவர் பேரைப் போட்டு இருக்கீங்க..
நடிகர்ல யாரைப் பிடிக்காதுன்னு சொல்லுங்க
// பிடிக்காதவர்கள்: மக்களின் உழைப்பை சுரண்டுபவர்கள் //
இது சரியான பதில்
// உணர்வு
பிடித்தது: சுயமுயற்சியால் அடையும் மகிழ்ச்சி
பிடிக்காதது: அம்மகிழ்ச்சியால் எல்லை மீறல் //
இந்த பதில் அதனினும் சூப்பர்.
மீ த 25
// குடும்பத் தலைவர்
பிடித்தவர்: நான் தான்
பிடிக்காதவர்: அதுவும் நாந்தானுங்க//
;;)))
பிடித்தது: சுயமுயற்சியால் அடையும் மகிழ்ச்சி//
அருமை ...!
//இராகவன் நைஜிரியா said...
ஆஹா... தம்பி என்னை மாட்டி விட்டுடீங்களா..
நடக்கட்டும்.. போடுகின்றேன்..கொஞ்சம் மெதுவாகத்தான் போடணும்//
தம்பியின் கடமையை சரியாகச் செய்துட்டோம்ல!!
//இராகவன் நைஜிரியா said...
// பிடிக்காதவர்: சிம்பு //
நடிகர்... அப்படின்னு போட்டுட்டு... இவர் பேரைப் போட்டு இருக்கீங்க..
நடிகர்ல யாரைப் பிடிக்காதுன்னு சொல்லுங்க//
ஹி..ஹி...பாவம் அவரு!!
இராகவன் நைஜிரியா said...
// இதோ எனது பத்துக்கு பத்து: //
பத்துக்கு பத்தும் பாஸ்//
அப்போ நூற்றுக்கு நூறு இல்லையா.......ஹி..ஹி!!
ஜீவன் said...
// குடும்பத் //தலைவர்
பிடித்தவர்: நான் தான்
பிடிக்காதவர்: அதுவும் நாந்தானுங்க//
;;)))
பிடித்தது: சுயமுயற்சியால் அடையும் மகிழ்ச்சி//
அருமை ...!//
நன்றி தலைவரே
azakana pathilakal anna
ungaluku 11/10 mark ithu eppadi
உங்க பதில்கள் அனைத்தும் எனக்கு பிடித்திருக்கு ப்ரதர்.
//குடும்பத் தலைவர்
பிடித்தவர்: நான் தான்
பிடிக்காதவர்: அதுவும் நாந்தானுங்க//ஹி ஹி
ஷஃபிக்ஸ். எல்லா பதில்களும் நல்ல இருக்கு கமெண்ட் இப்ப கொடுக்க முடியல, கொஞ்சம் பிஸியா இருக்கேன்,
என்னையும் அழைத்ததற்கு மிக்க நன்றி,
இதே பத்துக்கு தான் ஸாதிகா அக்காவும் அழைத்து இருக்கிறார்கள்.
எனக்கும் வடிவேலுகாமடி தான் ரொம்ப பிடிக்கும். சொல்லும் போதே சிரிப்பு வருது
//gayathri said...
azakana pathilakal anna
ungaluku 11/10 mark ithu eppadi//
கணக்கு சரியா வந்தால் ஒ.கே காயத்ரி
//Mrs.Menagasathia said...
உங்க பதில்கள் அனைத்தும் எனக்கு பிடித்திருக்கு ப்ரதர்.
//குடும்பத் தலைவர்
பிடித்தவர்: நான் தான்
பிடிக்காதவர்: அதுவும் நாந்தானுங்க//ஹி ஹி//
ரசித்தமைக்கு நன்றிங்க.
//Jaleela said...
ஷஃபிக்ஸ். எல்லா பதில்களும் நல்ல இருக்கு கமெண்ட் இப்ப கொடுக்க முடியல, கொஞ்சம் பிஸியா இருக்கேன்,
என்னையும் அழைத்ததற்கு மிக்க நன்றி,
இதே பத்துக்கு தான் ஸாதிகா அக்காவும் அழைத்து இருக்கிறார்கள்.
எனக்கும் வடிவேலுகாமடி தான் ரொம்ப பிடிக்கும். சொல்லும் போதே சிரிப்பு வருது//
அழைப்பை ஏற்றமைக்கு நன்றிங்க, மெதுவா வேலையெல்லாம் முடிச்சுட்டு, ஃப்ரியா இருக்கும்போது போடுங்க.
