"என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்கப்பா" இப்படி பலபேர் சொல்லி நாம் கேட்டிருக்கின்றோம். சொல்வது யாராகவோ இருக்கட்டும், இதில் நமது பொறுப்பு என்னவென்பதை பற்றி இங்கே கொஞ்சம் புரிஞ்சுக்கலாமா? சமீபத்தில் Communication பற்றி படிக்கும்பபோது கிடைத்தவற்றை உங்க கூடவும் பகிர்ந்துக்கலாமேன்னு தோன்றியது.
வீட்டிலும் அலுவலகத்திலும் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரனமும் இது தான்.
"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பன்றே"ன்னு அலரி அப்புறம் ஐஸ் வைக்கும் வீட்டுக்காரர்.
"உங்க கிட்டேப்போய் இதை செய்ய சொன்னேனே", என்னய்ய சொல்லனும் - இப்படி இடித்துரைக்கும் இல்லத்தரசி.
"என்னடா இப்படி ஒரு சில்லியான கேள்வி"ன்னு ஆச்சர்யப்படுத்தும் அப்பாக்கள்
இவுக எல்லோரும் இத கொஞ்சம் ஆழமா மேஞ்சுட்டு போங்க. Effective Communication க்கு சில காரணிகள்:
1. கவனித்துக் கேட்டல் (Listen)
பேசும்போது, அவங்க கண்ணைப் பார்த்து உங்க காதைக் கொடுத்து,கவனமா கேட்கனுமாம். "நீ ரொம்ப அப்ஸெட் ஆயிருக்கேன்னு எனக்கு நல்லா புரியுது, நீ என்ன சொல்ரேன்னும் எனக்கு புரியுது" இது மாதிரி சொல்வதன் மூலம் நீங்கள் கவனமாக கேட்கிறிர்கள் என்பது அவர்களுக்கு புரியும்.
2. மற்றவர்களின் உணர்வுகளை மதித்தல் (Empathy)
"டேய் மச்சான் இன்னக்கி மேனேஜர் பயங்கரமா ஏறிட்டார்டா, ரிப்போர்ட் கொடுக்க ஜஸ்ட் ஒரு மணி நேரம் தான், அதுக்கு போய்...." இப்படி ஒரு நனபர் வந்தார்னா, "அட போடா இதே ரோதனையா போச்சு நீயும், உன்னோட மேனேஜரும், நானா இருந்தா அப்பவே அந்தாள எட்டி உதைச்சுட்டு, வேற வேளைய பார்த்துட்டு போய் இருப்பே"ன்னு நீங்க சொன்னா சத்தியமா நீங்க மாறித்தான் ஆக வேண்டும்.
3. பொறுப்பேற்றல் (Be Responsible)
"சரி என்கிட்டே சொல்லிட்டியல்ல, நாம ரென்டு பேரும் நல்லா டிஸ்கஷன் பன்னுவோம், ஒன்னும் கவலைப்படாதே"...இப்படி ஒரு ஆருதல் கிடைத்தால் நிச்சயமா மற்றவர் சந்தோஷப்படுவார். அதை விட்டுட்டு "அச்ச்சோ... ரொம்ப சாரிப்பா" அத்தோட ஆளு எஸ்ஸ்ஸ்ஸ்ஸானா எப்படி இருக்கும்.
4. அடக்கம் அல்லது பணிவு (Be humble)
"இந்த மேட்டரெல்லாம் எனக்கு ஜுஜுபி" இது மாதிரி மேதாவித்தனத்தை கொஞ்சம் சுருட்டி வச்சுட்டு. உங்க LKG படிக்கர பொன்னு "அப்பா இன்னக்கி டீச்சர் என்னோட நோட்ல 5 ஸ்டார் போட்டாங்கப்பா"ன்னு சொன்னா நீங்க அவங்க லெவலுக்கு இறங்கி அதே குதூகலத்துடன் "அம்மாடியோவ் 5 ஸ்டார்,சூப்ப்ர்டா என் சமத்து"ன்னு உற்சாகப்படுத்த வேண்டும். அத விட்டுட்டு "சரி சரி, அது இருக்கட்டும் நாளைக்கு உள்ள ஹோம் வொர்க்கை போய் செய்"னு சொன்னால், அப்பாவை..அடப்பாவின்னு சொல்லத்தோனும்.
