பாலைவன வெப்பம்
சூடு என்றால் அப்படி ஒரு சூடு, சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது. 53, 55 என இப்படி சர்வ சாதாரணமாக மெர்க்குரி அளவு சென்று கொண்டு இருக்கிறது. இந்த மிகை வெப்பத்தினால் ஜித்தா நகரத்தில் மட்டும் தினசரி நாற்பது தீ விபத்துகள் நிகழ்வதாக நேற்றைய செய்த்தித்தாளில் படித்தேன். மின்சாரக் கோளாறு மற்றும் வாகனங்களில் என்ஜின் சூடாவது போன்றவைகளால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகிறதாம். இயற்கை நிகழ்வை நாம் கட்டுப்படுத்த முடியாது தான், ஆனால் நம்மையும் சுற்றுப் புறத்தையும் பராமரிக்கலாமே?
நமக்கு:
அவசியமில்லாமல் வெயிலில் லைய வேண்டாம், செய்ய வேண்டிய காரியங்களை முன் கூட்டியே திட்டமிட்டு, நேரம் வகுத்து செயல பட வேண்டும்.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.
எண்ணையில் பொறித்த உணவு வகைகளை மதிய நேரங்களில் குறைத்துக் கொலள்ளலாம்.
வாகனங்களுக்கு:
என்ஜின் அதிக சூடாகும், இதனால் கூலன்ட் நீரை பார்ப்பதுடன் ப்ரேக், கியர், என்ஜின் ஆயிலையும் பார்த்துக் கொள்ளவும்.
கதவுக் கண்ணாடிகளை காற்று புகும் அளவிற்கு சிறிது இடைவெளிவிட்டு மூடவும்.
சூடு என்றால் அப்படி ஒரு சூடு, சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது. 53, 55 என இப்படி சர்வ சாதாரணமாக மெர்க்குரி அளவு சென்று கொண்டு இருக்கிறது. இந்த மிகை வெப்பத்தினால் ஜித்தா நகரத்தில் மட்டும் தினசரி நாற்பது தீ விபத்துகள் நிகழ்வதாக நேற்றைய செய்த்தித்தாளில் படித்தேன். மின்சாரக் கோளாறு மற்றும் வாகனங்களில் என்ஜின் சூடாவது போன்றவைகளால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகிறதாம். இயற்கை நிகழ்வை நாம் கட்டுப்படுத்த முடியாது தான், ஆனால் நம்மையும் சுற்றுப் புறத்தையும் பராமரிக்கலாமே?
நமக்கு:
அவசியமில்லாமல் வெயிலில் லைய வேண்டாம், செய்ய வேண்டிய காரியங்களை முன் கூட்டியே திட்டமிட்டு, நேரம் வகுத்து செயல பட வேண்டும்.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.
எண்ணையில் பொறித்த உணவு வகைகளை மதிய நேரங்களில் குறைத்துக் கொலள்ளலாம்.
வாகனங்களுக்கு:
என்ஜின் அதிக சூடாகும், இதனால் கூலன்ட் நீரை பார்ப்பதுடன் ப்ரேக், கியர், என்ஜின் ஆயிலையும் பார்த்துக் கொள்ளவும்.
கதவுக் கண்ணாடிகளை காற்று புகும் அளவிற்கு சிறிது இடைவெளிவிட்டு மூடவும்.
டேஷ்போர்டு சூடாகாமல் இருக்க விண்டு ஷீல்டு கவர் போடலாம்
வாகனத்தை ஸ்டார்ட் செய்து உடனே ஏர்கண்டிஷனை போடாமல், சிறிது நேரம் ஃபேனை மட்டும் போட்டு காற்றோட்டத்தை சீர் செய்யவும்.
