
அன்பு நன்பர் நட்புடன் ஜமால் எனை ஊக்கப்படுத்தி மகிழ்வித்த இந்த விருது!! சம்பிரதாயப்படி இந்த விருதை நம் பதிவுலக நன்பர்களுக்கு வழங்கி சிறப்பிக்க வேண்டுமாம், விருது கொடுக்கும் தகுதி இந்தப்புதிய பதிவாலனுக்கு சுமத்தப்பட்ட சுகமான சுமை தான். இங்கு பழம்பெரும் மூத்த பதிவாலர்களுக்கு இந்த விருதை அளிப்பதில் பெருமைப்படுகின்றேன்.
இவரது எழுத்துக்களில் அவருடைய ஆழமான் உழைப்பும், அது பற்றிய நுண்ணறிவும் இருக்கும், Teaching Skills இவரிடம் நிறையவே இருக்கிறது. சமீபத்தில் வலைப்பூ சம்பந்தமான தொழில் நுட்பக்கூறுகளை பதிவாக போட்டு புரட்சி செய்துவரும் சுமஜ்லா.
இவருடைய கவிதைகளில் சமுதாயப்புரட்சியும், ஆதங்கமும் சீறி எழும், அதற்க்கு சாட்சி சமீபத்திய அவருடைய படைப்பு 'சீதைகளை சிதையில் ஏற்றாதீர்'.... அவரே தான் சக்தி
கவிதைக்கு ஒர் அரசி, தனது ஓசையையே கவிதையாக்கி மகிழ்த்திடுவார், இவருடைய கவிதைகளின் ரசிகர் பட்டாளத்தில் நானும் ஒருவன், இவர் தான் எங்கள் தமிழரசி.
அவர் கவிதைக்கு அரசியென்றால் இவர் சமையற்கலையில் அரசி, அது மட்டுமல்லாது வீட்டு பராமரிப்பு குறிப்புகளை மிகச்சிரத்தையுடன் பகிர்ந்து வருகிறார். இவர்தான் ஜலீலா
அழகிய சிறு கவிதைகளை படைத்து வருபவர். என்னுடைய ஆக்கங்களுக்கு ஊக்கம் கொடுப்பதில் இவரும் ஒருவர். இவருடைய கவிதை 'சுவாசம்', நான் படித்து ரசித்தவற்றில் ஒன்று. இவர்தான் ரோஸ்.
சமீபத்தில் இவருடைய சிறு கவிதைகளை படித்தேன். மிகவும் எதார்த்தமாக இருக்கும் இவர் கவி வரிகள். இவருடைய ஆக்கங்கள் "ஏக்கம்" மற்றும் "வெட்கம்", சிறிய வரிகளானாலும், ரசிக்கும்படியாக இருந்தது. வாழ்த்துக்கள் காயத்ரி!!நன்றி நன்பர்களே!!