|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 11:30 AM

பணத்தானி - ATM

By SUFFIX at 11:30 AM


நினைத்துவடன் அட்டையைப் போட்டு, அடுத்த கணத்தில் பணத்தை கைக்குள் திணித்து விடும் 'பணத்தானி' (பணம் தா நீ) என செல்லமாக அழைக்கப்படும் ஏ.டி.எம். இயந்திரத்தை கண்டு பிடித்த ஸ்டெஃபர்டு பாரன் (Shepherd-Barron), கடந்த வாரம் காலமானார், இவர் 1925ம் வருடம் இந்திய மண்ணில் ஸ்காட்லாந்திய பெற்றோர்களுக்கு பிறந்தார். நாற்பது வருடங்களுக்கு முன் ஒரு கடையில் மிட்டாய் வாங்கும்போது டிஸ்பன்சர் சாதனத்தை பார்த்திருக்கிறார், நம்மை மாதிரி மிட்டாயை வாயில போட்டுகொண்டு அப்படியே போய்விடாமல் , இந்த தொழில் நுட்பத்தை வேறு விதமாக உபயோகப்படுத்தினால் என்னன்னு யோசிச்சு, இந்த ஏ.டி.எம்மை கண்டு பிடித்தாராம். இது ஒரு நல்ல கண்டு பிடிப்பு என பிரிட்டன் பார்க்லேஸ் வங்கியும் இந்த தொழில் நுட்பத்தை வாங்கிக் கொணடது.

எதுவா இருந்தாலும் தன்னோட தங்க்ஸ்கிட்டே சொல்லிட்டு அவங்க சொல்றத செய்துடுவார் போல, அதே போல இந்த மெஷினுக்கு ஆறு இலக்க எண்ணை பாதுகாப்பு குறியீடாக வச்சிருந்தாராம், ஆனா தங்கஸ் நாலு இலக்கமா மாத்தினா நல்லா இருக்கும்னு சொன்னதுக்கப்புறம், அவங்க ஆசைப்படியே செய்துட்டார்.

இந்த மெஷினில் இது வரை விருப்பபட்டு கேட்ட பணத்திற்கு குறைவாக வந்திருக்கிறதா எனத் தெரியவில்லை, ஆனால் எனக்குத் தெரிந்த பலருக்கு பக்கத்தில் ஒரு சுழியன் சேர்த்தே பணம் கொட்டியிருக்கிறது, இப்படி கிடைக்கும் பணத்தை நாம் பதுக்கிக் கொள்வதும் திருடுதலே, அதை சம்பந்தப்பட்ட வங்கியில் கொடுப்பதே முறை, எது நமக்கு சொந்தம் இல்லையோ அதை உரிமை கொண்டாடுவது திருட்டு தானே? ஒருவருக்கு நமது நாட்டு நாணய மதிப்பில் இரண்டு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ரியால்கள் வந்து விழுந்துவிட்டதாம், இவர் கணக்கில் இருந்ததோ சில ஆயிரங்களே, அன்று மாலை அவர் வங்கிக்கு போய் திரும்ப கொடுத்து விட்டார், அவர்களும் ரொம்ப சுலபமாக, நன்றின்னு சொல்லிட்டு வாங்கிக் கொண்டார்களாம்,ஒரு பாராட்டு கூட இல்லையாம், ஏமாற்றமாட்டார்கள் எனற நம்பிக்கையா? அல்லது திருடினாலும் கண்டு பிடித்து விடக்கூடிய தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்டதன் வெளிப்பாடா?

சில வருடங்களுக்கு முன் மற்றொரு நபர் இப்படி சில லட்ச்ங்கள் எளிதாகக் கிடைத்து, அன்றைய தினமே, ஊருக்கு எமர்ஜன்சியில் சென்று, தன்னிடம் சேமிப்பு பணத்துடன் இந்த பணத்தையும் வைத்த் தொழில் தொடங்கியிருக்கிறார், தொடர்ந்து நஷடம், சமாளிக்க முடியவில்லை, உள்ளதையும் தொலைத்து, மீண்டும் அயல் நாட்டிற்கே வந்து, முன்னர் இருந்ததைவிட கடினமான வேலையும், சம்பளம் குறைவாகவும் கொடுக்கும் நிறுவனத்தில் சேர்ந்தாராம், ஏனிந்த பேராசை? இந்த மெஷின்களை கூண்டோட தூக்கிக் கொண்டு போய் விடுகிறார்கள் என‌ அடிக்கடி செய்திகள் வேறு வருகிறது.

