|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts


இந்த டைட்டுல பார்த்துட்டு இது என்ன‌மோ மென்ஹட்ட்ன் மொக்காசினோ ரெஸ்ட்டாரன்ட்டோ, இல்லாட்டி புர்ஜ் துபாய் முப்பதாவது மாடியில உள்ள ஹோட்டல் மெனுவோன்னு திகச்சு நிக்காதிங்க. இது உங்க வீட்டு அம்மனீஸ அசத்தி நீங்களும் சமையல்ல கில்லி தான்னு சொல்ல வைக்கப் போற "கிரி..கிரி..கிரிஸ்ப்பி உங்கள் சாய்ஸ்" ஸ்டைல்ல ஒரு ஸ்னாக்ஸ்.
யப்பா ஷஃபி இந்த சமாசாரமெல்லாம் நமக்கு தேவையில்லை, எங்க தங்கமணி என்னைய கிச்சன் பக்கமே விடுறது இல்லைன்னு பந்தாவா சில பேர் காலர தூக்கி விடுறது தெரியுது, ஆனா அதுல பாருங்க அவுக அப்படித்தான் சொல்லுவாக, நீங்க கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சு, அவுக போட்ட கோட்டை தாண்டி, கிச்சனுக்குள்ள குதிச்சு பட்டைய கெளப்புனம், அதுக்கு அப்புறம் அதோட குணம் தெரியும், டீடெய்லா அப்பால பேசிக்கலாம்.
இப்போ நான் சொல்லப்போற இந்த அயிட்டத்திற்க்கு நீங்க வேட்டிய வரிஞ்சு கட்டி, வேர்த்துக் கொட்ட வேண்டிய அவசியம் இல்லைங்க, என்ன சந்தோஷமா?
இப்பவே சில அம்மனீஸ் இந்த இன்ட்ரோவெ பார்த்து பயந்து பம்மி இருப்பாக, சரி நம்ம ப்ரொஸீட் பண்ணுவோம்.
முதல்ல தேவையான் பொருட்கள்:

பிரட் - 4 pcs
நெய் அல்லது வெண்ணெய் - 2 tsp (பிரட் மேல் தடவுவதற்க்கு)

பிரட்டை எடுத்து நீள வாக்கில் வெட்டிக்கோங்க (நான் இங்கெ படத்தில் கோடு போட்ட மாதிரி பேனாவுல கோடு போட்டு மானத்தை ராக்கெட்ல ஏத்திடாதிங்க பாய்ஸ்!!)

தோசைக்கல்ல அடுப்பில வச்சு நல்லா சூடானதும், இந்த பிரட் துண்டுகளை அது மேல போட்டு, அது மேல நெய்யை லேசா கரன்டியில தடவி, வாட்டி எடுங்க, பிரட் மொரு மொருன்னு, இலேசான சிவந்த நிறத்தை அடைந்ததும், அப்படியே எடுத்து தட்டையில வச்சுருங்க.
அப்புறம் இது தொட்டுக்க சட்னி மாதிரி, கீழ்க்கண்டவைகளை மிக்ஸ் பன்னி ஒரு கோப்பையில் வச்சுக்குங்க, அப்படி இல்லைனாஜலீலா அக்கா இது மாதிரி சட்னி வகைகள் போட்டு இருப்பாங்க, அதுவும் ஒ.கே. தான்.
தயிர் - 3 tsp
மிளகு தூள் - சிறிதளவு
உப்பு தேவையான அளவு
மயோனைஸ் - 1 tsp (தேவைப்பட்டால்)

இப்போ பிரட் கிரிஸ்ப்பி கிரேக்கர்ஸ் ரெடி, தொட்டுக்க சட்னி ரெடி. தங்கமணி வழக்கம்போல் சீரியலில் மூழ்கி இருப்பாக, ஒரு சவுன்டு கொடுங்க, அங்கே இருந்து டெசிபெல் கூடுதலா சவுன்டு வந்தா, நீங்களே தட்டையே கை நடுங்காம அவுக இருக்கிற இடத்துக்கே போய் பரிமாறி உலகக் கோப்பையை தட்டிச்செல்லலாம், இல்லைனா வேற மாதிரி கோப்பை பறந்து வர வாய்ப்பும் இருக்கு, பத்திரமா பார்த்துக்கோங்க.

சவாலுக்கு நாங்கள் தயார்னு சேவலாட்டம் நீங்க கூவுறது நல்லாவே கேட்க்குதுய்யா!!