மூன்று நாளைக்கு முன்னாடி, கேஸ் சிலின்டருக்கு வீல் உள்ள ஸ்டான்டு வாஙகனும்னு என் மேல இறக்கப்பட்டு தங்கமணி சொல்ல, (ஆமாங்க இல்லாட்டி ஹாலில் இருந்து, கிச்சன் வரை உருட்டியோ, தள்ளியோ கொண்டு போய் வைக்கனும், குடும்பத்தலைவன்னா சும்மாவா), ஒரு கடைக்கு போய் அவங்களே வாங்கி வந்துட்டாங்க, கடைல இரண்டு விதமான ஸ்டான்ட் வச்சு இருந்தாங்களாம், வழக்கம்போல எது விலை கூடுதலோ அதையே வாங்கியாச்சு, விலை கூடுதலா இருந்தா தரமும் கூடுதலா இருக்குமாமே? ஸ்டான்டுல வீல் இருக்குன்னு சொன்னவுடன், அதுக்கு கியர் இருக்கா, பிரேக் இருக்கா, மைலேஜ் எவ்வளவு, இது மாதிரி குசும்புத்தனமாவெல்லாம் கேட்கக்கூடாது.
வீட்டிற்க்கு வந்து சந்தோஷத்தில் சிலின்டர தூக்கி ஸ்டான்டு மேல வச்சதுதான் தாமதம், "கிளிக்கு" "கடக்" சத்தம், ஒரு பக்கம் வெல்டிங் உடைஞ்சிடுச்சு, அடக் கொடுமையே!!
உடனே நம்மளோட அலப்பரைய தொடங்கியாச்சு, வாய்ப்ப விடுவோமா, இது மாதிரி கூடுதல் டெக்னிக்கான மேட்டருக்கு என்னோட டிஸ்கஸ் பண்ணாம ஏன் செலக்ட செஞ்சே, உலோகத்தில எத்தனை குவாலிட்டி இருக்கு, அவங்க என்ன உலோகத்தில இத செஞ்சாங்களோ, என்ன முறையில வெல்டிங் வச்சாங்களோ, ஒரு வழியா ஓவரா பில்டப் கொடுத்து, ஒரு ஸீன் போட்டாச்சுல்ல.
சரி இப்போ என்ன செய்வது, கடையில திருப்பி கொடுத்திட வேண்டியதுதான். அடுத்த நாள் அவங்க கொடுத்த அதே பையில் போட்டு, கொண்டு போய் கொடுத்து, நடந்ததை விபரமாக எடுத்துச் சொல்லியாச்சு, கடைக்காரரோ அதல்லாம் முடியாது, நீங்க கண்டபடி இழுத்துருப்பிங்க அதனால தான் உடஞ்சிடுச்சு, விடுவோமா ஸ்டாண்டோட வீல பாருங்க, அதுல ஏதாச்சும் அழுக்கு இருக்கா, நாங்க இழுத்து இருந்தா அது அழுக்கா இருக்கும்ல (அடடா என்ன ஒரு வேலிட் பாயின்ட்!!). கடைசியா, வழிக்கு வந்து, நான் இங்கே வேலை செய்கிறவன் தான், முதலாளி ஒரு மணி நேரம் கழிச்சு வருவார், அப்பொ வந்து பேசுங்கன்னார், இதுக்காக வந்து அலைஞ்சுக்கிட்டெல்லாம் இருக்க முடியாதுங்க, நீங்களே அவரிடம் எடுத்து சொல்லுங்க, நான் நாளைக்கு வருகிறேன், அப்படியும் அவர் மாற்றித் தர மறுத்தால், அவருக்கு கஸ்டமர் பற்றி அக்கறையில்லை, என்னை மாதிரி நல்ல கஸ்டமர இழக்க நேரிடும்னு சொல்லுங்க!!
அடுத்த நாள் வீட்டிலிருந்து போகும்போதே, என்ன வசனம் பேசுவது, பிரபல பதிவரா வேறு இருக்கோம், மரியாதைய காப்பாத்திக்கணும், இப்படி பல எண்ண் ஓட்டங்கள், ஒரு வழியா கடைக்கு வந்து, "சிலின்டர் வீலு எந்த ஆயி?" ஆங்..சாரே, புதிய ஸ்டான்டு, அந்த வெல்டிங் சரியில்லை, முதலாளி புதியதாயிட்டு கொடுக்கா வேண்டி பரஞ்சு",!!
