பேசாமல் பேசும் பல மொழிகள்
ஆனந்தித்தின் பிரதிபலிப்பு
அகலமாய் சிரிக்கும் அழகு விழிகள்
காதலுடன் கலந்து விட்டால்
மின்மினியாய் சிமிட்டும் அந்த கயல் விழிகள்
தேடி தேடி ஒய்ந்து, தேய்பிறையாய் அவ்விழிகள்
தேடி தேடி ஒய்ந்து, தேய்பிறையாய் அவ்விழிகள்
தேடியது கிடைத்தது கனமழையாய் அவள் விழிகள்
உற்சாகத்தின் உச்சி,
உற்சாகத்தின் உச்சி,
எவ்ரெஸ்ட்டாய் குளிரும் குமுதவிழிகள்
வெறுத்து வெகுன்டெழுந்தாள் அக்னியாய் அவ்விழிகள்
அவள் விழிகள் பேசாமல் பேசும் பல மொழிகள்
(ஒரு சிறு முயற்சி...அக்னி லுக் விடாமே, ஆர்க்டிக்கா மாறி பின்னூட்டங்களை அள்ளி போடுங்க)
31 comments
முதல் பந்துல சிக்ஸர் அடிக்கிறீங்க. பெண் வாயால சொல்ரத இந்த காதுல கேட்டுட்டு அந்த காதுல விட்டுடறீங்களே. கண்ணால் பேசினால் மட்டும்தானே கவிதை வரைகின்றீர்கள். நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க.
அப்புறம் அது என்ன "ஆல்ர்க்டிக்கா மாறி" புரியலையே. ஒருவேளை எழுத்துப்பிழையோ
அந்த படம்
உங்கள் வரிகள் இல்லாமலே பல கவிதை சொல்லுது ...
அவள் விழிகள் பேசாமல்
பேசும் பல மொழிகள்\\
எதுகை மோனை கிளப்புதே துவக்கம்
தேடி தேடி ஒய்ந்து, தேய்பிறையாய் அவ்விழிகள்
தேடியது கிடைத்தது கனமழையாய் அவள் விழிகள்\\
ஏனப்பா!
குமுதவிழிகள்\\
நல்ல வார்த்தை பிரயோகம் ...
(சிறு முயற்சியே இப்படியா - வாழ்த்துகள்)
//S.A. நவாஸுதீன் said...
முதல் பந்துல சிக்ஸர் அடிக்கிறீங்க. பெண் வாயால சொல்ரத இந்த காதுல கேட்டுட்டு அந்த காதுல விட்டுடறீங்களே. கண்ணால் பேசினால் மட்டும்தானே கவிதை வரைகின்றீர்கள். நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க//
நன்றி நவாஸ்... நம்ம எப்போதான் சொல்லு பேச்சு கேட்டோம்!!
//நட்புடன் ஜமால் said...
அந்த படம்
உங்கள் வரிகள் இல்லாமலே பல கவிதை சொல்லுது ...//
அப்போ மேட்டரு? ஹீ...ஹீ
//நட்புடன் ஜமால் said...
குமுதவிழிகள்\\
நல்ல வார்த்தை பிரயோகம் ...
(சிறு முயற்சியே இப்படியா - வாழ்த்துகள்)//
உங்கள் ஊக்கத்திர்க்கு மிக்க நன்றி ஜமால்.
//S.A. நவாஸுதீன் said...
முதல் பந்துல சிக்ஸர் அடிக்கிறீங்க. //
மிக்க நன்றி நவாஸ்..உங்க உதவியுடன் சென்ட்சுரி அடிக்கலாம்!! (ஆசை..தோசை)
//நட்புடன் ஜமால் said...
தேடி தேடி ஒய்ந்து, தேய்பிறையாய் அவ்விழிகள்
தேடியது கிடைத்தது கனமழையாய் அவள் விழிகள்\\
ஏனப்பா!//
அது ஆனந்த கண்ணீர் அப்பு
அவள் விழிகள் பேசாமல் பேசும் பல மொழிகள்
\\
ஓஹோ..........
தேடி தேடி ஒய்ந்து, தேய்பிறையாய் அவ்விழிகள்தேடியது கிடைத்தது
\\
கிடச்சிடுச்சா
அவ்விழிகள் அவள் விழிகள் பேசாமல் பேசும் பல மொழிகள்
\\
யாருப்பா அது?
