|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!



தினமும் காலைப்பொழுதில் மட்டும் மகளை பள்ளியில் கொண்டுவிடுவது சமீபகாலமாக என்னுடைய பொறுப்பில் வந்து விட்டது, அந்த ஐந்து நிமிடத்திற்குள் தினமும் ஒரு சில நிகழ்வுகளை சொல்லி வைத்தாற்போல் கடந்து செல்வது வழக்கம்.

வீட்டைவிட்டு இறங்கியவுடன் எதிரே ஒரு வயதான பங்க்ளாதேஷி, தனது ஆளுகையின் (ஆமாம், இங்கே ஹாரிஸ் என அழைக்கப்படும் வாட்ச்மேனுக்கு தான் அவ்ளோ அதிகாரமும்) கீழ் தங்கியிருப்பவர்களின் அனைத்து வாகன்ங்களை துடை துடையென பளபளப்பாக்கும் மும்முரத்தில் இருப்பார், காலை வேளையிலேயே அவருடைய உழைப்பின் தளர்ச்சி தென்படும்.

சாலை திருப்பத்தில் உள்ள் குப்பைத்தொட்டியில் உப்யோகமான பொருட்கள் எதுவும் கிடைக்காதா என ஒரு குச்சியால கிண்டி கிளரி ஒரு தள்ளுவண்டியுடன் நிற்கும் சோமாலியப் பெண், பெரும்பாலும் அவ்வண்டி நிறைந்தே காணப்படும், துச்சமென தூக்கி எரியும் பல பொருட்கள் பயனுள்ளதாக மாறுவது மகிழ்ச்சியே..

இரண்டு வீடு தள்ளி, ஒரு ஆஃப்கானியச் சிறுவனை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஒரு வேன், அவன் என்றுமே தாமதப் பேர்வழி போல், அவனை அரபியில் திட்டி தீர்க்கும் எகிப்திய ஓட்டுனர். அந்த வாகனத்தினுள் உற்று நோக்கினால், உலக நாடுகளின் வளரும் நட்சத்திரங்கள் கண்மூடி ஆழ்ந்த சிந்தனையில்.

சற்று தூரத்தில் தனது வீட்டின் பங்க்ளாதேஷ் காவளாளியை கை பிடித்தபடி பள்ளிக்குச் செல்லும் மலேசிய சிறுமி.

ஒரு சில மாதங்களேயான கைப்பிள்ளையை தனது இரு கைகளாலும் இருக்கிப் போர்த்தியபடி ஒரு தாய், மூண்றாவது கைவேண்டி அவரின் முந்தானையை பிடித்து, அங்கும் இங்கும் பராக்கு பார்த்தபடி முதுகினில் மூட்டையை சுமந்து பள்ளிக்குச் செல்லும் அவரது ஒன்றாம் வகுப்பு மகள்.

தனது மூன்று பெண் குழந்தைகள் பின் தொடர, இரண்டு கைகளிலும், முதுகிலும் அவர்களின் பைகளை சுமந்தபடி ஒரு பாக்கிஸ்த்தானி, அவருடைய உயரமும், அவர் சுமந்து செல்லும் விதமும் ஏதோ மலை ஏறச் செல்வது போனற காட்சி..

இன்று வியாபாரம் சூடு பிடிக்கும் என நம்பிக்கையில் வாசல், படிகளை நன்றாக கூட்டி பெருக்கி, வியாபாரத்தை பெருக்க தயாராக நிற்கும் ’கொச்சி பஷீர் காக்கா’.

நீச்சள் குளம், ஏரோபிக்ஸ் இன்னும் பலவகையறாக்களில், சேர்த்து வைத்துள்ளதை குறைப்பதறகாகவும், உள்ளதை உள்ளபடியே வைத்துக் கொள்ளவும், பெண்களுக்கான மையம், சாலையை அடைத்தபடி அதன் முன் டாம்பீக வாகனங்கள்.

சரி பிள்ளைகளை பள்ளியில் விட்டாச்சு, விட்டிற்கு போகும் முன், அன்றைய செய்திகளை அப்டேட் செய்தபடி பள்ளி வாயில் முன் சிறு வட்டஙகளாய் அம்மாக்கள்.

அடக்கமான அப்பாவாய் வழக்கம்போல் அலுவலகம் செல்ல ஆயத்தமாய் இந்தப் பதிவாளன்.

