சென்ற வாரம் Balanced Scorecard (BSC) Forum 2010 துபாயில் நடைபெற்றது, இதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி, இதனை உருவாக்கிய Dr. David Norton & Dr. Robert Kaplan இருவரையும் நேரில் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள் முடிந்தது. உலக நாடுகளின் பல முன்னனி நிறுவனங்களின் மேலாளர்களும் வந்து, தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். குறிப்பாக இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் Vice President தமது சாதனைகளை பகிர்ந்ததது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தை (Financial measures) மட்டுமே நோக்கமாக வைத்து செயல்படுவார்கள், ஆனால் BSC முறைப்படி மனித வளம் (Human Resources), உள்கட்ட செயல்பாடு(Internal Process), வாடிக்கையாளர்கள் (Customers) இவைகளையும் அளவிட்டு பார்க்கவேண்டுமாம், இதனை நிர்வாகத்தின் மேலிருந்து, கீழ் மட்டம் வரை எப்படி அணுகுவது எனபது குறித்தே இந்த ஐந்து நாட்கள் கலந்துரையாடல். நல்ல பல புதிய அனுபவங்கள்.
பல நாடுகளிலிருந்து மொத்தம் 77 நபர்கள் இதில் கலந்து கொண்டனர், ஏழு பேர் இந்தியர்கள், துபாயில் பணி புரியும் திருச்சியை சேர்ந்த சந்திரசேகரனும் நானும் தமிழர்கள், பாவம் அவருக்கு தமிழ் மறந்து விட்டது போலும், என்னுடன் ஆங்கிலத்திலேயே பேசினார், ஏனோ மனது ஒட்டவில்லை. ஆனால், கலந்து கொண்ட இரண்டு மலையாளிகள் மிகவும் சிரமப்பட்டு என்னுடன் தமிழில் பேச முயற்சி செய்தது மகிழ்ச்சியாக இருந்தது.
அமீரகத்தின் பல அரசு நிறுவனங்கள், குறிப்பாக துபாய், அபுதாபி மற்றும் அஜ்மான், இந்த BSC முறையை செயல்படுத்த முனைப்புடன் இருப்பது நல்ல விடயம், நமது தலைநகர் டெல்லியின் Power & Water Supply துறையில் இதனை தொடங்கியிருப்பதாக சொன்னார்கள்.
சவூதியிலிருந்து துபாய் செல்வோர்க்கு விசா எடுப்பது மிக எளிது, ஏர்போர்ட்டில் 185Dhs கட்டிவிட்டால் உடனே விசா தயார். துபாயின் பொருளாதாரம் சற்று பரவாயில்லை என நினைக்கிறேன், விமான நிலையத்தில் கூட்டம் நிரம்பியிருந்தது, பழையபடி திரும்ப இன்னும் வருடங்கள் பிடிக்கும், சென்ற முறை 1,600 Dhs இருந்த ஹோட்டல் அறை தற்பொழுது 400 Dhs, ஆச்சர்யத்துடன் பரிதாபமாகவும் இருந்தது.
மெட்ரோ ரயில் எப்படித்தான் இருக்கிறது என பார்க்கலாம் என புர்ஜ்மானிலிருந்து, புர்ஜ்கலீபா வரை சென்றேன், நல்ல முயற்சி, இன்னும் விரிவு படுத்தினால் பலருக்கு உபயோகமாக இருக்கும். துபாயை பொருத்த வரை, எல்லா இடங்களிலும் வழிகாட்டி புத்தகம், வரைபடம் வைத்திருக்கிறார்கள், அதனால் யாரிடமும் அது எங்கே, இது எங்கே என கேட்கும் தேவை மிகக் குறைவு. துபாய் மால் பார்க்க வேண்டிய ஒன்று, சுற்றவே ஒரு நாள் வேண்டும் என நினைக்கிறேன். எங்களது அலுவலகத்தின் சேல்ஸ் டிவிஷன் மூலமாக துபாய் மாலின் கீழ்தளத்தில் இருக்கும் நண்டூஸ் ரெஸ்டாரண்டில் விருந்து ஏறபாடு செய்திருந்தார்கள், மொசாம்பிக்/போர்ட்ச்கீஸ் வகை சாப்பாடு வகையாராக்கள், புதிதாகவும், சுவையாகவும் இருந்தது.
