அப்பப்பா நட்புக்களின் தொடர் இடுகைக்கான அழைப்புகள் எங்கு பார்த்தாலும், புதிது புதிதாக, மகிழ்ச்சியாக இருக்கிறது, எல்லோருடைய நல்ல மனங்களையும் அறியமுடிகிறது, திருமதி. மேனகா சதியா இந்த தேவதையை எனக்கு அனுப்பி இருக்கிறார்கள். இதோ எனது பத்து ஆசைகளை பகிர்ந்து கொள்கிறேன், இவை யாவுமே நம்மால் முயற்சி செய்து நிறைவேற்றக்கூடியவைகளே, ஆகவே தேவதைக்கு சிறிது ஓய்வு கொடுத்து, நாம் சற்று சிந்திப்போமே!!
- வேற்றுமையில் ஒற்றுமை காணும் மனப்பக்குவம், நமது நட்புக்களிடம் நான் கண்டு மகிழும் அழகிய குணம், அது அனைவரிடத்திலும் இருந்தால் உலகம் அமைதி பூங்கா தான்.
- எனது பள்ளிப்பருவம் திரும்ப கிடைத்தால் மகிழ்ச்சி!! கிடைக்காது, ஆனால் இன்றைய பள்ளிப்பருவத்தில் இருக்கும் சிறார்கள் இந்த வாய்ப்பு கிடைக்காததற்க்கு வறுமை தான் பெரும்பாலும் காரணம், அந்த வறுமை ஒழிய வேண்டும்.
- மழை வந்தால், புயல், வெள்ளம் என திண்டாட்டம், இல்லையெனில் வறட்சி, பஞ்சம், இவற்றை உண்மையிலேயே புரிந்து கொண்ட அரசாங்கமும், இவற்றை சமாளிக்கக் கூடிய எதிர் நோக்கத்திட்டங்கள் கொண்ட மனிதர்களும்.
- புகை, மது, போதை இவை கேடு எனத் தெரிந்தும் உபயோகிப்பவர்கள், இந்த இடுகையை படித்ததும் கொடிய இந்த பழக்கங்களை விட்டு விட வேண்டும்.
- தற்பெருமை கொள்ளும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் வரவில்லை, நாளைக்கு பெரிய ஆளாகி விட்டால், அப்படி ஒன்று வேண்டாம் ஒரு பொழுதும்.
- கண்ட இடத்தில் குப்பை கொட்டுவது, எச்சில் துப்புவது, இது போன்ற பொது இடங்களை நாசமாக்குவோர் இப்பொழுதே திருந்த வேண்டும்.
- வேலை வாய்ப்பு பெருக வேண்டும், கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதவர்களும், வாய்ப்பிற்க்காக காத்திராது, வாய்ப்பை உருவாக்கி உழைப்பவர்கள் நிறைந்த சமுதாயம் வேண்டும்.
- காசுக்காக மட்டும் என்று ஆகிப்போன கல்வி, அதனை முன்னிறுத்தி பட்டாளமாய் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், சிறிது சிந்திக்க வேண்டும்.
- நேற்று வரை சாதாரண மனிதர்கள், அது ஏனோ அரசியல் அரியனை ஏறியவுடன் மனமாற்றம்!! பணப்புழக்கம் காரணமோ? அவர்கள் சிறிது மாறி நம்மையும் சிந்திக்க வேண்டும்.
- பிரச்னைகள் எதுவானாலும் நமக்குள் பேசியே தீர்போமே, எதற்க்கு மன உளைச்சல்? நல்ல நட்புக்கள்/உறவுகள் என்றும் தொடர வேண்டும்.
36 comments
ஷஃபி உங்களின் பொது நலம், சமூக சேவை, அக்கறை எல்லாம் நன்றாக பிரதிபலிக்கிறது.
