|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!

Picture source : www.rcowen.com

எனது குழந்தைகள் படிக்கும் பள்ளியின் சார்பாக 8, 9, மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு மட்டுமான‌ ஒரு சந்திப்புக்கு சென்ற வாரம் ஏற்பாடு செய்து இருந்தார்கள். சிறப்பு விருந்தினராக இந்தியாவிலிருந்து டாக்டர். கே.எஸ். டேவிட் (Centre Institute of Behaviour Science, Cochin) அவர்களை அழைத்திருந்தனர். Behaviour Science & Human Resource நிபுணரான‌ இவர் பல்வேறு கல்வி நிலையங்கள், நிறுவனங்களில் இது போன்ற கருத்துரங்கள் நடத்தி வருகிறார்.

இரண்டு மணி நேரம் நடந்த கலந்துரையாடலில் பெரும்பாலும் அவர் வலியுறுத்திய கருத்துக்கள்:

குழந்தைகளிடம் நாம் நெருக்கமாகவும், நல்ல ஒரு நண்பனைப் போலவும் பழக வேண்டும். அவர்களுக்கு தன்னம்பிக்கை கூடுவதுடன், எந்த ஒரு பிரச்ணையும் எளிதாக, மனம் திறந்து பகிர்ந்து கொள்ள இலகுவாக இருக்கும், இல்லையேல், யாரிடம் சொலவது எனற குழப்பமே அவர்களின் மனச்சோர்வினைக் கூட்டும் அல்லது தவறான வழிமுறைகளை கையாள் நேரிடலாம். Be a Friend and Mentor!! குழைந்தைகளோடு சேர்ந்து நாமும் வளர வேண்டும் (Grow with your child).

இந்தக் காலச் சூழல், ஊடகத்தின் தாக்கம், பாலுணர்வைத் தூண்டக்கூடிய விடயங்கள் கைகளுக்கு எட்டும் தொலைவில் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கிறது, பெற்றோர்கள் எத்தனை கட்டுப்பாடு விதித்தாலும், நமக்குத் தெரியாமல் அதை உடைக்க பல்வேறு வழிகள், ஆக இந்த விடயத்தையும் பெற்றோர்கள் தெளிவாகவும் சரியாகவும் புரிய வைக்க வேண்டும், இல்லையெனில் நண்பர்கள், இணையம் வழியாக கிடைக்கும் தவறான தகவல்களால் வழி மாறிச்செல்லக்கூடும்.

பெற்றோர்களுக்கிடையே கருத்து வேறுபாடு வரலாம், அது குழந்தைகளுக்கு தெரியும்படியோ, அல்லது இருவருக்கிடையே உள்ள கோபத்தின் தாக்கத்தை குழ்ந்தைகளிடம் காட்டுவதோ கூடாது.

குழந்தைகளின் நினைவாற்றலை மூன்று வகைப்படுத்தலாம், செவி வழி (Auditory), பார்த்து உணர்தல் (Visual), அல்லது எதையும் செய்து பார்த்து (Practical) நினைவிற்கொள்தல். இம்மூன்றில் நமது குழந்தைகள் எவ்வகை என கவனித்து அதற்கேற்ப அணுக வேண்டும்.
(இந்த மவுச கிளிக் செஞ்சு இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்ய வேண்டும்னு சொன்னா, சிலர் அப்படியா தலையாட்டிட்டு போய்டுவாங்க, சிலர் அதை க்ளிக்கி ஓப்பன் செஞ்சா தான் திருப்தி படுவாங்க)


குழந்தைகள் எதிர்பாராத தருணத்தில் பரிசளிக்க வேண்டும், மதிப்பெண் கூடுதல் எடுத்தால், முதல் மார்க் வாங்கினால் என மகிழ்ச்சி பகிர்தலை கட்டுப்படுத்த வேண்டாம்.

சில குழந்தைகள் கேள்விகள் நிறைய கேட்டுக்கொண்டே இருப்பார்கள், சலிப்படையாமல் தகுந்த பதில் சொல்லி அவர்களை திருப்தி படுத்த வேண்டும்.