பல நண்பர்களை சந்திக்கலாம் எனவே நினைத்திருந்தேன், அலுவலக வேலை, கான்ஃபரன்ஸ் என நேரப் பற்றாக்குறை, மற்றும் பல நண்பர்கள் ஷார்ஜா போன்ற தூர தொலைவில் தங்கியிருப்பதால் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, வருத்தமாகவே இருந்த்து. இறைவன் நாடினால் அடுத்த முறை சந்திக்கலாம்.
BSC குறித்து மேலும் தகவல்கள் பெற விரும்புவோர், இங்கே தேடலாம் https://www.balancedscorecard.org/
62 comments
வாவ்! கப்லான் & நார்டனை பார்த்தீங்களா!
பெரிய பெரிய கான்ஃபரன்ஸ் எல்லாம் போறீங்க! மாஷா அல்லாஹ்!
நான் படிச்ச பல 'டப்பா'க்கள்ல, பேலன்ஸ்ட் ஸ்கோர்கார்டும் ஒண்ணு.. நானே எழுதின பழமொழி:
"Learning Management is nothing but drawing Dappaas" :P
romba exam centric aanaa feelings ;)
ஆமாம், எனக்கும் மகிழ்ச்சியே, அவ்ளோ பெரிய ஜீனியஸ்ங்களை சந்திச்சதில், ஆரம்பத்தில் போராக இருந்தது, once cause and link for the 'dappas' கொடுத்துவிட்டால், நமக்கு ஏத்த மாதிரி ஒர்க் அவுட் ஆகும்.
எங்கேயோ போய்ட்டீங்க சஃபிக்ஸ்....
இந்த BSC முறையில லாபத்தையும் சேத்துப்பாங்க இல்ல? அத விட முடியாதில்ல?
(ஹப்பா.. ஃபைனான்ஸ் சம்பந்தமா ஒரு கேள்வி கேட்டு நானும் ரவுடிதான்னு ப்ரூவ் பண்ணியாச்சு!!)
இந்த BSC முறையில் செய்வதால் என்ன நன்மைகள் - நிறுவனத்துக்கு, வேலைபார்ப்பவர்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு?
/கலந்து கொண்ட இரண்டு மலையாளிகள் மிகவும் சிரமப்பட்டு என்னுடன் தமிழில் பேச முயற்சி செய்தது மகிழ்ச்சியாக இருந்தது//
அய்யோ.. கொன்னுடுவாங்களே... தமிழை.. நான் எந்த மலையாளியாவது தமிழ்ல பேச முயற்சி செஞ்சா, ‘எனக்கு மலையாளம் தெரியும்; நீங்க சிரமப்பட வேண்டாம்’னு தடுத்திருவேன். நமக்கெதுக்கு தமிழக் கொன்ன பாவம்??
//goma said...
எங்கேயோ போய்ட்டீங்க சஃபிக்ஸ்..//
போய்ட்டு வந்துட்டேன் அக்கா!!
//இந்த BSC முறையில லாபத்தையும் சேத்துப்பாங்க இல்ல? அத விட முடியாதில்ல? //
Financial performance - இதற்கு தேவையான முக்கிய காரணிகளான மற்ற Process களை செம்மைப் படுத்தவதே இதன் நோக்கம்.
//துபாயின் பொருளாதாரம் சற்று பரவாயில்லை என நினைக்கிறேன்//
//சென்ற முறை 1,600 Dhs இருந்த ஹோட்டல் அறை தற்பொழுது 400 Dhs, ஆச்சர்யத்துடன் பரிதாபமாகவும் இருந்தது.//
இதுதான் பரவால்லைங்கிறதா?
காலச்சக்கரம் சுழலும் நிச்சயம் (இன்ஷா அல்லாஹ்).
//ஹுஸைனம்மா said...
இந்த BSC முறையில் செய்வதால் என்ன நன்மைகள் - நிறுவனத்துக்கு, வேலைபார்ப்பவர்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு?//
Customer satisfaction, Employees motivation - இது எல்லாத்துக்கும் இதில் அளவுகோல் இருக்கு, அதனால் எல்லோருக்கும் நன்மையே.
// ஹுஸைனம்மா said...