அடடா மேட்டர் இப்படி பொசுக்குன்னு முடிஞ்சுருச்சே!!
டிஸ்கி : கடையோ, நிறுவனமோ, நுழையும் ஒவ்வொருவரும் வாடிக்கையாளரே, இன்று வாங்காவிட்டாலும், நாளை வந்து வாங்குவதற்க்கு வாய்ப்புக்கள் இருக்கு. உரிமையாளர்களே, பார்த்து நடத்துக்குங்க. வின்டோ ஷாப்பிங் வல்லுனர்களே, நீங்க நடத்துங்க!!
49 comments
;;))
// டிஸ்கி : கடையோ, நிறுவனமோ, நுழையும் ஒவ்வொருவரும் வாடிக்கையாளரே, இன்று வாங்காவிட்டாலும், நாளை வந்து வாங்குவதற்க்கு வாய்ப்புக்கள் இருக்கு. உரிமையாளர்களே, பார்த்து நடத்துக்குங்க. //
சரியாச் சொன்னீங்க. மேலும் ஒரு பொருள் வாங்கும் போது, அது சரியில்லை என்றால் திரும்பி கொண்டு கொடுத்து மாற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருப்பது பாராட்டத்தக்க விச்யம்.
எவ்வளவு கஷ்டப்பட்டு மலையாளத்துலே பேசி உங்களை தொந்தரவு பண்ணக்கூடாதுனு ஒரு வீட்டு உபயோகப்பொருள் வாங்கிவந்திருக்காங்க....
சரி சரி சான்ஸ் கிடைக்கும்போது சட்டைக்காலரை தூக்கிவிட்டுக்க வேண்டியதுதானே (ஆஅவ்வ்வ்வ்வ்)
//மேலும் ஒரு பொருள் வாங்கும் போது, அது சரியில்லை என்றால் திரும்பி கொண்டு கொடுத்து மாற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருப்பது பாராட்டத்தக்க விச்யம்//
ஹி ஹி இல்லேனா சப்பாத்தி கட்டை பறக்கும்
குறிச்சி வச்சி கிட்டேன்
//கடையோ, நிறுவனமோ, நுழையும் ஒவ்வொருவரும் வாடிக்கையாளரே, இன்று வாங்காவிட்டாலும், நாளை வந்து வாங்குவதற்க்கு வாய்ப்புக்கள் இருக்கு. உரிமையாளர்களே, பார்த்து நடத்துக்குங்க. //
நல்ல பகிர்வு
இப்போ எல்லாருக்கும் பிடிச்சது,விண்டோ ஷாபிங்க்தான்.(economic crisis)
அங்கு மலையாளத்தில் வேறு இரண்டு வார்த்தை எடுத்து விட்டு வங்கி வந்தீங்க...ம்ம்ம்ம்ம்
ஹா ஹா சரியான பகிர்வு, நல்ல தகவல்
//வின்டோ ஷாப்பிங் வல்லுனர்களே, நீங்க நடத்துங்க!! //
இந்த வரிகள் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ...ஏதோ என்னைய பாத்து சொல்ற மாதிரி ஃபீல் ஆவுது பாருங்க..
அந்த வெல்டிங் சரியில்லை, முதலாளி புதியதாயிட்டு கொடுக்கா வேண்டி பரஞ்சு",!! அடடா மேட்டர் இப்படி பொசுக்குன்னு முடிஞ்சுருச்சே!!
இதுக்குத்தான் நேத்து போன்ல வீல் வீல்னு கத்துனீங்களா?
// ஜீவன் said...
;;))//
நன்றி நண்பரே முதல் வருகைக்கும், கருத்துக்கும்.
//இராகவன் நைஜிரியா said...
