"என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்கப்பா" இப்படி பலபேர் சொல்லி நாம் கேட்டிருக்கின்றோம். சொல்வது யாராகவோ இருக்கட்டும், இதில் நமது பொறுப்பு என்னவென்பதை பற்றி இங்கே கொஞ்சம் புரிஞ்சுக்கலாமா? சமீபத்தில் Communication பற்றி படிக்கும்பபோது கிடைத்தவற்றை உங்க கூடவும் பகிர்ந்துக்கலாமேன்னு தோன்றியது.
வீட்டிலும் அலுவலகத்திலும் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரனமும் இது தான்.
"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பன்றே"ன்னு அலரி அப்புறம் ஐஸ் வைக்கும் வீட்டுக்காரர்.
"உங்க கிட்டேப்போய் இதை செய்ய சொன்னேனே", என்னய்ய சொல்லனும் - இப்படி இடித்துரைக்கும் இல்லத்தரசி.
"என்னடா இப்படி ஒரு சில்லியான கேள்வி"ன்னு ஆச்சர்யப்படுத்தும் அப்பாக்கள்
இவுக எல்லோரும் இத கொஞ்சம் ஆழமா மேஞ்சுட்டு போங்க. Effective Communication க்கு சில காரணிகள்:
1. கவனித்துக் கேட்டல் (Listen)
பேசும்போது, அவங்க கண்ணைப் பார்த்து உங்க காதைக் கொடுத்து,கவனமா கேட்கனுமாம். "நீ ரொம்ப அப்ஸெட் ஆயிருக்கேன்னு எனக்கு நல்லா புரியுது, நீ என்ன சொல்ரேன்னும் எனக்கு புரியுது" இது மாதிரி சொல்வதன் மூலம் நீங்கள் கவனமாக கேட்கிறிர்கள் என்பது அவர்களுக்கு புரியும்.
2. மற்றவர்களின் உணர்வுகளை மதித்தல் (Empathy)
"டேய் மச்சான் இன்னக்கி மேனேஜர் பயங்கரமா ஏறிட்டார்டா, ரிப்போர்ட் கொடுக்க ஜஸ்ட் ஒரு மணி நேரம் தான், அதுக்கு போய்...." இப்படி ஒரு நனபர் வந்தார்னா, "அட போடா இதே ரோதனையா போச்சு நீயும், உன்னோட மேனேஜரும், நானா இருந்தா அப்பவே அந்தாள எட்டி உதைச்சுட்டு, வேற வேளைய பார்த்துட்டு போய் இருப்பே"ன்னு நீங்க சொன்னா சத்தியமா நீங்க மாறித்தான் ஆக வேண்டும்.
3. பொறுப்பேற்றல் (Be Responsible)
"சரி என்கிட்டே சொல்லிட்டியல்ல, நாம ரென்டு பேரும் நல்லா டிஸ்கஷன் பன்னுவோம், ஒன்னும் கவலைப்படாதே"...இப்படி ஒரு ஆருதல் கிடைத்தால் நிச்சயமா மற்றவர் சந்தோஷப்படுவார். அதை விட்டுட்டு "அச்ச்சோ... ரொம்ப சாரிப்பா" அத்தோட ஆளு எஸ்ஸ்ஸ்ஸ்ஸானா எப்படி இருக்கும்.
4. அடக்கம் அல்லது பணிவு (Be humble)
"இந்த மேட்டரெல்லாம் எனக்கு ஜுஜுபி" இது மாதிரி மேதாவித்தனத்தை கொஞ்சம் சுருட்டி வச்சுட்டு. உங்க LKG படிக்கர பொன்னு "அப்பா இன்னக்கி டீச்சர் என்னோட நோட்ல 5 ஸ்டார் போட்டாங்கப்பா"ன்னு சொன்னா நீங்க அவங்க லெவலுக்கு இறங்கி அதே குதூகலத்துடன் "அம்மாடியோவ் 5 ஸ்டார்,சூப்ப்ர்டா என் சமத்து"ன்னு உற்சாகப்படுத்த வேண்டும். அத விட்டுட்டு "சரி சரி, அது இருக்கட்டும் நாளைக்கு உள்ள ஹோம் வொர்க்கை போய் செய்"னு சொன்னால், அப்பாவை..அடப்பாவின்னு சொல்லத்தோனும்.
5. வார்த்தைகளை சிந்துமுன் சிந்தித்தல் (Be Thoughtful)
எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்றுவது மாதிரி, அவர் எது சொன்னாலும், "ஆமாம் அப்படித்தான்", "கரெக்ட்", "அவன விடக்கூடாது", அவரோடு சேர்ந்து நீங்களும் வசைமாரிப் பொழிய வேண்டாம். அவரை கொஞசம் அமைதிப்படுத்த முயற்சித்து, நீங்கள அதிகமாக பேசாமல், அவர் பேசுவதை கேட்டு, ப்ள்ஸ், மைனஸ் பாயின்ட்களை புரியவைத்து அப்புறம் என்ன செய்யலாம்னு தீர்மானிக்கலாம்.
ஒரு ரிப்பீட்டு:
*Listen* *Empathy* *Be Responsible* *Be Humble* *Thoughtful*
சந்தேகப்பேர்வழி Mr.Doubt என்ன கேட்கிரார்னா "இது எல்லாம் சொல்லித்தொலைச்சாத்தானே கரெக்ட்டா வொர்க் அவுட் ஆவும், எங்க வூட்டுக்காரவுக இந்த மாதிரி சிட்சுவேஷன்ல் மெளன மொழியிலய்யா பேசுராங்க" நான் என்ன செய்ய? ...என்ன செய்ய...மெளனம் தான் பதில்.