இந்த டைட்டுல பார்த்துட்டு இது என்னமோ மென்ஹட்ட்ன் மொக்காசினோ ரெஸ்ட்டாரன்ட்டோ, இல்லாட்டி புர்ஜ் துபாய் முப்பதாவது மாடியில உள்ள ஹோட்டல் மெனுவோன்னு திகச்சு நிக்காதிங்க. இது உங்க வீட்டு அம்மனீஸ அசத்தி நீங்களும் சமையல்ல கில்லி தான்னு சொல்ல வைக்கப் போற "கிரி..கிரி..கிரிஸ்ப்பி உங்கள் சாய்ஸ்" ஸ்டைல்ல ஒரு ஸ்னாக்ஸ்.
யப்பா ஷஃபி இந்த சமாசாரமெல்லாம் நமக்கு தேவையில்லை, எங்க தங்கமணி என்னைய கிச்சன் பக்கமே விடுறது இல்லைன்னு பந்தாவா சில பேர் காலர தூக்கி விடுறது தெரியுது, ஆனா அதுல பாருங்க அவுக அப்படித்தான் சொல்லுவாக, நீங்க கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சு, அவுக போட்ட கோட்டை தாண்டி, கிச்சனுக்குள்ள குதிச்சு பட்டைய கெளப்புனம், அதுக்கு அப்புறம் அதோட குணம் தெரியும், டீடெய்லா அப்பால பேசிக்கலாம்.
இப்போ நான் சொல்லப்போற இந்த அயிட்டத்திற்க்கு நீங்க வேட்டிய வரிஞ்சு கட்டி, வேர்த்துக் கொட்ட வேண்டிய அவசியம் இல்லைங்க, என்ன சந்தோஷமா?
இப்பவே சில அம்மனீஸ் இந்த இன்ட்ரோவெ பார்த்து பயந்து பம்மி இருப்பாக, சரி நம்ம ப்ரொஸீட் பண்ணுவோம்.
முதல்ல தேவையான் பொருட்கள்:
பிரட் - 4 pcs
பிரட் - 4 pcs
நெய் அல்லது வெண்ணெய் - 2 tsp (பிரட் மேல் தடவுவதற்க்கு)
பிரட்டை எடுத்து நீள வாக்கில் வெட்டிக்கோங்க (நான் இங்கெ படத்தில் கோடு போட்ட மாதிரி பேனாவுல கோடு போட்டு மானத்தை ராக்கெட்ல ஏத்திடாதிங்க பாய்ஸ்!!)
தோசைக்கல்ல அடுப்பில வச்சு நல்லா சூடானதும், இந்த பிரட் துண்டுகளை அது மேல போட்டு, அது மேல நெய்யை லேசா கரன்டியில தடவி, வாட்டி எடுங்க, பிரட் மொரு மொருன்னு, இலேசான சிவந்த நிறத்தை அடைந்ததும், அப்படியே எடுத்து தட்டையில வச்சுருங்க.அப்புறம் இது தொட்டுக்க சட்னி மாதிரி, கீழ்க்கண்டவைகளை மிக்ஸ் பன்னி ஒரு கோப்பையில் வச்சுக்குங்க, அப்படி இல்லைனாஜலீலா அக்கா இது மாதிரி சட்னி வகைகள் போட்டு இருப்பாங்க, அதுவும் ஒ.கே. தான்.
தயிர் - 3 tsp
மிளகு தூள் - சிறிதளவு
உப்பு தேவையான அளவு
மயோனைஸ் - 1 tsp (தேவைப்பட்டால்)
இப்போ பிரட் கிரிஸ்ப்பி கிரேக்கர்ஸ் ரெடி, தொட்டுக்க சட்னி ரெடி. தங்கமணி வழக்கம்போல் சீரியலில் மூழ்கி இருப்பாக, ஒரு சவுன்டு கொடுங்க, அங்கே இருந்து டெசிபெல் கூடுதலா சவுன்டு வந்தா, நீங்களே தட்டையே கை நடுங்காம அவுக இருக்கிற இடத்துக்கே போய் பரிமாறி உலகக் கோப்பையை தட்டிச்செல்லலாம், இல்லைனா வேற மாதிரி கோப்பை பறந்து வர வாய்ப்பும் இருக்கு, பத்திரமா பார்த்துக்கோங்க.