குழந்தைகளை உலவு வேலைக்காக‌ ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது, அம்மா யார்கிட்ட போன் பேசுனாங்க? அப்பா அந்த ஆன்ட்டி கிட்ட என்ன பேசினாங்க, இது மாதிரி சந்தேகங்களை குழந்தைகளைக் கொண்டு அணுகவேண்டாம். இது பெற்றோர்களின் மேல் தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தும் அல்லது இதை வைத்து குழந்தைகள் தவறான வகையில் பயன்படுத்த ஊக்கமளிக்கும்.

Decision Making என்று சொல்லக்கூடிய முடிவு எடுக்கும் திறனை சிறு வயதிலிருந்தே ஊக்கபடுத்தி, சுதந்திரமும் கொடுக்க‌ வேண்டும்.

பல திடுக்கிடும் உண்மைச் சம்பவங்கள் அந்த நிபுணர் பகிர்ந்து கொண்டது, நிகழ்ச்சியின் நோக்கத்தையும், நமது பொறுப்பையும் வலுவாக உணர்த்தியது.


50 comments

Chitra on January 25, 2010 at 12:03 AM  

ஒரு தந்தையின் பொறுப்பான கரிசனையுடன், எங்களிடமும் இந்த பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.


நட்புடன் ஜமால் on January 25, 2010 at 3:09 AM  

மிக கவணமாக கவணிச்சி பகிர்ந்து இருக்கீங்க - மிக்க நன்றி.

வளருவோம் குழந்தைகளோடு சிறந்த நண்பனாய் ...


goma on January 25, 2010 at 4:32 AM  

குழந்த வளர்ப்பு என்பது கயிற்றின் மேல் நடப்பதற்கு ஒப்பாகும்.
பெற்றோர் இருவருமே அந்த கலையை கற்று செயல் படுத்த வேண்டும்.ஒருவர் மட்டும் உணர்ந்து கொள்வதில் அர்த்தமில்லை
உங்கள் பதிவு எதிர்கால தூண்களுக்கு நல்ல அடித்தளம்


அருள்மொழியன் on January 25, 2010 at 7:29 AM  

Caring a child is basement for a generation, wonderful and useful post. Thank you and Congrats.


Anonymous on January 25, 2010 at 7:50 AM  

நல்ல பகிர்வு சகோதரரே..

குழந்தைகளிடம் நண்பர்களைப்பொல பழக வேண்டும் என்பது மிகச்சரி.


ஸாதிகா on January 25, 2010 at 8:15 AM  

மிக நல்ல தகவல் சகோதரர்.நன்றி


அன்புத்தோழன் on January 25, 2010 at 8:32 AM  

hmmm.. mindla vechukren...
Pinnadi use aagum...ha ha...
thanks bro...


S.A. நவாஸுதீன் on January 25, 2010 at 8:53 AM  

அருமையான விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளீர்கள் ஷஃபி. எப்பவுமே பெற்றோர்கள் குழந்தைகளை நண்பர்களாகத் தான் பாவிக்கவேண்டும். அப்போதுதான் அவர்களின் பிரச்சனையை அவர்களின் கண்ணோட்டத்தில் பார்க்கமுடியும். அதற்கான சரியான் தீர்வையும் நம்மால் காண முடியும்.


இராகவன் நைஜிரியா on January 25, 2010 at 9:47 AM  

மிக மிக அருமையான பகிர்வு. நன்றி நண்பரே.


ஹுஸைனம்மா on January 25, 2010 at 10:32 AM  

பயனுள்ள தகவல்கள் ஷஃபி. நன்றி.

ஆனால் நிஜமாகவே நமது பொறுமையை ரொம்பச் சோதிக்கும் பருவம்தான் இது.


SUFFIX on January 25, 2010 at 11:09 AM  

நன்றி @ சித்ரா
நன்றி @ ஜமால்

இன்னும் நிறைய எழுதலாமென நினைத்தேன், அடக்கம் கருதி சுருக்கமாக பதிவிலிட்டேன்.