இங்கே மற்றொரு விடயமும் சொல்லணும், மெஷினிலிருந்து காசை எடுக்கும்போதும், கணக்கை சரிபார்க்கும்போதும், பிரிண்ட் வேண்டுமா எனக் கேட்கும், பெரும்பாலும், தேவை இருக்கோ இல்லையோ, அதை பிரிண்ட் எடுத்து, அப்படியே தூக்கி எறிந்து விடுகிறோம், அதற்கு பதில் திரையிலேயே சரிபார்த்துக் கொள்ளலாமே, மிகவும் அவசியமெனில் பிரிண்ட் எடுக்கலாம். சுற்றுப் புறச்சூழலையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படி மிட்டாய்ல தொடங்கி, இப்போ என்னடான்னா தங்கக்கட்டிகளை தரும் அளவிற்கு இந்த சாதனம் பயன்படுகிறது. சமீபத்தில் அபூதாபியில் இந்த தங்க முட்டை இடும் வாத்தை கொண்டு வந்து வைத்து இருக்கிறார்கள், இனி தட்டுப்பாடு தங்கத்திற்கா, இல்லை பணத்திற்க்கா? சும்மா இன்றைய தங்க நில‌வரம் எப்படி இருக்குன்னு வலையில் பார்த்தேன், நெஞ்சம் 'தக் தக்' என்கிறது!!

Posted on 9:07 AM

கலைடாஸ்கோப்

Filed Under () By SUFFIX at 9:07 AM

ங்களோட அலுவலகம் பத்தாவது மாடியில் இருக்கிறது, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக புகை பிடிப்பது முற்றிலும் இங்கே தடை, அப்படி யாரேனும் புகை பிடித்தே ஆக வேண்டுமென்றால், தரை தளத்திற்கு போய் புகை விட்டு வரவேண்டும், இரண்டு நாளைக்கு முன் அலுவலகத்தில் ஒரு பிரிவிலிருந்து ஒரே புகை மயம், என்ன காரணம் எனக் கேட்டால், ஜப்பானிலிருந்து பெரிய டெலிகேட்ஸ் வந்திருக்காங்க, சாப்பாடு இல்லாம கூட இருந்துடுவாங்களாம் ஆனா சிகரெட் இல்லாம இருக்க மாட்டாங்களாம் அதனால இன்றைக்கு மட்டும் அவ்ங்களுக்கு மட்டும் புகை பிடிக்க அனுமதியாம், என்ன கொடுமையிது, அவர்களுக்கு நமது விதிமுறையை எடுத்துச் சொல்லலாமே எனக் கேட்டால், ஷ்ஷ்ஷ் அவங்க பெரிய ஆளுங்க, அதனால நாம தான் அனுசரிச்சு போகணுமாம்!!

*************

ழக்கம்போல் மார்க்கெட் பகுதியில் பார்க்கிங் கிடைக்கவில்லை, கால் மணி நேரம் சுற்றி சுற்றி வந்தும் உஹூம், சரி ஒரு பத்து நிமிட வேலை தானே என ஒரு திருப்பத்தில் வண்டியை நிறுத்தி விட்டு, திரும்பி வந்து பார்த்தால், என்னோட காரில் சங்கிலியை கட்டி இழுத்து போவதற்கு தயாராக இருந்தார்கள், அருகில் ஒரு போலீஸ், வண்டி ஓட்டுனர் ஒரு பங்காளேதேஷி, அவரிடம் நண்பா நாமெல்லாம் பக்கத்து ஊர்க்காரங்க, விட்டுருன்னு சும்மா சொல்லிப் பார்த்தேன், அதெல்லாம் நஹி நஹின்னுட்டார், அப்புறம் போலிஸிடம் போய் ஹாதா..ஹூதான்னு ஏதோ நமக்கு தெரிஞ்ச அரபியில் சொல்லி, அவரையும் ரொம்ப நல்லவராக்கி, வழிக்கு வந்த நேரத்தில் அவருக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்திருச்சு, ஆமா இதுமாதிரி பிடிக்கரவங்களயெல்லாம் நான் விட்டுட்டு இருந்தா என்னோட மேலதிகாரிக்கு நான் என்ன சொல்றது, அதனால நான் இந்த சீட்டுல ஏதாச்சும் எழுதிக்கிறேன்னு பேரு, ஐ.டி. நம்பர் மட்டும் எழுதிக்கொண்டார், ஆனா அபராதம் வராதுன்னு சமாதப்படுத்தினார், அதெப்படி? அவர் ஒரு பிங்க் நிற நோட்டிஸ் தந்தால் தான் சிஸ்டத்தில் தகவல்கள் ஏறுமாம், என்னவோ நல்லதே நடக்கட்டும், இது வரை முயற்சி செயத அந்தப் போலீஸ் வாழ்க!!

************

சைனாவில் ஒரு பால் பாயிண்ட் பேனா தயாரிக்கும் ஒரு கம்பெனிக்கு 1,000 டாலர் அபராதம் விதித்திருக்காங்களாம், என்ன காரணமென்றால், ’அமேரிக்க அதிபர் ஒபாமாவே எங்களோட பேனாவை தான் உப்யோகிக்கிறார்’னு விளம்பரப்படுதியிருக்காங்க!! யாரு கண்டா உண்மையா இருந்தாலும் இருக்கும்!!

***********

நேற்று டி-20 உலகக்கோப்பை, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய நாடுகள் மோதியது, நமது ஆசிய நாடுகளில் ஏதேனும் ஒன்று இறுதி வரை வந்திருந்தால் இன்னும் நன்றாக ரசித்து பார்த்திருக்கலாம்.