இதற்க்கு என் எதிர்க்கவிதை
கேட்பதெர்க்கெல்லாம் 'ம்' தான்
அந்த 'ம்' இல்லயாம், இப்பொ இது வேறாம்.
உப்பு குறைவென்று உண்மைத்தான் சொன்னேன்
கடலை கறியும் கடலாய் மாறியது!!
சில மணி நேரம் சீரியல், சினுங்கமாட்டோம்..
சீரியலால் நீங்கள் சினுங்காதவரை!
விளம்பர இடைவேளை..
மனதைத்திருப்ப மனமில்லை,
விழிகளையுமா? அழகான புடவைத்தான் நேற்றுவரை
அடுப்பங்கரைக்கு போனது அடுத்தாத்து அம்புஜத்தாள்
என்றோ சொன்னது சேர்ந்தே ரசித்தாய்
இன்றைக்கு புதிராய் மொழிபெயர்த்து வைத்தாய்.
இறகு போல் குவளை, இருபது கிலோ ஆனது
நானும் புரிந்து கொன்டேன் 'நங்' சத்தத்தால்
திட்டித்தீர்ப்பது கதவின் மேல் காகத்தைத்தான்
காட்டம் புரிகிரது கருசமனிதான் விவகாரம்
மீட்டர் நீள நெக்லஸ், முழங்கை வரை வலையல்கள்
முனகல் நிறக்கவில்லை, கடையை மாற்றனுமாம் இவள் பெயருக்கு!
உயர்தினையும் அஃறினையும் மாறி மாறி மாற்றும்
'இந்த' இவளை மாற்றும் முயற்சியில்.... இவன்
53 comments
இதுக்கு நவரசமாக பின்னூட்டம் போடணும். ஒரே பின்னூட்டத்துல போட முடியாது.
முதலில், இதை நான் மிகவும் ரசித்தேன். அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். ஒரு சராசரி பெண்ணை இதைவிட அழகாக சொல்ல முடியாது.
ஒரு சின்ன ரெக்வெஸ்ட். இதற்கு, என் கவிதையின் லின்க் கொடுத்து, இதற்கு எதிர் கவிதை என்றால், படிப்பவர்கள், ரசிப்பார்கள்.
//கேட்பதெர்க்கெல்லாம் 'ம்' தான்
அந்த 'ம்' இல்லயாம், இப்பொ இது வேறாம்.//
படிக்கிற எல்லாப் பெண்களும் வெட்கப்படுவாங்க. நானும்...
//என்றோ சொன்னது சேர்ந்தே ரசித்தாய்
இன்றைக்கு புதிராய் மொழிபெயர்த்து வைத்தாய்.//
சரி தான். அவர் ‘அப்போ’ (தி.மு) நாய் காரைத் துரத்திய கதையை (கார் - அழகிய பெண்கள்) சொன்ன போது ரசித்தேன். இப்போ, கண்ணகியாக மாறுவது உண்மைதானுங்கோ!
மற்றபடி, புடவைக்கும் நகைக்கும் ஆசைப்படும் சராசரி பெண் நானில்லைங்க!
அவர்கிட்ட எப்படி கோபிக்கறதுங்கற ரகசியம் இப்பவரை எனக்கு கைவர மாட்டீங்குது(ரொம்ப இளகின மனசு!)
ஆனாலும், ஏன் நாங்க இப்படி கோபிக்கிறோம்னு ஒரு எதிர் கவிதை போட்டே ஆகணும். அதில இந்த கவிதைக்கான லின்க் கொடுத்து விடுகிறேன். எடு பேனாவ! சாரி, தட்டு கீ போர்ட!!
நன்றி அக்கா, உங்கள கவிதையின் வரிக்கு வரி பின்னூட்டம் கொடுக்க முடியவில்லையென்றாலும், ஒரு சிறிய சன்டை போட முயற்சி செஞ்சு இருக்கின்றேன்...ஹீ..ஹீ!!
ஆனா ஒன்னு மட்டும், நீங்க போட்டிருக்கற படத்தில் இருந்தே நல்லா தெரியுது! அதாவது நீங்க சிங்கமோ புலியோ அல்ல, குட்டிகள் என்று!
//SUMAZLA/சுமஜ்லா said...
மற்றபடி, புடவைக்கும் நகைக்கும் ஆசைப்படும் சராசரி பெண் நானில்லைங்க!//
யாருப்பா அது இவுங்க பெயரை 'கின்ன்ஸ்' ரிக்கார்டில் சேர்த்துக்கோங்க
//SUMAZLA/சுமஜ்லா said...
