
(அது 1999 இன்டெர்னெட் உபயோகப்படுத்த தொடங்கிய காலம், வழக்கம்போல் நன்பர்கள் சேட்டிங் அது இது என்று அறிமுகப்படுத்தினார்கள், ஆன்லனில் பல நல்ல நன்பர்கள் கிடைத்ததும் உண்டு, ஏடா கூடமாக எதுவும் நடக்கவில்லையென்றாலும்.. அப்படி ஒன்று நடந்திருந்தால், ஒரு சிறு கற்பனை)
அழுத்தினேன் அறை எண் மூன்று
அடடா, அறை முழுதும் அசத்தல்கள்
குயில்களின் கூட்டம், மானோடு மயில்களும்தான்
பாப் அப்பாய் ஒரு பாப்பா, என்னை பாரப்பா என்றது
வயது, நிறம், உயரம் இதுவும் வேண்டுமாம்
தட்டிவிட்டேன் ஒரு என்ணை தந்திரமாய்,
அவளுக்கு வழக்கம்போல் பதினெட்டேத்தானாம்
இதனிடயே இன்னொருத்தி இங்கே வா என்றழைத்தால்
ரகசியமாய் அவள் சொன்னால் ரஷ்யப்பெண் தானென்று
ஒன்றா இரன்டா இப்படியாய் ஒன்பது பேர்
அமேரிக்கா, ஆப்பிரிக்கா இப்படி பல கன்டங்கள்
சிந்தனை சிறகடித்தது சிகாகோவுக்கும், சிங்கைக்கும்
சிறு இடைவெளியில் ஒன்பதில் ஒன்றைக்காணோம்
அடுத்த சில நொடிகள், அறை முழுதும் வெருமை!!
தடங்களுக்கு வருந்துகிறோம்....தொழில் நுட்பக்கோளாறாம்