சமீபத்தில் மின்னஞ்சலில் வந்தது...கொஞ்சம் யோசிச்சுப்பார்த்தால், இதுல நிறைய விஷயம் இருக்குங்கோ.

நாம சந்தோஷமா இருக்கும்போது எந்தவிதத்திலும் உத்திரவாதமோ, அத செய்வேன், இத செய்வேன்னு அலப்பரையோ, நிலாவ பிடிச்சு நீ நிற்க்கும் இடத்தில் நிறுத்துவேன் வானத்துக்கு குதிக்கிறதோ, ஏதோ ஒரு மூடில் அடுத்த மாசம் சம்பளம் வரட்டும் என்னோட செல்லத்திர்க்கு அரை கிலோ 'கவுனர் மாலை' வாங்கித்தர்ரேன்னு அலம்பல் பன்னிட்டு...அப்புறம் அடுப்பங்கரை பக்கம் உக்காந்து யோசிக்கக்கூடாதாம்.
அப்புறம் நாம கோவமா இருக்கும்போது, வாயை கம்னு மூடிக்கிட்டு கொஞ்சம் அமைதியா இருந்தால் பல வேன்டாத பின் விளைவுகளை தவிர்க்கலாம்னு சொல்ராங்க. இது இப்போ உள்ள ஈமயில்/SMS உலகத்திர்க்கு உஷாரான ஒரு பரிந்துரை!! கொஞ்சம் 'SEND' க்ளிக்குவதர்க்கு முன்னால் மூனு முரை யோசிங்க. (ஹலோ ரொம்ப டெக்னிக்கலா 'RECALL' அப்படி இப்படீன்னு போவாதீங்கப்பா)
இன்னொன்னு என்னன்னா, ரொம்ப கவலையா இருக்கும்போது எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாதாம், என்னடா இது இப்படி ஆயிடுச்சேன்னு பட்டுன்னு எடுத்தேன் கவிழ்த்தேன்னு ஏதாவது செஞ்சுட்டு, அடடா, கொஞ்சம் பொறுத்து இருந்தால் அப்படி ஆயிருக்குமே, அதை மிஸ் பன்னி இருக்கமாட்டோமேன்னு நம்மள நாம்மாளே திட்டி தீர்க்குரதுக்கு பதில், ஏதாவது கவலை நம்மை தாக்கும்போது 'This too will pass' இதுவும் கடந்துவிடும்னு சொல்லி பொறுமையாய் இருக்கனுமாம்.

நம்மள்ள சிலபேரை பார்த்திருப்போம், லோலோன்னு ஒருத்தவங்க பின்னாடி அலைவாங்க, ஆனா இந்த பார்ட்டிய இவர் கேர் பன்னவே மாட்டார். ஒருத்தர் சின்சியரா விரும்புவாங்க ஆனா இந்த மன்மதனோ i dont mind தான் (இதை கல்லூரி பருவத்தில் கண்ணால் கன்டது...சில பேரின் தாடிகள் சொல்லும்).

உங்களை பற்றி லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் எல்லோரிடமும் சொல்லனும்னு தேவையில்லை.
ஒருத்தருக்கு உங்களை பிடிச்சுருச்சுன்னா அவங்களுக்கு அது தேவையில்லை!! அப்படிக்கு பிடிக்கலைனா நீங்க என்ன சொன்னாலும் அதை நம்ப போவது இல்லை!! கால விரயம்தான்.