உலக போதை ஒழிப்பு நாள்
சமுதாயத்தை சீரழித்து வரும் இந்தப் பழக்கத்தை எப்படி ஒழிக்கப் போகிறார்களோ? ஒவ்வொரு தனி மனிதனும் தவறை உணர்ந்தால் ஒழிய இதனை ஒழிப்பது பெரும்பாடே. இத்தீய பழக்கத்தினை ஒழிப்பதில் பெற்றோர்களின் பங்கும் மிகவும் முக்கியம். தமது குழந்தைகளின் நடவடிக்கைகளை சரிவர கவனிக்க வேண்டும், அக்கால அதிரடி நடவடிக்கைகள் தற்கால குழந்தைகளிடம் அத்தனை செல்லுபடியாகாது, அவர்களது உணர்வுகளை புரிந்து, அவர்களின் எண்ணங்களை நம்முடன் தெளிவாக பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நாம் மாற வேண்டும். போதை பழக்கத்திற்கும் புகை பிடிப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், இந்தக் கொடிய புகை பழக்கத்தையும் அடியோடு நிறுத்திடலாமே?
'கடி'காரம்
வீட்டின் ஹாலில் உள்ள கடிகாரம் திடிரென நின்று விட்டது, எங்களுடைய சிறிய மகன், ஹாலிற்கும், அறைக்கும் ஒரே சமயத்தில் தான் கடிகாரம் வாங்கி, புதிய பேட்டரியும் போட்டோம், ஆனா அது ஓடுது, இது மட்டும் நின்னுடுச்சே என சந்தேகத்தை கிளப்பினான், ஆமா சைனா கடிகாரம், மெஷின் எப்போ நிக்கும் எப்போ ஓடும்னு சொல்ல முடியாதுன்னு சொல்லிப் பார்த்தேன், இல்லாட்டி இந்தக் கடிகாரத்தை நாம அடிக்கடி பார்க்குறோம், அறைல உள்ளத அவ்வளவா பார்க்குறதில்லை அதனால இருக்குமோன்னு, ஒரு மொக்கை பதிலையும் சேர்த்து சொல்லி வச்சேன். அவனுக்கு இரண்டு பதில்களும் பிடிச்சுருந்தது, உங்களுக்கு?
46 comments
மனிதனையும்,சுற்றுப்புறத்தினையும் பாதுகாக்க அவசியமான,நல்ல அறிவுரைகள்.நன்ரி ஷஃபி.கடிகாரத்தில் உள்ள பேட்டரி பற்றி தங்கள் விளக்கம்..எனக்கும் இந்த சந்தேகம் இருந்துதான் இருக்கின்றது.ஆனால் நான் உங்கள் பையன் போல் அப்பாவிடம் கேட்கவில்லை.ரெண்டு பதிலுமே சுவாரஸ்யமாக இருந்தாலும் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை
உங்க டெம்ப்ளேட் கலக்கல்....பார்ன்ட் ரொம்ப சின்னதா இருக்கு...
1. சூடுக்கு ஐஸ் வைக்க சொன்ன ஐடியா சூப்பர்..
2. போதை ஒழிப்பு நாள் கருத்து அருமை
3. அதெப்படி நாம பார்க்கறதுனால கடிகாரம் பேட்டரி தீர்ந்துப்போகுமா... சின்ன பசங்க சந்தேகம் கேட்டா கொஞ்சம் லாஜிக்கா சந்தேகத்தை தீர்த்த வைங்க அண்ணாச்சி..... வஞ்சுகிட்டா வஞ்சக்ம் பண்றேன்னு சொல்றீங்களா....?:))
டெம்ப்ளேட் நல்லாயிருக்குங்கோ ...
போதை ஒழிப்பு நல்ல சிந்தனை.
இரண்டு பதில்களும் எனக்கு பிடிச்சிருக்கு
இரண்டாவது ரொம்ப :)
நல்ல தகவல்கள் நல்ல பதிவு..
நல்ல பதிவு!! 2 பதில்களும் சூப்பர்ர்!! சின்ன பிள்ளைகளுன் கேள்விக்கு பதில் சொல்வதற்குள் நாம முழிக்க வேண்டியது...