சவாலுக்கு நாங்கள் தயார்னு சேவலாட்டம் நீங்க கூவுறது நல்லாவே கேட்க்குதுய்யா!!
சவாலுக்கு நாங்கள் தயார்னு சேவலாட்டம் நீங்க கூவுறது நல்லாவே கேட்க்குதுய்யா!!
48 comments
சமையல் ஷஃபிக்க்ஸ் வாழ்க
நீங்களும் ஆரம்பிச்சிட்டேலா
நீங்க படும் கஷ்டத்தை நாங்களும் படனுமா
பட் இருந்தாலும் பேச்சலரான எனக்கு அதிகம் தேவைப்படுது
அப்புறம் மீன் முள்ளை எப்படி சூப் வைக்கலாம் என்று ஒரு பதிவு போடுங்க
//எங்க தங்கமணி என்னைய கிச்சன் பக்கமே விடுறது இல்லைன்னு பந்தாவா சில பேர் காலர தூக்கி விடுறது தெரியுது//
உண்மைதானுங்கோ
எங்க தங்கமணி என்னைய கிச்சன் பக்கமே விடுறது இல்லைன்னு பந்தாவா சில பேர் காலர தூக்கி விடுறது தெரியுது]]
போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்
நாம கலந்து கட்டுவோம் அடுப்படியில்
வாழ்க கிச்சன் ...
//புர்ஜ் துபாய் முப்பதாவது மாடியில உள்ள ஹோட்டல் மெனுவோன்னு திகச்சு நிக்காதிங்க//
இதே அயிட்டத்தை கொடுத்துதாங்க 150 திர்ஹாம் பில் பண்ணிட்டானுங்க
//தோசைக்கல்ல அடுப்பில வச்சு நல்லா சூடானதும்//
அடுப்பை பற்றவைக்கனுமா இல்லே வேறு எதாவது பத்தவைக்கனுமா
பத்தவெச்சிட்டியே பரட்டே
//நட்புடன் ஜமால் said...
சமையல் ஷஃபிக்க்ஸ் வாழ்க//
கோஷம் சத்தமா போடாதீங்க ஜமால், எங்க வீட்டு தங்கமணிக்கு கேட்டுறப்போவுது!!
//அபுஅஃப்ஸர் said...
அப்புறம் மீன் முள்ளை எப்படி சூப் வைக்கலாம் என்று ஒரு பதிவு போடுங்க//
தொழில் ரகசியம் அதெல்லாம் சொல்லமாட்டோம்
//அபுஅஃப்ஸர் said...
//எங்க தங்கமணி என்னைய கிச்சன் பக்கமே விடுறது இல்லைன்னு பந்தாவா சில பேர் காலர தூக்கி விடுறது தெரியுது//
உண்மைதானுங்கோ//
வெளியில இப்படி தான் எல்லோரும் சொல்லிங்!!
//நட்புடன் ஜமால் said...
எங்க தங்கமணி என்னைய கிச்சன் பக்கமே விடுறது இல்லைன்னு பந்தாவா சில பேர் காலர தூக்கி விடுறது தெரியுது]]
போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்
நாம கலந்து கட்டுவோம் அடுப்படியில்
வாழ்க கிச்சன் ...//
இப்படி ஒரு ஆதரவா!!, நீங்களும் கிச்சன் கிங்தான்னு ஊரில பேசிக்கிறாங்களே
//அபுஅஃப்ஸர் said...
//தோசைக்கல்ல அடுப்பில வச்சு நல்லா சூடானதும்//
அடுப்பை பற்றவைக்கனுமா இல்லே வேறு எதாவது பத்தவைக்கனுமா
பத்தவெச்சிட்டியே பரட்டே//
இங்கே பேசிக் எல்லாம் சொல்லித்தரமாட்டோம் அபூ, கொஞ்சம் ஒத்திக்கோங்க!!
