வாங்க வாங்க வரிசையில ஒழுங்கா நின்னு உங்களோட அனுமதிச் சீட்டை வாங்கிக்கோங்க, 2012ல் முதல் முறையா வானவெளியில் வர்த்தகரீதியான புதுசா ஒரு விடுதியை தொடங்கப் போறாங்க. Galactic Suite அப்படிங்கிற ஒரு நிறுவனம் நம்மள மாதிரி ஆர்வம் உள்ளவங்க எல்லோரையும் ரசிய ராக்கெட் மூலம் மேல அனுப்ப போறாங்களாம். இங்கேயிருந்து மேல போக இரண்டு நாட்களாகுமாம், அதுக்கு முன்னாடி உங்களையெல்லாம் 8 வாரத்துக்கு உண்டு இல்லைன்னு பண்றமாதிரி பயிற்சி கொடுக்கிறதுக்காக கரீபியன் தீவுக்கு கூட்டிட்டு போவாங்களாம்.
இந்த விடுதியில இருந்துக்கிட்டே 80 நிமிடத்திற்கு ஒரு முறை உலகத்தை சுத்தி சுத்தி வந்துக்கிட்டே இருக்கலாம். இது வரை 43 பேர் இதுல பயணிக்க தங்களோட் பெயரை பதிவு செஞ்சு இருக்காங்க. சரி எவ்ளோப்பா செலவு ஆகும்? மூன்று நாளைக்கு 4.5 மில்லியன் அமேரிக்க டாலர்கள் செலவாகும், மூனு நாள் வேணாம், ஒரு நாளைக்கு மாத்திரம் என்னைய கூட்டிட்டு போய் வந்துடுங்களேன்னு சொன்னா அது நடக்காது, இது என்ன தஞ்சாவூர் பஸ் ஸ்டான்டு பக்கத்திலேயா இருக்கு உங்க இஷடத்துக்கு போய் வர? ஆனாலும் பாருங்க மூனு நாளைக்கு சிறைல அடச்சு வச்ச மாதிரி எப்படித்தான் இருக்கப் போறாங்களோ, அதுனால இதெல்லாம் நமக்கு சரி பட்டு வராது, நீங்க போய்ட்டு வந்து உங்க பதிவுல ஒரு இடுகை போடுங்க, நாங்க வந்து கும்மி அடிப்போம்.



பூமியை நீங்க இப்படி படுத்துக்கிட்டே ரசிப்பீர்கள்!!

43 comments
4.5 million US$ - ரொம்ப கம்மியா இருக்கே.
நல்ல தகவல் பகிர்வு ஷஃபி.
தலீவா
எனக்கு ஒரு முன் பதிவு ப்ளீஸ், அதற்கான செலவையும் கொடுத்துடுங்க, அந்த அனுபவத்தை என்னோட பிளாக்குலே போடுறேன்.. போனா போகுதுனு படிச்சி தெரிஞ்சுக்கோங்க
//எல்லோரையும் ரசிய ராக்கெட் மூலம் மேல அனுப்ப போறாங்களாம்//
போய்ட்டு வந்த பிறகு பூமி புடிக்காம போச்சுனா என்னா பண்ணுறது
GOOD TO SHARE SHAFIX
நீங்க இந்த சுற்றுப் பயணத்துக்கு ஏற்பாடு பண்ணும் போது, நான் வேண்டாம் என்று மறுத்தால் உங்க மனசு ரொம்ப கஷ்டப்படும் என்பதால், இந்த சுற்றுலாவுக்கு செல்லுகின்றேன்.
தெரியாத தகவல்.நல்ல பகிர்வுக்கு நன்றி ப்ரதர்!!
//S.A. நவாஸுதீன் said...
4.5 million US$ - ரொம்ப கம்மியா இருக்கே.//
டிரைவருக்கு ஒரு மில்லியன் டிப்ஸ் கொடுத்துடலாம், டீ, காபி செலவு ஒரு அரை மில்லியன் வரும், கூட்டி கழிச்சு பார்த்தா உங்க பட்ஜட்டுக்கு சரியா வந்துடும்.
//அபுஅஃப்ஸர் said...
தலீவா
எனக்கு ஒரு முன் பதிவு ப்ளீஸ், //
உங்களுக்கு வின்டோ சீட்!!
//அபுஅஃப்ஸர் said...
//எல்லோரையும் ரசிய ராக்கெட் மூலம் மேல அனுப்ப போறாங்களாம்//
போய்ட்டு வந்த பிறகு பூமி புடிக்காம போச்சுனா என்னா பண்ணுறது//
பூமிக்கு வந்துருமா.
//இராகவன் நைஜிரியா said...
நீங்க இந்த சுற்றுப் பயணத்துக்கு ஏற்பாடு பண்ணும் போது, நான் வேண்டாம் என்று மறுத்தால் உங்க மனசு ரொம்ப கஷ்டப்படும் என்பதால், இந்த சுற்றுலாவுக்கு செல்லுகின்றேன்.//
நீங்க அபுஜா பஸ் ஸ்டான்டு பக்கத்தில் வெயிட் பண்ணுங்க, அங்க வந்து பிக் அப் பண்ணிக்குறோம்.
//Mrs.Menagasathia said...
தெரியாத தகவல்.நல்ல பகிர்வுக்கு நன்றி ப்ரதர்!!//
நன்றி சகோதரி
என் பையன் நேத்து இந்த ஹோட்டல் பத்தி அவனோட “class magazine"க்கு article எழுதிவச்சிருந்தான். அதுக்குப் படம் தேடஉம்னு நினைச்சிட்டு இருக்கப்போ, நீங்க இந்த பதிவு போட்டிருக்கீங்க. ரொம்ம்ப நன்றி படத்துக்கு!!
ஹுஸைனம்மா said...
என் பையன் நேத்து இந்த ஹோட்டல் பத்தி அவனோட “class magazine"க்கு article எழுதிவச்சிருந்தான். அதுக்குப் படம் தேடஉம்னு நினைச்சிட்டு இருக்கப்போ, நீங்க இந்த பதிவு போட்டிருக்கீங்க. ரொம்ம்ப நன்றி படத்துக்கு!!
அப்படியா மிக்க மகிழ்ச்சி. இந்த செய்தியையும் பாருங்கள்.
அப்ப நீங்க போகலையா?
அபுஅஃப்ஸர் said...
தலீவா
எனக்கு ஒரு முன் பதிவு ப்ளீஸ், அதற்கான செலவையும் கொடுத்துடுங்க, அந்த அனுபவத்தை என்னோட பிளாக்குலே போடுறேன்.. போனா போகுதுனு படிச்சி தெரிஞ்சுக்கோங்க
ஆமாம் நானும் அபுவோட போறேன்...
ஷஃபிக்ஸ்/Suffix said...
//S.A. நவாஸுதீன் said...
4.5 million US$ - ரொம்ப கம்மியா இருக்கே.//
டிரைவருக்கு ஒரு மில்லியன் டிப்ஸ் கொடுத்துடலாம், டீ, காபி செலவு ஒரு அரை மில்லியன் வரும், கூட்டி கழிச்சு பார்த்தா உங்க பட்ஜட்டுக்கு சரியா வந்துடும்.
எங்க நவாஸூ பேசியே அவங்களை வழிக்கு கொண்டு வந்து ஓசியில பயணம் பண்ணிட்டு வந்துடுவார் என்ன வரும் போது கூட போன யாரும் உயிரோட வரமாட்டாங்க...
ஆமாவா?`
எங்க கிடைக்குது டிக்கெட்டுன்னு சொல்லவேயில்லை?
//தமிழரசி said...
அபுஅஃப்ஸர் said...
தலீவா
எனக்கு ஒரு முன் பதிவு ப்ளீஸ், அதற்கான செலவையும் கொடுத்துடுங்க, அந்த அனுபவத்தை என்னோட பிளாக்குலே போடுறேன்.. போனா போகுதுனு படிச்சி தெரிஞ்சுக்கோங்க
ஆமாம் நானும் அபுவோட போறேன்...//
உங்களுக்கும் வின்டோ சீட்டா, அப்போ பூவா தலையா போட்டு பார்க்கணும், யாராவது ஒருத்தர் ஜன்னலுக்கு வெளியே உக்காந்து தான் வரணும்.
// தமிழரசி said...
எங்க நவாஸூ பேசியே அவங்களை வழிக்கு கொண்டு வந்து ஓசியில பயணம் பண்ணிட்டு வந்துடுவார் என்ன வரும் போது கூட போன யாரும் உயிரோட வரமாட்டாங்க...//
என்ன செய்வது, நீங்க எழுத்தால், அவர் பேச்சால்.....
//பிரியமுடன்...வசந்த் said...
ஆமாவா?`
எங்க கிடைக்குது டிக்கெட்டுன்னு சொல்லவேயில்லை?//
ரொம்ப நல்லவங்களுக்கு டிக்கட் தேவையில்லையாமே!!
//
எல்லோரையும் ரசிய ராக்கெட் மூலம் மேல அனுப்ப போறாங்களாம்
//
மேலேன்னா எங்கேப்பா எனக்கு ரொம்ப பயமா இருக்கு :))
நல்ல தகவல்தான் பகிர்வுக்கு மிக்க நன்றி ஷஃபி!
சரி சரி எனக்கும் டிக்கெட் சேர்த்து போடுங்க!
நானும் போய் பார்த்துட்டு வரேன்!
RAMYA said...