ஆனா ஒன்னு மட்டும், நீங்க போட்டிருக்கற படத்தில் இருந்தே நல்லா தெரியுது! அதாவது நீங்க சிங்கமோ புலியோ அல்ல, குட்டிகள் என்று!//
நாங்க பூனை ரேஞ்சுக்குதாங்க இந்த விஷயத்தில்!!
//SUMAZLA/சுமஜ்லா said...
//என்றோ சொன்னது சேர்ந்தே ரசித்தாய்
இன்றைக்கு புதிராய் மொழிபெயர்த்து வைத்தாய்.//
சரி தான். அவர் ‘அப்போ’ (தி.மு) நாய் காரைத் துரத்திய கதையை (கார் - அழகிய பெண்கள்) சொன்ன போது ரசித்தேன். இப்போ, கண்ணகியாக மாறுவது உண்மைதானுங்கோ!//
பெரும்பாலான ஆம்பிளைங்க தி.மு. காலத்தில் உடான்ஸ் தானாம்...அதையெல்லாம் சீரியஸா எடுக்கப்படாது!!
இதுக்கு இது எதிர்கவிதை
சூப்பர். இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்
கேட்பதெர்க்கெல்லாம் 'ம்' தான் அந்த 'ம்' இல்லயாம், இப்பொ இது வேறாம்.
ஒரே "ம்" தான். ஆனா அப்பப்ப உருமாறு(ம்)
உப்பு குறைவென்று உண்மைத்தான் சொன்னேன் கடலை கறியும் கடலாய் மாறியது!!
அது அப்டித்தான். ஜாஸ்தின்னு சொன்னீங்கன்னா குளமா மாறிடும். (வேறென்ன தண்ணிய அள்ளி ஊத்திடுவாங்க)
//S.A. நவாஸுதீன் said...
இதுக்கு இது எதிர்கவிதை
சூப்பர். இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்//
வாங்க நவாஸ், இப்பொத்தான் கொஞ்சம் தெம்பா இருக்கு, ஏன்னா மேட்டர் கொஞ்சம் சீரியஸ்ல!!
சில மணி நேரம் சீரியல், சினுங்கமாட்டோம்..சீரியலால் நீங்கள் சினுங்காதவரை
சீரியலில் இவர்கள் சீரியசாய் இருக்க, எனக்கு இவர்களைப் பார்த்து இப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது. "வெங்காயம்"
//குளமா மாறிடும்.//
அட பாவமே கண்ணீர் விடுவாங்கன்னு சொல்லுவீங்கன்னு பார்த்தா, இது தண்ணி கேஸா இருக்குதே?!
//S.A. நவாஸுதீன் said...
உப்பு குறைவென்று உண்மைத்தான் சொன்னேன் கடலை கறியும் கடலாய் மாறியது!!
அது அப்டித்தான். ஜாஸ்தின்னு சொன்னீங்கன்னா குளமா மாறிடும். (வேறென்ன தண்ணிய அள்ளி ஊத்திடுவாங்க)//
சில சமயம் குளம் வத்துவதும் உண்டு, கறிஞ்ச வாசம் வந்தா, கவனமா இருக்கனும்னு தெரிஞ்சுக்கோங்க
நான் இதுவரை என் வாழ்க்கையில் ஒரு சீரியல் கூட பார்த்ததில்லை என்று சொன்னால் நம்புவீங்களா?
அழகான புடவைதான் நேற்றுவரை அடுப்பங்கரைக்கு போனது அடுத்தாத்து அம்புஜத்தாள்
போன மாசம் வாங்கின புதுப் புடவை பிளாஸ்டிக் வாளியா மாறுவதும் இப்படிதான்.
//SUMAZLA/சுமஜ்லா said...
நான் இதுவரை என் வாழ்க்கையில் ஒரு சீரியல் கூட பார்த்ததில்லை என்று சொன்னால் நம்புவீங்களா?//
அது தானே, யாரு ஒரு சீரியல் மட்டும் பார்க்கிரா? அப்போ எத்தனை சீரியல் பார்க்கிரீங்க அக்கா?
//S.A. நவாஸுதீன் said...
அழகான புடவைதான் நேற்றுவரை அடுப்பங்கரைக்கு போனது அடுத்தாத்து அம்புஜத்தாள்
போன மாசம் வாங்கின புதுப் புடவை பிளாஸ்டிக் வாளியா மாறுவதும் இப்படிதான்.//
சில சமயத்தில் நமக்கே ஒரு குழப்பம், புடவைக்காக பீரோவா? பீரோவுக்காக புடவையான்னு!!
என்றோ சொன்னது சேர்ந்தே ரசித்தாய், இன்றைக்கு புதிராய் மொழி பெயர்த்து வைத்தாய்.
காரணம் இருக்கு ஷஃபி. கல்யாணம் முடிஞ்சதும் நம்ம Bachelor Degree இழக்கிறோம். அவங்க மாஸ்டர் டிகிரி வாங்கிடறாங்க. அதான் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடுறாங்க
நன்றாக இருந்தது கவி வரிகள்.....