// டிஸ்கி : கடையோ, நிறுவனமோ, நுழையும் ஒவ்வொருவரும் வாடிக்கையாளரே, இன்று வாங்காவிட்டாலும், நாளை வந்து வாங்குவதற்க்கு வாய்ப்புக்கள் இருக்கு. உரிமையாளர்களே, பார்த்து நடத்துக்குங்க. //
சரியாச் சொன்னீங்க. மேலும் ஒரு பொருள் வாங்கும் போது, அது சரியில்லை என்றால் திரும்பி கொண்டு கொடுத்து மாற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருப்பது பாராட்டத்தக்க விச்யம்.//
நன்றி அண்ணா, வாங்கிய பொருளின் மதிப்பு சிறிய பைசாவாக இருந்தாலும், வாடிக்கையாளர் என்ற உரிமையை விட்டுக் கொடுக்க முடியுமா!!
//அபுஅஃப்ஸர் said...
எவ்வளவு கஷ்டப்பட்டு மலையாளத்துலே பேசி உங்களை தொந்தரவு பண்ணக்கூடாதுனு ஒரு வீட்டு உபயோகப்பொருள் வாங்கிவந்திருக்காங்க....
சரி சரி சான்ஸ் கிடைக்கும்போது சட்டைக்காலரை தூக்கிவிட்டுக்க வேண்டியதுதானே (ஆஅவ்வ்வ்வ்வ்)//
காலர தூக்கி விடலாம்னு பார்த்தா, நான் அப்போ ரவுன்ட் நெக் டீஷர்ட் போட்டிருந்தேன்ப்பா
நல்ல பகிர்வு, நல்ல தகவலுக்கு நன்றி
//அபுஅஃப்ஸர் said...
//மேலும் ஒரு பொருள் வாங்கும் போது, அது சரியில்லை என்றால் திரும்பி கொண்டு கொடுத்து மாற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருப்பது பாராட்டத்தக்க விச்யம்//
ஹி ஹி இல்லேனா சப்பாத்தி கட்டை பறக்கும்//
முன்னே மாதிரி பயப்படும்படியான மரத்தினாலான சப்பாத்திக் கட்டைகள் தற்பொழுது இல்லை, சைனாக்காரர்கள் உதவியால் மிக இலேசான பிளாஸ்டிக் கட்டைகள் தான் பறந்து வருது, தாங்கிக்கலாம் அபூ!! ஹீ..ஹீ
//நசரேயன் said...
குறிச்சி வச்சி கிட்டேன்//
முதல் வருகைக்கு நன்றி நண்பரே, அடிக்கடி வாங்க.
//தியாவின் பேனா said...
//கடையோ, நிறுவனமோ, நுழையும் ஒவ்வொருவரும் வாடிக்கையாளரே, இன்று வாங்காவிட்டாலும், நாளை வந்து வாங்குவதற்க்கு வாய்ப்புக்கள் இருக்கு. உரிமையாளர்களே, பார்த்து நடத்துக்குங்க. //
நல்ல பகிர்வு//
நன்றி தியா
//PEACE TRAIN said...
இப்போ எல்லாருக்கும் பிடிச்சது,விண்டோ ஷாபிங்க்தான்.(economic crisis)//
ஆமாம் மாப்ள், சில பேருக்கு முக்கியமான ஹாபியே இது தான் (எங்கள் பகுதிகளில்)!!
//Jaleela said...
அங்கு மலையாளத்தில் வேறு இரண்டு வார்த்தை எடுத்து விட்டு வங்கி வந்தீங்க...ம்ம்ம்ம்ம்
ஹா ஹா சரியான பகிர்வு, நல்ல தகவல்//
எங்கள மாதிரி குடும்பத்தலைவர்களுக்கு உபயோகமான சாதணங்களில் இந்த ஸ்டான்டும் ஒன்று
//அ.மு.செய்யது said...
//வின்டோ ஷாப்பிங் வல்லுனர்களே, நீங்க நடத்துங்க!! //
இந்த வரிகள் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ...ஏதோ என்னைய பாத்து சொல்ற மாதிரி ஃபீல் ஆவுது பாருங்க..//
புனேவில் நிறைய ஷாப்பிங் மால்ஸ் இருக்கா செய்யது? இங்கே ஜித்தாவில் ஷாப்பிங் மால்ஸ் தான் எங்கு பார்த்தாலும்!!
//அன்புடன் மலிக்கா said...
நல்ல பகிர்வு, நல்ல தகவலுக்கு நன்றி//
நன்றிங்க
//S.A. நவாஸுதீன் said...