கிரிஸ்ப்பி கிரேக்கர்ஸ்
செய்து பாத்திடறேன்
ஆனா திட்டினாங்கன்னா???
எப்ப இருந்து சமையல் பக்கமெல்லாம்...?
அவர் அடிக்கடி முட்டை பிரெட் செய்து தானும் சாப்பிட்டு, பிள்ளைகளுக்கும் தருவார்!(எனக்கு கிடையாது, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ நல்லெண்ணம்)
அப்புறம், லின்க் கொடுத்ததற்கு தேங்க்ஸ்ப்பா ஷஃபி!
//sakthi said...
கிரிஸ்ப்பி கிரேக்கர்ஸ்
செய்து பாத்திடறேன்
ஆனா திட்டினாங்கன்னா???//
ஆமா யாரு உங்கள செஞ்சு பார்க்க சொன்னது? இது அவரோட ஹோம் ஒர்க், அதுதானால தான் சுலபமானதா நாங்க கொடுத்து இருக்கோம். நீங்க செஞ்சு, எதுக்கு ரிஸ்க் சக்தி!!
//SUMAZLA/சுமஜ்லா said...
எப்ப இருந்து சமையல் பக்கமெல்லாம்...?
அவர் அடிக்கடி முட்டை பிரெட் செய்து தானும் சாப்பிட்டு, பிள்ளைகளுக்கும் தருவார்!(எனக்கு கிடையாது, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ நல்லெண்ணம்)
அப்புறம், லின்க் கொடுத்ததற்கு தேங்க்ஸ்ப்பா ஷஃபி!//
அய்யய்யோ என்னோட சமையல் வாசம் உங்களையும் இழுத்துடுச்சா, சமையல் ஸ்பெஷல்னு சொல்லி உங்க இணைப்புல இணைச்சுடாதீங்க, பல்சுவைன்னே இருக்கட்டும். ஹீ...ஹீ!!
இப்பவே சில அம்மனீஸ் இந்த இன்ட்ரோவெ பார்த்து பயந்து பம்மி இருப்பாக, சரி நம்ம ப்ரொஸீட் பண்ணுவோம்.
\\
hahahahaha
தோசைக்கல்ல அடுப்பில வச்சு நல்லா சூடானதும், இந்த பிரட் துண்டுகளை அது மேல போட்டு, அது மேல நெய்யை லேசா கரன்டியில தடவி, வாட்டி எடுங்க, பிரட் மொரு மொருன்னு, இலேசான சிவந்த நிறத்தை அடைந்ததும், அப்படியே எடுத்து தட்டையில வச்சுருங்க
\\
yemmadiyow evlo periya velai
சவாலுக்கு நாங்கள் தயார்னு சேவலாட்டம் நீங்க கூவுறது நல்லாவே கேட்க்குதுய்யா!!
\\
ore thamasa pochu
//rose said...
தோசைக்கல்ல அடுப்பில வச்சு நல்லா சூடானதும், இந்த பிரட் துண்டுகளை அது மேல போட்டு, அது மேல நெய்யை லேசா கரன்டியில தடவி, வாட்டி எடுங்க, பிரட் மொரு மொருன்னு, இலேசான சிவந்த நிறத்தை அடைந்ததும், அப்படியே எடுத்து தட்டையில வச்சுருங்க
\\
yemmadiyow evlo periya velai//
ரொம்ப இரக்கம் உங்களுக்கு
தனிமை தனிமையோ !!!! கொடுமை கொடுமையோ !!!!
/அ.மு.செய்யது said...
தனிமை தனிமையோ !!!! கொடுமை கொடுமையோ !!!!//
செய்யது, இப்பத்தான் நல்ல சான்ஸ், பலவிதமா தடபுடலா சமைச்சுன் கிச்சனில் கில்லி ஆயிடுங்க, பின்னாடி உதையும்..ச்சே உதவும்.
ஹா இஞ்சி டீயுடன் உங்கள் கிரிஸ்பி க்ராக்கரஸ் அருமையோ அருமை.
இது போல் யாராவது செய்து கொடுத்தா சாப்பிட என்ன கசக்கவா செய்யும்.
பிரட்டை எடுத்து நீள வாக்கில் வெட்டிக்கோங்க (நான் இங்கெ படத்தில் கோடு போட்ட மாதிரி பேனாவுல கோடு போட்டு மானத்தை ராக்கெட்ல ஏத்திடாதிங்க பாய்ஸ்!!)
ஹா ஹா ஷபி பிரெட்டில் இந்த கோடு எப்படி போடுவது?
//Jaleela said...
ஹா இஞ்சி டீயுடன் உங்கள் கிரிஸ்பி க்ராக்கரஸ் அருமையோ அருமை.
இது போல் யாராவது செய்து கொடுத்தா சாப்பிட என்ன கசக்கவா செய்யும்.//
சமையல் அரசி ஜலீலா அக்கா கையில் பட்டம் வாங்கியாச்சு, அம்புட்டுத்தேன்!! நன்றி.
//Jaleela said...
பிரட்டை எடுத்து நீள வாக்கில் வெட்டிக்கோங்க (நான் இங்கெ படத்தில் கோடு போட்ட மாதிரி பேனாவுல கோடு போட்டு மானத்தை ராக்கெட்ல ஏத்திடாதிங்க பாய்ஸ்!!)
ஹா ஹா ஷபி பிரெட்டில் இந்த கோடு எப்படி போடுவது?//
ஒரு சிறிய ஸ்கேல், பெர்மெனன்ட் மார்க்கர் எடுத்துகோங்க அப்புறம்......
அப்ப இப்ப சமையலில் பெண்களை விட ஆண்கள் தான் கை தேர்ந்து இருக்கிறார்கள்.
நீங்கள் எல்லாம் இந்த அளவிற்கு செய்வதே பெரிய விஷியம்.
பிரெட் நெஜமாவே சூப்பரோ சூப்பர், அதுவும் மாலை டிபனுக்கு ரொம்பவே நல்ல இருக்கு.
டிப் பண்ண மையானஸ் அதை விட அருமை, நீங்கள் வேறு சட்னி என்று சொல்லி விட்டீர்கள், உடனே ஒரு சட்னி குறிப்பு போட்டகனுமே.
//Jaleela said...
அப்ப இப்ப சமையலில் பெண்களை விட ஆண்கள் தான் கை தேர்ந்து இருக்கிறார்கள்.
நீங்கள் எல்லாம் இந்த அளவிற்கு செய்வதே பெரிய விஷியம்.
பிரெட் நெஜமாவே சூப்பரோ சூப்பர், அதுவும் மாலை டிபனுக்கு ரொம்பவே நல்ல இருக்கு.
டிப் பண்ண மையானஸ் அதை விட அருமை, நீங்கள் வேறு சட்னி என்று சொல்லி விட்டீர்கள், உடனே ஒரு சட்னி குறிப்பு போட்டகனுமே.//
ஹா..ஹா! செஞ்சே பார்த்தாச்சா, Good Good!! சீக்கிரம் இதுக்கு ஏத்த சட்னிய ரெடி பன்னிட்டு சொல்லுங்க!!
நான் பிரட்ல வெண்ணைய தடவி டோஸ்டர்ல போட்டு எடுத்துர்றது.
தோசைக்கல்னு பேர வச்சிட்டு தோசை சுடாம பிரட்டை சுடுராங்கையா. ஐயோ ஐயோ
//S.A. நவாஸுதீன் said...
நான் பிரட்ல வெண்ணைய தடவி டோஸ்டர்ல போட்டு எடுத்துர்றது.
தோசைக்கல்னு பேர வச்சிட்டு தோசை சுடாம பிரட்டை சுடுராங்கையா. ஐயோ ஐயோ//
ஷ்ஷ்!! இந்த மாதிரி ஷார்ட் கட் முறையெல்லாம் செஞ்சா அப்புறம் பிலிம் காட்டுறது எப்படி? ஆனா நவாஸ், தோசைக்கல்லு தான் இதுக்கு சரியான முறை, டோஸ்டர் அந்த அளவுக்கு மொரு மொரு இல்லை!!
//ஷஃபிக்ஸ் said...
/அ.மு.செய்யது said...
தனிமை தனிமையோ !!!! கொடுமை கொடுமையோ !!!!//
செய்யது, இப்பத்தான் நல்ல சான்ஸ், பலவிதமா தடபுடலா சமைச்சுன் கிச்சனில் கில்லி ஆயிடுங்க, பின்னாடி உதையும்..ச்சே உதவும்
//
நன்றிங்க..
ஆறுமாச முன்னாடி வரைக்கும் ஸ்டவ்வே பத்த வைக்கத் தெரியாத நான்
இப்ப சாம்பார்,ரசம்,எலுமிச்சை ரைஸ்,புளியோதரை ரைஸ்( பொடிகள் உபயம் ) வரைக்கும் செய்ய கத்துகிட்டேங்க..
இப்படி அடிக்கடி ஈஸியான சமையல் டிப்ஸ் போடுங்க..நம்ம இப்ப டிவில விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியே
சமையல் சமையல் தான்.
வேணும்னா நம்ம எல்லோரும்..சாரி நான் மட்டும் "பேச்சிலர் சமையல் டிப்ஸ்"னு ஒரு வலைதளம் புதுசா
ஆரம்பிக்கிறேன்.அதுல நீங்கள்லாம் வந்து பதிவு போடுங்க.
//அ.மு.செய்யது said...
நன்றிங்க..
ஆறுமாச முன்னாடி வரைக்கும் ஸ்டவ்வே பத்த வைக்கத் தெரியாத நான்
இப்ப சாம்பார்,ரசம்,எலுமிச்சை ரைஸ்,புளியோதரை ரைஸ்( பொடிகள் உபயம் ) வரைக்கும் செய்ய கத்துகிட்டேங்க..
இப்படி அடிக்கடி ஈஸியான சமையல் டிப்ஸ் போடுங்க..நம்ம இப்ப டிவில விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியே
சமையல் சமையல் தான்.//
அது சரி அப்போ விரைவில் டும்..டும் சத்தம்னு சொல்லுங்க. வாழ்த்துக்கள்
தலைப்ப படிக்க ஒரு ஒருவாரம் டைம் கொடுங்க :-)) சும்மா :-))...நல்ல பதிவு நன்றி.
கலக்குறீங்க ஷஃபிக்ஸ்.
அது எப்புடி சமையல் மேட்டருன்னாலே - தங்கமணிய உள்ள கொண்டு வந்துடுறீங்க?!!! :))))
// ஊர்சுற்றி said...
கலக்குறீங்க ஷஃபிக்ஸ்.
நன்றி நண்பரே!!
//அது எப்புடி சமையல் மேட்டருன்னாலே - தங்கமணிய உள்ள கொண்டு வந்துடுறீங்க?!!! :))))//
உங்கள மாதிரி கிட்ச்சனில தனியா நின்னு சமாளிக்க நம்மாள முடியாதுப்பா..ஹி..ஹி!!
//சிங்கக்குட்டி said...
தலைப்ப படிக்க ஒரு ஒருவாரம் டைம் கொடுங்க :-)) சும்மா :-))...நல்ல பதிவு நன்றி.//
நன்றி சிங்கக் குட்டி, மேட்டரு சிம்ப்ளு, அதான் இந்த டைட்டிலு கொஞ்சம் ஓவர் பில்டப்!!
கேக்கிறவன் கேனப்பயலாயிருந்தால் எலி கூட ஏரோப்ளேன் ஓட்டுமாம்..இது ஒரு டிஷ் இதை செய்ய ஒரு போஸ்டிங்... நான் ஒருத்தியில்லை கேக்கன்னு என்னனா போடுவீங்களா? எவ்ளோ சுலபமா ஒரு ஐட்டம் இத பண்ணி தங்கமணிக்கு சவுண்டு வேற..ஹோட்டல்காரன் ஊரை ஏமாத்தினா நீங்க எங்களை ஏமாத்திறீங்களா? யாரங்கே கூட்டுங்கள் ப்லாக்கர்ஸ் மீட்டிங்கை....ஹிஹிஹி இந்த டிஷ்ஷை பரிமாறத்தான்.....பாவப்பட்ட எங்களை இப்படியா ஷ்பி பழிவாங்குவது?
