இந்த வண்ணக் கலவை எனது நான்கு வயது மகன் அத்னான் வரைந்தது. அவனாகவே வண்ணங்களை தேர்ந்தெடுத்து ஏதோ ஒன்றை சொல்வது போல் இருந்தது இந்த ஓவியம்.
இந்த ஓவியத்திற்க்கு அவன் கொடுக்கும் விளக்கம் 'பொம்மை' 'புது மாடல் மொபைல் போன்' 'பூக்கள்' இன்னும் பல.
இன்று ஆகஸ்ட் இரண்டாம் தேதி, நண்பர்கள் தினம்!! இதனைக் கண்டவுடன் எனக்குத் தோன்றியது நமது நட்புக்களே!! நமது எண்ணங்கள் பல்வேறு வண்ணங்கள், ஆனால் நட்பு எனும் அழகிய உருவால் ஒன்றாகிறோம்.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்