அந்த வெல்டிங் சரியில்லை, முதலாளி புதியதாயிட்டு கொடுக்கா வேண்டி பரஞ்சு",!! அடடா மேட்டர் இப்படி பொசுக்குன்னு முடிஞ்சுருச்சே!!
இதுக்குத்தான் நேத்து போன்ல வீல் வீல்னு கத்துனீங்களா?//
ஆமாம் தல, வீல்னா வீல் வீல்னு தான் கத்தனும், காச் மூச்னு கத்த முடியாதே.
கஸ்டமர் இஸ் அவர் பாஸ். குட் மெசேஜ்
//அந்த வெல்டிங் சரியில்லை, முதலாளி புதியதாயிட்டு கொடுக்கா வேண்டி பரஞ்சு",!! அடடா மேட்டர் இப்படி பொசுக்குன்னு முடிஞ்சுருச்சே!!
இதுக்குத்தான் நேத்து போன்ல வீல் வீல்னு கத்துனீங்களா?// ஹா ஹா
நல்ல பகிர்வு!!
// " உழவன் " " Uzhavan " said...
கஸ்டமர் இஸ் அவர் பாஸ். குட் மெசேஜ்//
Yess Boss!!
Mrs.Menagasathia said...
//அந்த வெல்டிங் சரியில்லை, முதலாளி புதியதாயிட்டு கொடுக்கா வேண்டி பரஞ்சு",!! அடடா மேட்டர் இப்படி பொசுக்குன்னு முடிஞ்சுருச்சே!!
இதுக்குத்தான் நேத்து போன்ல வீல் வீல்னு கத்துனீங்களா?// ஹா ஹா
நல்ல பகிர்வு!!//
நல்லா சிரிங்க ...
நல்ல பதிவு..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. இறைவனின் அருளால் அனைத்து நன்மைகளும் பெற்று நீண்டு வாழ வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஷஃபி!!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
நன்றி திருமதி பாய்ஜா
நன்றி திருமதி மேனகா
நன்றி உழ்வர் நண்பரே
உங்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஷ்ஃபிக்ஸ்..
நல்ல பகிர்வு.
எதார்த்த பதிவு...சின்ன மெஸேஜ் வியாபாரிகளுக்கு.....
ஆமா இப்படி கஸ்டமர்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் அரிது என்று நினைக்கிறேன் ....ம்ம்ம்ம் கடைசி வரை வீரத்தை காட்ட வாய்ப்பே வரலை போல.......
ஷஃபிக்ஸ்/Suffix said...
//இராகவன் நைஜிரியா said...
// டிஸ்கி : கடையோ, நிறுவனமோ, நுழையும் ஒவ்வொருவரும் வாடிக்கையாளரே, இன்று வாங்காவிட்டாலும், நாளை வந்து வாங்குவதற்க்கு வாய்ப்புக்கள் இருக்கு. உரிமையாளர்களே, பார்த்து நடத்துக்குங்க. //
சரியாச் சொன்னீங்க. மேலும் ஒரு பொருள் வாங்கும் போது, அது சரியில்லை என்றால் திரும்பி கொண்டு கொடுத்து மாற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருப்பது பாராட்டத்தக்க விச்யம்.//
நன்றி அண்ணா, வாங்கிய பொருளின் மதிப்பு சிறிய பைசாவாக இருந்தாலும், வாடிக்கையாளர் என்ற உரிமையை விட்டுக் கொடுக்க முடியுமா!!
enna mathri aal ketta vanthu irunthegana thernji irukum
நல்லா குடுக்குறாங்கப்பா டீட்டெய்லு
-----------
டிஸ்கி: நலம்.
//Geetha Achal said...
உங்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஷ்ஃபிக்ஸ்..
நல்ல பகிர்வு//
நன்றி கீதா
//தமிழரசி said...
எதார்த்த பதிவு...சின்ன மெஸேஜ் வியாபாரிகளுக்கு.....
ஆமா இப்படி கஸ்டமர்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் அரிது என்று நினைக்கிறேன் ....ம்ம்ம்ம் கடைசி வரை வீரத்தை காட்ட வாய்ப்பே வரலை போல.......//
ஆமா உங்க வீட்ல இந்த ஸ்டான்ட் இருக்கா?