நதியா- :)
8. குடும்பத் தலைவர்
பிடித்தவர்: நான் தான்
பிடிக்காதவர்: அதுவும் நாந்தானுங்க
9. பதிவுலகம்
பிடித்தது: புதியவர்கள், புதுமைகள், ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள்.
பிடிக்காதது: அவசியமில்லாத தனிமனித தாக்குதல்கள், தேவையில்லாத விவாதங்கள்
இதே எமது கருத்தும் ...
நன்றி ஜமால், ":)அப்படியா? :):):)!!
ஷஃபிக்ஸ் தொடர்பதிவுக்கு, பதில் பதிவு போட்டாச்சு, அடுத்து அவார்டு பதிவும் போட்டச்சு உங்களை தான் காணும் வாங்க வந்து அவார்டை பெற்று கொள்ளுங்கள்.
(நீங்க தொடர் பதிவுக்கு அழைத்ததும் வடிவேலு பாணியில் உடனே மனதில் பட்ட பதில் இதோ.... ஹி ஹி
அவ்வ்வ்வ் நான் எம்பாட்டுக்கு கரண்டி பிடிச்சிக்கிட்டு சமயற்கட்டுல ஒரு ஓரமா இருந்தா என்னையில் பத்து கேள்வில மாட்டி விட்டுங்ககளைய்யா மாட்டிவிட்டுட்டங்களைய்யா இத நான் எங்க போய் சொல்வேன்.
நமக்கு கேள்வி கேட்டு தானா பழக்கம், பதில் சொல்லி பழக்க மில்லையே அய்யோ இப்ப என்ன என்ன பண்ணுவேனைய்யா...பண்ணுவேனைய்யா சரி பார்ப்போம் ஒரு குத்துமதிப்பா சொல்வோம்...... மண்டய கொடஞ்சி பதில சொல்வோம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...)
நடிகை
பிடித்தவர் : நதியா (அப்போது)
பிடிக்காதவர் : பாவம் அவங்களெல்லாம் கோவிச்சுக்குவாகளே?//????? எவங்கள்ளாம் கோச்சிப்பாங்க
குடும்பதலைவர் பதில் அருமை
மத்தவங்களுக்கு வலிக்க கூடாது என்பதற்காக கவனமா பதில் சொல்லியிருக்கீங்க,,அதனால் ஷஃபி டச்சில் மேலும் ஒரு பதிவு....
ஷஃபி உங்களுக்கு என் பிளாக்கில் விருது வழங்கியிருக்கேன் வந்து பெற்றுக்கொள்ளவும்
http://kalaisaral.blogspot.com/2009/11/blog-post_10.html
ஷஃபிக்ஸ் என் பிலாக்கில் வந்து நான் கொடுக்கும் அவார்டை வாங்கிக்கொள்ளுங்கள்.
//Jaleela said...
ஷஃபிக்ஸ் தொடர்பதிவுக்கு, பதில் பதிவு போட்டாச்சு, அடுத்து அவார்டு பதிவும் போட்டச்சு உங்களை தான் காணும் வாங்க வந்து அவார்டை பெற்று கொள்ளுங்கள்.//
சாரி, ரென்டு நாளா ஊரில் இல்லைங்க, ISO ஆடிட்டுக்காக எங்களது Factory க்கு சென்று இருந்தேன் இன்னக்கித்தான் வந்தேன், இதோ வந்து பெற்றுக்கொள்கிறேன். நன்றி!!
//தமிழரசி said...
மத்தவங்களுக்கு வலிக்க கூடாது என்பதற்காக கவனமா பதில் சொல்லியிருக்கீங்க,,அதனால் ஷஃபி டச்சில் மேலும் ஒரு பதிவு....//
வாங்க அரசி, ரொம்ப நாளாச்சு பார்த்து...
// அன்புடன் மலிக்கா said...
ஷஃபி உங்களுக்கு என் பிளாக்கில் விருது வழங்கியிருக்கேன் வந்து பெற்றுக்கொள்ளவும்
http://kalaisaral.blogspot.com/2009/11/blog-post_10.html//
நன்றிமா, இதோ வந்து பெற்றுக் கொள்கிறேன்.
குடும்ப தலைவர் ரொம்ப பிடிக்குது தல.
அதே குடும்ப தலைவர் தல.
அருமை
Post a Comment