SUFFIX on January 25, 2010 at 11:11 AM  

நன்றி கோமதி அக்கா, மிக்க மகிழ்ச்சி.


SUFFIX on January 25, 2010 at 11:12 AM  

சரியாக சொன்னீர்கள் அருள்மொழியன். Thank you.


SUFFIX on January 25, 2010 at 11:14 AM  

நன்றி @ நாஸியா
நன்றி @ சாதிகா


SUFFIX on January 25, 2010 at 11:17 AM  

நன்றி @ Anbu Thozhan
அதான் பதிவில் ஏற்றியாச்சு, இன்றும், என்றும் பயன படும்.


SUFFIX on January 25, 2010 at 11:32 AM  

நன்றி நவாஸ், உண்மையே, அதுவும் இந்தக் கால குழந்தைகளிடம் நிறையவே வேண்டும்.


அ.மு.செய்யது on January 25, 2010 at 11:38 AM  

ஆறு வயது பூர்த்தியாகுமுன்பே ஒரு குழந்தைக்கு 90% மூளை வளர்ச்சி அடைந்து விடுகிறதாம்.

எனவே,இதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில்,அக்குழந்தை பார்க்கும்,கேட்கும்,உள்வாங்கும் விஷயங்கள் ஆழ்மனது எனப்படும் இல் தங்கி விடுகிறது.

சிறுவயதில்,பதிந்து போன சில விஷயங்கள் தான் பிற்காலத்தில் அவனுடைய‌
கேரக்டரை தீர்மானிக்கிறதாம்.

நல்ல கருத்துக்கள் கொண்ட பயனுள்ள பதிவு. எனவே என்னைப் போன்ற குழந்தைகள் இருக்கும் சபையில் பார்த்துப் பேசவும்.நாங்கள் கெட்டுப் போக வாய்ப்புண்டு.


அ.மு.செய்யது on January 25, 2010 at 11:39 AM  

ஆழ்மனது எனப்படும் Subconscious Mind இல் தங்கி விடுகிறது.

Sorry missed it.


SUFFIX on January 25, 2010 at 11:41 AM  

//இராகவன் நைஜிரியா//


நன்றி அண்ணே, வெகு நாட்களாகி விட்டது தங்களை கண்டு.


SUFFIX on January 25, 2010 at 11:52 AM  

நன்றி @ ஹுஸைனம்மா, ஆமாம் மிகச் சரி.


SUFFIX on January 25, 2010 at 11:55 AM  

பகிர்விற்கு மெருகூட்டும் கருத்து செய்யது, குறித்துக் கொண்டோம்.


அப்துல்மாலிக் on January 25, 2010 at 12:18 PM  

//குழந்தைகளிடம் நாம் நெருக்கமாகவும், நல்ல ஒரு நண்பனைப் போலவும் பழக வேண்டும்//

சரியா சொன்னீங்க.. என் சிறுவயது காலத்திலிருந்தே தந்தை என்றால் ஒரு எதிரியை போல் பார்க்கும் சிலரும் என் நண்பர்கள் லிஸ்டில் இருந்தார்கள், நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்


அப்துல்மாலிக் on January 25, 2010 at 12:18 PM  

//எந்த ஒரு பிரச்ணையும் எளிதாக, மனம் திறந்து பகிர்ந்து கொள்ள இலகுவாக இருக்கும், //

நோட் பண்ணவேன்டிய பாய்ண்ட்


அப்துல்மாலிக் on January 25, 2010 at 12:18 PM  

//குழந்தைகள் எதிர்பாராத தருணத்தில் பரிசளிக்க வேண்டும், மதிப்பெண் கூடுதல் எடுத்தால், முதல் மார்க் வாங்கினால் என மகிழ்ச்சி பகிர்தலை கட்டுப்படுத்த வேண்டாம்.
//