Google Buzz (கூகிள் பஸ்)

சமீபத்தில் சிறிது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்ககூடிய புதிய சமூக கட்டமைப்பு பிணையம் (Social Networking). நமக்கு பிடித்த படங்கள், வாசகங்கள், எண்ணங்கள் இவற்றை நண்பர்களுடன் எளிதாக‌ (பேஸ் புக்கை போல‌) பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்டதே இந்த பஸ். நல்ல முயற்சி தானே, பிறகு ஏன் சர்ச்சை? கூகிள் அறிமுகப்படுத்திய விதம் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது. ஆம், அதுவாகவே ஊடுருவி, தனது அஞ்சல் பெட்டிக்குள் வந்தமர்ந்தது, உரிமை கொண்டாடுவது போன்ற உணர்வு. இதுவே தனி செயலியாக (application) இருந்திருந்தால் இத்தனை விவாதங்கள் இருந்திருக்காதோ?

சரி, பேஸ் புக்கை இந்த புதிய பஸ் முந்தி விடுமா? தற்போதைய புள்ளி விபரப்படி, பேஸ் புக் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை 400 மில்லியன்க‌ள், ஜீமெயில் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை 176 மில்லியன்களே, கூகிள் தனது ஆர்வலர்களை கவர்ந்திழுக்க பல சர்க்கஸ்களை செய்யும் என்பது பலரது கணிப்பு. தேடு பொறி (Search Engine) நுணுக்கத்திலும் அவர்கள் முன்னோடியாக இருப்பதால், காலப்போக்கில் இந்த பஸ் வெற்றி நடை போடும் என்பது வல்லுனர்களின் கருத்து.

நமது தளத்தில் வந்தமர்ந்து விட்டது, என்னவென்று தான் பார்த்துவிடுவோமே என இப்பொழுதே இதனை பலர் உப்யோகிக்கத் தொடங்கி விட்டார்கள், பேஸ்புக், ட்விட்டர், லின்க்‍இன் என பத்தோடு பதினோன்றாக இந்த பஸ்ஸும் வலம் வரும். ஓ.கே போலாம் ரைட்...

----------------
Parallel Parking (இணையாக-நிறுத்தல்)

வாகன‌ங்களை இணையாக தரிப்பிடத்தில் (Parallel Parking)சரியான முறையில் நிறுத்துவது தனி திறமையே, அவரவர் விவேகத்தை பொருத்து ஒரு சில வினாடிகள் முதல் பல நிமிடங்கள் வரை ஆகும். வரலாறு முக்கியம்ங்கிற மாதிரி நமது அன்றாட வாழ்விலும் கணக்கும் பிணைந்து முக்கியத்துவம் பெறுகிறது, லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு ஆய்வாளர் இதனை ஃபார்முலா மூலம் விளக்கியுள்ளார், ஆக நமது வாகனத்தை நிறுத்தும் போது வ‌ட்டம், கோடு போன்ற வடிவவியல் (Geometry) காரணிகளை பின்பற்றுகிறோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் மிகவும் உபயோகமாக இருக்கும், எப்படி, எந்த இடத்தில் சரியாக வளைத்தால், சரியாக நிறுத்தலாம் என விவரிக்கப்பட்டுள்ளது.


------------------

Biscuits (பிஸ்கோத்து)

சென்ற வாரம் வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை கடையில் அரபி, ஆங்கில மொழிகளால் எழுதப்பட்டு அடுக்கி வைக்கப்பட்ட பிஸ்கட் பாக்கெட்டுகளில் நடுவில் கண்ணை கவர்ந்தது தமிழ் மொழியில் 'சூப்பர் கிறீம் கிறக்கர்' என‌ எழுதப்பட்ட இந்த பிஸ்கெட் பாக்கெட், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். நல்லா இருக்கு.

------------


Source: The Geometry of Perfect Parking by Simon R. Blackburn
Credit: Alyson Hurt, NPR


நாம் எதற்கெடுத்தாலும் ஏதாவது ஒரு காரணம் வைத்திருப்போம் அல்லவா, வேலைக்கு ஏன் தாமதம்னு கேட்டா, அதை பஸ் மேலேயோ, ரைல் மேலேயோ போட்டு, ஒரு வழியா அன்றைய நாளை சமாளிப்போம்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் படித்தது, இது மாதிரி கேளிக்கூத்தான உண்மையான காரணங்கள் சிலவற்றை தொகுத்து அதிலே போட்டிருந்தாங்க.

