இந்தியப் பிரதமர் சவூதி வருகை
சில தினங்களுக்கு முன் நமது இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், சவூதி அரேபிய தலை நகர் ரியாத்திற்கு மூன்று நாள் பயணமாக வருகை தந்திருந்தார், முப்பது வருடங்களுக்கு முன்னர் மறைந்த திருமதி இந்திரா காந்தி அவர்களின் ச்வூதி அரேபிய பயணத்திற்கு பின் தற்பொழுது வருகை தரும் நமது பிரதமரை சவூதி மன்னரும், அவருடைய அமைச்சரவை உறுப்பினர்களும் வெகு விமர்சையாக வரவேற்றனர். நான் ஜித்தாவில் இருந்தாலும் மூன்று நாட்களும் இங்குள்ள் நாளேடுகளில் அவரது பயணம் குறித்து விரிவான செய்திகளின் மூலம் அறிய முடிந்தது.
கல்வி, பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி, மற்றும் பொருளாதாரம் தொடர்பான பதினோறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது. குறிப்பாக மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் அலுவலகம் இந்தியாவில் தொடங்குவது, இங்குள்ள அரசு பள்ளிகளுக்கு டாடா பேருந்துகள் வாங்குவது, இரண்டு நாடுகளுக்கிடையேயான பத்திரிக்கை துறை செயல்பாடுகள், கணினித்துறையில் கூடுதல் ஒத்துழைப்பு, பாதுகாப்புத் துறையில் இங்குள்ள் பல்கலை கழகத்துடன் இந்தியப் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் போன்றவை நிறைவேற்றப்பட்டன். வருடத்திற்கு ஆறு லட்சம் விசாக்கள் வேலைகளுக்காகவும், ஒரு இலட்சத்தி எழுபதாயிரம் ஹஜ் பயண விசாக்களும் வினியோகிக்கப்படுகிறது, இதனை இன்னும் முறையாக செயல்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது.
நில நடுக்கம் ஹைத்தி/சிலி:
சென்ற மாதம் ஹைத்தியிலும் அதனையடுத்து சிலியிலும் பயங்கர நில நடுக்கம், சிலியில் (8.8) ஏற்பட்ட நடுக்கத்தைக் காட்டிலும் ஹைத்தியில் (7.0) ஏற்பட்ட நில நடுக்கத்தின் அளவு குறைவே, இருந்தாலும் அங்கே இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்தனர், ஆனால் சிலியில் ஆயிரத்திற்கும் குறைவானோரே இறந்துள்ளனர். இதற்கு காரணம் என்ன? பொருளாதாரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான்.
சிலியின் பெரும்பாலான கட்டிடங்கள் நில நடுக்கத்தை தாங்கவும், இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் எப்படி தப்பிப்பது போன்ற பயிற்சிகள் அவர்களுக்கு தரப்பட்டது. ஆனால் ஹைத்தியில் அவர்கள் இடிபாடுகளிக்கிடையே சிக்கி, கான்க்ரீட் கற்கள் மேலே விழும்போது, பாதுகாப்பாக அங்கிருந்து ஓடவோ, தற்காத்துக் கொள்ளவோ அவர்களுக்கு பயிற்சியளிக்கப் படவில்லை, அச்சத்தால் அங்கெங்கும் சிதறி ஓடி மரித்தவர்களே ஏராளம்.
Money is not everything, but it is something.
டிப்ஸ்:
மனதையும், உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா, இதோ சில குறிப்புகள்:
1. குறைந்தது ஆறு மணி நேரம் உறக்கம்.
2. உணவில் கட்டுப்பாடு
3. தினமும் அரைமணி நேரமாவது வேக நடை பயிற்சி (brisk walking)