காலச்சக்கரம் சுழலும் நிச்சயம் (இன்ஷா அல்லாஹ்)//
சுழல வேண்டும், பாடம் படித்தால் சரி!!
BSC Forum 2010 இல் கலந்து கொண்ட இரண்டே தமிழர்களில் நீங்களும் ஒருவர் என்பதில் மகிழ்ச்சி.1600 திர்ஹம் ஆக இருந்த ரூம் வாடகை வெறும் 400 என்பது வருத்தமே.
துபை மாலில் நண்டூஸ் ரெஸ்டாரெண்ட்டில் போர்ர்சுகீஸ் வகை உணவா?வாவ்..அடுத்த மாதம் துபை செல்லும் பொழுது அவசியம் அங்கு போக வேண்டும்.
/ ஸாதிகா said...
வாவ்..அடுத்த மாதம் துபை செல்லும் பொழுது//
அக்கா, அப்ப துபாய் விஸிட் கன்ஃபர்மா?
மிக நல்ல விஷயம்.. இது மாதிரியான ஃபோரம் அட்டண்ட் செய்வது.
துபாய் பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுள்ளது என படிக்க மகிழ்ச்சி.
//பல நண்பர்களை சந்திக்கலாம் எனவே நினைத்திருந்தேன்,//
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...
//ஸாதிகா said...
துபை மாலில் நண்டூஸ் ரெஸ்டாரெண்ட்டில் போர்ர்சுகீஸ் வகை உணவா?வாவ்..அடுத்த மாதம் துபை செல்லும் பொழுது அவசியம் அங்கு போக வேண்டும்.//
கட்டாயம் போய்ட்டு வாங்க, ஸ்பைசிக்கு கிரேடு வச்சு கொடுக்கிறாங்க (மஞ்சள் நிறம் முதல் சிவப்பு வரை), இந்த வாரம் முதல் புர்ஜ் கலீபாவும் பார்வையாளர்களை அனுமதிக்கிறாங்களாம், முன்கூட்டியே புக் செய்தால் 100 திர்ஹம், அதுவே ஸ்பாட்டில் டிக்கட் எடுத்தால் 400 திர்ஹமாம்.
// இராகவன் நைஜிரியா said...
மிக நல்ல விஷயம்.. இது மாதிரியான ஃபோரம் அட்டண்ட் செய்வது.//
ஆமாம் அண்ணா, நிச்சயமாக!
அண்ணே.... வீட்டில் உக்காந்து நாம் கதைத்ததை விட இதில் இன்னும் நிறைய தகவல்களை தெரிந்துகொண்டேன்.... தங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... அப்டியே கைய புடிச்சு எங்களையும் கூட்டிக்கிட்டே வளந்தீங்கனா இன்னும் சந்தோஷம்... :-) ஹி ஹி....
(இப்போவே போட்டு வெச்சுக்கணும்..... யாருக்கு தெரியும்.... நாளைக்கே கிறிஸ்டல் ப்ரெசிடென்ட் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை....)
//அன்புத்தோழன் said...
அண்ணே.... வீட்டில் உக்காந்து நாம் கதைத்ததை விட இதில் இன்னும் நிறைய தகவல்களை தெரிந்துகொண்டேன்.... தங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... அப்டியே கைய புடிச்சு எங்களையும் கூட்டிக்கிட்டே வளந்தீங்கனா இன்னும் சந்தோஷம்... :-) ஹி ஹி.... //
ஆமாம் எழுதும்போது யோசிச்சு கோர்வையாக எழுதியதால் கூடுதல் தகவலகளை சொல்ல முடிந்தது, இம்ப்ளிமெண்ட்டேஷன் டீமில் நானும் ஒருவன், அனுபவங்களை நிச்சயமாக பகிர்ந்து கொள்வேன்.
//அய்யோ.. கொன்னுடுவாங்களே... தமிழை.. நான் எந்த மலையாளியாவது தமிழ்ல பேச முயற்சி செஞ்சா, ‘எனக்கு மலையாளம் தெரியும்; நீங்க சிரமப்பட வேண்டாம்’னு தடுத்திருவேன். நமக்கெதுக்கு தமிழக் கொன்ன பாவம்??//
எத கொன்னாலும் கொல கொல தான்.... ஹி ஹி... பாவம் அந்த மலையாளி என்ன நினச்சாரோ அவர் தாய்மொழிய நீங்க கொன்னத பாத்து..... ஹ ஹ.....