5. வார்த்தைகளை சிந்துமுன் சிந்தித்தல் (Be Thoughtful)
எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்றுவது மாதிரி, அவர் எது சொன்னாலும், "ஆமாம் அப்படித்தான்", "கரெக்ட்", "அவன விடக்கூடாது", அவரோடு சேர்ந்து நீங்களும் வசைமாரிப் பொழிய வேண்டாம். அவரை கொஞசம் அமைதிப்படுத்த முயற்சித்து, நீங்கள அதிகமாக பேசாமல், அவர் பேசுவதை கேட்டு, ப்ள்ஸ், மைனஸ் பாயின்ட்களை புரியவைத்து அப்புறம் என்ன செய்யலாம்னு தீர்மானிக்கலாம்.
ஒரு ரிப்பீட்டு:
*Listen* *Empathy* *Be Responsible* *Be Humble* *Thoughtful*
சந்தேகப்பேர்வழி Mr.Doubt என்ன கேட்கிரார்னா "இது எல்லாம் சொல்லித்தொலைச்சாத்தானே கரெக்ட்டா வொர்க் அவுட் ஆவும், எங்க வூட்டுக்காரவுக இந்த மாதிரி சிட்சுவேஷன்ல் மெளன மொழியிலய்யா பேசுராங்க" நான் என்ன செய்ய? ...என்ன செய்ய...மெளனம் தான் பதில்.
72 comments
உங்க கிட்டேப்போய் இதை செய்ய சொன்னேனே", என்னய்ய சொல்லனும் - இப்படி இடித்துரைக்கும் இல்லத்தரசி.
தனிமனித தாக்குதலா இது ????
எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்றுவது மாதிரி, அவர் எது சொன்னாலும், "ஆமாம் அப்படித்தான்", "கரெக்ட்", "அவன விடக்கூடாது", அவரோடு சேர்ந்து நீங்களும் வசைமாரிப் பொழிய வேண்டாம்.
சரிங்க இனி ஃபாலோ செய்துகிறேன்
ங்க வூட்டுக்காரவுக இந்த மாதிரி சிட்சுவேஷன்ல் மெளன மொழியிலய்யா பேசுராங்க" நான் என்ன செய்ய? ...என்ன செய்ய...மெளனம் தான் பதில்.
ஆம் வேறு வழி
//sakthi said...
உங்க கிட்டேப்போய் இதை செய்ய சொன்னேனே", என்னய்ய சொல்லனும் - இப்படி இடித்துரைக்கும் இல்லத்தரசி.
தனிமனித தாக்குதலா இது ????//
அப்படித்தானா?
//sakthi said...
ங்க வூட்டுக்காரவுக இந்த மாதிரி சிட்சுவேஷன்ல் மெளன மொழியிலய்யா பேசுராங்க" நான் என்ன செய்ய? ...என்ன செய்ய...மெளனம் தான் பதில்.
ஆம் வேறு வழி//
அது என்ன மொழியோ இருந்துவிட்டு போகட்டும், சமாதானமானால் சரி தான்.
எப்போங்க கருத்து கந்தசாமி ஆனீங்க
//"என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்கப்பா"//
என்னையும் தான் ஆஅவ்வ்வ்
//"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பன்றே"ன்னு அலரி அப்புறம் ஐஸ் வைக்கும் வீட்டுக்காரர்./
நடக்குதா... நடக்கட்டும் நடக்கட்டும்
//உங்க கிட்டேப்போய் இதை செய்ய சொன்னேனே", என்னய்ய சொல்லனும் - இப்படி இடித்துரைக்கும் இல்லத்தரசி."//
ஹா ஹா எப்படிங்க இப்படியெல்லாம்
எப்பவுமே இப்படிதானா இல்லே இப்படிதான் எப்பவுமெவா
//பேசும்போது, அவங்க கண்ணைப் பார்த்து உங்க காதைக் கொடுத்து,கவனமா கேட்கனுமாம்/
காதலியிடம் பேசும்போதா இல்லே மனைவியிடம் பேசும்போதா
//டேய் மச்சான் இன்னக்கி மேனேஜர் பயங்கரமா ஏறிட்டார்டா//
எதுலேங்கே ஏறுனாரு
மாடிப்படிலேயா?
உங்க தலைமேலா?