ஒரு சிறு முயற்சி...
\\
சிறு முயற்சியே இப்படியா வாழ்த்துக்கள்.
நன்றி ரோஸ்
//தேடி தேடி ஒய்ந்து, தேய்பிறையாய் அவ்விழிகள்தேடியது கிடைத்தது
\\
கிடச்சிடுச்சா//
பின்னே கிடைக்காமே, அவுக அம்புட்டு அட்டெம்ட்ல சென்ஞ்சு இருப்பாக!!
rose said...
அவ்விழிகள் அவள் விழிகள் பேசாமல் பேசும் பல மொழிகள்
\\
யாருப்பா அது?//
அது அவுகளேதேன்!!
rose said...
ஒரு சிறு முயற்சி...
\\
சிறு முயற்சியே இப்படியா வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி....Thanks a lot (ரென்டும் ஒன்னுதானோ?)
//நட்புடன் ஜமால் said...
அந்த படம்
உங்கள் வரிகள் இல்லாமலே பல கவிதை சொல்லுது ...//
இந்த லுக்குக்கு பேர்தான் 'எவரெஸ்ட் குளிர்' பார்வையாம், இப்பொ தான் அகராதியில் பார்த்து தெரிஞ்சுகிட்டேன்!!
இவ்வளவு அழகான கண்ணை படமா போட்டு இத்துனூன்டு கவிதை எழுதிருக்கீர்
இருந்தாலும் புது முயற்சி
வரிகள் அனைத்தும் சூப்பர்
//கனமழையாய் அவள் விழிகள்//
எதுவோ... ஆனந்த மழையா இருந்தா சரிதேன்
//S.A. நவாஸுதீன் said...
முதல் பந்துல சிக்ஸர் அடிக்கிறீங்க
//
இந்த விழியின் மயக்கத்துல்லே போல்ட் ஆகாமல் இருந்தா சரிதான்
//பேசாமல் பேசும் பல மொழிகள்//
முற்றிலும் உண்மை
விழியே பேசிடும் பல மொழிகள்
//அபுஅஃப்ஸர் said...
இவ்வளவு அழகான கண்ணை படமா போட்டு இத்துனூன்டு கவிதை எழுதிருக்கீர்
இருந்தாலும் புது முயற்சி
வரிகள் அனைத்தும் சூப்பர்//
நன்றி ஆபூ!! கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னிக்கோங்க அன்னாச்சி..இப்பத்தானே இமாம் ஷாஃபி ஸ்கூல்ல கே.ஜி சேர்ந்து இருக்கோம்!!
//அபுஅஃப்ஸர் said...
//S.A. நவாஸுதீன் said...
முதல் பந்துல சிக்ஸர் அடிக்கிறீங்க
//
இந்த விழியின் மயக்கத்துல்லே போல்ட் ஆகாமல் இருந்தா சரிதான்//
ஹலோ.. நாங்க கண்ணை கட்டிக்கிட்டாவது ஆட்டத்தை ஆடிருவோம்ல!!
//அபுஅஃப்ஸர் said...
//பேசாமல் பேசும் பல மொழிகள்//
முற்றிலும் உண்மை
விழியே பேசிடும் பல மொழிகள்//
இதை நான் மீன்டும் வழிமொழிகிறேன்...
//இந்த விழியின் மயக்கத்துல்லே போல்ட் ஆகாமல் இருந்தா சரிதான்//
இந்த சின்னப்புள்ளக்கிடே இது மாதிரி சவால் விடுறது உங்களுக்கே நியாயமாய்யா?
விழிகளை வைத்து ஒரு ஆராய்ச்சி கட்டுரை..கவிதையா எழுதிட்டீங்க..
சூப்பர்.
//தேடியது கிடைத்தது கனமழையாய் அவள் விழிகள்//
இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
தேடி தேடி ஒய்ந்து, தேய்பிறையாய் அவ்விழிகள்
தேடியது கிடைத்தது கனமழையாய் அவள் விழிகள்//
நல்லா இருக்குங்க:))
//Poornima Saravana kumar said...
நல்லா இருக்குங்க:))//
மிக்க நன்றி அம்மனி
அ.மு.செய்யது said...
//இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது//
நன்றி அ.மு.செ!!
hats off shafi,
we expect more (!!, better' nu vachukaalaam) from you...
Post a Comment