//பாவம் அந்த மலையாளி என்ன நினச்சாரோ//
ஹலோ, நான் மலையாளத்துல பேசறதப் பாத்து என்னை மலையாளின்னே நம்பிடுவாங்க, தெரியுமா? தமிழ்நாடுன்னா நம்பமாட்டாங்க...
//பழையபடி திரும்ப இன்னும் வருடங்கள் பிடிக்கும், சென்ற முறை 1,600 Dhs இருந்த ஹோட்டல் அறை தற்பொழுது 400 Dhs//
நல்லது தானே பிரதர்.... செலவு கம்மியா ஆகியிருக்குல..... அப்புறம் ஏன் பழைய நிலை திரும்பனும்னு நினைக்குறீங்க...?!?!?!?
//ஹலோ, நான் மலையாளத்துல பேசறதப் பாத்து என்னை மலையாளின்னே நம்பிடுவாங்க, தெரியுமா?//
உண்மையாவா சொல்றீங்க இல்ல சும்மா லுலுலாயா..... ஹ ஹ.... :-))
/தமிழ்நாடுன்னா நம்பமாட்டாங்க...//
அந்த அளவுக்கு நம்பவே முடியாத அளவுக்கு பல கொலைகள் பண்ணிருக்கீங்க நீங்க.... ஹ ஹ...ரொம்ப டேன்ஜரான ஆளு தான் நீங்க..... நானும் ரவுடின்னு ப்ரூவ் பண்ணிட்டேனு சொன்னது இதானா?!?!?!
// அன்புத்தோழன் said...
//பழையபடி திரும்ப இன்னும் வருடங்கள் பிடிக்கும், சென்ற முறை 1,600 Dhs இருந்த ஹோட்டல் அறை தற்பொழுது 400 Dhs//
நல்லது தானே பிரதர்.... செலவு கம்மியா ஆகியிருக்குல..... அப்புறம் ஏன் பழைய நிலை திரும்பனும்னு நினைக்குறீங்க...?!?!?!?//
400 எனபது ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு மிகக்குறைவு, நஷடத்தில் இயங்குகிறதாம், 1600 மிக மிக அதிகம். பொருளாதார மந்த நிலை தீர்ந்தால் மேலெழ வாய்ப்புண்டு.
//ஹுஸைனம்மா said...
//பாவம் அந்த மலையாளி என்ன நினச்சாரோ//
ஹலோ, நான் மலையாளத்துல பேசறதப் பாத்து என்னை மலையாளின்னே நம்பிடுவாங்க, தெரியுமா? தமிழ்நாடுன்னா நம்பமாட்டாங்க...//
உங்களை என்னாலே நம்பவே முடியலே!!
உங்கள் பயணத்தை அழகா ஒரு பதிவா போட்டு இருக்கீங்க...வாழ்த்துக்கள் ஷ்ஃபி
தமிழை தமிழர் பேசாதது என்ன விந்தைங்க...
மலையாளி பேசறாரே அதுக்கு உங்களோட நானும் மகிழ்ச்சியடைகிறேன்..
//தமிழரசி said...
உங்கள் பயணத்தை அழகா ஒரு பதிவா போட்டு இருக்கீங்க...வாழ்த்துக்கள் ஷ்ஃபி
தமிழை தமிழர் பேசாதது என்ன விந்தைங்க...
மலையாளி பேசறாரே அதுக்கு உங்களோட நானும் மகிழ்ச்சியடைகிறேன்..//
ஆமாம்ப்பா நானும் தஞ்சாவூர் தான், பக்கத்து ஊர்தானுங்களேன்னு சொன்னதும், யா ஐயம் ஃப்ரம் ட்ரிச்சி, ஸ்டடீட்...அப்புறம் ஒரே பீட்டரிங் தான்..ஹ்ம்ம்!!
அழகா எழுதிருக்கிங்க சகோ...மலையாளிகள் தமிழ் பேசறாங்களா ஆசர்யம்தான்...
பதிவு நன்றாக உள்ளது.நீண்ட நாட்களாக காணவில்லையே?
Super! BSC Forum 2010 லதான் ஒட்டகம் வாங்க போனீங்களா? வாழ்த்துக்கள்!
ha,ha,ha,ha....