//அட போடா இதே ரோதனையா போச்சு நீயும், உன்னோட மேனேஜரும், நானா இருந்தா அப்பவே அந்தாள எட்டி உதைச்சுட்டு, வேற வேளைய பார்த்துட்டு போய் இருப்பே"//
அண்ணே இங்கே நிறைய பேரை உதைக்க வேண்டிருக்கு உங்க ஆப்பீஸ்லே ஒரு வேலை இருந்தா சொல்லுங்கோ உதச்சிட்டு அப்புறம் அங்கே வாரேன்
//"சரி என்கிட்டே சொல்லிட்டியல்ல, நாம ரென்டு பேரும் நல்லா டிஸ்கஷன் பன்னுவோம்,/\
எப்புடி கவுத்துறதுனா?
//எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்றுவது மாதிரி, /
எண்ணெய ஊத்துனா அனைந்துவிடும் தல
நீங்க ட்ரி பண்ணிப்பாத்தீங்களா
எரிகிற குத்துவிளக்குமேலே எண்ணெய ஊத்திப்பாருங்க
//மெளனம் தான் பதில்//
இதுவே பெரிய மேதாவித்தனம்
பிரச்சினைக்கும் சுமுக தீர்வு
ஹா ஹா ஹ
நல்ல கருத்தாய்வு தல
வாழ்த்துக்கள்
//அபுஅஃப்ஸர் said...
//"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பன்றே"ன்னு அலரி அப்புறம் ஐஸ் வைக்கும் வீட்டுக்காரர்./
நடக்குதா... நடக்கட்டும் நடக்கட்டும்//
அங்கே மட்டும் என்னவாம்
அபுஅஃப்ஸர் said...
//உங்க கிட்டேப்போய் இதை செய்ய சொன்னேனே", என்னய்ய சொல்லனும் - இப்படி இடித்துரைக்கும் இல்லத்தரசி."//
ஹா ஹா எப்படிங்க இப்படியெல்லாம்
எப்பவுமே இப்படிதானா இல்லே இப்படிதான் எப்பவுமெவா//
இத சொல்லும்போது ஆஸ்கர் விருது கொடுத்த சந்தோஷம் இருக்குமே அவுகளுக்கு!!
//அபுஅஃப்ஸர் said...
//பேசும்போது, அவங்க கண்ணைப் பார்த்து உங்க காதைக் கொடுத்து,கவனமா கேட்கனுமாம்/
காதலியிடம் பேசும்போதா இல்லே மனைவியிடம் பேசும்போதா//
இடம், பொருள், ஏவல் உங்களுக்குத் தெரியாதததா அபூ
//அபுஅஃப்ஸர் said...
//டேய் மச்சான் இன்னக்கி மேனேஜர் பயங்கரமா ஏறிட்டார்டா//
எதுலேங்கே ஏறுனாரு
மாடிப்படிலேயா?
உங்க தலைமேலா?//
எப்போதுமே நம் தலைமேலே தானே, அதுக்குதானே மேலாளர்னு வச்சிருக்காங்க
அபுஅஃப்ஸர் said...
//மெளனம் தான் பதில்//
இதுவே பெரிய மேதாவித்தனம்
பிரச்சினைக்கும் சுமுக தீர்வு
ஹா ஹா ஹ
நல்ல கருத்தாய்வு தல
வாழ்த்துக்கள்//
பல பிரச்னைகளுக்கு இது தான் நல்ல தீர்வு அபூ
5ந்தும் அருமை ஷபி.
நல்லா சொல்லியிருக்கீங்க
பயனுள்ள பதிவு !!
முதல் குறிப்பான "கவனிப்பு" முக்கியம் அமைச்சரே !!!
அபுஅஃப்ஸர் said...
//பேசும்போது, அவங்க கண்ணைப் பார்த்து உங்க காதைக் கொடுத்து,கவனமா கேட்கனுமாம்/
காதலியிடம் பேசும்போதா இல்லே மனைவியிடம் பேசும்போதா
//
அபு !! உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு !!
அபுஅஃப்ஸர் said...
//அட போடா இதே ரோதனையா போச்சு நீயும், உன்னோட மேனேஜரும், நானா இருந்தா அப்பவே அந்தாள எட்டி உதைச்சுட்டு, வேற வேளைய பார்த்துட்டு போய் இருப்பே"//
அண்ணே இங்கே நிறைய பேரை உதைக்க வேண்டிருக்கு உங்க ஆப்பீஸ்லே ஒரு வேலை இருந்தா சொல்லுங்கோ உதச்சிட்டு அப்புறம் அங்கே வாரேன்
அபு இந்த ஷஃபி ஒரு மார்கமா தான் இருக்காரு அவரை நம்பி அங்க யாரையும் உதைக்க வேணாம்..
