|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 10:17 AM

<>மின்னல்!!

Filed Under () By SUFFIX at 10:17 AM

மின்னல்...இருளடைந்த வானில்

சிதரும் வெளிர் வண்ண கோடுகள்,

சில கனமே தரிக்கும், பார்வையையும் பரிக்கும்
இம்மின்னலோ, மின்னலாய் தான் வந்தாள்,

மின்காந்தமாய் இழுத்தாள்!

பரித்தாள்... பார்வையோடு, மனதையும்தான்

இன்ப அதிர்ச்சி இடியாய் வந்தாலும்

இனிதாய்த்தான் இருந்தது இவளிடம்!

காத‌ல் ம‌ழையால் ம‌ன‌தும் ந‌னைந்த‌து

ச‌காரா பாலை, பூஞ்சோலையான‌ மாயம்,

எண்ணம் முழுதும் வர்ணப்பூக்கள் ஜாலம்

அடாத மழை இனி விடாது பெய்ய‌ட்டும்

ஓயாத‌ ம‌ழையே...இனியும் நீ ஓயாதே!!

22 comments

S.A. நவாஸுதீன் on June 24, 2009 at 11:02 AM  

வாம்மா மின்னலு


S.A. நவாஸுதீன் on June 24, 2009 at 11:03 AM  

இம்மின்னலோ, மின்னலாய் தான் வந்தாள்,
மின்காந்தமாய் இழுத்தாள்!
பரித்தாள்... பார்வையோடு, மனதையும்தான்

நல்லா இருக்கு (பர்ஸ் பத்திரம்)


நட்புடன் ஜமால் on June 24, 2009 at 11:04 AM  

மெல்ல திறந்தது ஜன்னல்(windows)

சட்டென சிரித்தது மின்னல்


(படம் வெகு அழுகு பா)

ஒட்டிய மாதிரி இருக்கு ...


SUFFIX on June 24, 2009 at 11:04 AM  

//S.A. நவாஸுதீன் said...
வாம்மா மின்னலு//

நவாஸ் அண்ணே வந்துருக்காக....


S.A. நவாஸுதீன் on June 24, 2009 at 11:06 AM  

இன்ப அதிர்ச்சி இடியாய் வந்தாலும்
இனிதாய்த்தான் இருந்தது இவளிடம்!

இரத்தத்துல Sugar இருக்குன்னு சொன்னா அது இனிப்பான விஷயம் இல்ல ஷ‌ஃபி. Be Alert. ஹா ஹா ஹா


நட்புடன் ஜமால் on June 24, 2009 at 11:06 AM  

அடாத மழை இனி விடாது பெய்ய‌ட்டும்

\\


டும் டும் டும்


S.A. நவாஸுதீன் on June 24, 2009 at 11:08 AM  

காத‌ல் ம‌ழையால் ம‌ன‌தும் ந‌னைந்த‌து
ச‌காரா பாலை, பூஞ்சோலையான‌ மாயம், எண்ணம் முழுதும் வர்ணப்பூக்கள் ஜாலம்
அடாத மழை இனி விடாது பெய்ய‌ட்டும்
ஓயாத‌ ம‌ழையே...இனியும் நீ ஓயாதே!!

நல்லா இருக்கு. நீங்களும் ஓயாமல் எழுதுங்கள்


நட்புடன் ஜமால் on June 24, 2009 at 11:08 AM  

மின்னலாய் தான் வந்தாள்,
மின்காந்தமாய் இழுத்தாள்!
பரித்தாள்... பார்வையோடு, மனதையும்தான்\\


கண்கள் வழி
உட் புகுந்து
இதயத்தை ஆட்கொள்வது
தானே

ஷஃபி ’அது’


SUFFIX on June 24, 2009 at 11:09 AM  

//நட்புடன் ஜமால் said...
மெல்ல திறந்தது ஜன்னல்(windows)

சட்டென சிரித்தது மின்னல்


(படம் வெகு அழுகு பா)

ஒட்டிய மாதிரி இருக்கு ...//

நன்றி ஜமால்...
ஆமாம். மின்னலுக்கும், மீன்விழிகளுக்கு ஒரு பின்னல்..‌


SUFFIX on June 24, 2009 at 11:12 AM  

//S.A. நவாஸுதீன் said...
இன்ப அதிர்ச்சி இடியாய் வந்தாலும்
இனிதாய்த்தான் இருந்தது இவளிடம்!

இரத்தத்துல Sugar இருக்குன்னு சொன்னா அது இனிப்பான விஷயம் இல்ல ஷ‌ஃபி. Be Alert. ஹா ஹா ஹா//

அதுக்கு மாற்றுவழியா உடற்பயிற்சி மற்றும் கட்டுப்பாட்டுடன் இருந்தால், சரியாகிவிடும்னு சொன்னால் அது இனிப்பான செய்திதானே?


