|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 11:30 AM

பணத்தானி - ATM

By SUFFIX at 11:30 AM


நினைத்துவடன் அட்டையைப் போட்டு, அடுத்த கணத்தில் பணத்தை கைக்குள் திணித்து விடும் 'பணத்தானி' (பணம் தா நீ) என செல்லமாக அழைக்கப்படும் ஏ.டி.எம். இயந்திரத்தை கண்டு பிடித்த ஸ்டெஃபர்டு பாரன் (Shepherd-Barron), கடந்த வாரம் காலமானார், இவர் 1925ம் வருடம் இந்திய மண்ணில் ஸ்காட்லாந்திய பெற்றோர்களுக்கு பிறந்தார். நாற்பது வருடங்களுக்கு முன் ஒரு கடையில் மிட்டாய் வாங்கும்போது டிஸ்பன்சர் சாதனத்தை பார்த்திருக்கிறார், நம்மை மாதிரி மிட்டாயை வாயில போட்டுகொண்டு அப்படியே போய்விடாமல் , இந்த தொழில் நுட்பத்தை வேறு விதமாக உபயோகப்படுத்தினால் என்னன்னு யோசிச்சு, இந்த ஏ.டி.எம்மை கண்டு பிடித்தாராம். இது ஒரு நல்ல கண்டு பிடிப்பு என பிரிட்டன் பார்க்லேஸ் வங்கியும் இந்த தொழில் நுட்பத்தை வாங்கிக் கொணடது.

எதுவா இருந்தாலும் தன்னோட தங்க்ஸ்கிட்டே சொல்லிட்டு அவங்க சொல்றத செய்துடுவார் போல, அதே போல இந்த மெஷினுக்கு ஆறு இலக்க எண்ணை பாதுகாப்பு குறியீடாக வச்சிருந்தாராம், ஆனா தங்கஸ் நாலு இலக்கமா மாத்தினா நல்லா இருக்கும்னு சொன்னதுக்கப்புறம், அவங்க ஆசைப்படியே செய்துட்டார்.

இந்த மெஷினில் இது வரை விருப்பபட்டு கேட்ட பணத்திற்கு குறைவாக வந்திருக்கிறதா எனத் தெரியவில்லை, ஆனால் எனக்குத் தெரிந்த பலருக்கு பக்கத்தில் ஒரு சுழியன் சேர்த்தே பணம் கொட்டியிருக்கிறது, இப்படி கிடைக்கும் பணத்தை நாம் பதுக்கிக் கொள்வதும் திருடுதலே, அதை சம்பந்தப்பட்ட வங்கியில் கொடுப்பதே முறை, எது நமக்கு சொந்தம் இல்லையோ அதை உரிமை கொண்டாடுவது திருட்டு தானே? ஒருவருக்கு நமது நாட்டு நாணய மதிப்பில் இரண்டு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ரியால்கள் வந்து விழுந்துவிட்டதாம், இவர் கணக்கில் இருந்ததோ சில ஆயிரங்களே, அன்று மாலை அவர் வங்கிக்கு போய் திரும்ப கொடுத்து விட்டார், அவர்களும் ரொம்ப சுலபமாக, நன்றின்னு சொல்லிட்டு வாங்கிக் கொண்டார்களாம்,ஒரு பாராட்டு கூட இல்லையாம், ஏமாற்றமாட்டார்கள் எனற நம்பிக்கையா? அல்லது திருடினாலும் கண்டு பிடித்து விடக்கூடிய தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்டதன் வெளிப்பாடா?

சில வருடங்களுக்கு முன் மற்றொரு நபர் இப்படி சில லட்ச்ங்கள் எளிதாகக் கிடைத்து, அன்றைய தினமே, ஊருக்கு எமர்ஜன்சியில் சென்று, தன்னிடம் சேமிப்பு பணத்துடன் இந்த பணத்தையும் வைத்த் தொழில் தொடங்கியிருக்கிறார், தொடர்ந்து நஷடம், சமாளிக்க முடியவில்லை, உள்ளதையும் தொலைத்து, மீண்டும் அயல் நாட்டிற்கே வந்து, முன்னர் இருந்ததைவிட கடினமான வேலையும், சம்பளம் குறைவாகவும் கொடுக்கும் நிறுவனத்தில் சேர்ந்தாராம், ஏனிந்த பேராசை? இந்த மெஷின்களை கூண்டோட தூக்கிக் கொண்டு போய் விடுகிறார்கள் என‌ அடிக்கடி செய்திகள் வேறு வருகிறது.

