|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 2:01 PM

கணப் பொழுதுகள்

Filed Under () By SUFFIX at 2:01 PM

Picture Source :http://i.d.com.com

உரக்கப் பேசிடும்
மெளன மொழிகள்

விழிகளில் வழிந்தோடும்
விசும்பல்கள்

படர்ந்து சுழலும்
உணர்வலைகள்

தேங்கிய ஏக்கங்கள்
வெள்ளப் பிரளயம்

மோக முட்கள்
கீற‌ல்கள் மேனியெங்கும்

வதைக்கும் வெதும்பல்கள்
வெப்பக் கதிர்வீச்சு

கனவுகளால் தொடரும்
பொழுதுகள் கண‌ம்

தீண்ட ஆறிடுமோ
தீராத ரணங்கள்?

48 comments

S.A. நவாஸுதீன் on January 11, 2010 at 2:33 PM  

///உரக்கப் பேசிடும்
மெளன மொழிகள்///

நல்ல முறன்


goma on January 11, 2010 at 2:36 PM  

எழுத்தின் கட்டுமானப் பணியில் ,துணை எழுத்துக்கள் கூட தூணாய் நிற்கிறதே.
உணர்வுகளின் அருமையான அழகான ஓவிய வடிவம்


S.A. நவாஸுதீன் on January 11, 2010 at 2:39 PM  

///தேங்கிய ஏக்கங்கள்
வெள்ளப் பிரளயம்///

வாவ். அருமை ஷஃபி.

///மோக முட்கள்
கீற‌ல்கள் மேனியெங்கும்///

சூப்பர்.

வெற்றி பெற வாழ்த்துக்கள் ஷஃபி


gayathri on January 11, 2010 at 2:42 PM  

உரக்கப் பேசிடும்
மெளன மொழிகள்


தேங்கிய ஏக்கங்கள்
வெள்ளப் பிரளயம்

nalla irukuga anna


ஹுஸைனம்மா on January 11, 2010 at 2:52 PM  

ஹி..ஹி... புரியுது... ஆனா புரியல..

இந்த அழுகை, பிரளயமெல்லாம் எதுக்கு பாஸ்? அங்கயும் “கல் வைத்த அட்டிகை” வாங்கிக் கொடுக்காததாலயா?

அப்புறம் படம் ரொம்ப சூப்பர். எப்படித்தான் உங்களுக்கெல்லாம் மட்டும் இவ்வளவு அழகழகா படம் கிடைக்குதோ?


Anonymous on January 11, 2010 at 2:58 PM  

ஏதோ ஒன்றுக்கு ஏங்கும் மனதின் பிதற்றல்கள் படாத காயத்திற்கு பரபரக்கிறது மனது..


Anonymous on January 11, 2010 at 2:59 PM  

தேங்கிய ஏக்கங்கள்
வெள்ளப் பிரளயம்

மோக முட்கள்
கீற‌ல்கள் மேனியெங்கும்

அப்பப்பா............... அபாரம் ரகம்.....ஷ்ஃபி


SUFFIX on January 11, 2010 at 3:01 PM  

// S.A. நவாஸுதீன் said...
///உரக்கப் பேசிடும்
மெளன மொழிகள்///

நல்ல முறன்//

வெற்றி பெற வாழ்த்துக்கள் ஷஃபி//

போட்டிக்கு அனுப்பி வைத்ததற்கு (ஏன் இந்த ரிஸ்க்) மிக்க நன்றி நவாஸ்!!


SUFFIX on January 11, 2010 at 3:07 PM  

// goma said...
எழுத்தின் கட்டுமானப் பணியில் ,துணை எழுத்துக்கள் கூட தூணாய் நிற்கிறதே.
உணர்வுகளின் அருமையான அழகான ஓவிய வடிவ//

நீங்க கட்டிட பொறியாளரா? தூணைக் கிளப்பி, பாலம் போட்டு, அதுல வாகனத்தையும் ஓட வச்சுடுவீங்க போல. அருமையான பின்னூட்டம், நன்றி.


