நேத்து வீட்டு பக்கத்தில் உள்ள சோப்பு, சீப்பு, கண்ணாடி எல்லாம் விற்பாங்கள்ள, அது தான் 'ஃபேன்சி ஸ்டோர்' அந்த கடைக்கு போனேன். நீ ஏன்டா அந்த கடைக்கு போனேன்னு கேட்குறீங்களா? நாம் என்ன தாய்க்குலங்கள் மாதிரி கூடை நிறைய மேக்கப் சாதனங்களா வாங்கப்போறோம்? நமக்குன்னே வச்சுருப்பாங்க ஒரு ரியாலுக்கு use & throw ஷேவிங் மெஷின், அதுவும் கேஷ் கவுன்ட்டர் பக்கத்திலேயே இருக்கும், கடைக்கு உள்ளே போவனும்னு அவசியம் இல்லை, ஒரு ரியால வாங்கிகிட்டு மெஷினை கையில கொடுத்து மொவனே அப்படியே நடைய கட்டுன்னு அனுப்பி வச்சுடுவாங்க.
சரி..சரி மேட்டருக்கு வர்ரேன், அந்த கடையில் சீப்பு, சோப்பு, கண்ணாடியெல்லாம் அழகாக அடுக்கி வச்சிருந்ததை பார்த்ததும் நம்ம புதிய blog மூளைக்கு ஒன்று தோன்றியது. அத தான் இங்கு உஙகளுடன் பகிர்ந்துக்குரேன்:
சோப்பு
சோப்பு போட கத்துக்குங்க...
சலவைக்கு உதவும், பல சலுகைகள் பெறவும் உதவும்.
சீப்பு
காலை வாறும் ச்சீப்பான மனிதரைவிட தலையை வாறும் சீப்பு மேல்.
கண்ணாடி
பொய் சொல்லத்தெரியாது, உள்ளதை உள்ளபடி சொல்லும் மாயக்கண் என் முன்னாடி!!
17 comments
சலவைக்கு உதவும், பல சலுகைகள் பெறவும் உதவும்.\\
அட! ...
மாயக்கண் என் முன்னாடி!!
சீப்பான ஆட்களுக்கு
கண்ணாடி(தன்னை) உணர துவங்கினால்
சோப்பிட தேவையில்லை
//நட்புடன் ஜமால் said...
சீப்பான ஆட்களுக்கு
கண்ணாடி(தன்னை) உணர துவங்கினால்
சோப்பிட தேவையில்லை//
இது ரொம்ப நல்லா இருக்கு ஜமால்...கலக்கிட்டீங்க.
//நட்புடன் ஜமால் said...
சலவைக்கு உதவும், பல சலுகைகள் பெறவும் உதவும்.\\
அட! ...//
வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா.
//நட்புடன் ஜமால் said...
மாயக்கண் என் முன்னாடி!!//
நான் யோசித்தபோது இந்த வரிகள் எனக்கும் பிடித்து இருந்தது. தங்களயும் கவர்ந்ததில் மகிழ்ச்சி (நிஜமா இது சோப்பு இல்லப்பா)
சோப்பு
சோப்பு போட கத்துக்குங்க...
சலவைக்கு உதவும், பல சலுகைகள் பெறவும் உதவும்.
அடடடடா. இந்த பதிவை மலையாளத்தில் போட்டா இன்னும் நல்லா இருக்கும் (இதில் உள்குத்து ஒன்னும் இல்லை)
சீப்பு
காலை வாறும் ச்சீப்பான மனிதரைவிட தலையை வாறும் சீப்பு மேல்.
சூப்பர் போங்க. தல சீவம்போது யோசிச்சியளோ
கண்ணாடி
பொய் சொல்லத்தெரியாது, உள்ளதை உள்ளபடி சொல்லும் மாயக்கண் என் முன்னாடி!
சரிதான். ஆனால் இடது வலதாவும் வலது இடதாவுமிள்ள காமிக்குது.
//S.A. நவாஸுதீன் said...
சூப்பர் போங்க. தல சீவம்போது யோசிச்சியளோ//
அப்படி சீவி சிங்காரிக்க அங்கே அவ்ளோ விஷயம் இல்லைங்கோ
// S.A. நவாஸுதீன் said...
சரிதான். ஆனால் இடது வலதாவும் வலது இடதாவுமிள்ள காமிக்குது.//
உங்க வீட்டு கண்ணாடி அப்படியா காட்டுது, அது சரியில்லை அப்பூ, உடனே போய் மாத்திடுங்க (ஆராய்ச்சி மணியை எப்போதும் பக்கத்தில் வச்சுருப்பாரு போல)
//காலை வாறும் ச்சீப்பான மனிதரைவிட தலையை வாறும் சீப்பு மேல்.//
சிங்கம் சீப்பெடுத்து வாராது..சிறுத்த சிக்கன் பிரியாணி சாப்டாது.
இப்படிக்கு,
ஏடாகூடமாக குத்த வைத்து எகத்தாளமாக யோசிப்போர் சங்கம்.
பூனே கிளை.
//அ.மு.செய்யது said...
//காலை வாறும் ச்சீப்பான மனிதரைவிட தலையை வாறும் சீப்பு மேல்.//
சிங்கம் சீப்பெடுத்து வாராது..சிறுத்த சிக்கன் பிரியாணி சாப்டாது.
இப்படிக்கு,
ஏடாகூடமாக குத்த வைத்து எகத்தாளமாக யோசிப்போர் சங்கம்.
பூனே கிளை.//
வாங்க செய்யது, என்னதான் 'பூனே' வில் 'பூ' இருந்தாலும், அங்கே உள்ளவங்க கடையில போய்தான் 'பூ' வாங்கனும்.
இப்படிக்கு
எப்போதுமே ஏடாகூடமாக யோசிப்போர் சங்கம்.
நம்ம வலைப்பதிவுக்கு முன்னாடியோ பின்னாடியோ உங்க பதிவு போல. அப்படித்தான் உங்க பதிவுகள பார்த்தேன், படித்தேன்.பல பதிவுகள் நல்லா இருந்தது. இனிமே அடிக்கடி வருவேன். நீங்களும் நம்ப வலைக்கு வாங்க
// manipayal said...
நம்ம வலைப்பதிவுக்கு முன்னாடியோ பின்னாடியோ உங்க பதிவு போல. அப்படித்தான் உங்க பதிவுகள பார்த்தேன், படித்தேன்.பல பதிவுகள் நல்லா இருந்தது. இனிமே அடிக்கடி வருவேன். நீங்களும் நம்ப வலைக்கு வாங்க//
முதல் வருகைக்கு மிக்க நன்றி, அடிக்கடி வருகை தாருங்கள்
பதிவும் பின்னூட்டமும் சுவையா இருந்தது.. எதும் சொன்னா அதையும் ஏடாகூடமா யோசிச்சிருவீங்களோன்னு இருக்கே.. :))
//முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிவும் பின்னூட்டமும் சுவையா இருந்தது.. எதும் சொன்னா அதையும் ஏடாகூடமா யோசிச்சிருவீங்களோன்னு இருக்கே.. :))//
வாங்க முத்து, தென்னிந்திய டூர் முடிச்சுட்டு, இப்போ வலைத்தோட்ட டூரா, கலக்குங்க
Post a Comment