இங்கே மற்றொரு விடயமும் சொல்லணும், மெஷினிலிருந்து காசை எடுக்கும்போதும், கணக்கை சரிபார்க்கும்போதும், பிரிண்ட் வேண்டுமா எனக் கேட்கும், பெரும்பாலும், தேவை இருக்கோ இல்லையோ, அதை பிரிண்ட் எடுத்து, அப்படியே தூக்கி எறிந்து விடுகிறோம், அதற்கு பதில் திரையிலேயே சரிபார்த்துக் கொள்ளலாமே, மிகவும் அவசியமெனில் பிரிண்ட் எடுக்கலாம். சுற்றுப் புறச்சூழலையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படி மிட்டாய்ல தொடங்கி, இப்போ என்னடான்னா தங்கக்கட்டிகளை தரும் அளவிற்கு இந்த சாதனம் பயன்படுகிறது. சமீபத்தில் அபூதாபியில் இந்த தங்க முட்டை இடும் வாத்தை கொண்டு வந்து வைத்து இருக்கிறார்கள், இனி தட்டுப்பாடு தங்கத்திற்கா, இல்லை பணத்திற்க்கா? சும்மா இன்றைய தங்க நில‌வரம் எப்படி இருக்குன்னு வலையில் பார்த்தேன், நெஞ்சம் 'தக் தக்' என்கிறது!!

62 comments

ஸாதிகா on May 24, 2010 at 10:49 PM  

அறியாத அருமையான தகவல்கள்.அற்புதமான ஆலோசனைகள் நன்றி தம்பி ஷஃபி.// ஏமாற்றமாட்டார்கள் எனற நம்பிக்கையா? அல்லது திருடினாலும் கண்டு பிடித்து விடக்கூடிய தொழில்னுட்பங்கள் வளர்ந்து விட்டதன் வெளிப்பாடா?//ஓவ்வொரு ஏ டி எம் செண்டரிலும் கேமரா சுழன்று கொண்டிருப்பதால் பயந்த சுபாவமும்,மனசாட்சியும் கொண்ட சில மனிதர்கள் மேற்கண்ட படி நடப்பார்கள்.


ஸாதிகா on May 24, 2010 at 10:51 PM  

பணத்தாணி அருமையான தமிழ் வார்த்தை கண்டு பிடித்து விளக்கம் கூறி இருக்கும் முறையும் அருமை.பாராட்டுக்களைப்பிடியுங்கள்.


Chitra on May 24, 2010 at 11:02 PM  

I read about this, today morning. I thought, gold can be withdrawn only by the account holder from the ATM. or is it a vending machine for gold?


ஜெய்லானி on May 24, 2010 at 11:48 PM  

நல்ல தகவல் ஷாஃபி


Mrs.Menagasathia on May 25, 2010 at 12:26 AM  

தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டேன்,நன்றி சகோ!!


நாஸியா on May 25, 2010 at 7:53 AM  

சுவையான தகவல்கள்! :) நன்றி

**

ஒழுங்கா சம்பாதிக்கிற காசே நிலைக்க மாட்டேங்குது.. இப்படி நமக்கு சொந்தமில்லாததுக்கு ஆசை பட்டா அது கண்டிப்பா பரக்கத்தை அழிச்சிடும்.. நீங்க சொன்னது நல்ல உதாரணம்


goma on May 25, 2010 at 8:16 AM  

பணம்தானி...அருமையான பகிர்வு.ஒழுங்கா சம்பாதிக்கிற காசே நிலைக்க மாட்டேங்குது.. இப்படி நமக்கு சொந்தமில்லாததுக்கு ஆசை பட்டா அது கண்டிப்பா பரக்கத்தை அழிச்சிடும்..
நாஸியாவை வழி மொழிகிறேன்


Jaleela on May 25, 2010 at 8:22 AM  

தெரியாத புது தகவல். எங்கிருந்து தான் இது போல் யோசனை வருதோ உங்களுக்கு.

பணத்தாணி ரொம்ப நல்ல இருக்கு புது வார்த்தை கற்று கொண்டாச்சு.