வாழ்த்துக்கள்....Shafi
//S.A. நவாஸுதீன் said...
என்றோ சொன்னது சேர்ந்தே ரசித்தாய், இன்றைக்கு புதிராய் மொழி பெயர்த்து வைத்தாய்.
காரணம் இருக்கு ஷஃபி. கல்யாணம் முடிஞ்சதும் நம்ம Bachelor Degree இழக்கிறோம். அவங்க மாஸ்டர் டிகிரி வாங்கிடறாங்க. அதான் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடுறாங்க//
டிகிரி இழந்தாலும் சரி போவுதுன்னு விட்டுரலாம், சில சமயத்தில் ரென்டாம் நம்பர் பள்ளிக்கூடத்தில் படிக்கிற ரேஞ்சுக்கு ஆயிறோம்.
//சப்ராஸ் அபூ பக்கர் said...
நன்றாக இருந்தது கவி வரிகள்.....
வாழ்த்துக்கள்....Shafi//
நன்றி சர்ப்ராஸ், ரசிச்சீங்களா, ரொம்ப பயந்துராதீங்க, இது பூனை சன்டைத்தான்
இறகு போல் குவளை, இருபது கிலோ ஆனது, நானும் புரிந்து கொன்டேன் 'நங்' சத்தத்தால்
சில நேரம் நம்ம மேல உள்ள கோபம் புள்ளைங்க தலைல "நங்"ன்னு இறங்கும். பாவம் பிள்ளைகள்
திட்டித் தீர்ப்பது கதவின் மேல் காக்காவைத்தான், காட்டம் புரிகிரது கருசமனி விவகாரம்தான்.
மீட்டர் நீள நெக்லஸ், முழங்கை வரை வலையல்கள், முனகல் நிற்கவில்லை, கடையே இவளுக்கு மாற்றனுமாம்.
அப்பதானே எல்லோரும் "தங்கமான" பொம்பளைன்னு சொல்லுவாங்க நினைப்பு.
//S.A. நவாஸுதீன் said...
இறகு போல் குவளை, இருபது கிலோ ஆனது, நானும் புரிந்து கொன்டேன் 'நங்' சத்தத்தால்
சில நேரம் நம்ம மேல உள்ள கோபம் புள்ளைங்க தலைல "நங்"ன்னு இறங்கும். பாவம் பிள்ளைகள்//
அது கூட அனல் பறக்கும் வசனங்களும் இருக்கும்!!
ஷஃபி மிதவாதியா இருந்தா, நவாஸ் தீவிரவாதியா இருப்பீங்க போலுள்ளதே?!
நான் கேடயம் ஏந்திட்டேனுங்க! நம்ம ப்ளாக்ல பாருங்க!
உயர்தினையும் அஃறினையும் மாறி மாறி மாற்றும்'இந்த' இவளை மாற்றும் முயற்சியில்.... இவன்
புளிய வச்சு தேச்சா பித்தளை பளபளன்னு ஆகும். ஆனால் பவுனா மாறாது. விட்டுடுங்க
//S.A. நவாஸுதீன் said...
மீட்டர் நீள நெக்லஸ், முழங்கை வரை வலையல்கள், முனகல் நிற்கவில்லை, கடையே இவளுக்கு மாற்றனுமாம்.
அப்பதானே எல்லோரும் "தங்கமான" பொம்பளைன்னு சொல்லுவாங்க நினைப்பு.//
இப்பவெல்லாம் தங்கமேன்னு கொஞ்சக்கூட பயமா இருக்கு அப்பு!! முடிஞ்ச வரை அடக்கி வாசிக்கிரது நல்லது.
//S.A. நவாஸுதீன் said...
உயர்தினையும் அஃறினையும் மாறி மாறி மாற்றும்'இந்த' இவளை மாற்றும் முயற்சியில்.... இவன்
புளிய வச்சு தேச்சா பித்தளை பளபளன்னு ஆகும். ஆனால் பவுனா மாறாது. விட்டுடுங்க//
இன்னக்கி வீட்டுல என்ன நடக்கப்போவுதுன்னு நினைச்சா இப்பவே வயித்துல புளிய கரைக்குது
Nice, however you should have exhibited the original kavithai also.
//mukesh said...
Nice, however you should have exhibited the original kavithai also.//
Thanks Mukesh, Just click the 'ithukku' you can read the kavi posted by sumajla.
கிளம்பிட்டேளா???
ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எதிர் கவுஜ ரொம்ப தமாசு...
கலக்கல்
வாங்க அபூ!! நீங்க இப்பொத்தான் வந்து குதிக்கிரியளா? நாங்க காலமுதல் வரிஞ்சு கட்டிக்கிட்டு இருக்கோம்.