Font is very small ......
அப்பாடி, படிச்சு முடிச்சிட்டேன்..... அங்கே வெயில் காலம் எப்போ போகும்?
எனக்கு ரெண்டாவது பதில் ரொம்ப பிடித்து இருந்தது.... :-)
ஆஹா...பதிவு அருமை...இந்த குழந்தைகளுக்கு பதில் சொல்வதில் தான் நம்முடைய திறமை இருக்கின்றது..எனக்கும் இரண்டவது பதில் தான் பிடித்து இருக்கின்றது....நீங்கள் கடிகாரம் என்று சொன்னவுடன்...என்னுடய பொன்னு கேட்ட கேள்வி நியபகம் வருக்கின்றது...ஒருநாள் அவளுக்கு கடிகாரத்தினை பற்றி சொல்லிகொண்டு இருந்தேன்...Seconds , minute ,hour என்று எல்லாம் சொல்லி கொண்டே இருந்தே..அந்த வேகமாக moving hand தான் seconds என்று சொன்னேன்...உடனே அவளுடய கையினை வேகமாக ஆட்டி இது secondsஆ அம்மா என்று கேட்கிறாள்...என்னத சொல்ல.....
ஜெத்தாவில் 59 வரையில் போனதாக பேப்பரில் பார்த்தேன் சபிக்ஸ்
எனக்கும் கடிகாரத்திற்கான ரெண்டு பதில்களும் பிடிச்சிருந்தது. புகை, மது மேட்டர்தான் கொஞ்சம்(இயலாமையால்) இடிக்குது. :-))
சூட்டை பார்த்தால் இப்பவே கண்ணைகட்டுதே வரும் நோன்பை நினைத்தால் பயமா இருக்கு.14 மணி நேரம் வருது .
. பேட்டரி வரும் போதே சிலது சார்ஜ் கம்மியா வரும் . அதுக்கு 6 விதமான காரணம் இருக்கு .
மூனு மேட்டரும் சூப்பர்..!!
அறிவுரைகள் அருமை,
எனக்கு இரண்டு பதிலுமே பிடித்திருக்கு,
இரண்டாவது பதிலை கேட்டவுடன் எனக்கு சந்தேகம் வந்திடுச்சு,
ஒரு வேலை இப்படி கூட இருக்கலாமோ,
எது ஓடலையோ, அது நம்மல பார்க்கிறாங்கன்னு ஓடி ஓடி கலைத்து போயிருக்குமோ,
எது ஓடுதோ , ஆஹா நம்மல யாரும் பார்க்கல நாமோ நின்னு நின்னு ஓடுவோம்னு, ஓடிக்கிட்டிருக்கோ.
ரெண்டு பதில்களுமே நல்ல டைமிங் ..ரகத்தில் செர்ந்தது.
குழந்தைகள் அடிக்கடி கேள்வி கேட்கட்டும் உங்கள் ஹ்யூமர் வளரட்டும்
//அவனுக்கு இரண்டு பதில்களும் பிடிச்சுருந்தது, உங்களுக்கு? //
எவ்ளோ பெரிய்ய்ய தத்துவத்தை சொல்லி இருக்கீங்க? பிடிக்காமலா?
கலவையான பதிவுகளுக்கு கலைடாஸ்கோப் பதிவுனு பெயர் சரி! கலைடாஸ்கோப்புக்கு தமிழில் என்னங்க??
(தங்கள் உடல் நலம் தற்போது எப்படி உள்ளது?)
நன்றி ஸாதிகாக்கா : நானும் சுருக்கமான வேறு என்ன பதில் இருக்கும்னு யோசிக்கிறேன்.
நன்றி நாஞ்சிலார் : ஃபாண்ட் சைஸ் மாத்தியாச்சு..பதில்கள்..ஹி..ஹி :)
நன்றி ஜமால், இரண்டாவது உங்கள் பாணி :)
நன்றி ரியாஸ்
நன்றி சகோ. மேனகா.