அன்புத்தோழன் on May 25, 2010 at 9:19 AM  

Super bro... pudhu thamizh sol kandu pudichrukeenga.... Panathaani... idha makkal tv ku fone panni sollidunga... he he ;-)

Anaalum aaniya konjam kooda pudunguna andha sagodhararin nermaiyai konjam paaraatirukkalam andha vangi... innoru sagodharar peraasai peru nashtathirkaana udhaaranam.... Nalla pagirvu....


SUFFIX on May 25, 2010 at 9:39 AM  

//ஸாதிகா said...
ஓவ்வொரு ஏ டி எம் செண்டரிலும் கேமரா சுழன்று கொண்டிருப்பதால் பயந்த சுபாவமும்,மனசாட்சியும் கொண்ட சில மனிதர்கள் மேற்கண்ட படி நடப்பார்கள்.//

இந்த நண்பர் மிகவும் நேர்மையானவர், அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்தவுடன் தான் மிகவும் நிம்மதியடைந்ததாக சொன்னார்.


SUFFIX on May 25, 2010 at 9:42 AM  

//ஸாதிகா said...
பணத்தாணி அருமையான தமிழ் வார்த்தை கண்டு பிடித்து விளக்கம் கூறி இருக்கும் முறையும் அருமை.பாராட்டுக்களைப்பிடியுங்கள்.//
ஆட்டொவிற்கு ‘தானி’ என சொல்கிறோம், இதற்கு பணத்தானி சரியான வார்த்தை எனப்பட்டது, தமிழ் அகராதியில் தானியங்கி காசாடும் நிலையம் என இருந்தது, இதை விட பணத்தானி சரி எனப்பட்டது. பாராட்டுக்களுக்கு நன்றியக்கா.


SUFFIX on May 25, 2010 at 9:43 AM  

//Chitra said...
I read about this, today morning. I thought, gold can be withdrawn only by the account holder from the ATM. or is it a vending machine for gold?//

பணம் வைத்திருக்கும் அக்கவுன் ஹோல்டருங்களுக்கா இருக்குமோ, அபூதாபியில் இருக்கும் எங்க பெரிய அக்கா பதில் சொல்றாங்களான்னு பார்ப்போம்.


SUFFIX on May 25, 2010 at 9:46 AM  

நன்றி ஜெய்லானி.

நன்றி நாஸியா, ஆம் சரியாக சொன்னீங்க.

நன்றி கோமதி அக்கா.


SUFFIX on May 25, 2010 at 9:47 AM  

//Jaleela said...
தெரியாத புது தகவல். எங்கிருந்து தான் இது போல் யோசனை வருதோ உங்களுக்கு.

பணத்தாணி ரொம்ப நல்ல இருக்கு புது வார்த்தை கற்று கொண்டாச்சு.//

பணத்தானி, உண்மையிலேயே நல்லா இருக்கா? காப்பி ரைட் பண்ணிட வேண்டியது தான்!! நன்றி ஜலிக்கா.


SUFFIX on May 25, 2010 at 9:47 AM  

//Mrs.Menagasathia said...
தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டேன்,நன்றி சகோ!!//

நன்றி சகோ.


SUFFIX on May 25, 2010 at 9:49 AM  

நன்றி @ அன்புத்தோழன், மக்கள் தொலைக்காட்சிக்கு உடனே தந்தி அனுப்பிடுவோம்.


ஹுஸைனம்மா on May 25, 2010 at 11:58 AM  

//அபூதாபியில் இருக்கும் எங்க பெரிய அக்கா பதில் சொல்றாங்களான்னு பார்ப்போம்//

வந்துட்டேன்!!

(ஏதோ நிகழ்ச்சியில, “வா இங்கே”ன்னு கம்பைச் சுத்துறதும், “இதோ வந்தேன்”னு குதிச்சு வர்றதும் உங்க நினைவுக்கு வந்தா நான் பொறுப்பில்ல!!)


SUFFIX on May 25, 2010 at 12:01 PM  

//ஹுஸைனம்மா said...

(ஏதோ நிகழ்ச்சியில, “வா இங்கே”ன்னு கம்பைச் சுத்துறதும், “இதோ வந்தேன்”னு குதிச்சு வர்றதும் உங்க நினைவுக்கு வந்தா நான் பொறுப்பில்ல!!)//

மீசிங்கியை ஸ்டார்ட் பண்ணுங்க..


