|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!

வாங்க வாங்க வரிசையில ஒழுங்கா நின்னு உங்களோட அனுமதிச் சீட்டை வாங்கிக்கோங்க, 2012ல் முதல் முறையா வானவெளியில் வர்த்தகரீதியான புதுசா ஒரு விடுதியை தொடங்கப் போறாங்க. Galactic Suite அப்படிங்கிற ஒரு நிறுவனம் நம்மள மாதிரி ஆர்வம் உள்ளவங்க எல்லோரையும் ரசிய ராக்கெட் மூலம் மேல அனுப்ப போறாங்களாம். இங்கேயிருந்து மேல போக இரண்டு நாட்களாகுமாம், அதுக்கு முன்னாடி உங்களையெல்லாம் 8 வாரத்துக்கு உண்டு இல்லைன்னு பண்றமாதிரி பயிற்சி கொடுக்கிறதுக்காக கரீபியன் தீவுக்கு கூட்டிட்டு போவாங்களாம்.
இந்த விடுதியில இருந்துக்கிட்டே 80 நிமிடத்திற்கு ஒரு முறை உலகத்தை சுத்தி சுத்தி வந்துக்கிட்டே இருக்கலாம். இது வரை 43 பேர் இதுல பயணிக்க தங்களோட் பெயரை பதிவு செஞ்சு இருக்காங்க. சரி எவ்ளோப்பா செலவு ஆகும்? மூன்று நாளைக்கு 4.5 மில்லியன் அமேரிக்க டாலர்கள் செலவாகும், மூனு நாள் வேணாம், ஒரு நாளைக்கு மாத்திரம் என்னைய கூட்டிட்டு போய் வந்துடுங்களேன்னு சொன்னா அது நடக்காது, இது என்ன தஞ்சாவூர் பஸ் ஸ்டான்டு பக்கத்திலேயா இருக்கு உங்க இஷடத்துக்கு போய் வர? ஆனாலும் பாருங்க மூனு நாளைக்கு சிறைல அடச்சு வச்ச மாதிரி எப்படித்தான் இருக்கப் போறாங்களோ, அதுனால இதெல்லாம் நமக்கு சரி பட்டு வராது, நீங்க போய்ட்டு வந்து உங்க பதிவுல ஒரு இடுகை போடுங்க, நாங்க வந்து கும்மி அடிப்போம்.


பூமியை நீங்க இப்படி படுத்துக்கிட்டே ரசிப்பீர்கள்!!பதிவுலக நண்பர் மாதவராஜ் துவக்கி வைத்து, உலகமெங்கும் சுற்றும் இந்த தொடர் பதிவில் என்னையும் மாட்டி விட்ட நவாஸ் அவர்களுக்கு நன்றி, இதோட விதிமுறைகள் இப்போ எல்லோருக்கும் மனப்பாடம் ஆகியிருக்கும்.

இதோ எனது பத்துக்கு பத்து:

1. அரசிய‌ல்

பிடித்த‌வ‌ர்க‌ள் : ஜெயலலிதா (டைனமிக் பெர்ஸனாலிட்டி), ஸ்டாலின் (சுறுசுறுப்பாக ஏதாச்சும் செய்கிறார்)

பிடிக்காதவர்கள் : பெரிய லிஸ்ட்டே இருக்கு

2. எழுத்து :

பிடித்தவர்கள்: சுஜாதா, பாலகுமாரன் (கல்லூரி நாட்களில் நிறைய படித்ததுண்டு)

பிடிக்காதவர்: அப்படின்னு சொல்கிற அளவுக்கு விவரம் இல்லைங்க

3.திரைப்பட பாடலாசிரியர்கள்:

பிடித்தவர்கள் : வைரமுத்து (எப்போதும்), டி. ராஜேந்தர் (அப்போது)பிடிக்காதவர் : குத்துப்பாடல்கள் எழுதும் யாவரும்

4.நகைச்சுவை நடிகர்

பிடித்தவர் : வடிவேலு
பிடிக்காதவர் : கவுண்டமணி

5. நடிகர்

பிடித்தவர்: கமல்
பிடிக்காதவர்: சிம்பு

6. நடிகை

பிடித்தவர் : நதியா (அப்போது)
பிடிக்காதவர் : பாவம் அவங்களெல்லாம் கோவிச்சுக்குவாகளே

7.தொழில் அதிபர்க‌ள்
பிடித்தவர்கள்: இரா. க. சந்திரமோகன் (அருன் ஐஸ் கிரீம்ஸ்), முகமது மீரான் (ரேனால்ட்ஸ் பேணா) உழைப்பாலும், தன்னம்பிக்கையினாலும் உயர்ந்தவர்கள்

பிடிக்காதவர்கள்: மக்களின் உழைப்பை சுர‌ண்டுப‌வ‌ர்க‌ள்


8. குடும்பத் தலைவர்
பிடித்தவர்: நான் தான்
பிடிக்காதவர்: அதுவும் நாந்தானுங்க‌


9. பதிவுலகம்
பிடித்தது: புதிய‌வ‌ர்க‌ள், புதுமைக‌ள், ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள்.
பிடிக்காதது: அவசியமில்லாத தனிமனித‌ தாக்குதல்கள், தேவையில்லாத‌ விவாதங்கள்


10. உணர்வு
பிடித்தது: சுயமுயற்சியால் அடையும் மகிழ்ச்சி
பிடிக்காதது: அம்மகிழ்ச்சியால் எல்லை மீறல்


ஊர் வழக்கப்படி இதை விட கலக்கலா பதிவினை தொடரும்படி நல்ல நண்பர்கள் சிலரை அழைக்கணுமாம்.

நான் அழைக்கப்போவது:

அன்பின் அண்ணன் இராகவன் நைஜீரியா

சமையலை பிடிபிடின்னு பிடிக்கும் ஜலீலா அக்கா
கோவச்சுக்காம பதிலளியுங்க ப்ளீஸ்.........