|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!

Picture source : www.rcowen.com

எனது குழந்தைகள் படிக்கும் பள்ளியின் சார்பாக 8, 9, மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு மட்டுமான‌ ஒரு சந்திப்புக்கு சென்ற வாரம் ஏற்பாடு செய்து இருந்தார்கள். சிறப்பு விருந்தினராக இந்தியாவிலிருந்து டாக்டர். கே.எஸ். டேவிட் (Centre Institute of Behaviour Science, Cochin) அவர்களை அழைத்திருந்தனர். Behaviour Science & Human Resource நிபுணரான‌ இவர் பல்வேறு கல்வி நிலையங்கள், நிறுவனங்களில் இது போன்ற கருத்துரங்கள் நடத்தி வருகிறார்.

இரண்டு மணி நேரம் நடந்த கலந்துரையாடலில் பெரும்பாலும் அவர் வலியுறுத்திய கருத்துக்கள்:

குழந்தைகளிடம் நாம் நெருக்கமாகவும், நல்ல ஒரு நண்பனைப் போலவும் பழக வேண்டும். அவர்களுக்கு தன்னம்பிக்கை கூடுவதுடன், எந்த ஒரு பிரச்ணையும் எளிதாக, மனம் திறந்து பகிர்ந்து கொள்ள இலகுவாக இருக்கும், இல்லையேல், யாரிடம் சொலவது எனற குழப்பமே அவர்களின் மனச்சோர்வினைக் கூட்டும் அல்லது தவறான வழிமுறைகளை கையாள் நேரிடலாம். Be a Friend and Mentor!! குழைந்தைகளோடு சேர்ந்து நாமும் வளர வேண்டும் (Grow with your child).

இந்தக் காலச் சூழல், ஊடகத்தின் தாக்கம், பாலுணர்வைத் தூண்டக்கூடிய விடயங்கள் கைகளுக்கு எட்டும் தொலைவில் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கிறது, பெற்றோர்கள் எத்தனை கட்டுப்பாடு விதித்தாலும், நமக்குத் தெரியாமல் அதை உடைக்க பல்வேறு வழிகள், ஆக இந்த விடயத்தையும் பெற்றோர்கள் தெளிவாகவும் சரியாகவும் புரிய வைக்க வேண்டும், இல்லையெனில் நண்பர்கள், இணையம் வழியாக கிடைக்கும் தவறான தகவல்களால் வழி மாறிச்செல்லக்கூடும்.

பெற்றோர்களுக்கிடையே கருத்து வேறுபாடு வரலாம், அது குழந்தைகளுக்கு தெரியும்படியோ, அல்லது இருவருக்கிடையே உள்ள கோபத்தின் தாக்கத்தை குழ்ந்தைகளிடம் காட்டுவதோ கூடாது.

குழந்தைகளின் நினைவாற்றலை மூன்று வகைப்படுத்தலாம், செவி வழி (Auditory), பார்த்து உணர்தல் (Visual), அல்லது எதையும் செய்து பார்த்து (Practical) நினைவிற்கொள்தல். இம்மூன்றில் நமது குழந்தைகள் எவ்வகை என கவனித்து அதற்கேற்ப அணுக வேண்டும்.
(இந்த மவுச கிளிக் செஞ்சு இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்ய வேண்டும்னு சொன்னா, சிலர் அப்படியா தலையாட்டிட்டு போய்டுவாங்க, சிலர் அதை க்ளிக்கி ஓப்பன் செஞ்சா தான் திருப்தி படுவாங்க)


குழந்தைகள் எதிர்பாராத தருணத்தில் பரிசளிக்க வேண்டும், மதிப்பெண் கூடுதல் எடுத்தால், முதல் மார்க் வாங்கினால் என மகிழ்ச்சி பகிர்தலை கட்டுப்படுத்த வேண்டாம்.

சில குழந்தைகள் கேள்விகள் நிறைய கேட்டுக்கொண்டே இருப்பார்கள், சலிப்படையாமல் தகுந்த பதில் சொல்லி அவர்களை திருப்தி படுத்த வேண்டும்.

குழந்தைகளை உலவு வேலைக்காக‌ ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது, அம்மா யார்கிட்ட போன் பேசுனாங்க? அப்பா அந்த ஆன்ட்டி கிட்ட என்ன பேசினாங்க, இது மாதிரி சந்தேகங்களை குழந்தைகளைக் கொண்டு அணுகவேண்டாம். இது பெற்றோர்களின் மேல் தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தும் அல்லது இதை வைத்து குழந்தைகள் தவறான வகையில் பயன்படுத்த ஊக்கமளிக்கும்.

Decision Making என்று சொல்லக்கூடிய முடிவு எடுக்கும் திறனை சிறு வயதிலிருந்தே ஊக்கபடுத்தி, சுதந்திரமும் கொடுக்க‌ வேண்டும்.