ஹுஸைனம்மா on May 25, 2010 at 12:04 PM  

தங்கத்தானியில தங்கம் எடுக்க அக்கவுண்டெல்லாம் தேவையில்லை; கையில் பணம் இருந்தாலே போதும். மார்க்கெட் ரேட்டைவிட விலை கொஞ்ஞ்ஞ்ஞ்சம் அதிகம்தான்!! (1 gram approx. 50$)

போன வருஷமே ஒரு தங்கத்தானி ஜெர்மனி ஃப்ராங்க்ஃபர்ட்டுல வச்சுட்டாங்க!! அபுதாபியில ரெண்டாவது!!

இந்தத் தானி முழுசும் தங்க முலாம் பூசப்பட்டது!! தங்க பிஸ்கட் கூட அதுக்குரிய “நம்பகத்தன்மை பத்திரமும்’ வரும். பத்துநாள் Money back guarantee-யும் உண்டு!!


ஹுஸைனம்மா on May 25, 2010 at 12:05 PM  

இதப்பத்தி ட்ரங்குப்பொட்டில எழுதறதுக்காகச் சேகரிச்சு வச்ச செய்திகள் இதெல்லாம்!! வட போச்சே!!


ஹுஸைனம்மா on May 25, 2010 at 12:07 PM  

//'பணத்தானி' (பணம் தா நீ)//

அருமை!!

//எதுவா இருந்தாலும் தன்னோட தங்க்ஸ்கிட்டே சொல்லிட்டு அவங்க சொல்றத செய்துடுவார் போல//

அதனால கிடைச்ச ஊக்கத்துனாலத்தான் கீழேயுள்ள மாதிரி யோசிச்சுருக்கார்!!

//நம்மை மாதிரி மிட்டாயை வாயில போட்டுகொண்டு அப்படியே போய்விடாமல் , இந்த தொழில் நுட்பத்தை வேறு விதமாக உபயோகப்படுத்தினால் என்னன்னு//


SUFFIX on May 25, 2010 at 12:07 PM  

//ஹுஸைனம்மா said...
தங்கத்தானியில தங்கம் எடுக்க அக்கவுண்டெல்லாம் தேவையில்லை; கையில் பணம் இருந்தாலே போதும். மார்க்கெட் ரேட்டைவிட விலை கொஞ்ஞ்ஞ்ஞ்சம் அதிகம்தான்!! (1 gram approx. 50$)

போன வருஷமே ஒரு தங்கத்தானி ஜெர்மனி ஃப்ராங்க்ஃபர்ட்டுல வச்சுட்டாங்க!! அபுதாபியில ரெண்டாவது!!

இந்தத் தானி முழுசும் தங்க முலாம் பூசப்பட்டது!! தங்க பிஸ்கட் கூட அதுக்குரிய “நம்பகத்தன்மை பத்திரமும்’ வரும். பத்துநாள் Money back guarantee-யும் உண்டு!!//

சித்ரா மேம், நோட் பண்ணிக்கோங்க, எந்த ஆபரணத் தங்க மாளிகையிலும் இவ்ளோ டிடெயிலு கிடைக்காது!! நன்றி ஹூசைனம்மா!!


ஹுஸைனம்மா on May 25, 2010 at 12:08 PM  

//அவசியமெனில் பிரிண்ட் எடுக்கலாம். சுற்றுப் புறச்சூழலையும் கவனத்தில் //

உண்மை!! நல்ல விஷயம்.


SUFFIX on May 25, 2010 at 12:09 PM  

//ஹுஸைனம்மா said...
இதப்பத்தி ட்ரங்குப்பொட்டில எழுதறதுக்காகச் சேகரிச்சு வச்ச செய்திகள் இதெல்லாம்!! வட போச்சே!!//

நோ நோ ஹூசைனம்மா, தயவு செய்தி நீங்களும் எழுதுங்கள், தெரிந்த விடயமாக இருந்தாலும் உங்களுடைய எழுத்துக்களுக்காக படிக்கலாம்.


அபுஅஃப்ஸர் on May 25, 2010 at 12:10 PM  

//பணம் தா நீ)//

அக்கொவுண்ட்லே இருந்தாதானே தரும், வரலாறு முக்கியம் அமைச்சரே

நல்ல பகிர்வு, நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பணம் வாங்கி செல்வது (இப்போ மட்டும் இல்லேனா சொல்லுதிய) குறைந்திருக்கிறது.