அபுஅஃப்ஸர் said...
//"என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்கப்பா"//
என்னையும் தான் ஆஅவ்வ்வ்
அட என்னையும் தான்....
ஷஃபிக்ஸ் said...
//sakthi said...
உங்க கிட்டேப்போய் இதை செய்ய சொன்னேனே", என்னய்ய சொல்லனும் - இப்படி இடித்துரைக்கும் இல்லத்தரசி.
தனிமனித தாக்குதலா இது ????//
அப்படித்தானா?
அதான்பா நீங்க தினமும் வீட்டில வாங்கறீங்களே அது....
ஷஃபிக்ஸ் said...
அபுஅஃப்ஸர் said...
//உங்க கிட்டேப்போய் இதை செய்ய சொன்னேனே", என்னய்ய சொல்லனும் - இப்படி இடித்துரைக்கும் இல்லத்தரசி."//
ஹா ஹா எப்படிங்க இப்படியெல்லாம்
எப்பவுமே இப்படிதானா இல்லே இப்படிதான் எப்பவுமெவா//
இத சொல்லும்போது ஆஸ்கர் விருது கொடுத்த சந்தோஷம் இருக்குமே அவுகளுக்கு!!
ஆமா அப்படியே அல்லவாவும் இல்லை கொடுப்பீங்க...
அ.மு.செய்யது said...
பயனுள்ள பதிவு !!
முதல் குறிப்பான "கவனிப்பு" முக்கியம் அமைச்சரே !!!
அபுஅஃப்ஸர் said...
//பேசும்போது, அவங்க கண்ணைப் பார்த்து உங்க காதைக் கொடுத்து,கவனமா கேட்கனுமாம்/
காதலியிடம் பேசும்போதா இல்லே மனைவியிடம் பேசும்போதா
//
அபு !! உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு !!
ஆமா அனைவரும் ஃப்ளோ பண்ணவேண்டிய அப்ரோச்....
எப்போ இருந்து இப்படி அட்வைஸ் அம்புஜம் ஆனீங்க?!
எனக்கு அந்த ஜோக் ரொம்ப பிடிச்சது.
புரிஞ்சு போச்சு......
நீங்க யாரு சொன்னாலும் கேட்க்கமாட்டீங்கன்னும்
யாரையும் மதிக்க மாட்டேங்கன்னும்
பொறுப்பில்லாதவருன்னும்
அடங்கா பிடாரின்னும்
புரிஞ்சுபோச்சு சஃபி
குட் போஸ்ட் சஃபி
என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்கப்பா" இப்படி பலபேர் சொல்லி நாம் கேட்டிருக்கின்றோம்
\\
ஆமா ஆமா
"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பன்றே"ன்னு அலரி அப்புறம் ஐஸ் வைக்கும் வீட்டுக்காரர்.
\\
நல்ல அனுபவமோ அண்ணாக்கு
உங்க கிட்டேப்போய் இதை செய்ய சொன்னேனே", என்னய்ய சொல்லனும் - இப்படி இடித்துரைக்கும் இல்லத்தரசி."
\\
ஏன் செய்ய சொல்லனும் தேவையா
1. கவனித்துக் கேட்டல் (Listen)
பேசும்போது, அவங்க கண்ணைப் பார்த்து உங்க காதைக் கொடுத்து,கவனமா கேட்கனுமாம். "நீ ரொம்ப அப்ஸெட் ஆயிருக்கேன்னு எனக்கு நல்லா புரியுது, நீ என்ன சொல்ரேன்னும் எனக்கு புரியுது" இது மாதிரி சொல்வதன் மூலம் நீங்கள் கவனமாக கேட்கிறிர்கள் என்பது அவர்களுக்கு புரியும்.
\\
ஓஹோ அப்போ இப்படிதான் நமக்கு காது கேட்குதானு செக் பன்னுறாங்களா?
அபுஅஃப்ஸர் said...
//"என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்கப்பா"//
என்னையும் தான் ஆஅவ்வ்வ்
\\
அழாதீங்க அபு சொல்ல வேண்டியவஙககிட்ட சொல்லிடுறேன்
அபுஅஃப்ஸர் said...
//பேசும்போது, அவங்க கண்ணைப் பார்த்து உங்க காதைக் கொடுத்து,கவனமா கேட்கனுமாம்/
காதலியிடம் பேசும்போதா இல்லே மனைவியிடம் பேசும்போதா
\\
ரொம்ப சமத்தா கேள்வி கேட்குறீங்க
அபுஅஃப்ஸர் said...