SUFFIX on January 11, 2010 at 3:29 PM  

//gayathri said...
உரக்கப் பேசிடும்
மெளன மொழிகள்


தேங்கிய ஏக்கங்கள்
வெள்ளப் பிரளயம்

nalla irukuga anna//

மகிழ்ச்சி காயத்ரி!


SUFFIX on January 11, 2010 at 3:30 PM  

// ஹுஸைனம்மா said...
ஹி..ஹி... புரியுது... ஆனா புரியல..

இந்த அழுகை, பிரளயமெல்லாம் எதுக்கு பாஸ்? அங்கயும் “கல் வைத்த அட்டிகை” வாங்கிக் கொடுக்காததாலயா?//

இது மட்டும் ரொம்ப தெளிவா புரியுமே?


SUFFIX on January 11, 2010 at 3:35 PM  

//தமிழரசி said...
ஏதோ ஒன்றுக்கு ஏங்கும் மனதின் பிதற்றல்கள் படாத காயத்திற்கு பரபரக்கிறது மனது..//

ம்ம்ம்ம்...


SUFFIX on January 11, 2010 at 3:37 PM  

//தமிழரசி said...

அப்பப்பா............... அபாரம் ரகம்.....ஷ்ஃபி//

எல்லாம் உங்கள மாதிரி கவிஞர்களின் வரிகளை படித்ததின் விளைவு தான்!!


Jaleela Kamal on January 11, 2010 at 4:04 PM  

கணப்பொழுதுகள், வரிகள் அனைத்தும் மிக அருமை, என்ன போட்டிக்கு எழுதியகவிதையா அங்குநீங்கள் குறிப்பிடவில்லையே?

வாழ்த்துக்கள்


SUFFIX on January 11, 2010 at 4:07 PM  

//Jaleela said...
கணப்பொழுதுகள், வரிகள் அனைத்தும் மிக அருமை, என்ன போட்டிக்கு எழுதியகவிதையா அங்குநீங்கள் குறிப்பிடவில்லையே?

வாழ்த்துக்கள்//

அண்ணன் நவாஸ் அனுப்பி வச்சுப்புட்டாருங்க!!


சிங்கக்குட்டி on January 11, 2010 at 4:12 PM  

ரொம்ப நல்லா இருக்கு ஷ‌ஃபி :-)

வாழ்த்துக்கள்!.


சிநேகிதன் அக்பர் on January 11, 2010 at 4:27 PM  

//வெற்றி பெற வாழ்த்துக்கள் ஷஃபி//

அப்படியா. இது போட்டிக்கான கவிதையா.

//அண்ணன் நவாஸ் அனுப்பி வச்சுப்புட்டாருங்க!!//

ரொம்ப சந்தோசம்.

கவிதை நறுக்குன்னு இருக்கு.


Chitra on January 11, 2010 at 4:27 PM  

இது வார்த்தைகளால் அல்ல, உணர்வுகளை கொட்டி எழுதிய கவிதை. அற்புதம்.


SUFFIX on January 11, 2010 at 4:33 PM  

//சிங்கக்குட்டி said...
ரொம்ப நல்லா இருக்கு ஷ‌ஃபி :-)

வாழ்த்துக்கள்!.//

நன்றி சிங்கக்குட்டி


SUFFIX on January 11, 2010 at 4:35 PM  

//அக்பர் said...

ரொம்ப சந்தோசம்.

கவிதை நறுக்குன்னு இருக்கு.//

ரொம்ப ரொம்ப சந்தோசம் அக்பர்


SUFFIX on January 11, 2010 at 4:37 PM  

// Chitra said...
இது வார்த்தைகளால் அல்ல, உணர்வுகளை கொட்டி எழுதிய கவிதை. அற்புதம்.//

அப்படியா ஒவர் ஃபீஈஈஈஈஈலிங்கஸா? ரசித்தமைக்கு நன்றி!!


ஹுஸைனம்மா on January 11, 2010 at 5:41 PM  

//அப்படியா. இது போட்டிக்கான கவிதையா.