நல்ல பகிர்வு


SUFFIX on May 25, 2010 at 12:14 PM  

//அபுஅஃப்ஸர் said...
//பணம் தா நீ)//

அக்கொவுண்ட்லே இருந்தாதானே தரும், வரலாறு முக்கியம் அமைச்சரே

நல்ல பகிர்வு, நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பணம் வாங்கி செல்வது (இப்போ மட்டும் இல்லேனா சொல்லுதிய) குறைந்திருக்கிறது.//

ஹி..ஹி.. ரொம்ப யோசிக்காதிங்க தலைவரே!!


Anonymous on May 25, 2010 at 12:14 PM  

"பணம் தா நீ"
நல்ல பெயர் விளக்கம்.
(கோனார் தமிழ் உரைல கூட இப்படி விளக்கம் இருக்காது.)

தகவல்களும் நன்றாக இருந்தது..


SUFFIX on May 25, 2010 at 12:25 PM  

//கிறுக்கல்கள் said...
"பணம் தா நீ"
நல்ல பெயர் விளக்கம்.
(கோனார் தமிழ் உரைல கூட இப்படி விளக்கம் இருக்காது.)

தகவல்களும் நன்றாக இருந்தது.//

நன்றி கிறுக்கல்கள்!! (டைப்பவே ஒரு மாதிரி இருக்கு)


Anonymous on May 25, 2010 at 12:37 PM  

//நன்றி கிறுக்கல்கள்!! (டைப்பவே ஒரு மாதிரி இருக்கு)//

ஒரு மாதிரினா??
ம்ம்ம்ம் புரியலையே...


SUFFIX on May 25, 2010 at 12:43 PM  

//கிறுக்கல்கள் said...
//நன்றி கிறுக்கல்கள்!! (டைப்பவே ஒரு மாதிரி இருக்கு)//

ஒரு மாதிரினா??
ம்ம்ம்ம் புரியலையே..//

சமீபத்தில் பதிவிலிட்ட கவிதையை படிச்சேன், நல்லா தானே இருக்கு, கிறுக்கல்கள்னு பேரு வச்சிருக்கிங்களே, அத சொன்னேன், நத்திங் சீரியஸ்!:)


Anonymous on May 25, 2010 at 12:48 PM  

அட.. நா சீரியசா எடுத்துக்கல..
பாராட்னதுக்கு நன்றி sufi
(பாராட்னீங்க தான??)


SUFFIX on May 25, 2010 at 1:03 PM  

//கிறுக்கல்கள் said...
அட.. நா சீரியசா எடுத்துக்கல..
பாராட்னதுக்கு நன்றி sufi
(பாராட்னீங்க தான??)//

பாராட்டியாச்சு!! இனி தொடர்ந்து படிப்பேன், நன்றி!!


"உழவன்" "Uzhavan" on May 25, 2010 at 1:59 PM  

என்னது தங்கக் கட்டி வருதா??? இங்க 1ம் தேதி ரூபாய் கூட வரமாட்டிக்குது. No cash ன் போர்டுதான் தொங்குது


SUFFIX on May 25, 2010 at 4:26 PM  

//உழவன்" "Uzhavan" said...
என்னது தங்கக் கட்டி வருதா??? இங்க 1ம் தேதி ரூபாய் கூட வரமாட்டிக்குது. No cash ன் போர்டுதான் தொங்குது//

இங்கேயும் அதே தான், அங்கேயாவது போர்டு வக்கிறாங்களே, இங்கே நாம தான் போய் பார்த்துட்டு ஏமாந்துட்டு வரணும்.


அக்பர் on May 26, 2010 at 9:41 AM  

மெஷினை பற்றிய தகவல்களோடு தங்களின் ஆலோசனையும் கலந்து சொன்னது மிக அருமை ஷஃபி.

ஆமா தங்கம் ஏன் இப்படி போகுது.(விலைதான்). அது பற்றி தெரிந்தால் சொல்லவும்.


ஹுஸைனம்மா on May 26, 2010 at 9:54 AM  

//தங்கம் ஏன் இப்படி போகுது.(விலைதான்)..தெரிந்தால் சொல்லவும்//

யூரோ கீழே போவதால், தங்கம் மேலே போகுது. விடை கரெக்டா ஷஃபி?

(பரிசு அந்தத் தானியில் எடுத்த ஒரு தங்க பிஸ்கட்தானே?


அஹமது இர்ஷாத் on May 26, 2010 at 12:13 PM  

தெரிந்துகொள்ள வேண்டியவை.. அருமையான பகிர்வு...

"பணத்தானி" ம் இதுவும் நல்லாத்தான் இருக்கு...