நிச்சயமா அவங்க மனது எவ்வளவு சந்தோஷப்படும் என்பதை நானும் பார்த்துக்கொண்டுதானிருக்கேன்


அப்துல்மாலிக் on January 25, 2010 at 12:19 PM  

/அ.மு.செய்யது said... நல்ல கருத்துக்கள் கொண்ட பயனுள்ள பதிவு. எனவே என்னைப் போன்ற குழந்தைகள் இருக்கும் சபையில் பார்த்துப் பேசவும்.நாங்கள் கெட்டுப் போக வாய்ப்புண்டு//

இப்புடி சொல்லித்தான்யா காலத்தை ஓட்டுறாங்கோ......


அப்துல்மாலிக் on January 25, 2010 at 12:20 PM  

//முடிவு எடுக்கும் திறனை சிறு வயதிலிருந்தே ஊக்கபடுத்தி, சுதந்திரமும் கொடுக்க‌ வேண்டும்//

அந்த சுதந்திரம் ஒரு கட்டத்திற்குள் இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளவேண்டும்


/


ஹுஸைனம்மா on January 25, 2010 at 12:30 PM  

//அ.மு.செய்யது said...
நல்ல கருத்துக்கள் கொண்ட பயனுள்ள பதிவு. எனவே என்னைப் போன்ற குழந்தைகள் இருக்கும் சபையில் பார்த்துப் பேசவும்.நாங்கள் கெட்டுப் போக வாய்ப்புண்டு.//

அதான் கொழந்த இன்னும் புரியாதபடிக்கு மழலையில பேசுதோ?


SUFFIX on January 25, 2010 at 12:32 PM  

நன்றி @அபுஅஃப்ஸர்
சூப்பர் தலைவரே!! கருத்துக்கள் ஒத்துப் போவதில் மிக்க மகிழ்ச்சி!!


SUFFIX on January 25, 2010 at 12:45 PM  

//ஹுஸைனம்மா said...

அதான் கொழந்த இன்னும் புரியாதபடிக்கு மழலையில பேசுதோ?//

அப்போ அவரு எழுதிய கவிதையெல்லாம் நர்சரி ரைம்ஸா?


பா.ராஜாராம் on January 25, 2010 at 1:41 PM  

அருமையான பகிரல் மக்கா.மொழி இணக்கம் உங்களுக்கு உதவுகிறது.சொல்வதை,பகிர்வதை தெளிவாக சொல்லிக் கொண்டே போகிறீர்கள்.நன்றி சபி.


SUFFIX on January 25, 2010 at 2:12 PM  

நன்றி @ பா.ராஜாராம்

வாழ்த்துரை கண்டு மிக்க மகிழ்ச்சி அண்ணா!!


சிநேகிதன் அக்பர் on January 25, 2010 at 5:12 PM  

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான் விசயம்.

நல்ல பகிர்வு ஷஃபி.


suvaiyaana suvai on January 25, 2010 at 7:53 PM  

நல்ல தகவல்!!


Prathap Kumar S. on January 26, 2010 at 5:50 PM  

இதுபோன்ற கலந்துரையாடல்கள் இந்தியாவில் பெரிய பள்ளிகளில் மட்டுமே நடத்தப்படுகிறது, இந்தியாவில் அரசுப்பள்ளிகளிலும் இதுபோன்ற கலந்துரையாடல்கள் நட்த்தினால் எதிர்காலத்தில் சமுகவிரோதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.

யாரு அதைப்பத்தி கவலைப்படறாங்க.


Jaleela Kamal on January 27, 2010 at 8:04 AM  

மிகசரியான , அருமையானதொரு பகிர்வி, இந்த காலத்து குழந்தைகள் ரொம்பவே தெளிவு. எல்லோரும் இதை பற்றி தெரிகொள்ள வேண்டிய பதிவு


"உழவன்" "Uzhavan" on January 27, 2010 at 9:17 AM  

நல்ல குறிப்புகள்.. பகிர்வுக்கு நன்றி தோழா


அதிரை அபூபக்கர் on January 27, 2010 at 9:48 AM  

நல்ல கருத்துள்ள பதிவு...