//அண்ணன் நவாஸ் அனுப்பி வச்சுப்புட்டாருங்க!!//

ரொம்ப சந்தோசம்.//

நானுந்தான் கவிதை எழுதியிருக்கேன்; என் பிளாக்குக்கும் நவாஸ் வரத்தான் செஞ்சாரு...ஹூம்...

ஏன் ஷஃபிகூடத்தான் வந்தாப்புல...


Prathap Kumar S. on January 11, 2010 at 6:35 PM  

சூப்ப்பபபர் கவிதைங்க... ஆனா புரியல... ஒருவேளை புரியாத்தனாலதான் சூப்பரா இருக்கோ...


அப்துல்மாலிக் on January 11, 2010 at 7:52 PM  

நீங்களும் ஆரம்சிட்டீங்களா வாங்க வாங்க‌

எத்தனை நாள்தான் இப்படி கவிதையை படிச்சிக்கிட்டே இருப்பது

அது என்னய்யா போட்டினா மட்டும் எங்கேர்ந்துதான் வந்து கொட்டுதோ வார்த்தைகள்


அப்துல்மாலிக் on January 11, 2010 at 7:54 PM  

ரொம்ப நல்லாவே புரியுது

ஏங்கித்தவிக்கு கவிதைகள் ஒரு புறம்

தகித்து கொதித்து அடங்கும் ஏக்கத்தில் வரும் ஒருபுறம்

நடக்கட்டும்.....

மிகவும் ரசித்தேன்


நசரேயன் on January 12, 2010 at 1:04 AM  

//goma said...

எழுத்தின் கட்டுமானப் பணியில் ,துணை எழுத்துக்கள் கூட தூணாய் நிற்கிறதே.//

அக்கா அவரு என்ன வீடா கட்டுறாரு ?


நசரேயன் on January 12, 2010 at 1:05 AM  

//தீண்ட ஆறிடுமோ
தீராத ரணங்கள்?//

இல்லை எழுதினாத்தான்


நட்புடன் ஜமால் on January 12, 2010 at 3:01 AM  

மிக அருமை ஷஃபி

வெற்றி பெற வாழ்த்துகள்.

எல்லா வரிகளும் அருமை.

[[உரக்கப் பேசிடும்
மெளன மொழிகள்

விழிகளில் வழிந்தோடும்
விசும்பல்கள்]]

இவையிரண்டும் --- சொல்ல வார்த்தையில்லை.


SUFFIX on January 12, 2010 at 10:07 AM  

// ஹுஸைனம்மா said...

நானுந்தான் கவிதை எழுதியிருக்கேன்; என் பிளாக்குக்கும் நவாஸ் வரத்தான் செஞ்சாரு...ஹூம்...

ஏன் ஷஃபிகூடத்தான் வந்தாப்புல..//

அது எப்புடி, உங்களுக்கு நகை பிடிக்காதுன்னு சொல்லிப்புட்டிய, அவங்க கொடுக்கிற ஒரு கிலோ தங்கம் எனக்காவது கிடைக்கட்டுமேன்னு தான் நவாஸ் அப்படி செய்தாரு.


SUFFIX on January 12, 2010 at 10:24 AM  

//நாஞ்சில் பிரதாப் said...
சூப்ப்பபபர் கவிதைங்க... ஆனா புரியல... ஒருவேளை புரியாத்தனாலதான் சூப்பரா இருக்கோ...//

நல்லது நாஞ்சிலார்!!


SUFFIX on January 12, 2010 at 10:34 AM  

//அபுஅஃப்ஸர் said...
நீங்களும் ஆரம்சிட்டீங்களா வாங்க வாங்க‌

எத்தனை நாள்தான் இப்படி கவிதையை படிச்சிக்கிட்டே இருப்பது

அது என்னய்யா போட்டினா மட்டும் எங்கேர்ந்துதான் வந்து கொட்டுதோ வார்த்தைகள்//

நான் சும்மாதாம்ப்பா இருந்தேன்.....