தேவதைக்கு ஒய்வு கொடுத்துவிட்டு என்ன அழகா சிந்திக்கத்தக்க எழுதிருக்கிங்க. உங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறத்தக்கவை.அதில் அக்கறை,பொதுநலம்,சமூக சேவை எல்லாம் தெரிகிறது.அருமை சகோதரரே.இயன்றவரை உங்களின் ஆசைகளை நிறைவேற்றுவோம்.
CLASS PERFORMANCE...
ஆஹா.. ஷஃபி பிரமாதம். சமூகத்தின் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை நன்கு வெளிப் படுத்தியுள்ளீர்கள்.
// காசுக்காக மட்டும் என்று ஆகிப்போன கல்வி, அதனை முன்னிறுத்தி பட்டாளமாய் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், சிறிது சிந்திக்க வேண்டும்.//
இது ரொம்ப முக்கியமான சிந்தனையாக நான் கருதுகின்றேன்.
எல்லாம் சுய நலமில்லாத பொது நல எண்ணங்கள்..தேவதையே வியக்கும் அளவு.....
ஆம் இவை யாவும் சாத்தியக்கூறே... நம்மால் இயன்றவையே.....ஆனால் நாம் தான் இதை கையிலெடுக்க தயங்குகிறோம்...
கலக்குங்க ஷஃபி கலக்குங்க :-)
எதையும் விட்டு வைக்காமல் எல்லா சிறந்த நோக்கங்களே இங்கு கையாளப் பட்டு இருக்கிறது...பத்தாவது வரம் பண்பட்ட தங்கள் நல்ல உள்ளத்துக்கும் நட்புக்கும் சுற்றத்துக்கும் நீங்கள் தரும் முக்கியத்துவம் தெரிகிறது... இவையாவும் நடந்தால் தேவதைக்கு மட்டுமல்ல தெய்வத்துக்கும் ஓய்வு தான்..சிறப்பான பணி ஷஃபி
அனைத்தும் நல்ல ஆசைகள் தான்.. அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்
எல்லா பொது நல வரன்களும் அருமை.
எல்லா பொது நல வரன்களும் அருமை.
நல்லதொரு சிந்தனை ஷஃபி.
பலர் சொல்லி விட்டதை போல
பொது நலம் கூடிய சிந்தனை அழகு.
பாராட்டுகள் சஃபி
// தமிழரசி said...
எல்லாம் சுய நலமில்லாத பொது நல எண்ணங்கள்..தேவதையே வியக்கும் அளவு.....//
நானும் ரிப்பீட்டாய் சொல்கிறேன்...
ஷஃபி ,சமூக சேவகியாக உங்களை உங்கள் படைப்பு மூலம் வெளிக்காட்டுகிறீர்கள்
பொதுநல சிந்தனை அதிகமிருக்கு ஷஃபிக்ஸ், ஒரு கட்சி ஆரம்பிச்சா என்னா? அரசியல்லே இல்லாமல் பொது நல தொண்டு செய்வதற்கு நிறைய இடைஞ்சல்கள் வரும்
உமது வேண்டல்கள் எமது வேண்டல்
தொடருங்க
ஏன் இப்படி ஒரு செயற்கைப் பதிவு ??
உங்களது வரங்களை நல்ல மற்றும் பொதுநல அக்கரையுடன்..பயன்படுத்துகிறீர்கள்...
சூபெர் மாப்ளே.
பொதுநல அக்கரை நன்று:
தாங்களின் வரங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்
//S.A. நவாஸுதீன் said...
ஷஃபி உங்களின் பொது நலம், சமூக சேவை, அக்கறை எல்லாம் நன்றாக பிரதிபலிக்கிறது.//
நன்றி நவாஸ்
//Mrs.Menagasathia said...