Anonymous on January 27, 2010 at 10:42 AM  

பயனுள்ள பதிவு அனைவரும் பின் தொடரவேண்டிய பல செய்திகள் பரிமாறப்பட்டுள்ளது இதில்...
குழந்தை வளர்வு என்பது ஒரு கலையும் கூட...அவர்களோடு நாமும் குழந்தையாய் நண்பர்களாய் ஆசிரியராய் இப்படி மாறி பல பரிமானங்களை காட்டி நேர்த்தியாய் நல் வழியில் நடத்த வேண்டிய கடமையும் பொருப்பும் நமக்கு உள்ளது... நல்ல பதிவு ஷ்ஃபி... நீங்களிடம் பெரும்பான்மையான பதிவுகள் அனுபவம் நிகழ்வுன்னு அத்தனையும் உபயோகமுள்ளதே....


SUFFIX on January 27, 2010 at 12:18 PM  

நன்றி @ அக்பர்

நன்றி @ suvaiyaana suvai


SUFFIX on January 27, 2010 at 12:20 PM  

நன்றி @ நாஞ்சில் பிரதாப்

இங்கேயும் இதுவே முதல் முறை, வழக்கம்போல் ஒரு பேரன்ட்ஸ் மீட்டிங்க் போல் இல்லாமல், உபயோகமான பல தகவல்கள் சேகரிக்க முடிந்தது.


SUFFIX on January 27, 2010 at 12:23 PM  

நன்றி @ நசரேயன்

நன்றி @ Jaleela
சரியா சொன்னிங்க!!


SUFFIX on January 27, 2010 at 12:30 PM  

நன்றி @ உழவரே

நன்றி @ அதிரை அபூபக்கர்


SUFFIX on January 27, 2010 at 12:40 PM  

நன்றி @ தமிழரசி

மிக்க மகிழ்ச்சி அரசி, தங்களைப் போன்றோர்களின் ஊக்கமே எனது ஆக்கங்கள்.


அன்புடன் மலிக்கா on January 27, 2010 at 2:59 PM  

அருமையான பகிர்வு. நல்ல கவனமாய் கவனித்திறிக்கிறீர்கள் ஷஃபியண்ணா..


Menaga Sathia on January 27, 2010 at 5:15 PM  

மிக அருமையான பகிர்வு.எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி சகோ..


SUFFIX on January 30, 2010 at 2:29 PM  

நன்றி @ அன்புடன் மலிக்கா

நன்றி @ Mrs.Menagasathia


சிங்கக்குட்டி on January 31, 2010 at 9:58 AM  

மிக அருமையான பகிர்வு "ஷ‌ஃபி :-)


SUFFIX on January 31, 2010 at 1:33 PM  

நன்றி சிங்கக்குட்டி.


Thenammai Lakshmanan on January 31, 2010 at 2:00 PM  

//குழந்தைகளை உலவு வேலைக்காக‌ ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது, அம்மா யார்கிட்ட போன் பேசுனாங்க? அப்பா அந்த ஆன்ட்டி கிட்ட என்ன பேசினாங்க, இது மாதிரி சந்தேகங்களை குழந்தைகளைக் கொண்டு அணுகவேண்டாம். இது பெற்றோர்களின் மேல் தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தும் அல்லது இதை வைத்து குழந்தைகள் தவறான வகையில் பயன்படுத்த ஊக்கமளிக்கும்.


Decision Making என்று சொல்லக்கூடிய முடிவு எடுக்கும் திறனை சிறு வயதிலிருந்தே ஊக்கபடுத்தி, சுதந்திரமும் கொடுக்க‌ வேண்டும்//

இது ரெண்டுமே உண்மை ஷஃபி ..நல்ல பகிர்வு... நன்றி


SUFFIX on January 31, 2010 at 3:04 PM  

// thenammailakshmanan said...
..நல்ல பகிர்வு... நன்றி//

நன்றி அக்கா