|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Showing posts with label தொடர் பதிவு. Show all posts
Showing posts with label தொடர் பதிவு. Show all posts

என்னை இந்த தொடர் பதிவிற்கு அழைத்த தேனம்மை அக்கா அவர்களுக்கு நன்றி, வேலை பளு காரணமாக சுடச்சுட இட வேண்டிய பதிவு, இவ்வளவு நாள் தாமதத்தி வந்தமைக்கு மன்னிக்கவும்.

நண்பர்களின் எல்லா பதிவுகளிலுமே இந்த பத்துக்கு பத்து வலம் வந்து விட்டது, பரவாயில்லைன்னு இதையும் படிச்சுடுங்க‌.

1) சில நாட்களுக்கு NPRல் ஷீனா ஐயங்காருடைய பேட்டியை கேட்க நேர்ந்தது, இவருடைய ஆராய்ச்சி, அவர் எழுதிய படைப்புகளை விவரித்த விதம், மேலும் தெரிந்து கொள்ளலாம் என வலையில் தேடிய போது, விடயங்கள் மிகவும் சுவாரஸ்யம்.

அவர் சோசியல் சைக்காலஜி துறையில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார், நம்முடன் என்றும் சுழன்று கொண்டிருக்கும் தேர்வு செய்தல் பற்றி சமீபத்தில் The Art of Choice எனற அவரது புத்தகம் வெளிவந்துள்ளது. உதாரணமாக வீட்டைவிட்டு செல்லும் முன் இந்தக் கலர் போன் தான் வாங்க வேண்டும் என முடிவு செய்து கொண்டு போவோம், ஆனால் கடைக்கு சென்றதும் வேறு ஒன்றை வாங்கி வந்து விடுகிறோம், இது போல நாம் தெரிவு செய்யும் நட்பு, நபர்கள், என அடுக்கிக் கொண்டு போகலாம்.

இன்றைய போட்டி நிறைந்த ரீடெயில் மார்க்கெட்டில், வாடிக்கையாளர்களின் மன நிலையை அறிந்து வியாபாரத்தில் ஈடுபடுவது, நிறுவாகத்திறனை ஒருமுகப்படுத்த, உறவுகள் மேம்படவும் இது போன்ற ஆக்கங்கள் உதவக்கூடும். இவரது இன்னும் பல ஆராய்ச்சி கட்டுரைகள் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. இவரைப் பற்றி மேலும் அறிய‌ http://www.columbia.edu/~ss957/book.shtml.

2) தனது மருமகளை, மகளாய் நினைக்கும் மாமியார்கள், இந்த உறவிற்குள் கீறல்கள் விழுவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஆழ யோசித்தால் பெரும்பாலும் பிரச்னை எளிதானதாகவே இருக்கும்.

3) எனது குழந்தைகள் படிக்கும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் ஆண்கள் பிரிவிலும் அதற்கு கீழ் பெண்கள் பிரிவிலும் சேர்த்து இருந்தார்கள், ஆனால் இந்த ஆண்டு முதல் மூன்றாம் வகுப்பையும் பெண்கள் பிரிவுடன் சேர்த்து விட்டார்கள், காரணம், இந்த சிறார்களை சமாளிக்க முடியவில்லையாம். ஆம், அந்தப் பொறுமையும் பொறுப்பும் பெண் ஆசிரியைகளுக்கே உரித்தான ஒன்று.

4) சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் பணிக்குச் செல்லும் நடுத்தர வர்க்க குடும்பப் பெண்கள். அவர்கள் பேருந்துக்காக காத்திருந்து, இடிபாடுகளுக்கிடையே பயணித்து, அலுவலக வேலைகளுடன், வீட்டு வேலைகளையும் சுமந்து செல்லும் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

5) சினிமா பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லை, ஆனால் பாடல்கள் கேட்பதுண்டு. பிடித்த பாடகிகள் (லிஸ்ட் பெரிசாயிடுச்சு):

தமிழ் : சித்ரா & அணுராதா ஸ்ரீராம்

ஆங்கிலம் : செலின் டியோன் & ஸ்விஃப்ட் டைலர்

ஹிந்தி : அல்கா யாக்னிக் & அணுராதா படுவால்

6) தொழில் அதிபர் : கிரன் ம‌ஜும்தார் - சாதாரன ட்ரைனியாக தனது வாழ்க்கையை தொடங்கி, பிறகு வெறும் பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் ஒரு நிறுவனத்தை தொடங்கி இன்று பயோகான் நிறுவனத்தை செம்மையாக நடத்தி வருகிறார்.