துபாய் கன்பிரண்ஸ், துபாய் மால், நண்டூஸ்ல போய் ஒரு வெட்டு,மெட்ரோ டிரையின், ம்ம்ம்ம்ம் நீங்க ரொம்ப பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஆளு.
மலையாளிகள் எல்லாமே தமிழ் கற்று கொண்டு பேச முயற்சிப்பார்கள். , அதுவும் ஹுஸைன்னாம்மாவ தவிர.. அதே போல் தான் ஹிந்தி பேசுப்வர்கள், ஏன் பிலிப்பைனிகள் கூட என்ன மச்சான் சௌக்கியமான்னு கேட்கிறாங்க, ஆனால் நம்ம தமிழ் ஆட்கள் தான் ஆங்கிலத்தை தவிர மற்ற மொழிகளில் பேச முயற்சிப்பதில்லை.
அப்ப ஸாதிகா அக்கா துபாய் வருவது உறுதியாகிடுச்சு,,, வாங்க வாங்க
சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததில் மகிழ்ச்சி.
நல்ல பகிர்வு ஷஃபி.
நன்றி @ Mrs.Menagasathia (அவர்கள் முயற்சி செய்தது பிடித்திருந்தது, ப்ரொஃபைலில் குட்டிப்பாப்பா செம கலக்கல்)
நன்றி @ மலர்விழி (ஆமாம் முன்னைப் போல வரமுடியவில்லை)
நன்றி @ சித்ரா (அடுத்த முறை அமேரிக்கா வந்து, யானை வாங்கத் திட்டமிருக்கு:):):)
//Jaleela said...
மலையாளிகள் எல்லாமே தமிழ் கற்று கொண்டு பேச முயற்சிப்பார்கள். , அதுவும் ஹுஸைன்னாம்மாவ தவிர..//
இதுக்கு அம்மாவே பதில் சொல்லட்டும்.
//அதே போல் தான் ஹிந்தி பேசுப்வர்கள், ஏன் பிலிப்பைனிகள் கூட என்ன மச்சான் சௌக்கியமான்னு கேட்கிறாங்க, ஆனால் நம்ம தமிழ் ஆட்கள் தான் ஆங்கிலத்தை தவிர மற்ற மொழிகளில் பேச முயற்சிப்பதில்லை.//
பாருங்களேன், ஏன் தான் இப்படி இருக்காங்களோ!!
//அக்பர் said...
சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததில் மகிழ்ச்சி.
நல்ல பகிர்வு ஷஃபி.//
நன்றிப்பா!!
சில சமயம் அரபி பொம்பளை மாதிரி இருப்பீங்க.மலையாளி மாதிரி பேசுவீங்க..இன்னும் எத்தனை அவதாரம் எடுக்கப்போறீங்க ஹுசைனம்மா.மொத்தத்திலே நீங்க தமிழ் பேசும் பொண்ணுதனே?
//ஸாதிகா said...
சில சமயம் அரபி பொம்பளை மாதிரி இருப்பீங்க.மலையாளி மாதிரி பேசுவீங்க..இன்னும் எத்தனை அவதாரம் எடுக்கப்போறீங்க ஹுசைனம்மா.மொத்தத்திலே நீங்க தமிழ் பேசும் பொண்ணுதனே?//
நீங்க ஸ்பானிஷ் அல்லது லத்தீன் பாஷையில பேசினாலும் அவஙகளுக்கு புரிஞ்சுடுமா?
என்னங்க புர்ஜ்மான் வரை வந்துட்டு என்னை பார்க்காம போய்ட்டீங்க... அதுக்கு பின்னாடிதான் நம்மள் இருக்கிறான். துபாய் வந்து இதுஉங்களுக்கு பெரிய இழப்பு :))
////ஹலோ, நான் மலையாளத்துல பேசறதப் பாத்து என்னை மலையாளின்னே நம்பிடுவாங்க, தெரியுமா?//
ஹுஸைனம்மா ரொம்ப சந்தோஷம்...மலையாளத்துல பேசுங்க, பாடுங்க...ஆனா தயவு செய்து மலையாள பிளாக் ஆரம்ச்சுராதீங்க... இன்னொரு ட்ரங்கு பொட்டியை பதிவுலகம் தாங்காது... :))
//SUFFIX said...