வருமான வரித் துறை

க்ளைன்ட் குறித்த நேரத்தில் வரி கட்டவில்லை

அதுவா, என்னோட க்ளைன்ட்டுக்கு 'தாமதமா வரி கட்டுகிற வியாதி '(Late filing syndrome) இருக்கு, அதனால அப்படி ஆயிடுச்சு.

தீர்ப்பு : மனோவியல் வல்லுணர்கள் ஆலோசனைப்படி இதை ஏற்க முடியாது. மரியாதையா ஃபைனோட பணத்தை கட்டு.

தசம தானம் (Decimal point) எபோதுமே குழப்பமப்பா

ரேன்டி கணக்கில் $1,772.50 க்கு பதிலா $177,250 இருந்துச்சு, சரி பிரச்ணையில்லை, கமுக்கமா அடுத்த நாளே விட்டைப் பூட்டிட்டு ஹவாய் தீவுக்கு கிளம்பிட்டாங்க.

சாரிங்க, எங்களுக்கு இது மாதிரி பெரிய தொகை அடிக்கடி கணக்கில வந்து விழும், அதனால நாங்க இந்த டெசிமல் குழப்பத்தை கவனிக்கல.

தீர்ப்பு : எங்களுக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு, புடிச்சு வைங்கடா உள்ளே.


சாலை விதி மீறல்

என்னய்யா இப்படி குடிச்சிட்டு வண்டி ஓட்டுற?

அய்யா நான் குடிக்கலங்க, அந்த ரெஸ்டாரன்டில் உள்ள் சேனிட்டைசர்ல அவ்ளோ ஆல்கஹால ஊத்தி இருக்காங்க, முகத்தை அதில தொடச்சுதுக்கே இந்த மாதிரி ஆயிடுச்சு.

ஹே நிறுத்து நிறுத்து, ஏன் இவ்ளோ வேகமா போறீங்க?

1. எனக்கு முன்னாடி போனவன் இது மாதிரி தானே போனான்.

2. நான் உச்சா போவணும்

3. எனக்கு எவ்ளோ லிமிட்ல போவணும்னு மறந்திடுச்சு

4. நாங்க குழந்தை பெத்துக்கிற மூடல் இருந்தோம், அதனால...

5. என்னோட நண்பன் ஊரிலரிந்து வருகிறான், அவன் மனைவிய உடனே பார்ககணும்னு சொன்னான், அதான் வேகமா போறேன்.

அலுவலம்

நேத்து வேலைக்கு வராம எதுக்குப்பா டிமிக்கி கொடுத்திட்ட?

1. அதுவா, மறந்திட்டு நான் பழைய ஆஃபிஸுக்கு போய் வேலை பார்த்துட்டு இருந்துட்டேன்.

2. என்னோட வேலை பரிபோவது மாதிரி கன‌வு கண்டேன், அதனால படுக்கையை விட்டு எழுந்திருக்க பிடிக்கவில்லை.

3. என்னோட ஷூவை யாரொ திருடிட்டு போய்ட்டாங்க‌

4. வருகிற வழியில ஒரே பனிமூட்டம், வழி மாறி எங்கேயோ போய் விட்டுருச்சு.

5. என்னோட நாய் போலிசுக்கு போன் பண்ணிடுச்சு, அவங்க வந்து என்கொயரி அது இதுன்னு படுத்திட்டாங்க, அதனால வரமுடியல.

டாப் மோஸ்ட்

நீ ஏம்மா உன்னோட நண்பன இப்படி அடிச்சுருக்கே, விரல்களையெல்லாம் கடிச்சு இருக்கியே.

ஆமா பின்னே என்ன, ஒரு நாளைக்கு எனக்கு 10 மார்ஸ் சாக்லெட் சாப்பிடணும், அவன் என்னடான்னா ஒண்ணு, ரெண்டுன்னு வாங்கித்தரான், சரியான பசி அதான்....

-------------------------------------------------------------------------------------------------


Maybe you don't like your job, maybe you didn't get enough sleep, well nobody likes their job, nobody got enough sleep. Maybe you just had the worst day of your life, but you know, there's no escape, there's no excuse, so just suck up and be nice. ~Ani Difranco