//மெளனம் தான் பதில்//
இதுவே பெரிய மேதாவித்தனம்
பிரச்சினைக்கும் சுமுக தீர்வு
ஹா ஹா ஹ
நல்ல கருத்தாய்வு தல
வாழ்த்துக்கள்
\\
நானும் கூவிக்குறேன்
பிரியமுடன்.........வசந்த் said...
புரிஞ்சு போச்சு......
நீங்க யாரு சொன்னாலும் கேட்க்கமாட்டீங்கன்னும்
யாரையும் மதிக்க மாட்டேங்கன்னும்
பொறுப்பில்லாதவருன்னும்
அடங்கா பிடாரின்னும்
புரிஞ்சுபோச்சு சஃபி
குட் போஸ்ட் சஃபி
\\
ஹா ஹா ஹா ஏன் ஏன் ஏன் இப்படிலாம்?
38
39
40
//நட்புடன் ஜமால் said...
5ந்தும் அருமை ஷபி.
நல்லா சொல்லியிருக்கீங்க//
நன்றி ஜமால்
//அ.மு.செய்யது said...
பயனுள்ள பதிவு !!
முதல் குறிப்பான "கவனிப்பு" முக்கியம் அமைச்சரே !!!
அபுஅஃப்ஸர் said...
//பேசும்போது, அவங்க கண்ணைப் பார்த்து உங்க காதைக் கொடுத்து,கவனமா கேட்கனுமாம்/
காதலியிடம் பேசும்போதா இல்லே மனைவியிடம் பேசும்போதா
//
அபு !! உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு !!//
வாங்க செய்யது, இப்படி நல்ல பிள்ளயாட்டம் வந்து பின்னூட்டிட்டு போவனும், இல்லைனா எங்க கட்சி கொ.ப.செ, தமிழக்கா தக்க நடவடிக்கை எடுத்துருவாங்க, ஆமாம் சொல்லிப்புட்டேன்.
//தமிழரசி said...
அபுஅஃப்ஸர் said...
//அட போடா இதே ரோதனையா போச்சு நீயும், உன்னோட மேனேஜரும், நானா இருந்தா அப்பவே அந்தாள எட்டி உதைச்சுட்டு, வேற வேளைய பார்த்துட்டு போய் இருப்பே"//
அண்ணே இங்கே நிறைய பேரை உதைக்க வேண்டிருக்கு உங்க ஆப்பீஸ்லே ஒரு வேலை இருந்தா சொல்லுங்கோ உதச்சிட்டு அப்புறம் அங்கே வாரேன்
அபு இந்த ஷஃபி ஒரு மார்கமா தான் இருக்காரு அவரை நம்பி அங்க யாரையும் உதைக்க வேணாம்..//
ஒரு கம்பெனிக்கு கடினமாக உழைப்பவர் ஒருவர் இருந்தால் போதுமாம், சோ.....
//தமிழரசி said...
அ.மு.செய்யது said...
பயனுள்ள பதிவு !!
முதல் குறிப்பான "கவனிப்பு" முக்கியம் அமைச்சரே !!!
அபுஅஃப்ஸர் said...
//பேசும்போது, அவங்க கண்ணைப் பார்த்து உங்க காதைக் கொடுத்து,கவனமா கேட்கனுமாம்/
காதலியிடம் பேசும்போதா இல்லே மனைவியிடம் பேசும்போதா
//
அபு !! உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு !!
ஆமா அனைவரும் ஃப்ளோ பண்ணவேண்டிய அப்ரோச்....//
சரி தான் அபூவை நீங்க தவறாகத்தான் புரிஞ்சுக்கிறீங்க...அவர் சொன்னது காதலியும், மனைவியும் இருவரும் ஒருவரே, அவரப் போய்.....!!
//தமிழரசி said...
ஷஃபிக்ஸ் said...
//sakthi said...
உங்க கிட்டேப்போய் இதை செய்ய சொன்னேனே", என்னய்ய சொல்லனும் - இப்படி இடித்துரைக்கும் இல்லத்தரசி.
தனிமனித தாக்குதலா இது ????//
அப்படித்தானா?
அதான்பா நீங்க தினமும் வீட்டில வாங்கறீங்களே அது....
rose said...
