சென்ற வாரம் Balanced Scorecard (BSC) Forum 2010 துபாயில் நடைபெற்றது, இதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி, இதனை உருவாக்கிய Dr. David Norton & Dr. Robert Kaplan இருவரையும் நேரில் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள் முடிந்தது. உலக நாடுகளின் பல முன்னனி நிறுவனங்களின் மேலாளர்களும் வந்து, தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். குறிப்பாக இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் Vice President தமது சாதனைகளை பகிர்ந்ததது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தை (Financial measures) மட்டுமே நோக்கமாக வைத்து செயல்படுவார்கள், ஆனால் BSC முறைப்படி மனித வளம் (Human Resources), உள்கட்ட செயல்பாடு(Internal Process), வாடிக்கையாளர்கள் (Customers) இவைகளையும் அளவிட்டு பார்க்கவேண்டுமாம், இதனை நிர்வாகத்தின் மேலிருந்து, கீழ் மட்டம் வரை எப்படி அணுகுவது எனபது குறித்தே இந்த ஐந்து நாட்கள் கலந்துரையாடல். நல்ல பல புதிய அனுபவங்கள்.
பல நாடுகளிலிருந்து மொத்தம் 77 நபர்கள் இதில் கலந்து கொண்டனர், ஏழு பேர் இந்தியர்கள், துபாயில் பணி புரியும் திருச்சியை சேர்ந்த சந்திரசேகரனும் நானும் தமிழர்கள், பாவம் அவருக்கு தமிழ் மறந்து விட்டது போலும், என்னுடன் ஆங்கிலத்திலேயே பேசினார், ஏனோ மனது ஒட்டவில்லை. ஆனால், கலந்து கொண்ட இரண்டு மலையாளிகள் மிகவும் சிரமப்பட்டு என்னுடன் தமிழில் பேச முயற்சி செய்தது மகிழ்ச்சியாக இருந்தது.
அமீரகத்தின் பல அரசு நிறுவனங்கள், குறிப்பாக துபாய், அபுதாபி மற்றும் அஜ்மான், இந்த BSC முறையை செயல்படுத்த முனைப்புடன் இருப்பது நல்ல விடயம், நமது தலைநகர் டெல்லியின் Power & Water Supply துறையில் இதனை தொடங்கியிருப்பதாக சொன்னார்கள்.
சவூதியிலிருந்து துபாய் செல்வோர்க்கு விசா எடுப்பது மிக எளிது, ஏர்போர்ட்டில் 185Dhs கட்டிவிட்டால் உடனே விசா தயார். துபாயின் பொருளாதாரம் சற்று பரவாயில்லை என நினைக்கிறேன், விமான நிலையத்தில் கூட்டம் நிரம்பியிருந்தது, பழையபடி திரும்ப இன்னும் வருடங்கள் பிடிக்கும், சென்ற முறை 1,600 Dhs இருந்த ஹோட்டல் அறை தற்பொழுது 400 Dhs, ஆச்சர்யத்துடன் பரிதாபமாகவும் இருந்தது.
மெட்ரோ ரயில் எப்படித்தான் இருக்கிறது என பார்க்கலாம் என புர்ஜ்மானிலிருந்து, புர்ஜ்கலீபா வரை சென்றேன், நல்ல முயற்சி, இன்னும் விரிவு படுத்தினால் பலருக்கு உபயோகமாக இருக்கும். துபாயை பொருத்த வரை, எல்லா இடங்களிலும் வழிகாட்டி புத்தகம், வரைபடம் வைத்திருக்கிறார்கள், அதனால் யாரிடமும் அது எங்கே, இது எங்கே என கேட்கும் தேவை மிகக் குறைவு. துபாய் மால் பார்க்க வேண்டிய ஒன்று, சுற்றவே ஒரு நாள் வேண்டும் என நினைக்கிறேன். எங்களது அலுவலகத்தின் சேல்ஸ் டிவிஷன் மூலமாக துபாய் மாலின் கீழ்தளத்தில் இருக்கும் நண்டூஸ் ரெஸ்டாரண்டில் விருந்து ஏறபாடு செய்திருந்தார்கள், மொசாம்பிக்/போர்ட்ச்கீஸ் வகை சாப்பாடு வகையாராக்கள், புதிதாகவும், சுவையாகவும் இருந்தது.
பல நண்பர்களை சந்திக்கலாம் எனவே நினைத்திருந்தேன், அலுவலக வேலை, கான்ஃபரன்ஸ் என நேரப் பற்றாக்குறை, மற்றும் பல நண்பர்கள் ஷார்ஜா போன்ற தூர தொலைவில் தங்கியிருப்பதால் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, வருத்தமாகவே இருந்த்து. இறைவன் நாடினால் அடுத்த முறை சந்திக்கலாம்.