|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Showing posts with label Jeddah. Show all posts
Showing posts with label Jeddah. Show all posts
Posted on 8:47 PM

ஜித்தா நீருற்று (Jeddah Fountain)

Filed Under () By SUFFIX at 8:47 PM


ஜித்தா ஃபவுன்ட்டெயின் (ஜித்தா - ‍சவூதி அரேபியாவின் வர்த்தக நகரம்), வெள்ளொளியாய் விண்ணை நோக்கி பாய்ச்சிடும் அழகை வீட்டிலிருந்தே ரசிக்க முடியும், இருந்தாலும் சிறிய மகன் ஒரு நாளைக்கு அது அருகில் போய் பார்க்க வேண்டுமென ஒரே பிடிவாதம், சென்ற வாரம் அருகில் சென்று பார்த்தோம் (பாதுகாப்பு காரணமாக மிகவும் அருகில் செல்ல முடியாது). இது பற்றிய சில தகவல்கள்:

உலகிலேயே மிக உயரமானதும் கடல் நீரை பயன்படுத்தும் ஒரே நீரூற்றாகும், கடல் மட்டத்திலிருந்து 312 மீட்டர் உயரத்திற்க்கு நீரை பாய்ச்சி அடிக்கிறது (ஈஃபில் டவரை விட உயரம்). இவ்வளவு உந்துதலுடன் செயல்படுவதற்க்கு இதன் பின்னனியில் இருக்கும் பொறியியல் துறையின் பங்கினை நாம் நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.

சக்தி வாய்ந்த பம்புகள், மற்றும் பைப்புகளை கடலுக்கு அடியிலேயே ஐந்து மாடி உயரத்திற்க்கு ஒரு கட்டிடம் போல் அமைத்து அதற்க்கு மேல் இவை யாவும் பொருத்தி இருக்கின்றார்களாம். இந்த ப்ம்ப் ஹவுஸ் கட்ட 7,000 டன் கான்க்ரீட் பயன்படுத்தியுள்ளார்கள்.

மணிக்கு 375 கிலோமீட்டர் வேகத்தில், வினாடிக்கு 1,250 லிட்டர் நீர் வெளியேறுகிறதாம். தரையிலிருந்து புறப்பட்டு நீர் அதிகபட்ச உயரம் வரை செல்லும் நீரின் எடை 18 டன்கள். இரவு நேரங்களில் ஒளியூட்ட 500 சக்தி வாய்ந்த மிண் விளக்குகள் சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நீரூற்று, 1985ம் வருடம் கட்டி முடிக்கப்பட்டு,இது வரை எந்த ஒரு பிரச்ணைகளும் இல்லையாம், வருடா வருடம் ஒரு முறை Planned Shutdownக்காக நிறுத்தி வைக்கபடுமாம்.

இந்த நீரூற்று கின்னஸ் ரிக்கார்டில் இடம் பெற்று இருக்காம்.

அப்புறம் என்ன ஜித்தாவுக்கு வந்தா உங்க கண்ணுல படாம இருக்காது இந்த ஃபவுன்ட்டெயின், அப்போ நான் சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தால் சரி!!