உங்களை என்னாலே நம்பவே முடியலே!!
ஏன் ஏன் ஏன்?
//Jaleela said...
மலையாளிகள் எல்லாமே தமிழ் கற்று கொண்டு பேச முயற்சிப்பார்கள். , அதுவும் ஹுஸைன்னாம்மாவ தவிர.. //
அக்கா, என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலையே?
//ஸாதிகா said...
சில சமயம் அரபி பொம்பளை மாதிரி இருப்பீங்க.மலையாளி மாதிரி பேசுவீங்க..இன்னும் எத்தனை அவதாரம் எடுக்கப்போறீங்க ஹுசைனம்மா.மொத்தத்திலே நீங்க தமிழ் பேசும் பொண்ணுதனே?//
ஹி.. ஹி.. தமிழும் பேசும் ’அவதாரிணி’!!
//நீங்க ஸ்பானிஷ் அல்லது லத்தீன் பாஷையில பேசினாலும் அவஙகளுக்கு புரிஞ்சுடுமா?//
அதெல்லாம் எதுக்கு? அமீரகத்தில் பிழைக்கணுன்னா, ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், கொஞ்சூண்டு அரபி தெரியணும். இது எல்லாம் தெரியும். அவசியம் வந்தால் இஸ்பானிஷ், இலத்தீன் என்ன Maori மொழி கூட கத்துக்கலாம்!! (இது எங்க பேசுற மொழின்னு சொல்லுங்க பாக்கலாம்?)
// நாஞ்சில் பிரதாப் said...
ஆனா தயவு செய்து மலையாள பிளாக் ஆரம்ச்சுராதீங்க...//
நீங்க கோடியா கோடியா கொட்டுனாக் கூட நான் எழுதமாட்டேன். நீங்கதானே சொல்லிருக்கீங்க, மலையாளிங்க ரொம்ப மோசம்னு!! அவங்களுக்காக நான் பதிவெழுதுவேனா? சே..சே.. நீங்க கவலைப்படாதீங்க.
ஹுஸைனம்மா... ரொம்ப சாரி.... உங்க மலையாள திறமை மக்கள் இப்புடி கொடிகட்டி பறக்கவிட்டு மிட்டாய் குடுத்து கொண்டாடுவாங்கன்னு நான் கனவுல கூட நினைக்கல....
சும்மாக்காச்சும் நான் ஒரு பேச்சுக்கு சொன்னா.... நம்ம மக்கள் கும்மியடிக்க பாக்குறாங்க... இதுக்கு நான் பொறுப்பில்ல... ஹ ஹ... கருவம் வச்சு பலிவாங்கிட மாட்டீங்களே???? :-)))
//நாஞ்சில் பிரதாப் said...
என்னங்க புர்ஜ்மான் வரை வந்துட்டு என்னை பார்க்காம போய்ட்டீங்க... அதுக்கு பின்னாடிதான் நம்மள் இருக்கிறான். துபாய் வந்து இதுஉங்களுக்கு பெரிய இழப்பு :))//
ஓஹோ புர்ஜ்மான் பக்கத்தில் தானா, ‘நல்ல’ இடத்தில் தான் கூடாரத்தை போட்டிருக்கின்றீர் நாஞ்சிலாரே!!
என்னாண்ணா இங்க வந்துட்டு சொல்லாம கொள்ளாமா போயிட்டீங்க
இப்படியா செய்வது?
பெரிய பெரிய ஆளுகலெல்லாம் சந்தியிருக்கீங்க மாஷாஅல்லாஹ்.
வந்துட்டுட்டுபோனா சந்தோஷமாயிருந்திருக்கும்.
இங்க முன்னமாதரி இல்லண்ணா இப்ப கொஞ்சம் பரயில்லை.
//அதே போல் தான் ஹிந்தி பேசுப்வர்கள், ஏன் பிலிப்பைனிகள் கூட என்ன மச்சான் சௌக்கியமான்னு கேட்கிறாங்க, ஆனால் நம்ம தமிழ் ஆட்கள் தான் ஆங்கிலத்தை தவிர மற்ற மொழிகளில் பேச முயற்சிப்பதில்லை.//
இதை நான் வழிமொழிகிறேன் நாங்க எத்தன மளையாளிக்கு தமிழ்சொல்லிக்கொடுத்து இப்ப சூப்பராக தமிழ் பேசுறாங்க தெரியுமா.