(பேங்க்'ல போய் சொன்னா "பேய்" முழி நிச்சயம்..)


SUFFIX on May 26, 2010 at 2:46 PM  

//அக்பர் said...
மெஷினை பற்றிய தகவல்களோடு தங்களின் ஆலோசனையும் கலந்து சொன்னது மிக அருமை ஷஃபி.//

நன்றி அக்பர்!!


SUFFIX on May 26, 2010 at 2:49 PM  

//ஹுஸைனம்மா said...
//தங்கம் ஏன் இப்படி போகுது.(விலைதான்)..தெரிந்தால் சொல்லவும்//

யூரோ கீழே போவதால், தங்கம் மேலே போகுது. விடை கரெக்டா ஷஃபி?

(பரிசு அந்தத் தானியில் எடுத்த ஒரு தங்க பிஸ்கட்தானே?//

மிகவும் சரி ஹூசைனம்மா, ஐரோப்பிய நிலவரம், கொரிய நாடுகளுக்கிடையே டென்ஷன் இவைகளால ஏறுதாம்! ஹ்ம்ம்

Gold surged to break 1,200 dollars per ounce earlier in the session, as the uncertainty about the spillover effect of the European sovereignty debt crisis on U.S. and world economy as well as the escalating tensions on the Korean Peninsula fueled investor risk aversion and spurred fresh demand of gold.


SUFFIX on May 26, 2010 at 3:10 PM  

//அஹமது இர்ஷாத் said...
தெரிந்துகொள்ள வேண்டியவை.. அருமையான பகிர்வு...

"பணத்தானி" ம் இதுவும் நல்லாத்தான் இருக்கு...

(பேங்க்'ல போய் சொன்னா "பேய்" முழி நிச்சயம்..)//

நன்றி இர்ஷாத், அரபி தெரியுமாங்கிற உங்க ஜோக் தான் நினைவுக்கு வருது, பணத்தானிக்கு அரபியில சர்ராஃப்னு இங்கே சொல்வோம், உங்க ஊருல எப்படி சொல்லுவாக?


NIZAMUDEEN on May 26, 2010 at 7:50 PM  

'பணத்தானி' சூப்பர்!


Adirai Express on May 27, 2010 at 11:14 PM  

தகவல்கள் அருமை,
//இப்படி மிட்டாய்ல தொடங்கி, இப்போ என்னடான்னா தங்கக்கட்டிகளை தரும் அளவிற்கு இந்த சாதனம் பயன்படுகிறது.//
போகிற போக்க பார்த்தால் எங்கே போய் முடியபோவுதுன்னு தெரியலே


malarvizhi on May 29, 2010 at 8:35 AM  

"பணத்தானி" இதுவரை கேள்விப் படாத ஒரு வார்த்தை.நல்ல தகவல்கள்.தம்பிக்கு வாழ்த்துக்கள்.


SUFFIX on May 29, 2010 at 10:21 AM  

நன்றி @ நிஜாம்
நன்றி @ Adirai Express மன்சூர் (இனி பணத்தானியும் போய், எல்லாம் அட்டைல ஆயிடும்)


SUFFIX on May 29, 2010 at 10:24 AM  

//malarvizhi said...
"பணத்தானி" இதுவரை கேள்விப் படாத ஒரு வார்த்தை.நல்ல தகவல்கள்.தம்பிக்கு வாழ்த்துக்க//

நானும் கேள்விப்படல, நன்றிக்கா.


இராகவன் நைஜிரியா on May 30, 2010 at 1:27 PM  

// சும்மா இன்றைய தங்க நில‌வரம் எப்படி இருக்குன்னு வலையில் பார்த்தேன், நெஞ்சம் 'தக் தக்' என்கிறது!! //

வேற வேலை இல்லை என்றால் சும்மா இருக்கணும். இப்படி தங்க விலை எல்லாம் பார்த்துகிட்டு இருந்தா, அனாவசியமான டென்ஷன் தாங்..


SUFFIX on May 30, 2010 at 2:00 PM  

//இராகவன் நைஜிரியா said...

