ஜித்தா ஃபவுன்ட்டெயின் (ஜித்தா - சவூதி அரேபியாவின் வர்த்தக நகரம்), வெள்ளொளியாய் விண்ணை நோக்கி பாய்ச்சிடும் அழகை வீட்டிலிருந்தே ரசிக்க முடியும், இருந்தாலும் சிறிய மகன் ஒரு நாளைக்கு அது அருகில் போய் பார்க்க வேண்டுமென ஒரே பிடிவாதம், சென்ற வாரம் அருகில் சென்று பார்த்தோம் (பாதுகாப்பு காரணமாக மிகவும் அருகில் செல்ல முடியாது). இது பற்றிய சில தகவல்கள்:
உலகிலேயே மிக உயரமானதும் கடல் நீரை பயன்படுத்தும் ஒரே நீரூற்றாகும், கடல் மட்டத்திலிருந்து 312 மீட்டர் உயரத்திற்க்கு நீரை பாய்ச்சி அடிக்கிறது (ஈஃபில் டவரை விட உயரம்). இவ்வளவு உந்துதலுடன் செயல்படுவதற்க்கு இதன் பின்னனியில் இருக்கும் பொறியியல் துறையின் பங்கினை நாம் நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.
சக்தி வாய்ந்த பம்புகள், மற்றும் பைப்புகளை கடலுக்கு அடியிலேயே ஐந்து மாடி உயரத்திற்க்கு ஒரு கட்டிடம் போல் அமைத்து அதற்க்கு மேல் இவை யாவும் பொருத்தி இருக்கின்றார்களாம். இந்த ப்ம்ப் ஹவுஸ் கட்ட 7,000 டன் கான்க்ரீட் பயன்படுத்தியுள்ளார்கள்.