பல திடுக்கிடும் உண்மைச் சம்பவங்கள் அந்த நிபுணர் பகிர்ந்து கொண்டது, நிகழ்ச்சியின் நோக்கத்தையும், நமது பொறுப்பையும் வலுவாக உணர்த்தியது.


Posted on 2:01 PM

கணப் பொழுதுகள்

Filed Under () By SUFFIX at 2:01 PM

Picture Source :http://i.d.com.com

உரக்கப் பேசிடும்
மெளன மொழிகள்

விழிகளில் வழிந்தோடும்
விசும்பல்கள்

படர்ந்து சுழலும்
உணர்வலைகள்

தேங்கிய ஏக்கங்கள்
வெள்ளப் பிரளயம்

மோக முட்கள்
கீற‌ல்கள் மேனியெங்கும்

வதைக்கும் வெதும்பல்கள்
வெப்பக் கதிர்வீச்சு

கனவுகளால் தொடரும்
பொழுதுகள் கண‌ம்

தீண்ட ஆறிடுமோ
தீராத ரணங்கள்?


தற்பொழுது எந்த ஒரு பொருள் வாங்கினாலும் அதன் உறையில் அவங்க கம்பெனி info@xyz என மின்னஞ்சல் முகவரி காணப்படுகிறது. இது எந்த அளவுக்கு நமக்கு உதவுகிறது. என்னுடைய அனுபவங்கள் சில.

ஒரு முறை செய்தித் தாளில் விளம்பரம், கேனான் கேமரா வாங்கினால் அதனுடன் மேலுறை இலவசமா கொடுக்குறோம்னு, ஷோ ரூமில் கேமரா வாங்கப்போனபோது அப்படியெல்லாம் எங்களுக்கு ஒரு ஆணை வரவில்லை, எங்களுக்குத் தெரியாதுன்னு சொன்னாங்க. விவாதித்து உபயோகம் இல்லையென பட்டது, அன்றைக்கே கேனானோட info முகவரிக்கு விளக்கத்துடன் என்னுடைய‌ கைபேசி எண்ணையும் கொடுத்தேன். அடுத்த நாளே ஷோரூமில் இருந்து அழைப்பு வந்தது, தாங்களின் புகார் தலைமை அலுவலகத்திற்கு கிடைத்தது,இந்த சலுகையில் முதல் நாளாக இருந்ததால் சிறிய குழப்பம், தாங்கள் உடனே வந்து உறையினை வாங்கிக் கொள்ளுங்கள். அட பரவாயில்லையே..!!

USB Pen Drive வருவதற்கு முன்னால், ப்ளாப்பி உபயோகப்படுத்திக் கொண்டிருந்த காலம், கடைக்கு போய் Imation ஒரு பெட்டி (10 ப்ளாப்பி)வாங்கினேன். பெட்டிய திறந்து பார்த்தால் அதில் ஒட்டக்கூடியா லேபிலைக் காணோம், அடக் கொடுமையே, உடனே infoக்கு ஒரு மின்னஞ்சல் தட்டு, நான் வாங்கிய பெட்டியின் Reference Number கொடுத்தேன். லேபில் இல்லாததற்கு என்ன காரணம், மறதியா, இல்லை இனி அதை தனியா போட்டு காசு சம்பாதிக்க போறீங்களா. அந்த மின்னஞ்சல் கனடா போய்ட்டு அங்கிருந்து துபாய் அலுவலகம் சென்று அங்கிருந்து பதில் வந்திருந்தது, பிழையாக இது நிகழ்ந்திருக்கலாம் அதனால் லேபிலகள் கூரியரில் அனுப்பியிருப்பதாகவும் கூறியிருந்தார்கள். மூன்று நாளைக்கு பிறகு ஒரு Aramex பாக்கெட் வந்திருந்தது, நான் வாங்கியதோ 10 ப்ளாப்பிகள் தான், ஆனால் அவர்கள் 100க்கு மேல் அனுப்பியிருந்தார்கள்!! அவர்களை பாராட்டி ஒரு பதில் அனுப்பினேன். கனடா மேளாலருக்கோ மிக்க மகிழ்ச்சி, அன்று முதல் நாங்க ரெண்டு பேரும் நல்லா தோஸ்து ஆயிட்டோம்கிறது வேறு கதை.

எங்கள் நிறுவனத்தின் info மின்னஞ்சல்களை நிர்வகிக்கும் பொறுப்பு ஒரு வருடம் (2007) என்னிடம் இருந்தது, சராசரியாக ஒரு நாளைக்கு 200 மின்னஞ்சல்கள் வரும், பெரும்பாலும் பணிகள் வேண்டியே (Recruitment)வரும், மற்றவை (Customers) வாடிக்கையாள்ர்கள், (Suppliers) வழங்குவோர் இப்படி நிறைய வருவதுண்டு, ஆனால் அனைத்தும் சரியாக முறைப்படுத்தப்
பட்டு சரியான இடத்திற்கு அனுப்பி வைக்கபடும். We never ignore!!

"Never divorce a customer, unless you are willing to face the consequences"