"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பன்றே"ன்னு அலரி அப்புறம் ஐஸ் வைக்கும் வீட்டுக்காரர்.
\\
நல்ல அனுபவமோ அண்ணாக்கு//
பாருங்கய்யா இந்த அரசியர் கூட்டம் குளிர் காயுறதை!! என்னமா சந்தோஷம், ச்சே..ஒரு ரகசியத்தை வெளியில சொல்லமுடியாதே!!
//தமிழரசி said...
ஷஃபிக்ஸ் said...
அபுஅஃப்ஸர் said...
//உங்க கிட்டேப்போய் இதை செய்ய சொன்னேனே", என்னய்ய சொல்லனும் - இப்படி இடித்துரைக்கும் இல்லத்தரசி."//
ஹா ஹா எப்படிங்க இப்படியெல்லாம்
எப்பவுமே இப்படிதானா இல்லே இப்படிதான் எப்பவுமெவா//
இத சொல்லும்போது ஆஸ்கர் விருது கொடுத்த சந்தோஷம் இருக்குமே அவுகளுக்கு!!
ஆமா அப்படியே அல்லவாவும் இல்லை கொடுப்பீங்க...//
மல்லிகைப்பூவையும் add பன்னிக்குங்க
//rose said...
அபுஅஃப்ஸர் said...
//"என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்கப்பா"//
என்னையும் தான் ஆஅவ்வ்வ்
\\
அழாதீங்க அபு சொல்ல வேண்டியவஙககிட்ட சொல்லிடுறேன்//
ஆமாம், இந்த கடமையை கட்டாயமா செஞ்சுடுங்க
//பிரியமுடன்.........வசந்த் said...
புரிஞ்சு போச்சு......
நீங்க யாரு சொன்னாலும் கேட்க்கமாட்டீங்கன்னும்
யாரையும் மதிக்க மாட்டேங்கன்னும்
பொறுப்பில்லாதவருன்னும்
அடங்கா பிடாரின்னும்//
ஹலோ வசந்தா...ஹலோ..ஹலோ,ஹலோ....டொக். (கம்யூனிக்கஷன் ப்ராப்ளம்ப்பா)
//பிரியமுடன்.........வசந்த் said...
//
குட் போஸ்ட் சஃபி//
ஹலோ வஸந்த், சொல்லுங்க இப்போ தெளிவா கேட்குது...ரொம்ப நன்றி...ஹீ..ஹீ
//SUMAZLA/சுமஜ்லா said...
எப்போ இருந்து இப்படி அட்வைஸ் அம்புஜம் ஆனீங்க?!
எனக்கு அந்த ஜோக் ரொம்ப பிடிச்சது//
அட்வைஸா... !! அந்த அளவுக்கெல்லாம் இன்னும் முன்னேறலைங்க, இந்த ஒரு பக்க பதிவிலா இந்த பசங்கள திருத்த முடியும், மேலே உள்ள பின்னூட்டங்களை பார்த்தாலே உங்களுக்கு புரிஞ்சுருக்கும்..இவங்களை திருத்தனும்னா எங்க தமிழக்கா பேனாவையும் பேப்பரையும் எடுக்கனும்..அப்போத்தான் ஒரு வழி பிறக்கும்!!
// ஷஃபிக்ஸ் said...
//SUMAZLA/சுமஜ்லா said...
எப்போ இருந்து இப்படி அட்வைஸ் அம்புஜம் ஆனீங்க?!
எனக்கு அந்த ஜோக் ரொம்ப பிடிச்சது//
அட்வைஸா... !! அந்த அளவுக்கெல்லாம் இன்னும் முன்னேறலைங்க, இந்த ஒரு பக்க பதிவிலா இந்த பசங்கள திருத்த முடியும், மேலே உள்ள பின்னூட்டங்களை பார்த்தாலே உங்களுக்கு புரிஞ்சுருக்கும்..இவங்களை திருத்தனும்னா எங்க தமிழக்கா பேனாவையும் பேப்பரையும் எடுக்கனும்..அப்போத்தான் ஒரு வழி பிறக்கும்!!//
அய்யயோ அவங்க பிளாக்ல எழுதுறதோட நிப்பாட்டிக்கிடட்டும் பேப்பர்ல எழுதுறத படிக்குறதுக்கெல்லாம் நாங்க ஆள் இல்ல படிச்சுட்டு யார் சேதுவாகுறது?.......