S.A. நவாஸுதீன் on June 24, 2009 at 11:13 AM  

படம் ரொம்ப அருமையா இருக்கு.

இடி மின்னல் வரும்போது மரத்தடியில் நிற்கவேண்டாம் என்பார்களே, இதனால் தானோ!. அழகான மின்னல் மரத்தடியில்


SUFFIX on June 24, 2009 at 11:16 AM  

//நட்புடன் ஜமால் said...
அடாத மழை இனி விடாது பெய்ய‌ட்டும்\\


டும் டும் டும்//

கெட்டி மேளம் கொட்டியாச்சா...


SUFFIX on June 24, 2009 at 11:22 AM  

//நட்புடன் ஜமால் said...
மின்னலாய் தான் வந்தாள்,
மின்காந்தமாய் இழுத்தாள்!
பரித்தாள்... பார்வையோடு, மனதையும்தான்\\


கண்கள் வழி
உட் புகுந்து
இதயத்தை ஆட்கொள்வது
தானே

ஷஃபி ’அது’//

மின்னலில் தொடங்கி, மின்சாரம்...அப்புறம் சம்சாரம்...அது ஒரு சமாசாரத்தின் சாம்ராஜயமப்பா!!


SUFFIX on June 24, 2009 at 11:28 AM  

//S.A. நவாஸுதீன் said...
படம் ரொம்ப அருமையா இருக்கு.

இடி மின்னல் வரும்போது மரத்தடியில் நிற்கவேண்டாம் என்பார்களே, இதனால் தானோ!. அழகான மின்னல் மரத்தடியில்//

இனியாவது மின்னல பார்த்து பயப்படாதீங்க‌


அப்துல்மாலிக் on June 24, 2009 at 12:16 PM  

நல்லாதான்யா வெட்டுது மின்னலு

நல்லதாபோச்சு இடி இங்கே இல்லே ஹி ஹி


அப்துல்மாலிக் on June 24, 2009 at 12:19 PM  

//ஓயாத‌ ம‌ழையே...இனியும் நீ ஓயாதே!!
/

ஓவரா பெய்தால் வெள்ளம் வந்துடப்போகுது, நான் சொல்ற வெள்ளம் புரியுதா?


SUFFIX on June 24, 2009 at 12:23 PM  

//அபுஅஃப்ஸர் said...
நல்லாதான்யா வெட்டுது மின்னலு

நல்லதாபோச்சு இடி இங்கே இல்லே ஹி ஹி//

எங்களுக்கு இடி மேட்டர் எல்லாம், இடியாப்ப ரேஞ்சுக்குத்தேன், ஆமா


SUFFIX on June 24, 2009 at 12:25 PM  

அபுஅஃப்ஸர் said...
//ஓயாத‌ ம‌ழையே...இனியும் நீ ஓயாதே!!
/

ஓவரா பெய்தால் வெள்ளம் வந்துடப்போகுது, நான் சொல்ற வெள்ளம் புரியுதா?

நல்லாவே புரியுது, இப்பொத்தானே ஊருக்கு போய்ட்டு வந்திருக்கிய, இதுவும் பேசுவிய, இன்னமும் பேசுவிய....


சிநேகிதன் அக்பர் on June 24, 2009 at 4:16 PM  

மின்னல் நல்லா மின்னுது
அந்த மினுமினுப்பு உங்கள் எழுத்தில் பிரதிபலிக்கிறது.

ரசித்தேன். வாழ்த்துக்கள்.


SUFFIX on June 24, 2009 at 4:22 PM  

//அக்பர் said...
மின்னல் நல்லா மின்னுது
அந்த மினுமினுப்பு உங்கள் எழுத்தில் பிரதிபலிக்கிறது.

ரசித்தேன். வாழ்த்துக்கள்.//

வாங்க அக்பர், மின்னலை ரசித்ததிர்க்கு இடிபோல் இடித்து பலமான நன்றி!!


SUMAZLA/சுமஜ்லா on June 24, 2009 at 4:59 PM  

//அடாத மழை இனி விடாது பெய்ய‌ட்டும்


ஓயாத‌ ம‌ழையே...இனியும் நீ ஓயாதே!!//

குடிசைவாசிகளை கொஞ்சம் நினைத்துப் பாருங்க!


SUFFIX on June 24, 2009 at 5:04 PM  

//SUMAZLA/சுமஜ்லா said...
//அடாத மழை இனி விடாது பெய்ய‌ட்டும்


ஓயாத‌ ம‌ழையே...இனியும் நீ ஓயாதே!!//

குடிசைவாசிகளை கொஞ்சம் நினைத்துப் பாருங்க!//

நீங்கள் அவர்களிடம் கேட்டுப்பாருங்கள் இம்மழையைப்பற்றி...சொல்லச்சொல்லுங்கள் அது ஓயட்டுமென்று!!