தாயிஃப், நாங்கள் இருக்கும் ஜெத்தாவிலிருந்து 80 கி.மி. தூரத்தில் இருக்கும் ஒரு மலை பிரதேசம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,800 மீ உயரம். நமதூர் ஊட்டி போன்று குளிராக இல்லயென்றாலும், அனல் பறக்கும் பாலைவனத்தில் ஒதுங்க நிழல் கிடைத்தார்போல் ஒரு இதம். கடந்த வெள்ளிக்கிழமை சிறிய ஒரு பிக்னிக் சென்று வந்தோம். நிறைய பார்க்க வேண்டியவைகள் இருந்தாலும், நேரம் இன்மை காரணமாக கேபிள் காரில் மட்டுமே செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
தரை மட்டத்திலிருந்து அழகிய சாலை வசதி மலையைச் சுற்றி வடிவமைத்து இருக்கின்றனர், மிகவும் பாதுகாப்புடன் அமைத்திருப்பது பாராட்டுக்குறியது. அதன் அழகிலும், நேர்த்தியிலும் எங்களைப் போன்ற அயல் நாட்டினர்களின் திறமையும், உழைப்பும் நூறு சதிவிகிதம் கொட்டி கிடக்கின்றதென்பது மறுக்க முடியாது உண்மை.
கேபிள் காரிலிருந்து கிளிக்கியவைகளில் சில, நமது நண்பர்களுக்காக:

