இந்த படத்தில உள்ள மாதிரி நீங்க உங்க பாஸ்ஸ தூக்கி பிடித்து கொண்டாடுபவரா? அப்படின்னா இத படிக்காதீங்க!!
--------------------------------------------------
- நீங்க வேலைய ரொம்ப மெதுவா செஞ்சா, சரியான நோஞ்சான், அதுவே அவரு செஞ்சா ரொம்ப நுணுக்கமா வேலை செய்றாராம்!!
- ஏதாச்சும் அசைன்மென்ட் கொடுத்து தாமதமா ஆனா, நீங்க சோம்பேறி, அவரு செய்யலைன்னா அவரு ரொம்ப பிசியாம்!!
- நீங்க எப்பவாவது ஒரு நாள் லீவு எடுத்தால் என்னப்பா வேற எங்கேயாவது அப்ளிகேஷன் போட்டுட்டு, இன்டெர்வியூக்கு போறியான்னு சந்தேகம், அவரு லீவு எடுத்தால், ஒரே டென்ஷ்னாம் அதனால ஒரு நாளைக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கப்போறாராம்.
- நீங்க தப்பு பண்ணினா, முட்டாள்னு அவப்பெயர், ஆனா அவரு தப்பு பண்ணினா மனுஷன் தப்பு பண்றது சகஜம்ப்பான்னு சமாளிப்பு!!
- நீங்க லிவு எடுத்தால் என்ன சிக் லீவா? ஏலனமா ஒரு கேள்வி, அவரு சிக் லீவு எடுத்தா பாவம் பாஸ் சிக் லீவுப்பான்னு இரக்கப்படுனுமாம்.
- பாஸுக்கு நாம ஏதாவது நல்லது செஞ்சா அது ஜால்ராவாம், அதுவே அவரு அவரோட பாஸுக்கு ஜால்ரா அடிச்சா அது ஒத்துழைக்கிறாராம்.
- நீங்க சீட்ல இருந்து எங்காவது வெளியயோ, அடுத்த சீட்டுக்கோ போனா என்னடா சுத்திக்கிட்டு இருக்கேன்னு கேள்வி, அவரு போனா முக்கியமான வேலையா போனாராம்.
- நாம ஏதாவது புதுசா, நல்லதுன்னு நினைச்சு செஞ்சா என்னடா முந்திரிக் கொட்டை மாதிரி, ரூல்ஸ் எல்லாம் ஃபால்லோ பண்ணமாட்டியான்னு மிரட்டல், அதுவே அவரு செஞ்சா இனிஷியேட்டிவ்!!
- நீங்க கண்ணை மூடிக்கிட்டு சீடல இருந்தா, என்னடா ஒரே தூக்கமான்னு கிண்டல், அதுவே அவரு செஞ்சா ஆழமா சிந்திக்கிறாராம்.
- நீங்க எத்தனையோ நல்லது செஞ்சு இருப்பீங்க அது எல்லாமே அடுத்த நாளே மறந்துடும், ஆனா ஒரு தப்பு செஞ்சா வருசம் முழுசும் அத சொல்லி சொல்லியே வெறுப்பேத்தும்.
சரி இதெல்லாம் இருக்கட்டும், ஒரு சிறந்த மேலாளர் எப்படி இருக்க வேண்டும்?, வலையில் மேய்ந்து திரட்டிய சில தகவல்கள்:
- வெற்றிக்கு தான் மட்டுமே காரணம் என்று நினைக்கக் கூடாது, தன்னுடன் பணி புரியும் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது என உணர வேண்டும் (Share the credit).
- எதைச் சொல்கிறோமோ அதனை தெளிவாகச் சொல்லும் திறமையும், மற்றவர்கள் கூறும் கருத்துக்களை கூர்ந்து கவனித்துக் கேட்க்கும் ஆற்றலும் இருக்க வேண்டும் (Presentation and Listening Skills).
- தலைமைப் பதவிக்கான ஆளுமை இருக்க வேண்டும், அதிகாரம் செலுத்தவதில் மட்டுமல்ல அனுசரணையிலும் அவை வெளிப்பட வேண்டும் (Leadership).
- தனது சக பணியாளர்களை நம்ப வேண்டும், தானே எல்லாப் பணிகளையும் தலையில் போட்டுக் கொண்டு தேவையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகவேண்டிய அவசியமில்லை (Delegation).
- நான் தான் பாஸ்ஸுங்கிற தோரனையில் எப்போதும் உர்ர்ர்ர்ன்னு இருக்கத்தேவையில்லை, சில சமயம் வலைந்து கொடுத்து காரியங்களை சாதிக்கத் தெரிந்திருக்க வேண்டும் (Be flexible).
- தனது ஊழியர்கள் முன்னேறுவதை ஊக்கப்படுத்த வேண்டும், தன்னோட நலனை மட்டும் பார்க்காமல், பதவி மற்றும் சம்பள உயர்வுகளில் தன்னால் முடிந்த அளவு உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் (Career Development).
- ஊழியர்களை புகழ்வதற்க்கு சிறிதும் தயங்கக்கூடாது, அனைவர் முன்னிலையிலும் புகழ்வது தனக்கும், புகழப்பட்ட ஊழியருக்கும் நல்ல மதிப்பை ஏற்ப்படுத்தும், இன்னும் சிறப்பாக அவர் தனது பணியினைச் செய்வார் (Appreciation).
- திறமையானவர்களை கண்டு பிடித்து பணியில் அமர்த்தும் திறமையும், ஏற்கனவே சிறந்து விளங்குவோர்களை தன்னுடன் நிலை நிலை நிறுத்தி தொடர்பவராகவும் இருத்தல் வேண்டும் (Finding and Retaining).
- தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஒத்துழைப்பின் அவசியத்தை உணர்த்த வேண்டும் (Share the goals).
- சலுகைகள் வழங்கியும், சிலர் வழிக்கு வராமல் இருந்தால் அவர்களை பவ்யமாகவோ, அதிகாரமாகவோ தட்டி வழிக்கு கொண்டு வரும் திறமையும் வேண்டும் (Be a Boss).
ஏதோ சொல்றத சொல்லிப்புட்டேன், நீங்களாச்சு உங்க பாஸு ஆச்சு. GOOD LUCK!!
65 comments
இதெல்லாம் உங்க பாஸ் படிச்சுட்டாரா ஷஃபி.
நீங்க வேலைய ரொம்ப மெதுவா செஞ்சா, சரியான நோஞ்சான், அதுவே அவரு செஞ்சா ரொம்ப நுணுக்கமா வேலை செய்றாராம்!!
*************************
இதுக்குத்தான் எதுவுமே செய்யாமல் இருக்கனும்னு சொல்றது
நீங்க கண்ணை மூடிக்கிட்டு சீடல இருந்தா, என்னடா ஒரே தூக்கமான்னு கிண்டல், அதுவே அவரு செஞ்சா ஆழமா சிந்திக்கிறாராம்.
*************************
ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் இந்த மாதிரி இருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லை. டைமிங் ரொம்ப முக்கியம் ஷஃபி
வெற்றிக்கு தன்னுடன் பணி புரியும் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது என உணர வேண்டும் (Share the credit).
**********************
அப்போ தோல்விக்கு?
எதைச் சொல்கிறோமோ அதனை தெளிவாகச் சொல்லும் திறமையும், மற்றவர்கள் கூறும் கருத்துக்களை கூர்ந்து கவனித்துக் கேட்க்கும் ஆற்றலும் இருக்க வேண்டும் (Presentation and Listening Skills).
****************************
Correct. Convince them otherwise Confuse
நான் தான் பாஸ்ஸுங்கிற தோரனையில் எப்போதும் உர்ர்ர்ர்ன்னு இருக்கத்தேவையில்லை, சில சமயம் வலைந்து கொடுத்து காரியங்களை சாதிக்கத் தெரிந்திருக்க வேண்டும் (Be flexible).
**********************
ஸ்டாஃபோட ப்ளாக்ல போயி கமெண்ட் போடலாம்.
//S.A. நவாஸுதீன் said...
இதெல்லாம் உங்க பாஸ் படிச்சுட்டாரா ஷஃபி.//
அவரு ரொம்ப பிசி என்னை மாதிரி!!
//S.A. நவாஸுதீன் said...
நீங்க கண்ணை மூடிக்கிட்டு சீடல இருந்தா, என்னடா ஒரே தூக்கமான்னு கிண்டல், அதுவே அவரு செஞ்சா ஆழமா சிந்திக்கிறாராம்.
*************************
ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் இந்த மாதிரி இருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லை. டைமிங் ரொம்ப முக்கியம் ஷஃபி//
அறிவுரைக்கு நன்றி, அடுத்த முறை அப்படியே ஆகட்டும்!!
// S.A. நவாஸுதீன் said...
வெற்றிக்கு தன்னுடன் பணி புரியும் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது என உணர வேண்டும் (Share the credit).
**********************
அப்போ தோல்விக்கு?//
அவரு தான்!! அவருதானே பாஸ்!!
///அப்போ தோல்விக்கு?//
அவரு தான்!! அவருதானே பாஸ்!!//
;;))
சும்மா சொல்லக் கூடாது. வலையில் ஒழுங்காகத் தான் மேய்ந்திருக்கிறீர்கள்.
அத்தனையும் முத்துக்கள். நல்ல பதிவு.
அவர் பரிசை எழுதி பாஸ் பண்ணினா அது அவர் திறமை,
ஆனா நீங்க பண்ணினா, உங்களுக்கு வேலை எதுவும் இல்லாமல் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது என்று அர்த்தம் :-))
இத விட்டுடீங்களே ?
பாஸ்ஸாக இருப்போர்களே இதக்கொஞ்சம் வந்து கவனியுங்களேன்
பாஸ் இருப்போர்களே இதகொஞ்சம் வந்து கூர்ந்து கவனியுங்களேன்
//ஜீவன் said...
///அப்போ தோல்விக்கு?//
அவரு தான்!! அவருதானே பாஸ்!!//
;;))//
வாங்க ஜீவன், இன்றைக்கு தாங்கள் பதிவிட்ட சிறுகதை சூப்பர், ஏதோ பாரதி ராஜா படம் பார்த்த மாதிரி இருந்துச்சு!!
//ஜெஸ்வந்தி said...
சும்மா சொல்லக் கூடாது. வலையில் ஒழுங்காகத் தான் மேய்ந்திருக்கிறீர்கள்.
அத்தனையும் முத்துக்கள். நல்ல பதிவு//
நன்றி ஜெஸ்!!
//சிங்கக்குட்டி said...
அவர் பரிசை எழுதி பாஸ் பண்ணினா அது அவர் திறமை,
ஆனா நீங்க பண்ணினா, உங்களுக்கு வேலை எதுவும் இல்லாமல் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது என்று அர்த்தம் :-))
இத விட்டுடீங்களே ?//
இப்படியும் ஒன்னு இருக்குங்களா? இன்னும் அனுபவப்படல பாஸ்!!
//அன்புடன் மலிக்கா said...
பாஸ்ஸாக இருப்போர்களே இதக்கொஞ்சம் வந்து கவனியுங்களேன்
பாஸ் இருப்போர்களே இதகொஞ்சம் வந்து கூர்ந்து கவனியுங்களேன்//
வாவ்!! கலக்கலா ஒரு சிறிய கவிதை பாடிட்டிங்களே மல்லிக்கா, நன்றி!!
இதனால் அறிவிப்பது என்னவென்றால் சீக்கிரம் டேமேஜராக போறீங்க வாழ்த்துக்கள்
நாம பாத்ரூம் போன சொல்லிட்டுப்போகனும் அவரு தம் அடிக்க போனா மீட்டிங் போயிருக்கருனு மேனேஜ்மென்ட் கிட்டே சொல்லனும் * இதையும் சொல்லுங்க
// அபுஅஃப்ஸர் said...
இதனால் அறிவிப்பது என்னவென்றால் சீக்கிரம் டேமேஜராக போறீங்க வாழ்த்துக்கள்//
இப்போ மட்டும் என்னவாம் டேமேஜிங் தி மேனேஜிங்!!
//அபுஅஃப்ஸர் said...
நாம பாத்ரூம் போன சொல்லிட்டுப்போகனும் அவரு தம் அடிக்க போனா மீட்டிங் போயிருக்கருனு மேனேஜ்மென்ட் கிட்டே சொல்லனும் * இதையும் சொல்லுங்க//
ஆமா பாத்ரூம் போய்ட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வர்ரேன் பாஸ்னு சொல்லிவியலோ?
கலக்கலா பாஸ் பத்தி பதிவு போட்டிருக்கிங்க.நல்லாயிருக்கு.
உங்க பாஸ் இந்த பதிவை படித்தாரா?
ஹ..ஹ..ஹ..குரலை கேட்டால், "இந்த பூனையும் பால் குடிக்குமான்னு" இருக்கு, காரியத்தை பார்த்தா " படா பேஜார் நைனா!."கொஞ்சம் சிரமப்பட்டாவது உங்கள் முகம் பார்த்து வந்திருக்கலாம் சபி.மிஸ் பண்ணிட்டேன்.உங்களுக்காவது பாஸ்.எனக்கு பிரின்ஸ்.பீஸ் பீசா ஆயிருவேன் மக்கா..கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள்.நல்ல ஜாலி சபிக்ஸ்!
//வெற்றிக்கு தான் மட்டுமே காரணம் என்று நினைக்கக் கூடாது, தன்னுடன் பணி புரியும் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது என உணர வேண்டும் (Share the credit).//
100/100 உண்மையான வரி
பதிவு பாஸ்......
மேனேஜ்மென்ட் பத்தி ரொம்ப ஈஸியா எழுதிட்டீங்க பாஸ்.
என்ன மாதிரி ஆளுங்கள வெச்சுகிட்டு, எங்க மேனேஜர் பட்ற
கஷ்டத்த நீங்க பாக்கல.
//S.A. நவாஸுதீன் said...
நீங்க கண்ணை மூடிக்கிட்டு சீடல இருந்தா, என்னடா ஒரே தூக்கமான்னு கிண்டல், அதுவே அவரு செஞ்சா ஆழமா சிந்திக்கிறாராம்.
*************************
ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் இந்த மாதிரி இருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லை. டைமிங் ரொம்ப முக்கியம் ஷஃபி
//
நவாஸ்.
உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு..!
//நீங்க தப்பு பண்ணினா, முட்டாள்னு அவப்பெயர், ஆனா அவரு தப்பு பண்ணினா மனுஷன் தப்பு பண்றது சகஜம்ப்பான்னு சமாளிப்பு!!//
ரொம்ப ரொம்ப உண்மை..
//
நாம ஏதாவது புதுசா, நல்லதுன்னு நினைச்சு செஞ்சா என்னடா முந்திரிக் கொட்டை மாதிரி, ரூல்ஸ் எல்லாம் ஃபால்லோ பண்ணமாட்டியான்னு மிரட்டல், அதுவே அவரு செஞ்சா இனிஷியேட்டிவ்!!//
ட்ரூ
//நீங்க கண்ணை மூடிக்கிட்டு சீடல இருந்தா, என்னடா ஒரே தூக்கமான்னு கிண்டல், அதுவே அவரு செஞ்சா ஆழமா சிந்திக்கிறாராம். //
ஹீ...ஹீ..
அனைத்தும் சூப்பரோ சூப்பர்..சும்மா பொலம்பி தீத்துடீங்க..:)))
அன்புடன்,
அம்மு.
//Mrs.Menagasathia said...
கலக்கலா பாஸ் பத்தி பதிவு போட்டிருக்கிங்க.நல்லாயிருக்கு.
உங்க பாஸ் இந்த பதிவை படித்தாரா?//
படிச்சு இருப்பார், ஏதாவது கமென்ட் வருதான்னு பார்ப்போம்!! ஹி..ஹி.
//பா.ராஜாராம் said...
ஹ..ஹ..ஹ..குரலை கேட்டால், "இந்த பூனையும் பால் குடிக்குமான்னு" இருக்கு, காரியத்தை பார்த்தா " படா பேஜார் நைனா!."கொஞ்சம் சிரமப்பட்டாவது உங்கள் முகம் பார்த்து வந்திருக்கலாம் சபி.மிஸ் பண்ணிட்டேன்.உங்களுக்காவது பாஸ்.எனக்கு பிரின்ஸ்.பீஸ் பீசா ஆயிருவேன் மக்கா..கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள்.நல்ல ஜாலி சபிக்ஸ்!//
வாங்க அண்ணே!! ஆமாம் கிடைத்த வாய்ப்பினில் சந்தித்து இருக்கலாம், உங்கள் கணீர் குரலையும், எழுத்துக்களையும் வைத்து, நீங்கள் இப்படித்தான் இருப்பிர்கள் என எண்ணத்தில் ஒரு சித்திரம் வரைந்துள்ளேன், பார்ப்போம் அது சரியா, தவறா என்று!!
//பிரியமுடன்...வசந்த் said...
//வெற்றிக்கு தான் மட்டுமே காரணம் என்று நினைக்கக் கூடாது, தன்னுடன் பணி புரியும் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது என உணர வேண்டும் (Share the credit).//
100/100 உண்மையான வரி
பதிவு பாஸ்......//
நன்றி பிரியமான வசந்த்!!
//Ammu Madhu said...
ரொம்ப ரொம்ப உண்மை..//
அனைத்தும் சூப்பரோ சூப்பர்..சும்மா பொலம்பி தீத்துடீங்க..:)))
அன்புடன்,
அம்மு.//
நன்றி அம்மு தங்கள் முதல் வருகைக்கு, தொடர்ந்து வாருங்கள்!!
///அ.மு.செய்யது said...
மேனேஜ்மென்ட் பத்தி ரொம்ப ஈஸியா எழுதிட்டீங்க பாஸ்.
என்ன மாதிரி ஆளுங்கள வெச்சுகிட்டு, எங்க மேனேஜர் பட்ற
கஷ்டத்த நீங்க பாக்கல.//
அவரு நொந்து நூடுல்ஸா எந்த பதிவுல உங்கள பத்தி புலம்பிக்கிட்டு இருக்கிறாரோ தெரியலயே செய்யது!!
//அ.மு.செய்யது said...
//S.A. நவாஸுதீன் said...
நீங்க கண்ணை மூடிக்கிட்டு சீடல இருந்தா, என்னடா ஒரே தூக்கமான்னு கிண்டல், அதுவே அவரு செஞ்சா ஆழமா சிந்திக்கிறாராம்.
*************************
ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் இந்த மாதிரி இருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லை. டைமிங் ரொம்ப முக்கியம் ஷஃபி
//
நவாஸ்.
உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு..!//
ஆமாம் செய்யது இது மாதிரி மேட்டர்ல அவரு கில்லாடி, டிப்ஸ் & டரிக்ஸ் நிறைய இருக்கு!!
S.A. நவாஸுதீன் said...
நீங்க வேலைய ரொம்ப மெதுவா செஞ்சா, சரியான நோஞ்சான், அதுவே அவரு செஞ்சா ரொம்ப நுணுக்கமா வேலை செய்றாராம்!!
*************************
இதுக்குத்தான் எதுவுமே செய்யாமல் இருக்கனும்னு சொல்றது
ama enga annan mathiri irukanum
எங்க பாஸ் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரு...
okay.. rite
ஆஃபிஸ்ல நல்லா "வேலை" செய்றீங்கன்னு நல்லாத் தெரியுது!!
நாம ஏதாவது புதுசா, நல்லதுன்னு நினைச்சு செஞ்சா என்னடா முந்திரிக் கொட்டை மாதிரி, ரூல்ஸ் எல்லாம் ஃபால்லோ பண்ணமாட்டியான்னு மிரட்டல், அதுவே அவரு செஞ்சா இனிஷியேட்டிவ்!!
\\
unga bass romba nallavaru safi anna
S.A. நவாஸுதீன் said...
நீங்க வேலைய ரொம்ப மெதுவா செஞ்சா, சரியான நோஞ்சான், அதுவே அவரு செஞ்சா ரொம்ப நுணுக்கமா வேலை செய்றாராம்!!
*************************
இதுக்குத்தான் எதுவுமே செய்யாமல் இருக்கனும்னு சொல்றது
அப்படி போடு தங்கம்....
S.A. நவாஸுதீன் said...
நீங்க கண்ணை மூடிக்கிட்டு சீடல இருந்தா, என்னடா ஒரே தூக்கமான்னு கிண்டல், அதுவே அவரு செஞ்சா ஆழமா சிந்திக்கிறாராம்.
*************************
ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் இந்த மாதிரி இருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லை. டைமிங் ரொம்ப முக்கியம் ஷஃபி
அபு இதை கவனிக்கவும்..
S.A. நவாஸுதீன் said...
வெற்றிக்கு தன்னுடன் பணி புரியும் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது என உணர வேண்டும் (Share the credit).
**********************
அப்போ தோல்விக்கு?
அதான கேட்க யாரும் இல்லைன்னு பதிவு போட்டேலா?
ஷஃபிக்ஸ்/Suffix said...
//S.A. நவாஸுதீன் said...
இதெல்லாம் உங்க பாஸ் படிச்சுட்டாரா ஷஃபி.//
அவரு ரொம்ப பிசி என்னை மாதிரி
எம காதகனுங்க இதெல்லாம் உஷார இருப்பீங்களே...
பா.ராஜாராம் said...
ஹ..ஹ..ஹ..குரலை கேட்டால், "இந்த பூனையும் பால் குடிக்குமான்னு" இருக்கு, காரியத்தை பார்த்தா " படா பேஜார் நைனா!."கொஞ்சம் சிரமப்பட்டாவது உங்கள் முகம் பார்த்து வந்திருக்கலாம் சபி.மிஸ் பண்ணிட்டேன்.உங்களுக்காவது பாஸ்.எனக்கு பிரின்ஸ்.பீஸ் பீசா ஆயிருவேன் மக்கா..கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள்.நல்ல ஜாலி சபிக்ஸ்!
ஆமாம் நான் கூட முதலில் இப்படி தான் நினைத்தேன்....
முதல் பாதி உண்மை உண்மை உண்மை...எப்படி ஷஃபி அனுபவத்தை அப்படியே கொட்டியிருக்கீங்க
இரண்டாம் பாதி எங்களுக்கு பதவி ஆசையில்லைப்பா....
என்ன ஷபிக்ஸ் நல்ல இருக்கீங்களா?
ரொம்ப கலக்கல், நெஜமாவே உங்கள் பாஸ் இத படிச்சிட்டாரா?
சிரிக்க வைத்தாலும் சிந்திக்கும் படியாக வும் இருக்கு, இதான் இப்ப எல்லா இடத்திலும் நடக்குது
ஹா ஹா ஹா இது இதை நல்ல கூர்ந்து கவனித்தால், ரொம்ப ரொம்ப பயனுள்ள தகவல்.
சூப்பர் சூப்பர் சூப்பர்.
நோன்புக்கு பிறகு என் பிலாக் பக்கமே வரல
தனது சக பணியாளர்களை நம்ப வேண்டும், தானே எல்லாப் பணிகளையும் தலையில் போட்டுக் கொண்டு தேவையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகவேண்டிய அவசியமில்லை (Delegation)
super
நீங்க எத்தனையோ நல்லது செஞ்சு இருப்பீங்க அது எல்லாமே அடுத்த நாளே மறந்துடும், ஆனா ஒரு தப்பு செஞ்சா வருசம் முழுசும் அத சொல்லி சொல்லியே வெறுப்பேத்தும்//
இது சொன்னீங்க பாருங்க 100% உண்மை
மீ த 50...
ஹா...ஹா... நான் தான் 50 வது பின்னூட்டம்.
ராகவா உன்ன அடிச்சுக்க ஆளே கிடையாதுப்பா :-)
//S.A. நவாஸுதீன் said...
இதெல்லாம் உங்க பாஸ் படிச்சுட்டாரா ஷஃபி. //
ஷஃபி ஒரு பாஸ் தாங்க...
//" உழவன் " " Uzhavan " said...
எங்க பாஸ் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரு...//
உங்களை மாதிரியே நல்லவரா உழவரே?
//நசரேயன் said...
okay.. rite//
நன்றி நண்பரே, ரைட்டாவே போகட்டும்!!
//Hussainamma said...
ஆஃபிஸ்ல நல்லா "வேலை" செய்றீங்கன்னு நல்லாத் தெரியுது!!///
பரவாயில்லை ஹுசைனம்மாவிற்க்காவது இந்த உண்மை தெரிஞ்சுதே. முதல் வருகைக்கு நன்றிமா!!
//gayathri said...
S.A. நவாஸுதீன் said...
நீங்க வேலைய ரொம்ப மெதுவா செஞ்சா, சரியான நோஞ்சான், அதுவே அவரு செஞ்சா ரொம்ப நுணுக்கமா வேலை செய்றாராம்!!
*************************
இதுக்குத்தான் எதுவுமே செய்யாமல் இருக்கனும்னு சொல்றது
ama enga annan mathiri irukanum//
அவருதானே நம்ம குரு!!
//Mrs.Menagasathia said...
pls see this link
http://sashiga.blogspot.com/2009/10/blog-post.html//
நன்றியுடன் பெற்றுக்கொண்டேன்!!
//rose said...
நாம ஏதாவது புதுசா, நல்லதுன்னு நினைச்சு செஞ்சா என்னடா முந்திரிக் கொட்டை மாதிரி, ரூல்ஸ் எல்லாம் ஃபால்லோ பண்ணமாட்டியான்னு மிரட்டல், அதுவே அவரு செஞ்சா இனிஷியேட்டிவ்!!
\\
unga bass romba nallavaru safi anna//
நல்லவரா இருந்தாதானே அவரு பாஸ், இல்லாட்டி அவரு வேறு யாரோகவோ இருந்திருப்பாரேமா!!
//தமிழரசி said...
S.A. நவாஸுதீன் said...
நீங்க வேலைய ரொம்ப மெதுவா செஞ்சா, சரியான நோஞ்சான், அதுவே அவரு செஞ்சா ரொம்ப நுணுக்கமா வேலை செய்றாராம்!!
*************************
இதுக்குத்தான் எதுவுமே செய்யாமல் இருக்கனும்னு சொல்றது
அப்படி போடு தங்கம்....//
மெச்சுகிறோம் தங்களின் ஊக்கத்தை!! நல்ல டீச்சர், நல்ல மாணவன்!!
//தமிழரசி said...
S.A. நவாஸுதீன் said...
நீங்க கண்ணை மூடிக்கிட்டு சீடல இருந்தா, என்னடா ஒரே தூக்கமான்னு கிண்டல், அதுவே அவரு செஞ்சா ஆழமா சிந்திக்கிறாராம்.
*************************
ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் இந்த மாதிரி இருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லை. டைமிங் ரொம்ப முக்கியம் ஷஃபி
அபு இதை கவனிக்கவும்..//
நம்ம தல கிட்டே இது சம்பந்தமா நிறைய குறிப்பு இருக்கு, கேட்டு வாங்கிக்குங்க.
//தமிழரசி said...
பா.ராஜாராம் said...
ஹ..ஹ..ஹ..குரலை கேட்டால், "இந்த பூனையும் பால் குடிக்குமான்னு" இருக்கு, காரியத்தை பார்த்தா " படா பேஜார் நைனா!."கொஞ்சம் சிரமப்பட்டாவது உங்கள் முகம் பார்த்து வந்திருக்கலாம் சபி.மிஸ் பண்ணிட்டேன்.உங்களுக்காவது பாஸ்.எனக்கு பிரின்ஸ்.பீஸ் பீசா ஆயிருவேன் மக்கா..கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள்.நல்ல ஜாலி சபிக்ஸ்!
ஆமாம் நான் கூட முதலில் இப்படி தான் நினைத்தேன்....//
ஆமாம் இந்த பூனை டீ, காபி எல்லாம் குடிக்கும், அம்மாடி நான் ரொம்ப நல்லவனுங்க!!
//Jaleela said...
என்ன ஷபிக்ஸ் நல்ல இருக்கீங்களா?
ரொம்ப கலக்கல், நெஜமாவே உங்கள் பாஸ் இத படிச்சிட்டாரா?
சிரிக்க வைத்தாலும் சிந்திக்கும் படியாக வும் இருக்கு, இதான் இப்ப எல்லா இடத்திலும் நடக்குது
ஹா ஹா ஹா இது இதை நல்ல கூர்ந்து கவனித்தால், ரொம்ப ரொம்ப பயனுள்ள தகவல்.
சூப்பர் சூப்பர் சூப்பர்.
நோன்புக்கு பிறகு என் பிலாக் பக்கமே வரல//
நன்றி ஜலீலா, அப்படியெல்லாம் பெரிசா பிசி இல்லைங்க, ரீடரில் பார்த்தேன், புதிய பதிவு வந்ததாக ஸ்கிரினில் இல்லையே, இன்றைக்கு உங்கள் பதிவு பக்கம் வந்தாச்சே, படிச்சாசே, கமென்ட்சும் போட்டாச்சே!!
//இராகவன் நைஜிரியா said...
மீ த 50...
ஹா...ஹா... நான் தான் 50 வது பின்னூட்டம்.
ராகவா உன்ன அடிச்சுக்க ஆளே கிடையாதுப்பா :-)//
தலைவரே மீ த 1ஸ்ட் வந்தால் ரொம்ப சந்தோஷம், ஹும் நீங்க பெரிய தல, நம்ம பதிவு பக்கம் வருவதே பெரிசு, தொடருட்டும் உங்கள் வருகை, வராட்டி விட்டுருவோமா என்ன?
//இராகவன் நைஜிரியா said...
//S.A. நவாஸுதீன் said...
இதெல்லாம் உங்க பாஸ் படிச்சுட்டாரா ஷஃபி. //
ஷஃபி ஒரு பாஸ் தாங்க...//
இன்டெர்வியூவில் பாஸானதே பெரிய மேட்டரு, இதுல பாஸ் போஸ்ட் வேறயா, அந்த கிங் மேக்கர் பதவியெல்லாம் நீங்களே வச்சுக்குங்க தலைவரே!!
தனது சக பணியாளர்களை நம்ப வேண்டும், தானே எல்லாப் பணிகளையும் தலையில் போட்டுக் கொண்டு தேவையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகவேண்டிய அவசியமில்லை
ஹெலோ ஷாபி எல்லாமே ரியல்...இத யாரவதது ஒரு பாஸ் பாக்கனும்...சில் விஷயங்களை அவுங்களும் புரிஞ்சுக்கனும்
நீங்க வேலைய ரொம்ப மெதுவா செஞ்சா, சரியான நோஞ்சான், அதுவே அவரு செஞ்சா ரொம்ப நுணுக்கமா வேலை செய்றாராம்!!
enjayo shabi.www.vrfriendz.com
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராம் கோபி!!
Post a Comment