|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 6:54 PM

கலைடாஸ்கோப்

Filed Under () By SUFFIX at 6:54 PM

பாலைவன வெப்பம்

சூடு என்றால் அப்படி ஒரு சூடு, சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது. 53, 55 என இப்படி சர்வ சாதாரணமாக மெர்க்குரி அளவு சென்று கொண்டு இருக்கிறது. இந்த மிகை வெப்பத்தினால் ஜித்தா நகரத்தில் மட்டும் தினசரி நாற்பது தீ விபத்துகள் நிகழ்வதாக நேற்றைய செய்த்தித்தாளில் படித்தேன். மின்சாரக் கோளாறு மற்றும் வாகனங்களில் என்ஜின் சூடாவது போன்றவைகளால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகிறதாம். இயற்கை நிகழ்வை நாம் கட்டுப்படுத்த முடியாது தான், ஆனால் நம்மையும் சுற்றுப் புறத்தையும் பராமரிக்கலாமே?

நமக்கு:

அவசியமில்லாமல் வெயிலில் லைய வேண்டாம், செய்ய வேண்டிய காரியங்களை முன் கூட்டியே திட்டமிட்டு, நேரம் வகுத்து செயல பட வேண்டும்.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.

எண்ணையில் பொறித்த உணவு வகைகளை மதிய நேரங்களில் குறைத்துக் கொலள்ளலாம்.

வாகனங்களுக்கு:

என்ஜின் அதிக சூடாகும், இதனால் கூலன்ட் நீரை பார்ப்பதுடன் ப்ரேக், கியர், என்ஜின் ஆயிலையும் பார்த்துக் கொள்ளவும்.

கதவுக் கண்ணாடிகளை காற்று புகும் அளவிற்கு சிறிது இடைவெளிவிட்டு மூடவும்.

டேஷ்போர்டு சூடாகாமல் இருக்க விண்டு ஷீல்டு கவர் போடலாம்

வாகனத்தை ஸ்டார்ட் செய்து உடனே ஏர்கண்டிஷனை போடாமல், சிறிது நேரம் ஃபேனை மட்டும் போட்டு காற்றோட்டத்தை சீர் செய்யவும்.

உலக போதை ஒழிப்பு நாள்

சமுதாயத்தை சீரழித்து வரும் இந்தப் பழக்கத்தை எப்படி ஒழிக்கப் போகிறார்களோ? ஒவ்வொரு தனி மனிதனும் தவறை உணர்ந்தால் ஒழிய இதனை ஒழிப்பது பெரும்பாடே. இத்தீய பழக்கத்தினை ஒழிப்பதில் பெற்றோர்களின் பங்கும் மிகவும் முக்கியம். த‌மது குழந்தைகளின் நடவடிக்கைகளை சரிவர கவனிக்க வேண்டும், அக்கால அதிரடி நடவடிக்கைகள் தற்கால குழந்தைகளிடம் அத்தனை செல்லுபடியாகாது, அவர்களது உணர்வுகளை புரிந்து, அவர்களின் எண்ணங்களை நம்முடன் தெளிவாக பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நாம் மாற‌ வேண்டும். போதை பழக்கத்திற்கும் புகை பிடிப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், இந்தக் கொடிய புகை பழக்கத்தையும் அடியோடு நிறுத்திடலாமே?

'கடி'காரம்

வீட்டின் ஹாலில் உள்ள கடிகாரம் திடிரென நின்று விட்டது, எங்களுடைய சிறிய மகன், ஹாலிற்கும், அறைக்கும் ஒரே சமயத்தில் தான் கடிகாரம் வாங்கி, புதிய பேட்டரியும் போட்டோம், ஆனா அது ஓடுது, இது மட்டும் நின்னுடுச்சே என சந்தேகத்தை கிளப்பினான், ஆமா சைனா கடிகாரம், மெஷின் எப்போ நிக்கும் எப்போ ஓடும்னு சொல்ல முடியாதுன்னு சொல்லிப் பார்த்தேன், இல்லாட்டி இந்தக் கடிகாரத்தை நாம அடிக்கடி பார்க்குறோம், அறைல உள்ளத அவ்வளவா பார்க்குறதில்லை அதனால இருக்குமோன்னு, ஒரு மொக்கை பதிலையும் சேர்த்து சொல்லி வச்சேன். அவனுக்கு இரண்டு பதில்களும் பிடிச்சுருந்தது, உங்களுக்கு?