//
எல்லோரையும் ரசிய ராக்கெட் மூலம் மேல அனுப்ப போறாங்களாம்
//
மேலேன்னா எங்கேப்பா எனக்கு ரொம்ப பயமா இருக்கு :))
டிக்கட் வாங்கியது மாதிரில ரொம்ப பயப்படுறீங்க. மேல போய் பார்த்துக்குவோம்
//RAMYA said...
சரி சரி எனக்கும் டிக்கெட் சேர்த்து போடுங்க!
நானும் போய் பார்த்துட்டு வரேன்!//
உங்களுக்கு வின்டோ சீட்டா, ஓ.கே. ரைட்டு.
நல்லாத்தேன் இருக்கு ...
சரி தூங்கப்போறேன் கனவுல வருதா பாக்குறேன் ...
நல்ல பகிர்வு நன்றி :-)
Sounds interesting...
//மூனு நாள் வேணாம், ஒரு நாளைக்கு மாத்திரம் என்னைய கூட்டிட்டு போய் வந்துடுங்களேன்னு சொன்னா அது நடக்காது, இது என்ன தஞ்சாவூர் பஸ் ஸ்டான்டு பக்கத்திலேயா இருக்கு உங்க இஷடத்துக்கு போய் வர? //
ஹா ஹா
நல்ல சூப்பரனா தகவல்.
ஆனால் எனக்கு வின்டோ சீட் கொடுத்தாலும் நான் வரமாட்டேன், யாரெல்லாம் போறீஙக்ளோ போய் வந்து சொல்லுஙக்ள். கேடுக்குறேன்.
என்னப்பா இது 4.5 மில்லியன் டாலாரா
என்ன 4.5 மில்லியன் டாலராஎல்லாம் போய் விட்டு வரும் போது அப்படியே திருப்பதியில இரங்கி ஒரு மொட்டை போட்டு கொண்டு வந்துடுஙக
//நட்புடன் ஜமால் said...
நல்லாத்தேன் இருக்கு ...
சரி தூங்கப்போறேன் கனவுல வருதா பாக்குறேன் //
அது சரி, கனவில வந்துச்சா?
நன்றி சிங்கக்குட்டி
நன்றி Malar Gandhi
//Jaleela said...
என்ன 4.5 மில்லியன் டாலராஎல்லாம் போய் விட்டு வரும் போது அப்படியே திருப்பதியில இரங்கி ஒரு மொட்டை போட்டு கொண்டு வந்துடுஙக//
ஆமா அது இலவசம்!!
super thriling experience :-)
ஏதோ நாமே போய் வந்த மாதிரி ரசித்து படிக்க வைத்த பதிவு!
ஷஃபி ரொம்ப நாளாச்சு பார்த்து...நலமா? உடல் நலம் நன்றாக உள்ளதா? குழந்தைகள் மற்றும் மனைவி நலமா???
ஹை
வானத்தை சுற்றிப்பார்கப்போறேன்
வண்ணமாய் வாழ்ந்துபார்க்கபோறேன் ஓசியில் டிக்கெட்டெடுத்து தந்தா
உங்கள் பெயரை ஒரு ஓரத்தில் பதிந்துவிட்டு வாரேன்...
[ஷஃபி.டிக்கட் பிரியாஃப் சார்ச்தானே..]
நல்லதகவல்கள்...
என்னது உடம்பு சரியில்லையா அதான் அடிக்கடி வருகிறதில்லையா
உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள்
வீட்டில் அனைவருக்கும் சலாம் சொல்லுங்கள்..
ஷஃபிக்ஸ் எப்படி இருக்கீங்க, ரொம்ப நாளா பதிவு இல்லை உடம்பு முடியலையா? அல்லா லேசாக்குவான்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஈத் அல் அத்ஹா வாழ்த்துக்கள்.
ஈத் முபாரக்!!
ப்ரதர் உடம்பு சரியில்லையா?இப்போ எப்படியிருக்கு.விரைவில் குணம்பெற பிரார்த்திக்கிறேன்.
அதான் உங்களைக் காணாமா?நீங்க ஊருக்கு போய்விட்டீர்கள் என்று நினைத்துவிட்டேன்...
நன்றி உழவரே
நன்றி சுமஜ்லா
நன்றி மலிக்கா
நன்றி ஜலீலா
நன்றி Mrs. மேனகாசத்யா
Medical Check upக்காக ஒரு வாரம் இந்தியா சென்றிருந்தேன், இறைவன் உதவியால் தற்பொழுது நலமாக இருக்கின்றேன்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஈத் அல் அத்ஹா வாழ்த்துக்கள்.
nice information,sir
//பாத்திமா ஜொஹ்ரா said...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஈத் அல் அத்ஹா வாழ்த்துக்கள்.
nice information,sir//
நன்றி சகோதரி, உங்களுக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள்
Post a Comment