நாமளும் கத்துகிடனும் பிறர் மொழிய.அதற்குமுன் நம்ம மொழியை கற்றுக்கொடுத்திடனும்..
//அன்புடன் மலிக்கா said...
என்னாண்ணா இங்க வந்துட்டு சொல்லாம கொள்ளாமா போயிட்டீங்க
இப்படியா செய்வது?//
அனபிற்கு நன்றியம்மா, இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை நண்பர்கள் அனைவரையும் சந்திக்கவேண்டும்.
சாப்பாடு வகையறாக்கள் சிலவற்றைப் பற்றியும் எழுதியிருக்கலாம் :-)
// "உழவன்" "Uzhavan" said...
சாப்பாடு வகையறாக்கள் சிலவற்றைப் பற்றியும் எழுதியிருக்கலாம் :-)//
வேண்டாம்ப்பா வயிறு வலிக்கும் :)
நல்ல பகிர்வு ஷஃபி
அதிகம் கவலைப்பட்டவன் நாந்தான் சந்திக்கமுடியவில்லை என்று, நிறைய பிளானிங்லே இருந்தேன். மிக்க வருத்தமே
இருந்தாலும் ப்ரவாயில்லை, சந்தோஷமாக சென்ற அந்த 5 நாட்கள் மறக்கமுடியாதில்லையா
சந்திப்போம்...
//துபாயை பொருத்த வரை, எல்லா இடங்களிலும் வழிகாட்டி புத்தகம், வரைபடம் வைத்திருக்கிறார்கள்//
சரியா ட்ராக் பார்த்துபோனால் யாரோட உதவியும் தேவையில்லைதான்
//இதனை உருவாக்கிய Dr. David Norton & Dr. Robert Kaplan இருவரையும் நேரில் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள் முடிந்தது. //
இது மாதிரி சந்தர்ப்பங்களை நான் எப்பவுமே தவறவிடுவதில்லை. நிச்சயமா நிறைய அறிமுகங்கள் கிடைக்கும், நல்ல எக்ஸ்ப்பீரியன்ச் கிடைக்கும்
இந்த பயணம் அருமையா அமைந்ததற்கு வாழ்த்துக்கள்
என்ன செய்ய தலைவரே, அது என்னவோ இப்படி ஒரு பிசியான ட்ரிப்பாக இந்த முறை அமைந்துவிட்டது!!
கலக்கல் பதிவு . பகிர்வுக்கு நன்றி !
நாங்களும் துபாய்லதானே இருக்கோம்.
// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
கலக்கல் பதிவு . பகிர்வுக்கு நன்றி !
நாங்களும் துபாய்லதானே இருக்கோம்.//
அப்படியா ரொம்ப சந்தோசம், நாஞ்சிலானந்தா கூடாரத்துக்கு பக்கத்திலேயா இருக்கீங்க?
துபாயின் மெட்ரோ அருமை நல்ல பயணம் எல்லா இடமும் விழுந்துதான் கிடக்கிறது ஷஃபி
################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி
http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
################
துபாய்...?
என்ஜாய்....
உங்களது BSC Forum 2010 விவர நிலை அறிக்கை நல்லா இருந்தது. நம்ம ஊரு காறங்க நிறைய பேர் வெளி நாடுகளுக்கு போனால் இப்படி தான் பெருமைக்காக ஆங்கிலத்தில் பேசுவாங்க.. விட்டு தள்ளுங்க.மேலும் உங்களுக்கு இது போல் வாய்ப்புகள் கிடைக்க வாழ்த்துக்கள்.
enna boss eppo paaru meeting conference...cha cha
60th aala vanthathuku oru cornetto ice cream kidaikuma boss!!!!
நன்றி @ தேனம்மை அக்கா
நன்றி @ ஜெய்லானி (பெரிய மனசு)
நன்றி @ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி
நன்றி @ மைதிலி கிருஷ்ணன்
நன்றி @ அன்னம்...ஹி...ஹி :)
உள்ளேன் ஐயா! மட்டும் தான்
மற்றபடி ஒன்னும் விளங்காது
Post a Comment