//S.A. நவாஸுதீன் said...
கேட்பதெர்க்கெல்லாம் 'ம்' தான் அந்த 'ம்' இல்லயாம், இப்பொ இது வேறாம்.
ஒரே "ம்" தான். ஆனா அப்பப்ப உருமாறு(ம்)//
டியூன் எல்லாம் அவங்க பார்ட் நவாஸ்!! நாம அடக்கி வாசிக்கிரது பெட்ட்ர்.
super
// rose said...
super//
ஆதரவுக்கு நன்றி ரோஸ்
வித்தியாசமான கவிதை.... நல்லா
இருக்கு ஷஃபி....
//தமிழரசி said...
வித்தியாசமான கவிதை.... நல்லா
இருக்கு ஷஃபி....//
தமிழுக்கு அரசியே சொல்லியாச்சு அப்புறம் என்ன!! மிக்க நன்றி அக்கா.
எதிரியா மாறிட்டீங்க (ஐயோ.... யாருக்கும் இல்லீங்க....கவிதைய சொன்னேன்...)
நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.
எங்க ஊர் பக்கம் வர மாட்டீங்களா???
//சப்ராஸ் அபூ பக்கர் said...
எதிரியா மாறிட்டீங்க (ஐயோ.... யாருக்கும் இல்லீங்க....கவிதைய சொன்னேன்...)
நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.
எங்க ஊர் பக்கம் வர மாட்டீங்களா???//
எதிராய் கவி எழுதினாலும் உங்களைப்போன்ற நன்பர்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி தான்.
கவிதைக்கு பதில் கவிதை சூப்பர்.
நல்ல எதிர்வினை.(ஏதோ நம்மால முடிஞ்சது.)
//அக்பர் said...
கவிதைக்கு பதில் கவிதை சூப்பர்.
நல்ல எதிர்வினை.(ஏதோ நம்மால முடிஞ்சது.)//
நன்றி அக்பர். ஆமாம் ஏதோ நம்மாளான ஒரு சிறு சன்டை
சிங்களுக்காக சீறி எழுந்த ஷஃபி வாழ்க
//நட்புடன் ஜமால் said...
சிங்களுக்காக சீறி எழுந்த ஷஃபி வாழ்க//
வாங்க ஜமால், இப்படித்தான்யா உசுப்பு ஏத்தி விட்டுட்டு, நாமளும் கவிதை எழுதி, இவ்வளவு நாள் கிடைச்ச கடலைக்கறிக்கும் ஆப்பு வச்சுட்டாங்கய்யா..
எதிர்கவுஜ எழுத ஆரம்பிச்சுட்டீங்க ..கலக்குங்க..ஷஃபி...
//
திட்டித்தீர்ப்பது கதவின் மேல் காகத்தைத்தான்
காட்டம் புரிகிரது கருசமனிதான் விவகாரம் //
இது நல்லா இருக்கே !!!
//அ.மு.செய்யது said...
எதிர்கவுஜ எழுத ஆரம்பிச்சுட்டீங்க ..கலக்குங்க..ஷஃபி...
//
வாங்க செய்யது, எல்லாம் நம்ம நவாஸ் உசுப்பு ஏத்தி விட்டதுதான்.
//அ.மு.செய்யது said...
திட்டித்தீர்ப்பது கதவின் மேல் காகத்தைத்தான்
காட்டம் புரிகிரது கருசமனிதான் விவகாரம் //
இது நல்லா இருக்கே !!!//
வாங்கி கட்டிக்கிறது நாங்கள்ள, நல்லாத்தேன் இருக்கும்.
//http://www.shafiahmedm.tk// மூலமாக வந்தேன், முதன்முறையாக.
ஒரு 50 போட்டுக்கிறேன்பா
//S.A. நவாஸுதீன் said...
ஒரு 50 போட்டுக்கிறேன்பா//
ஒரு ஒன்னு சேர்த்து, ஐம்பத்தி ஒன்னா போட்டு கொடுங்க அண்ணாச்சி
//SUMAZLA/சுமஜ்லா said...
//http://www.shafiahmedm.tk//
மூலமாக வந்தேன், முதன்முறையாக.
நன்றி அக்கா, வந்தமைக்கும் அறிவுரை தந்தமைக்கும்.
இப்பதான் ஷஃபி உங்க எதிர்கவிதையை முழுமையா படிச்சேன்.
//மீட்டர் நீள நெக்லஸ், முழங்கை வரை வலையல்கள்
முனகல் நிறக்கவில்லை, கடையை மாற்றனுமாம் இவள் பெயருக்கு!//
இந்த வரிகள் நல்லாருக்கு.
Post a Comment