|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Showing posts with label தகவல். Show all posts
Showing posts with label தகவல். Show all posts

Google Buzz (கூகிள் பஸ்)

சமீபத்தில் சிறிது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்ககூடிய புதிய சமூக கட்டமைப்பு பிணையம் (Social Networking). நமக்கு பிடித்த படங்கள், வாசகங்கள், எண்ணங்கள் இவற்றை நண்பர்களுடன் எளிதாக‌ (பேஸ் புக்கை போல‌) பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்டதே இந்த பஸ். நல்ல முயற்சி தானே, பிறகு ஏன் சர்ச்சை? கூகிள் அறிமுகப்படுத்திய விதம் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது. ஆம், அதுவாகவே ஊடுருவி, தனது அஞ்சல் பெட்டிக்குள் வந்தமர்ந்தது, உரிமை கொண்டாடுவது போன்ற உணர்வு. இதுவே தனி செயலியாக (application) இருந்திருந்தால் இத்தனை விவாதங்கள் இருந்திருக்காதோ?

சரி, பேஸ் புக்கை இந்த புதிய பஸ் முந்தி விடுமா? தற்போதைய புள்ளி விபரப்படி, பேஸ் புக் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை 400 மில்லியன்க‌ள், ஜீமெயில் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை 176 மில்லியன்களே, கூகிள் தனது ஆர்வலர்களை கவர்ந்திழுக்க பல சர்க்கஸ்களை செய்யும் என்பது பலரது கணிப்பு. தேடு பொறி (Search Engine) நுணுக்கத்திலும் அவர்கள் முன்னோடியாக இருப்பதால், காலப்போக்கில் இந்த பஸ் வெற்றி நடை போடும் என்பது வல்லுனர்களின் கருத்து.

நமது தளத்தில் வந்தமர்ந்து விட்டது, என்னவென்று தான் பார்த்துவிடுவோமே என இப்பொழுதே இதனை பலர் உப்யோகிக்கத் தொடங்கி விட்டார்கள், பேஸ்புக், ட்விட்டர், லின்க்‍இன் என பத்தோடு பதினோன்றாக இந்த பஸ்ஸும் வலம் வரும். ஓ.கே போலாம் ரைட்...

----------------
Parallel Parking (இணையாக-நிறுத்தல்)

வாகன‌ங்களை இணையாக தரிப்பிடத்தில் (Parallel Parking)சரியான முறையில் நிறுத்துவது தனி திறமையே, அவரவர் விவேகத்தை பொருத்து ஒரு சில வினாடிகள் முதல் பல நிமிடங்கள் வரை ஆகும். வரலாறு முக்கியம்ங்கிற மாதிரி நமது அன்றாட வாழ்விலும் கணக்கும் பிணைந்து முக்கியத்துவம் பெறுகிறது, லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு ஆய்வாளர் இதனை ஃபார்முலா மூலம் விளக்கியுள்ளார், ஆக நமது வாகனத்தை நிறுத்தும் போது வ‌ட்டம், கோடு போன்ற வடிவவியல் (Geometry) காரணிகளை பின்பற்றுகிறோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் மிகவும் உபயோகமாக இருக்கும், எப்படி, எந்த இடத்தில் சரியாக வளைத்தால், சரியாக நிறுத்தலாம் என விவரிக்கப்பட்டுள்ளது.


------------------

Biscuits (பிஸ்கோத்து)

சென்ற வாரம் வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை கடையில் அரபி, ஆங்கில மொழிகளால் எழுதப்பட்டு அடுக்கி வைக்கப்பட்ட பிஸ்கட் பாக்கெட்டுகளில் நடுவில் கண்ணை கவர்ந்தது தமிழ் மொழியில் 'சூப்பர் கிறீம் கிறக்கர்' என‌ எழுதப்பட்ட இந்த பிஸ்கெட் பாக்கெட், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். நல்லா இருக்கு.

------------


Source: The Geometry of Perfect Parking by Simon R. Blackburn
Credit: Alyson Hurt, NPR