சமீபத்தில் ISO AUDIT டிரெய்னிங் "யான்பு ரெடிசன்" ஹோட்டலில் நடந்தது. நான் கஷடப்பட்டு கை வலிக்க பதிவு எழுதுவத பார்த்து ராஸா வந்து கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் எடுப்பான்னு அன்பான அழைப்பு வேறு, நாமதான் அன்புக்கு கட்டுப்பட்டவாங்களாச்சே, தட்டாமெ தலையாட்டிவிட்டு வெற்றிகரமாக போய் வந்தோம்.
முதல் நாள் வகுப்பு முடிந்ததும், எல்லோரும் சாப்பிட இங்கே வாங்கன்னு ஒருத்தர் அழைச்சிட்டு போனார், நான் அதை ரொம்பவும் டீடெய்லா சொல்லி உங்கள ஜொல்ல விரும்பல, ஆனால் பறப்பன, நடப்பன, நீந்துவன என எல்லாம் 'வாவா..வாவா..கண்ணா வா' என்னைப் பார்த்து பாடுவது மாதிரியே இருந்தது.
சரி மேட்டருக்கு வர்ரேன், உணவுகள் எல்லாம் ஒரு வரிசையில் வகைவகையாக இருக்க , அந்த கண்ணாடி மேசை மேல் குப்பை மாதிரி போட்டு வச்சிருந்தாங்க, அங்கே இருந்த பையனிடம் என்னப்பா இதுன்னு கேட்டேன், சார் உங்க கண்ணாடிய கழட்டிட்டு கலைக் கண்ணோட இத பாருங்க,அப்போ புரியும்!! "டேய் என்னங்கடா இது" கேட்க்க தோணுச்சு, டேய் ஷஃபி அடக்கி வாசி, இப்பொத்தான் சூப், சலட் எடுத்து முதல் சுற்று தொடங்கியிருக்கே, இன்னும் அஞ்சு சுற்று, அதுக்கு அப்புறம் கேக், ஜூஸ் வேறு இருக்கு...கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போயுடும்.. சுதாரிச்சு.. அட ஆமா ரொம்ப அழகா இருக்கு, என்னே ஒரு கலை நயம்!! (மாறிருவோம்ல..ஹி..ஹி).
நல்ல ரவுன்டு கட்டிட்டு ஒரு Meal பார்வை, ஏதாவது விட்ட குறை, தொட்ட குறை இருக்கான்னு No chance, அப்படியே லன்ச்சிட்டு வரும்போது எதிரில் ஒரு மேஜை, அதோட கால்கள் என்ன்மோ பாசி பிடித்தார்போல, அதற்க்கு அருகில் காய்ந்த குச்சிகளையெல்லாம் ஒன்னா சேர்த்து ஒரு சாடியில், சரி கலை நயம்!! நடத்துங்கய்யா நடத்துங்க!!
இன்னும் கொஞ்ச தூரம் நடந்து வந்தா எதிரில் இரண்டு பழைய பானை. இரண்டு மாசத்துக்கு முன்னாடி தங்கமணி ரெண்டு பழைய பானையைத்தந்து ஆஃபிஸ் போகும்போது இதை குமாமாவில் (குப்பைத்தோட்டி) போட்டுட்டு போங்கன்னு சொன்னது ஞாபகம் வந்தது. இவிங்க கிட்டே கொடுத்து முப்பது ரூபாய் பானையை முன்னூறு டாலராக்கியிருக்கலாம். டூ லேட்..நீங்க வேனும்னா முயற்சி செய்யுங்களேன்?
அப்படியே வெளியே வந்தால், அழகான பசுமை, நடுவே ஒரு பட்டுப்போன மரம், இது எப்பவோ விறகு ஆகி இருக்க வேண்டியது, ரேடிசன் உபயத்தால் உயர்ந்து நிற்க்கிறது.
இவை யாவற்றையும் உற்று நோக்கியபோது எனக்கு தோண்றியது "பொருள் எப்படிப் பட்டவையாக இருந்தாலும் அது இருக்கும் இடம், அதனை சரியான முறையில் அனைவரும் கவரும் விதமாக வடிவமைக்கும் திறமை (Presentation+Creativity), இவை ஒன்றாக சேரும்போது குப்பை மேட்டையும் கோபுரமாக்கி காட்டலாம். அப்புறம் இந்த பகுதிகளில் ஈத்தப்பழம் (Dates) காய்க்கும் பருவ நிலை, சந்தை முழுதும் செங்காய்கள், இன்னும் சில நாட்களே கிடைக்கும் என்பதால் மக்கள் கூடை கூடையாக அள்ளி செல்கின்றனர்.
சரி இது எல்லாம் இருக்கட்டும் நீ அங்கே போய், கொட்டிக்கிட்டதும், ஊர் சுத்தினதும் போக டிரெய்னிங்கள என்ன படிச்சென்னு கேட்கிறவங்களுக்கு, இதோ இந்த படம், இந்த மாவை தான் மூனு நாளும் அரைச்சிக்குட்டு இருந்தோம்.