வேற வேலை இல்லை என்றால் சும்மா இருக்கணும். இப்படி தங்க விலை எல்லாம் பார்த்துகிட்டு இருந்தா, அனாவசியமான டென்ஷன் தாங்.//

வாங்கண்ணே, சும்மா தான் செக் பண்ணினேன்.:)


அன்புடன் மலிக்கா on June 1, 2010 at 8:58 AM  

/ஒழுங்கா சம்பாதிக்கிற காசே நிலைக்க மாட்டேங்குது.. இப்படி நமக்கு சொந்தமில்லாததுக்கு ஆசை பட்டா அது கண்டிப்பா பரக்கத்தை அழிச்சிடும்.. நீங்க சொன்னது நல்ல உதாரணம்//

நிச்சியமாக.

நிறைய அறியாத தகவல்களை அறித்தந்த ஷஃபியண்ணாவுக்கு பாராட்டுக்கள்..


SUFFIX on June 1, 2010 at 9:05 AM  

//அன்புடன் மலிக்கா said...

நிறைய அறியாத தகவல்களை அறித்தந்த ஷஃபியண்ணாவுக்கு பாராட்டுக்கள்..//

பாராட்டுக்களுக்கு நன்றி சகோ.


Jaleela on June 2, 2010 at 8:49 AM  

உங்கள் அருமையான பதிவுகளுக்காக ஒரு அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙள்.


SUFFIX on June 2, 2010 at 9:03 AM  

விருதுக்கு நன்றி ஜலிக்கா, அன்புடன் பெற்றுக் கொண்டேன்.


thenammailakshmanan on June 3, 2010 at 2:25 PM  

ஏடி எம் பற்றி இவ்வளவு தகவல்களா களஞ்சியமே..!!


நட்புடன் ஜமால் on June 3, 2010 at 2:44 PM  

பணம் தா நீ - ஹா ஹா ஹா

ரொம்ப நாளாச்சு ஷஃபி வார்த்தைகளோடு விளையாடி, மீண்டும் ஒரு நாள் முயற்சிப்போம்.

பல தெரியா தகவல்கள் ஷஃபி - நன்றி.


SUFFIX on June 5, 2010 at 11:40 AM  

// thenammailakshmanan said... ஏடி எம் பற்றி இவ்வளவு தகவல்களா களஞ்சியமே..!!//

நன்றி அக்கா.


SUFFIX on June 5, 2010 at 11:41 AM  

//நட்புடன் ஜமால் said... பணம்

ரொம்ப நாளாச்சு ஷஃபி வார்த்தைகளோடு விளையாடி, மீண்டும் ஒரு நாள் முயற்சிப்போம்.//

I really miss those days, விரைவில் வாங்க ஜமால்.


Annam on June 7, 2010 at 8:38 AM  

பணம் தா நீ -
////
Enna enga anna kooda sertnhu vaarthaiya pichi pottu paarkura palakam vanthuducha...irukattum irukattum:)

gud infn boss
epdi irukel


SUFFIX on June 7, 2010 at 8:56 AM  

//Annam said...
பணம் தா நீ -
////
Enna enga anna kooda sertnhu vaarthaiya pichi pottu paarkura palakam vanthuducha...irukattum irukattum:) gud infn boss epdi irukel//

நன்றி அன்னம், நான் நலம், தாங்கள் எப்படி.


ப்ரியமுடன்...வசந்த் on June 15, 2010 at 10:04 PM  

அறியாத விஷயங்கள் ...

ஆனா எப்பவுமே இதுல பணம் இருக்கும்படி வங்கிகள் செய்வதில்லை பெயர்தான் ஏ டி எம் எப்போ போனாலும் அவுட் ஆஃப் சர்வீஸ் நம் நாட்டின் பிரபல வங்கி ஒன்றின் ஏடிஎம் சர்வீஸ் சுத்த வேஸ்ட்.... ஒரு வேளை அரசாங்க வங்கியாக இருப்பதால் வேலை நிறுத்தம் செய்கிறதோ என்னவோ?


அன்புடன் மலிக்கா on June 23, 2010 at 2:05 PM  

ஏன் ஷஃபியண்ணா பதிவே எழுதலை.
சீக்கிரம் எழுதுங்க..


SUFFIX on June 23, 2010 at 2:32 PM  

கருத்துக்கு நன்றி @ப்ரியமுடன்...வசந்த்.

நன்றி சகோதரி அன்புடன் மலிக்கா, விரைவில் எழுத்ணும்.


thenammailakshmanan on June 24, 2010 at 11:30 AM  

ஜூன் வந்துட்டதே அடுத்து என்ன எழுதப் போறீங்க ஷஃபி..


சிநேகிதி on July 31, 2010 at 10:04 PM  

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
அன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்

http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html