தேவதைக்கு ஒய்வு கொடுத்துவிட்டு என்ன அழகா சிந்திக்கத்தக்க எழுதிருக்கிங்க. உங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறத்தக்கவை.அதில் அக்கறை,பொதுநலம்,சமூக சேவை எல்லாம் தெரிகிறது.அருமை சகோதரரே.இயன்றவரை உங்களின் ஆசைகளை நிறைவேற்றுவோம்.//
எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள தாங்கள் அளித்த வாய்ப்பிற்க்கு நன்றி
//தமிழரசி said...
CLASS PERFORMANCE...//
நன்றி அரசி
//இராகவன் நைஜிரியா said...
ஆஹா.. ஷஃபி பிரமாதம். சமூகத்தின் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை நன்கு வெளிப் படுத்தியுள்ளீர்கள்.
// காசுக்காக மட்டும் என்று ஆகிப்போன கல்வி, அதனை முன்னிறுத்தி பட்டாளமாய் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், சிறிது சிந்திக்க வேண்டும்.//
இது ரொம்ப முக்கியமான சிந்தனையாக நான் கருதுகின்றேன்.//
நன்றி அண்ணா, இந்த சமூகத்தில் தானே நாமும் இருக்கின்றோம், அதனால தான் சிறிய அக்கறை.
நன்றி சிங்கக்குட்டி
நன்றி பாய்ஜா
நன்றி ஜலீலா
நன்றி ஜமால் (We missed you Jamal)
நன்றி வஸ்ந்த்
தியாவின் பேனா said...
ஷஃபி ,சமூக சேவகியாக உங்களை உங்கள் படைப்பு மூலம் வெளிக்காட்டுகிறீர்கள்//
சேவகன் எல்லாம் இல்லைங்க, தனி மனிதனா நம்மாள சில நல்லவற்றை செய்ய முடியுமென்பதை பகிர்ந்து கொண்டேன். நன்றி தியா.
//அபுஅஃப்ஸர் said...
பொதுநல சிந்தனை அதிகமிருக்கு ஷஃபிக்ஸ், ஒரு கட்சி ஆரம்பிச்சா என்னா? அரசியல்லே இல்லாமல் பொது நல தொண்டு செய்வதற்கு நிறைய இடைஞ்சல்கள் வரும்
உமது வேண்டல்கள் எமது வேண்டல்
தொடருங்க//
வேணாம்ப்பா அரசியல், நீங்க வேணும்னா ஒரு கட்சி ஆரம்பியுங்க, நான் வெளியில இருந்து ஆதரவு தருகிறேன்!! நன்றி அபூ
//அ.மு.செய்யது said...
ஏன் இப்படி ஒரு செயற்கைப் பதிவு ??//
ஆசைகள் இயற்கையானதே செய்யது, பதிவு செயற்கையாகிப் போய்விட்டதோ? இருக்கக்கூடாதே!!
//அதிரை அபூபக்கர் said...
உங்களது வரங்களை நல்ல மற்றும் பொதுநல அக்கரையுடன்..பயன்படுத்துகிறீர்கள்...//
நன்றி அபூ!
// PEACE TRAIN said...
சூபெர் மாப்ளே.//
அப்பா அமைதி ரயில் புது மாப்ள, இப்போ ஈமெயில் கொடுக்கப் போறீங்களா, இல்லைன்னா நான் ரயிலேறி அங்கே வந்துடவா, நானும் பல கோணங்கள்ள யோசிச்சுட்டு பார்த்துட்டேன், யாருன்னு புடிபட மாட்டேங்குது!!
//அன்புடன் மலிக்கா said...
பொதுநல அக்கரை நன்று:
தாங்களின் வரங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்//
நன்றி மல்லிக்கா
ஷஃபிக்ஸ் annakulla ivalavu periya manasa super anna
//gayathri said...
ஷஃபிக்ஸ் annakulla ivalavu periya manasa super anna//
வாம்மா தங்கை காயத்ரி!!
நல்ல சிந்தனைகள். சிந்தனைச் சிப்பி தான் நீங்கள்.
மாப்ள மெயில் அனுப்பி இருக்கேன்.
Post a Comment