SUFFIX on January 12, 2010 at 10:39 AM  

//நசரேயன் said...
//தீண்ட ஆறிடுமோ
தீராத ரணங்கள்?//

இல்லை எழுதினாத்தான்//

அவ்ளோ நல்லாவா இருக்கு?


SUFFIX on January 12, 2010 at 10:42 AM  

//நட்புடன் ஜமால் said...
மிக அருமை ஷஃபி

வெற்றி பெற வாழ்த்துகள்.

எல்லா வரிகளும் அருமை.

[[உரக்கப் பேசிடும்
மெளன மொழிகள்

விழிகளில் வழிந்தோடும்
விசும்பல்கள்]]

இவையிரண்டும் --- சொல்ல வார்த்தையில்லை.//

மிக்க மகிழ்ச்சி ஜமால், தாங்கள் சொன்ன பூனை பானையான கதை மாதிரி தான், நாம என்னவோ எழுத அதை போட்டிக்கும் அனுப்பி வச்சுப்புட்டாக.


Unknown on January 12, 2010 at 11:05 AM  

//கனவுகளால் தொடரும்
பொழுதுகள் கண‌ம்//ரொம்ப நல்ல எழுதியிருக்கிங்க..

//தீண்ட ஆறிடுமோ
தீராத ரணங்கள்?// மிகவும் அருமை...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்


Priya on January 12, 2010 at 2:37 PM  

ரொம்ப நல்லாயிருக்கு!


SUFFIX on January 12, 2010 at 3:55 PM  

நன்றி @ Mrs.Faizakader (மிக்க மகிழ்ச்சி)

நன்றி @ Priya (முதல் வருகைக்கும், பாராட்டுக்கும்)


Thenammai Lakshmanan on January 13, 2010 at 6:23 AM  

அருமை ஷஃபி எல்லாவரிகளும் ரசித்தேன்


"உழவன்" "Uzhavan" on January 13, 2010 at 9:48 AM  

//தீண்ட ஆறிடுமோ
தீராத ரணங்கள்?//
 
நிச்சயமாக.. தீண்டலின்பம் கிடைத்திட வாழ்த்துக்கள் :-)


அன்புடன் மலிக்கா on January 13, 2010 at 2:30 PM  

வரிகளுக்குள் விழுந்து
எழுந்தன என் விழிகள்
அத்தனை வரிகளும் அருமை

வெற்றி பெறவாழ்த்துக்கள் ஷஃபியண்ணா


suvaiyaana suvai on January 13, 2010 at 8:12 PM  

அருமை!!!


Sakthi on January 14, 2010 at 8:22 PM  

வெற்றி பெற வாழ்த்துகள்


Jaleela Kamal on January 17, 2010 at 3:51 PM  

//அண்ணன் நவாஸ் அனுப்பி வச்சுப்புட்டாருங்க!!//பாசக்கார அண்ணன் தான்

ஓ அப்படியா வெற்றி பெற வாழ்த்துக்கள்


பாத்திமா ஜொஹ்ரா on January 19, 2010 at 9:26 AM  

ஏன் இப்பிடி ????


Menaga Sathia on January 21, 2010 at 5:55 PM  

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!


Annam on January 22, 2010 at 8:25 AM  

BOSS EPPO IRUNTHU KAVIGYAN AANEENGA SOLLAVEY ILLA.......


Annam on January 22, 2010 at 8:25 AM  

varikal jooper boss


Annam on January 22, 2010 at 8:25 AM  

ivlo thoora vanthuttu oru 50 podalana nalla irukaathula:P


SUFFIX on January 23, 2010 at 9:08 AM  

நன்றி @thenammailakshmanan

நன்றி @ உழவன்

நன்றி @ அன்புடன் மலிக்கா

நன்றி @ suvaiyaana suvai

நன்றி @ சக்தியின் மனம்

நன்றி @ Jaleela

நன்றி @ பாத்திமா ஜொஹ்ரா

நன்றி @ Mrs.Menagasathia

நன்றி @ Annam