சமீபத்தில் என்னுடைய வலைப்பதிவிற்க்கு புதிய வார்ப்புரு (Template) மாற்றலாம் என, பச்சை நிறத்திலேயே வேறு ஏதாவது நல்ல வடிவமைப்பு கிடைக்குமா என தேடியபோது, கிடைத்தது தான் தற்போது நீங்கள் காணும் இந்த புதிய தோற்றம்.(பிடிச்சுருக்கா?)
இயற்க்கையென்றாலே பசுமையல்லவா? ஏன் நமது வலைப்பூவே நாம் நினைத்த நல்ல கருத்தை நமது நண்பர்களுக்குச் சொல்லக் கூடாது, என சிந்தித்ததே இந்த பசுமை நிறமும், பக்கத்தில் காணும் சிறு படங்களும், குறுந்தகவல்களும். (ரொம்பவே யோசிக்கிறாங்கய்யா).
நீங்கள் படிக்கப் போகும் இந்த ஆக்கம், எங்களது நிறுவனத்தின் Paperless Office Campaignக்காக சென்ற வருடம் எழுதியது, இயன்ற வரை மொழிபெயர்த்து வழங்குகிறேன்.

இது என்ன ஒரு தாள் தானேன்னு நினைத்து நாம இஷ்டத்திற்க்கு அடித்தும், கிழித்தும் தள்ளுகிறோம், ஆனால் இதன் பின்னனியில் நமது நிறுவனத்திற்க்கு விழைவிக்கும் நஷடங்களையோ, நமது சுற்றுப்புறச் சூழலுக்கு நாம் ஏற்படுத்தும் பாதகங்களையோ நாம் சிந்திப்பதேயில்லை.
சிலரை கவனித்தீர்களென்றால் தனக்கு வருகின்ற மின்னஞ்சல் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் பிரின்ட் எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதை சரியாக கூட படித்து இருக்கமாட்டார் கொஞ்சங்கூட யோசிக்காமல் சர்ர்ரென்று கிழித்து தூக்கி எறிவார்கள். இதனால் எத்தனை நஷ்டம், என்ன நம்ம வீட்டு பணமா போகப்போகிறது என அவர்களுக்கு நினைப்பு!! (இனிமேலாவது திருந்துங்களேன்...)
சமீபத்தில் அமேரிக்காவில் எடுத்த ஆய்வினில் கண்ட சில புள்ளி விவரங்கள்:
- ஒரு காகித்தின் விலை ஒரு ரூபாய் என்றால் அதனை அச்சிடுதல், நகல் எடுத்தல், வினியோகித்தல், பத்திரப்படுத்துதல் போன்ற சங்கிலித்தொடர்பான செலவுகளே முப்பது மடங்கு ஆகிறதாம்.
- சராசரியாக ஒரு ஊழியர் ஒரு வருடத்திற்க்கு பத்தாயிரம் காகிதங்கள் உபயோக்கின்றாராம்.
- அமேரிக்காவில் மட்டும் வருடத்திற்க்கு 3.7 மில்லியன் டன் காகிதங்கள் அலுவலகங்களில் மட்டும் உபயோகிக்கப்படுகிறது.
- காகித் தொழிற்ச்சாலைகளுக்கு மட்டும் 12 சதவிகதம் எரிபொருள் செலவு செய்யப்படுகிறதாம்.
- ஒரு காகிதம் தயாரிக்க ஒரு குவளை தண்ணீர் தேவைப்படுகிறதாம்.
- சிட்டி குரூப் நிறுவனம், இனி பிரின்ட் அல்லது நகல் எடுப்பவர்கள், தாளின் இரண்டு பக்கங்களிலுமே அச்சிட வேண்டும் என்று ஒரு சுற்றரிக்கை விட்டதாம், இந்த ஒரு சிறு முயற்சியால் அவர்கள் சேமித்த தொகை ஆண்டிற்க்கு ஏழு லட்சம் டாலர்கள்!!
அலுவலகங்களில் காகிதங்களின் உபயோகத்தை தவிர்க்க முடியாதென்றாலும், இயன்ற வரை குறைவாக பயன்படுத்த முயற்சிப்போமே!!
அனைவருக்கும் தெரிந்தவை தான் இந்த குறிப்புகள், சற்று நினைவூட்டுவதற்க்காக்:
- எப்பொழுதும் தாளின் இரண்டு பக்கங்களிலும் (double sided) பிரின்ட் செய்யுங்கள்.
- பெரும்பாலும் மின்னஞ்சல்கள் பிரின்ட் எடுக்க வேண்டிய அவசிய்ம் இருக்காது, அப்படியே வேண்டுமென்றால் தேவையான பகுதியை மட்டும் எடுக்கலாம்.
- பழைய பிரின்ட் எடுத்து, தேவையில்லாத ஆவனங்களை, வேறு பல உபயோகத்திற்க்காக் பயன்படுத்தலாம் (கிறுக்குவது, நோட்ஸ் எழுதுவது, கவிதை எழுத..?)
- பிரின்ட் எடுப்பதற்க்கு முன், மானிட்டேரிலேயே லேஅவுட், மற்றும் ஃபார்மேட்டுகளை (Print preview) சரி பார்த்து பின்னர் பிரின்ட் எடுக்கலாம்.
- எழுத்துக்களின் அளவை (Font size) குறைத்து, பக்கங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.
- முடிந்தால் ஒவ்வொருவரும் Electronic Filing System வைத்துக் கொளவது நல்லது. ஏதாவது ஆவணம் தேவைப்பட்டால் உடனே தேடி எடுத்து, மின்னஞ்சல் மூலம் அனுப்பவதற்க்கும் இலகுவாக இருக்கும்.
"THINK BEFORE YOU INK"