நன்றி சித்ரா மேடம் (ஃபாண்ட் மாத்தியாச்சு), இங்கு கோடை காலம் இப்பொழுது தான் தொடங்குகிறது, ஆரம்பமே இப்படி, இன்று காலை அத்தனை சூடு இல்லை, இப்படியே தொடர்ந்தால் நலம்.
நன்றி GEETHA ACHAL :ஆமாம், குழந்தைகளின் கேள்விகளுக்கு, சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் பதில் சொல்லணும், லெட்சர் அடிக்கக் கூடாது.
நன்றி பா.ரா. அண்ணே, இன்று வெப்பம் கொஞ்சம் குறைவாக இருக்கு. அந்த ஆமையை இறக்கி வைக்க கொஞ்சம் முயற்சி செய்யுங்களேன்:)
நன்றி ஜெய்லானி, நோன்பு காலங்களில் இந்த சிறிய சோதணையையும் கடந்து இறைவனின் பொருத்ததை பெறுவோம்.
பேட்டரி லாஜிக் சரியாகப்படுகிறது, இன்னும் 5 காரணங்கள் என்னவோ (மொக்கைகளோ:)
நன்றி அதிரை எக்ஸ்பிரஸ்..ஹி..ஹி ரொம்ப யோசிக்கிறீங்க
நன்றி சுமஜ்லாக்கா, இறைவன் அருளால் நன்றாக உள்ளேன், தங்களது பிராத்தணைகள் தொடருட்டும்.
நன்றி கோமதியக்கா : ஹாஸ்யம் படிச்சு, நாங்களும் ஹ்யூமர் க்ளப்பில் சேர்ந்திட்டோம்ல
ஆமா ஷஃபி இந்த வருடம் ரொம்ப அதிகம்தான்.
போதைதான் மனிதனின் முதல் எதிரி. எல்லா போதையும் சேர்த்துதான். தேனக்காவின் கவிதையில் சொன்ன மாதிரி.
கடிகாரம் மேட்டர் ரொம்ப அருமை. ரெண்டாவது பதில் ரொம்ப பிடித்திருந்தது.
டெம்ளேட் அட்டகாசமா இருக்கு.
நன்றி அக்பர், உங்களுக்கும் ரெண்டாவது பதில் தானா :)
பல விஷயங்களும் கலந்து இருந்ததால்
இடுகை சுவாரஸ்யமாய் இருந்தது.
"புகை பிடிப்பதை முதலில் நிறுத்திட
வேண்டும்' என்பது நல்ல பாய்ண்ட்.
அடுத்ததாக, 'கடி'காரம் என்ற தலைப்பு
போலவே 'கடி'யும் 'காரம்'ஆகத்தான்
உள்ளது.
நன்றி நிஜாம், காரமான கடியாக்கும்:)
இங்கேயும் வெயில் கொடுமை தாங்களே, வெளியே போகவே தயக்கமா இருக்கு.
அதில் போட்ட பேட்டரியின் புரடக்ஷன் டேட் வெவ்வேறா இருந்திருக்கலாம்லே
இப்போ உள்ள் குழந்தைங்க ரொம்ப ஷார்ப், எனவே எதையாவது சொல்லி சமாலிக்காமல் உண்மையான காரணத்தை சொல்லவும்
என் மகனும் கேட்டான் வானத்தை யார் கட்டியதுனு. அப்படியே ஷாக்காயிட்டேன் :)))
நன்றி அபூ, அட ஆமா இப்படி கூட இருந்திருக்கலாம்:)
கறுப்பு-சிவப்புல புது டெம்ப்ளேட் ‘ஏதோ’ சேதி சொல்லுதே!! இதுவும் நல்லாத்தான் இருக்கு.
வெயில்: நமக்கு கீழே ஸைட்டில் வேலைபார்ப்பவர்கள் இருந்தால், வேலையிடத்தில் அவர்களுக்குத் தாராளமாகத் தண்ணீர் கிடைக்கும்படி (நிறுவனம் சார்பில்) ஏற்பாடு செய்து கொடுக்கமுடிந்தால் செய்யவும்.