7) டென்னிஸ் வீராங்கனை : ஸ்டெஃபி கிராஃப்

8) குடும்பத்தலைவி : சோனியா காந்தி

9) அரசியல்வாதி : ஜெயலலிதா

10) பெண் பதிவாளர்கள் : தனது நேரத்தை உபயோகமான (?) வழியில் செலவிட்டு , பல பயணுள்ள தகவல்களை தந்து கொண்டிருக்கிறார்கள்.









பதிவுலக நண்பர் மாதவராஜ் துவக்கி வைத்து, உலகமெங்கும் சுற்றும் இந்த தொடர் பதிவில் என்னையும் மாட்டி விட்ட நவாஸ் அவர்களுக்கு நன்றி, இதோட விதிமுறைகள் இப்போ எல்லோருக்கும் மனப்பாடம் ஆகியிருக்கும்.

இதோ எனது பத்துக்கு பத்து:

1. அரசிய‌ல்

பிடித்த‌வ‌ர்க‌ள் : ஜெயலலிதா (டைனமிக் பெர்ஸனாலிட்டி), ஸ்டாலின் (சுறுசுறுப்பாக ஏதாச்சும் செய்கிறார்)

பிடிக்காதவர்கள் : பெரிய லிஸ்ட்டே இருக்கு

2. எழுத்து :

பிடித்தவர்கள்: சுஜாதா, பாலகுமாரன் (கல்லூரி நாட்களில் நிறைய படித்ததுண்டு)

பிடிக்காதவர்: அப்படின்னு சொல்கிற அளவுக்கு விவரம் இல்லைங்க

3.திரைப்பட பாடலாசிரியர்கள்:

பிடித்தவர்கள் : வைரமுத்து (எப்போதும்), டி. ராஜேந்தர் (அப்போது)பிடிக்காதவர் : குத்துப்பாடல்கள் எழுதும் யாவரும்

4.நகைச்சுவை நடிகர்

பிடித்தவர் : வடிவேலு
பிடிக்காதவர் : கவுண்டமணி

5. நடிகர்

பிடித்தவர்: கமல்
பிடிக்காதவர்: சிம்பு

6. நடிகை

பிடித்தவர் : நதியா (அப்போது)
பிடிக்காதவர் : பாவம் அவங்களெல்லாம் கோவிச்சுக்குவாகளே

7.தொழில் அதிபர்க‌ள்
பிடித்தவர்கள்: இரா. க. சந்திரமோகன் (அருன் ஐஸ் கிரீம்ஸ்), முகமது மீரான் (ரேனால்ட்ஸ் பேணா) உழைப்பாலும், தன்னம்பிக்கையினாலும் உயர்ந்தவர்கள்

பிடிக்காதவர்கள்: மக்களின் உழைப்பை சுர‌ண்டுப‌வ‌ர்க‌ள்


8. குடும்பத் தலைவர்
பிடித்தவர்: நான் தான்
பிடிக்காதவர்: அதுவும் நாந்தானுங்க‌


9. பதிவுலகம்
பிடித்தது: புதிய‌வ‌ர்க‌ள், புதுமைக‌ள், ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள்.
பிடிக்காதது: அவசியமில்லாத தனிமனித‌ தாக்குதல்கள், தேவையில்லாத‌ விவாதங்கள்


10. உணர்வு
பிடித்தது: சுயமுயற்சியால் அடையும் மகிழ்ச்சி
பிடிக்காதது: அம்மகிழ்ச்சியால் எல்லை மீறல்


ஊர் வழக்கப்படி இதை விட கலக்கலா பதிவினை தொடரும்படி நல்ல நண்பர்கள் சிலரை அழைக்கணுமாம்.

நான் அழைக்கப்போவது:

அன்பின் அண்ணன் இராகவன் நைஜீரியா

சமையலை பிடிபிடின்னு பிடிக்கும் ஜலீலா அக்கா
கோவச்சுக்காம பதிலளியுங்க ப்ளீஸ்.........