மூன்று நாளைக்கு முன்னாடி, கேஸ் சிலின்டருக்கு வீல் உள்ள ஸ்டான்டு வாஙகனும்னு என் மேல இறக்கப்பட்டு தங்கமணி சொல்ல, (ஆமாங்க இல்லாட்டி ஹாலில் இருந்து, கிச்சன் வரை உருட்டியோ, தள்ளியோ கொண்டு போய் வைக்கனும், குடும்பத்தலைவன்னா சும்மாவா), ஒரு கடைக்கு போய் அவங்களே வாங்கி வந்துட்டாங்க, கடைல இரண்டு விதமான ஸ்டான்ட் வச்சு இருந்தாங்களாம், வழக்கம்போல எது விலை கூடுதலோ அதையே வாங்கியாச்சு, விலை கூடுதலா இருந்தா தரமும் கூடுதலா இருக்குமாமே? ஸ்டான்டுல வீல் இருக்குன்னு சொன்னவுடன், அதுக்கு கியர் இருக்கா, பிரேக் இருக்கா, மைலேஜ் எவ்வளவு, இது மாதிரி குசும்புத்தனமாவெல்லாம் கேட்கக்கூடாது.
வீட்டிற்க்கு வந்து சந்தோஷத்தில் சிலின்டர தூக்கி ஸ்டான்டு மேல வச்சதுதான் தாமதம், "கிளிக்கு" "கடக்" சத்தம், ஒரு பக்கம் வெல்டிங் உடைஞ்சிடுச்சு, அடக் கொடுமையே!!
உடனே நம்மளோட அலப்பரைய தொடங்கியாச்சு, வாய்ப்ப விடுவோமா, இது மாதிரி கூடுதல் டெக்னிக்கான மேட்டருக்கு என்னோட டிஸ்கஸ் பண்ணாம ஏன் செலக்ட செஞ்சே, உலோகத்தில எத்தனை குவாலிட்டி இருக்கு, அவங்க என்ன உலோகத்தில இத செஞ்சாங்களோ, என்ன முறையில வெல்டிங் வச்சாங்களோ, ஒரு வழியா ஓவரா பில்டப் கொடுத்து, ஒரு ஸீன் போட்டாச்சுல்ல.
சரி இப்போ என்ன செய்வது, கடையில திருப்பி கொடுத்திட வேண்டியதுதான். அடுத்த நாள் அவங்க கொடுத்த அதே பையில் போட்டு, கொண்டு போய் கொடுத்து, நடந்ததை விபரமாக எடுத்துச் சொல்லியாச்சு, கடைக்காரரோ அதல்லாம் முடியாது, நீங்க கண்டபடி இழுத்துருப்பிங்க அதனால தான் உடஞ்சிடுச்சு, விடுவோமா ஸ்டாண்டோட வீல பாருங்க, அதுல ஏதாச்சும் அழுக்கு இருக்கா, நாங்க இழுத்து இருந்தா அது அழுக்கா இருக்கும்ல (அடடா என்ன ஒரு வேலிட் பாயின்ட்!!). கடைசியா, வழிக்கு வந்து, நான் இங்கே வேலை செய்கிறவன் தான், முதலாளி ஒரு மணி நேரம் கழிச்சு வருவார், அப்பொ வந்து பேசுங்கன்னார், இதுக்காக வந்து அலைஞ்சுக்கிட்டெல்லாம் இருக்க முடியாதுங்க, நீங்களே அவரிடம் எடுத்து சொல்லுங்க, நான் நாளைக்கு வருகிறேன், அப்படியும் அவர் மாற்றித் தர மறுத்தால், அவருக்கு கஸ்டமர் பற்றி அக்கறையில்லை, என்னை மாதிரி நல்ல கஸ்டமர இழக்க நேரிடும்னு சொல்லுங்க!!
அடுத்த நாள் வீட்டிலிருந்து போகும்போதே, என்ன வசனம் பேசுவது, பிரபல பதிவரா வேறு இருக்கோம், மரியாதைய காப்பாத்திக்கணும், இப்படி பல எண்ண் ஓட்டங்கள், ஒரு வழியா கடைக்கு வந்து, "சிலின்டர் வீலு எந்த ஆயி?" ஆங்..சாரே, புதிய ஸ்டான்டு, அந்த வெல்டிங் சரியில்லை, முதலாளி புதியதாயிட்டு கொடுக்கா வேண்டி பரஞ்சு",!!
அடடா மேட்டர் இப்படி பொசுக்குன்னு முடிஞ்சுருச்சே!!
டிஸ்கி : கடையோ, நிறுவனமோ, நுழையும் ஒவ்வொருவரும் வாடிக்கையாளரே, இன்று வாங்காவிட்டாலும், நாளை வந்து வாங்குவதற்க்கு வாய்ப்புக்கள் இருக்கு. உரிமையாளர்களே, பார்த்து நடத்துக்குங்க. வின்டோ ஷாப்பிங் வல்லுனர்களே, நீங்க நடத்துங்க!!