அப்புறம், கடிகாரம்: உங்க வீட்டில இருக்க ஓடாத கடிகாரம், உங்க ‘கடி’ தாங்கமுடியாம, தப்பி ஓடப் பாத்து களைச்சு கத முடிஞ்சு போச்சு. ஓடிகிட்டிருக்கிற கடிகாரம், அதே போல, தப்பி ஓடுற முயற்சியில இருக்கு. அதுக்கு எப்போ விடிவோ??!!
கறுப்பு-சிவப்புல புது டெம்ப்ளேட் ‘ஏதோ’ சேதி சொல்லுதே!! இதுவும் நல்லாத்தான் இருக்கு.
வெயில்: நமக்கு கீழே ஸைட்டில் வேலைபார்ப்பவர்கள் இருந்தால், வேலையிடத்தில் அவர்களுக்குத் தாராளமாகத் தண்ணீர் கிடைக்கும்படி (நிறுவனம் சார்பில்) ஏற்பாடு செய்து கொடுக்கமுடிந்தால் செய்யவும்.
அப்புறம், கடிகாரம்: உங்க வீட்டில இருக்க ஓடாத கடிகாரம், உங்க ‘கடி’ தாங்கமுடியாம, தப்பி ஓடப் பாத்து களைச்சு கத முடிஞ்சு போச்சு. ஓடிகிட்டிருக்கிற கடிகாரம், அதே போல, தப்பி ஓடுற முயற்சியில இருக்கு. அதுக்கு எப்போ விடிவோ??!!
நன்றி ஹூசைனம்மா, ஃபேக்டரியில் ஆரஞ்சு டேங்க் பானம் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வினியோகிக்கிறார்களாம், அது போல ஷிப்ட் நேரத்தையும் குறைத்துள்ளார்கள்.
உங்க வீட்டு கடிகாரம் ஓடிய அனுபவம் உண்டோ:)
நல்ல தகவல்கள்.
//அதனால இருக்குமோன்னு, ஒரு மொக்கை பதிலையும் சேர்த்து சொல்லி வச்சேன்//
எப்படி இப்படியெல்லாம்ம்ம் :-)
நன்றி இளம் தூயவன்
நன்றி உழவரே:)
கடி'காரம் சூப்பர்...யோசிப்பு? பலம் கட்டுரையில் தெரிகிறது..அருமை
வாரத்துக்கு ஒரு பதிவு போடலாமே...வேண்டுகோள்தான்..
நன்றி இர்ஷாத், முயற்சி செய்கிறேன்:)
################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html
அன்புடன் .> ஜெய்லானி <
################
டெம்ப்ளேட் நல்லாயிருக்கு ஷபியண்ணா. ஆனா பான்ட் ரொம்ப சின்னதா இருக்கு.
பதிவு மிகவும் அவசியமான நல்ல பதிவு.
//இறைவா, எதனை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எதனை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!//
மிக மிக அழகான பிரார்த்தனை...
பாலைவன வெப்பமும் போதையின் கொடுமையும் ஒன்றுதான்.. ஷஃபி..
கடிகாகரம் பற்றிய கேள்விக்கு உங்கள் பதில் கொஞ்சம் கடி..:))
மிக அருமையான பகிர்வு.
உண்மையில் எல்லா மனிதரும் தினம் 6 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
நன்றி.
ஆமாம் டெஸர்ட்டுகளில் வெப்பம் அதிகம்தான்.. ஷஃபி .. நல்ல பயனுள்ள இடுகை
ரொம்ப நாள் ஆச்சே அடுத்த இடுகை எப்ப..
ஹ ஹ ஹ எப்படி உங்களால இப்படி எல்லாம் பதில் சொல்ல யோசிக்க முடிகிறது :-)
Post a Comment