நேத்து வீட்டு பக்கத்தில் உள்ள சோப்பு, சீப்பு, கண்ணாடி எல்லாம் விற்பாங்கள்ள, அது தான் 'ஃபேன்சி ஸ்டோர்' அந்த கடைக்கு போனேன். நீ ஏன்டா அந்த கடைக்கு போனேன்னு கேட்குறீங்களா? நாம் என்ன தாய்க்குலங்கள் மாதிரி கூடை நிறைய மேக்கப் சாதனங்களா வாங்கப்போறோம்? நமக்குன்னே வச்சுருப்பாங்க ஒரு ரியாலுக்கு use & throw ஷேவிங் மெஷின், அதுவும் கேஷ் கவுன்ட்டர் பக்கத்திலேயே இருக்கும், கடைக்கு உள்ளே போவனும்னு அவசியம் இல்லை, ஒரு ரியால வாங்கிகிட்டு மெஷினை கையில கொடுத்து மொவனே அப்படியே நடைய கட்டுன்னு அனுப்பி வச்சுடுவாங்க.
சரி..சரி மேட்டருக்கு வர்ரேன், அந்த கடையில் சீப்பு, சோப்பு, கண்ணாடியெல்லாம் அழகாக அடுக்கி வச்சிருந்ததை பார்த்ததும் நம்ம புதிய blog மூளைக்கு ஒன்று தோன்றியது. அத தான் இங்கு உஙகளுடன் பகிர்ந்துக்குரேன்:
சோப்பு
சோப்பு போட கத்துக்குங்க...
சலவைக்கு உதவும், பல சலுகைகள் பெறவும் உதவும்.
சீப்பு
காலை வாறும் ச்சீப்பான மனிதரைவிட தலையை வாறும் சீப்பு மேல்.
கண்ணாடி
பொய் சொல்லத்தெரியாது, உள்ளதை உள்ளபடி சொல்லும் மாயக்கண் என் முன்னாடி!!