//gayathri said...
ஷஃபிக்ஸ்/Suffix said...
//இராகவன் நைஜிரியா said...
// டிஸ்கி : கடையோ, நிறுவனமோ, நுழையும் ஒவ்வொருவரும் வாடிக்கையாளரே, இன்று வாங்காவிட்டாலும், நாளை வந்து வாங்குவதற்க்கு வாய்ப்புக்கள் இருக்கு. உரிமையாளர்களே, பார்த்து நடத்துக்குங்க. //
சரியாச் சொன்னீங்க. மேலும் ஒரு பொருள் வாங்கும் போது, அது சரியில்லை என்றால் திரும்பி கொண்டு கொடுத்து மாற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருப்பது பாராட்டத்தக்க விச்யம்.//
நன்றி அண்ணா, வாங்கிய பொருளின் மதிப்பு சிறிய பைசாவாக இருந்தாலும், வாடிக்கையாளர் என்ற உரிமையை விட்டுக் கொடுக்க முடியுமா!!
enna mathri aal ketta vanthu irunthegana thernji irukum//
என்ன செய்வீங்க, கவிதை ஏதாச்சும் பாடிவிடுவீங்களோ?
//நட்புடன் ஜமால் said...
நல்லா குடுக்குறாங்கப்பா டீட்டெய்லு
-----------
டிஸ்கி: நலம்//
Stand..Understand...ஏதோ Relationship இருக்கு ஜமால்
நல்ல பதிவு :-))
சூப்பரு.. ஒரு ஸ்டாண்டு வாங்குறதுக்கே இவ்ளோ அலப்பறையா..
என்ன கடைக்கு போகும்போதே இத இடுகையா எப்படி எழுதுறதுன்னு டயலாக் எல்லாம் யோசிச்சுகிட்டே போனிங்களா..
நல்ல பதிவும் பகிர்வும் நண்பரே. ரமதான் பெருநாள் வாழ்த்துக்கள் சபி!
Dear Suffix,
How is Prefix? இஃகிஃகி!
//சிங்கக்குட்டி said...
நல்ல பதிவு :-))//
நன்றி சிங்கக் குட்டி!!
//सुREஷ் कुMAர் said...
சூப்பரு.. ஒரு ஸ்டாண்டு வாங்குறதுக்கே இவ்ளோ அலப்பறையா..
என்ன கடைக்கு போகும்போதே இத இடுகையா எப்படி எழுதுறதுன்னு டயலாக் எல்லாம் யோசிச்சுகிட்டே போனிங்களா..//
வாங்க சுரேஷ், இரண்டு ரூபாய்க்கு ஹேர் பின் வாங்குறதக்கு உள்ள அலப்பறைய காட்டிலும் இது குறைவு தான்!!
//பா.ராஜாராம் said...
நல்ல பதிவும் பகிர்வும் நண்பரே. ரமதான் பெருநாள் வாழ்த்துக்கள் சபி!//
நன்றி பா.ரா. அண்ணே, இம்முறை சந்திக்க முடியாமல் போய்விட்டது, அடுத்த முறை இறைவன் நாடினால் சந்திப்போம், நம்ம பட்டறை பக்கம் நேரம் கிடைக்கும்போது வந்து போங்க, அப்பப்போ ஏதாச்சும் போட்டு வைப்போம்.
//பழமைபேசி said...
Dear Suffix,
How is Prefix? இஃகிஃகி!//
வாங்க Dear Old Talker,
பழமை பேசுவதுன்னா அளவுளாவுவதுன்னு நீங்க கொடுத்த இன்ட்ரோவிலருந்து தெரிஞசுக்கிட்டேன். முதல் வருகைக்கு நன்றிங்கோ!!
wish u a happy eid
சப்பை மேட்டரை கூட சுவையாக எழுதுவது ஒரு தனி கலை தான்...
//SUMAZLA/சுமஜ்லா said...
சப்பை மேட்டரை கூட சுவையாக எழுதுவது ஒரு தனி கலை தான்...//
வாங்க, ரொம்ப பிஸி ஆயிட்டிங்க, க்ளாஸ் லீடர் வேறு, பொறுப்புக்கள் அதிகமா இருக்கும்!!
Post a Comment