//தமிழரசி said...
கேக்கிறவன் கேனப்பயலாயிருந்தால் எலி கூட ஏரோப்ளேன் ஓட்டுமாம்..//
ஹலோ பாய்ஸ் இது உங்கள பார்த்து கேட்கப்பட்ட கேள்வி, யாராவது இருக்கிங்களா?
//இது ஒரு டிஷ் இதை செய்ய ஒரு போஸ்டிங்... நான் ஒருத்தியில்லை கேக்கன்னு என்னனா போடுவீங்களா? எவ்ளோ சுலபமா ஒரு ஐட்டம் இத பண்ணி தங்கமணிக்கு சவுண்டு வேற..ஹோட்டல்காரன் ஊரை ஏமாத்தினா நீங்க எங்களை ஏமாத்திறீங்களா? யாரங்கே கூட்டுங்கள் ப்லாக்கர்ஸ் மீட்டிங்கை....ஹிஹிஹி இந்த டிஷ்ஷை பரிமாறத்தான்.....பாவப்பட்ட எங்களை இப்படியா ஷ்பி பழிவாங்குவது?//
நீங்க லேட்டா வந்தாலும் பிரட் இன்னும் மொரு மொருப்பா தான் இருக்கு!! சாப்பிட்டுவிட்டு போங்க அரசி!!
கிரிஸ்பி கிராக்கர்ஸ் க்கு பிறகு உங்கள் அடுத்த சமையல் குறிப்பு என்ன?
ஷபிக்ஸ் ரமலான் முபாரக்
//Jaleela said...
கிரிஸ்பி கிராக்கர்ஸ் க்கு பிறகு உங்கள் அடுத்த சமையல் குறிப்பு என்ன?
ஷபிக்ஸ் ரமலான் முபாரக்//
அருசுவையின் அரசியா நீங்களே இருங்க அக்கா, நான் அப்பபோ ஏதாவது வெங்காயம் நறுக்குவது, தக்காளி வெட்டுறது மாதிரி பெரிய பெரிய சமையல் குறிப்புகள் போடுறேன்.
உங்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள்!!
ஷஃபி நீங்களும் சமைக்க ஆரம்பித்துவிட்டீர்களா,ம்ம்ம் நல்லாயிருக்கு.உங்களின் அடுத்த சமையல் குறிப்பு எப்போ?
எனக்கும் அப்படியே ப்ரெட் பார்சல் அனுப்புங்க ஷஃபி!!
//Mrs.Menagasathia said...
ஷஃபி நீங்களும் சமைக்க ஆரம்பித்துவிட்டீர்களா,ம்ம்ம் நல்லாயிருக்கு.உங்களின் அடுத்த சமையல் குறிப்பு எப்போ?
எனக்கும் அப்படியே ப்ரெட் பார்சல் அனுப்புங்க ஷஃபி!!//
வருகைக்கு நன்றி, அடுத்த சமையல் குறிப்பா? ஹி..ஹி..!!
ரொம்ப ஹெல்த்தி வேற :-)
// உழவன் " " Uzhavan " said...
ரொம்ப ஹெல்த்தி வேற :-)//
இலகுவானதும் கூட, தைரியமா ட்ரை பண்ணுங்க உழவர் அண்ணே!!
பெருநாள் எப்போ தலைவா?
கடப்பாசி,வட்டில் அப்பம்,பொரிச்ச ரொட்டி ரெடியா?
//PEACE TRAIN said...
கடப்பாசி,வட்டில் அப்பம்,பொரிச்ச ரொட்டி ரெடியா?//
பெருநாள் அனேகமாக ஞாயிற்றுக்கிழமையாக இருக்கும். ஆமா மாப்ள, கடப்பாசி, வட்டிலப்பம் இல்லாத பெருநாளா? அங்கே எப்படி சேம் அதிரை ஸ்டைல் தானே? இல்லாட்டி பிஜ்ஜா, பர்கரா?
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
Post a Comment