நல்லா புரியுது
மனித மனதின் எதார்த்தை தெளிவாச் சொல்லியிருக்கீங்க..உண்மைத் தான் ஆனால் கடைப்பிடிப்போமான்னு தான் சொல்ல முடியாது என்னால் எல்லாரும் எதோ ஒரு விதத்தில் சார்ந்தே வாழவேண்டிய நிர்பந்தம்...தன்னைப் பற்றியே சிந்திக்க நேரமில்லாத இந்த காலத்தில் உங்க பேச்சை கேட்டு வேலையை விட்டா அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைதான்...கண்ணைப் பார்த்து பேசுவது ஒரு நாகரீகமும் கூட...அம்மணிகிட்ட அடி வாங்குவது அன்பர்களை பொருத்து..4வது மிக்கச் சரி அனைவரும் அவசியம் செய்ய வேண்டிய ஒன்று..5வது நம் மன நிலையை பொருத்தது.. நல்ல கருத்தை முன் வைத்திருக்கீங்கப்பா....
பிரியமுடன்.........வசந்த் said...
// ஷஃபிக்ஸ் said...
//SUMAZLA/சுமஜ்லா said...
எப்போ இருந்து இப்படி அட்வைஸ் அம்புஜம் ஆனீங்க?!
எனக்கு அந்த ஜோக் ரொம்ப பிடிச்சது//
அட்வைஸா... !! அந்த அளவுக்கெல்லாம் இன்னும் முன்னேறலைங்க, இந்த ஒரு பக்க பதிவிலா இந்த பசங்கள திருத்த முடியும், மேலே உள்ள பின்னூட்டங்களை பார்த்தாலே உங்களுக்கு புரிஞ்சுருக்கும்..இவங்களை திருத்தனும்னா எங்க தமிழக்கா பேனாவையும் பேப்பரையும் எடுக்கனும்..அப்போத்தான் ஒரு வழி பிறக்கும்!!//
அய்யயோ அவங்க பிளாக்ல எழுதுறதோட நிப்பாட்டிக்கிடட்டும் பேப்பர்ல எழுதுறத படிக்குறதுக்கெல்லாம் நாங்க ஆள் இல்ல படிச்சுட்டு யார் சேதுவாகுறது?.......
அது அந்த பயமிருக்கட்டும் சும்மா டேய் கத்தி எடு கட்டபாறை எடு சத்ததுக்கு எல்லாம் தமிழ் அஞ்சுமா? எழுத்தாயுதமிருக்கும் போது...
//நசரேயன் said...
நல்லா புரியுது//
நன்றி நசரேயன், உங்களுக்காவது புரிஞ்சுதே சந்தோஷம்.
//தமிழரசி said...
மனித மனதின் எதார்த்தை தெளிவாச் சொல்லியிருக்கீங்க..உண்மைத் தான் ஆனால் கடைப்பிடிப்போமான்னு தான் சொல்ல முடியாது என்னால் எல்லாரும் எதோ ஒரு விதத்தில் சார்ந்தே வாழவேண்டிய நிர்பந்தம்...தன்னைப் பற்றியே சிந்திக்க நேரமில்லாத இந்த காலத்தில் உங்க பேச்சை கேட்டு வேலையை விட்டா அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைதான்...கண்ணைப் பார்த்து பேசுவது ஒரு நாகரீகமும் கூட...அம்மணிகிட்ட அடி வாங்குவது அன்பர்களை பொருத்து..4வது மிக்கச் சரி அனைவரும் அவசியம் செய்ய வேண்டிய ஒன்று..5வது நம் மன நிலையை பொருத்தது.. நல்ல கருத்தை முன் வைத்திருக்கீங்கப்பா....//
அப்பாடா நல்லா படிச்சு பின்னூட்டிருக்கீங்க (வேலை வெட்டி இல்லாமல்னு நான் சொல்ல மாட்டேன்), நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விடயங்கள் தான், ஒரு ரிமைன்டர் தான் அரசி, கண்ணைப்பார்த்து பேசுவதற்க்கும், நம்மாளுங்க மாதிரி உற்று நோக்கி ஜொள்ளுவதர்க்கும் நிறைய வேறுபாடு இருக்குல.
//பிரியமுடன்.........வசந்த் said... //
அய்யயோ அவங்க பிளாக்ல எழுதுறதோட நிப்பாட்டிக்கிடட்டும் பேப்பர்ல எழுதுறத படிக்குறதுக்கெல்லாம் நாங்க ஆள் இல்ல படிச்சுட்டு யார் சேதுவாகுறது?.......//
வருங்காலத்தில் எழுத்தோசை வார, மாத சஞ்சிகையானாலும் ஆகலாம், அப்போ காசு கொடுத்து தான் வாங்கி படிக்கவேண்டும் (நல்லா கனவு காண்றாங்கய்யா)
உங்க கிட்டேப்போய் இதை செய்ய சொன்னேனே", என்னய்ய சொல்லனும் - இப்படி இடித்துரைக்கும் இல்லத்தரசி.
நேத்து ஹோட்டல்ல சாப்பிட்டமாதிரி தெரியுது. வீட்டுக்காரம்மா படிச்சிட்டாகளோ?
எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்றுவது மாதிரி, அவர் எது சொன்னாலும், "ஆமாம் அப்படித்தான்", "கரெக்ட்", "அவன விடக்கூடாது", அவரோடு சேர்ந்து நீங்களும் வசைமாரிப் பொழிய வேண்டாம்.
அப்போ நேரா ஆட்டோ அனுப்பனும்ங்க்ரியலோ?
ங்க வூட்டுக்காரவுக இந்த மாதிரி சிட்சுவேஷன்ல் மெளன மொழியிலய்யா பேசுராங்க" நான் என்ன செய்ய? ...என்ன செய்ய...மெளனம் தான் பதில்.
காப்பி டம்ளர் உடையாம, தரை உடையுற மாதிரி வைக்கணும். இதெல்லாம் அவங்களுக்கு நல்லாவே தெரியும்கோ
என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்கப்பா" இப்படி பலபேர் சொல்லி நாம் கேட்டிருக்கின்றோம்
சில நேரம் கண்ணாடி முன்னாடி நின்னு கூட.
//S.A. நவாஸுதீன் said...
உங்க கிட்டேப்போய் இதை செய்ய சொன்னேனே", என்னய்ய சொல்லனும் - இப்படி இடித்துரைக்கும் இல்லத்தரசி.
நேத்து ஹோட்டல்ல சாப்பிட்டமாதிரி தெரியுது. வீட்டுக்காரம்மா படிச்சிட்டாகளோ?//
இன்னக்கி நேத்தா இது மாதிரி..மாவாட்ட விடாம இருந்தாங்களே அத சொல்லுங்க
//S.A. நவாஸுதீன் said...
ங்க வூட்டுக்காரவுக இந்த மாதிரி சிட்சுவேஷன்ல் மெளன மொழியிலய்யா பேசுராங்க" நான் என்ன செய்ய? ...என்ன செய்ய...மெளனம் தான் பதில்.
காப்பி டம்ளர் உடையாம, தரை உடையுற மாதிரி வைக்கணும். இதெல்லாம் அவங்களுக்கு நல்லாவே தெரியும்கோ//
சீரியல் பார்க்க விடாம, வேனும்னே ஏதாவது ஒரு சேனல சின்சியரா பார்க்கிர மாதிரி நடிப்போம்ல
//S.A. நவாஸுதீன் said...
என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்கப்பா" இப்படி பலபேர் சொல்லி நாம் கேட்டிருக்கின்றோம்
சில நேரம் கண்ணாடி முன்னாடி நின்னு கூட.//
அந்த அளவுக்கு போயிடுச்சா.......
அழகான விளக்கங்கள் ரொம்ப நல்லாவே புரிஞ்சது..
பயனுள்ள உளவியல் அணுகுமுறைகள்...
//முனைவர்.இரா.குணசீலன் said...
அழகான விளக்கங்கள் ரொம்ப நல்லாவே புரிஞ்சது..
பயனுள்ள உளவியல் அணுகுமுறைகள்...//
மிக்க நன்றி முனைவர் குணசீலன், உங்களின் வருகையும், கருத்தும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நல்ல பகிர்வு பாஸ்..
இங்கே பாருங்கள் - பெற்று கொள்ளுங்கள்
வாழ்த்துகள்
remba pidichchirunthathu:)
jamaal solliththaan vanthen:)
//" உழவன் " " Uzhavan " said...
நல்ல பகிர்வு பாஸ்..//
நன்றி உழவர் அண்ணா
//இரசிகை said...
remba pidichchirunthathu:)
jamaal solliththaan vanthen:)//
சொல்லிட்டாரா...முதல் வருகைக்கும், ரசித்தமைக்கும் நன்றி
சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!
Post a Comment