எங்களோட அலுவலகம் பத்தாவது மாடியில் இருக்கிறது, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக புகை பிடிப்பது முற்றிலும் இங்கே தடை, அப்படி யாரேனும் புகை பிடித்தே ஆக வேண்டுமென்றால், தரை தளத்திற்கு போய் புகை விட்டு வரவேண்டும், இரண்டு நாளைக்கு முன் அலுவலகத்தில் ஒரு பிரிவிலிருந்து ஒரே புகை மயம், என்ன காரணம் எனக் கேட்டால், ஜப்பானிலிருந்து பெரிய டெலிகேட்ஸ் வந்திருக்காங்க, சாப்பாடு இல்லாம கூட இருந்துடுவாங்களாம் ஆனா சிகரெட் இல்லாம இருக்க மாட்டாங்களாம் அதனால இன்றைக்கு மட்டும் அவ்ங்களுக்கு மட்டும் புகை பிடிக்க அனுமதியாம், என்ன கொடுமையிது, அவர்களுக்கு நமது விதிமுறையை எடுத்துச் சொல்லலாமே எனக் கேட்டால், ஷ்ஷ்ஷ் அவங்க பெரிய ஆளுங்க, அதனால நாம தான் அனுசரிச்சு போகணுமாம்!!
*************
வழக்கம்போல் மார்க்கெட் பகுதியில் பார்க்கிங் கிடைக்கவில்லை, கால் மணி நேரம் சுற்றி சுற்றி வந்தும் உஹூம், சரி ஒரு பத்து நிமிட வேலை தானே என ஒரு திருப்பத்தில் வண்டியை நிறுத்தி விட்டு, திரும்பி வந்து பார்த்தால், என்னோட காரில் சங்கிலியை கட்டி இழுத்து போவதற்கு தயாராக இருந்தார்கள், அருகில் ஒரு போலீஸ், வண்டி ஓட்டுனர் ஒரு பங்காளேதேஷி, அவரிடம் நண்பா நாமெல்லாம் பக்கத்து ஊர்க்காரங்க, விட்டுருன்னு சும்மா சொல்லிப் பார்த்தேன், அதெல்லாம் நஹி நஹின்னுட்டார், அப்புறம் போலிஸிடம் போய் ஹாதா..ஹூதான்னு ஏதோ நமக்கு தெரிஞ்ச அரபியில் சொல்லி, அவரையும் ரொம்ப நல்லவராக்கி, வழிக்கு வந்த நேரத்தில் அவருக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்திருச்சு, ஆமா இதுமாதிரி பிடிக்கரவங்களயெல்லாம் நான் விட்டுட்டு இருந்தா என்னோட மேலதிகாரிக்கு நான் என்ன சொல்றது, அதனால நான் இந்த சீட்டுல ஏதாச்சும் எழுதிக்கிறேன்னு பேரு, ஐ.டி. நம்பர் மட்டும் எழுதிக்கொண்டார், ஆனா அபராதம் வராதுன்னு சமாதப்படுத்தினார், அதெப்படி? அவர் ஒரு பிங்க் நிற நோட்டிஸ் தந்தால் தான் சிஸ்டத்தில் தகவல்கள் ஏறுமாம், என்னவோ நல்லதே நடக்கட்டும், இது வரை முயற்சி செயத அந்தப் போலீஸ் வாழ்க!!
************
சைனாவில் ஒரு பால் பாயிண்ட் பேனா தயாரிக்கும் ஒரு கம்பெனிக்கு 1,000 டாலர் அபராதம் விதித்திருக்காங்களாம், என்ன காரணமென்றால், ’அமேரிக்க அதிபர் ஒபாமாவே எங்களோட பேனாவை தான் உப்யோகிக்கிறார்’னு விளம்பரப்படுதியிருக்காங்க!! யாரு கண்டா உண்மையா இருந்தாலும் இருக்கும்!!
***********
நேற்று டி-20 உலகக்கோப்பை, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய நாடுகள் மோதியது, நமது ஆசிய நாடுகளில் ஏதேனும் ஒன்று இறுதி வரை வந்திருந்தால் இன்னும் நன்றாக ரசித்து பார்த்திருக்கலாம்.
42 comments
ஆஹா ரொம்ப நல்ல போலீஸ்கார்! :))
அப்ப இது வரை அங்கு சிக்ரேட் கீழே போய் குடித்தவர்களுக்கு காதுல ரொம்ப புகை வந்து இருக்கும்.
போலிஸ் காரருக்கு ஷபிய பார்த்ததும் அவருக்கு மேலே பெரிய போலிஸா தெரிந்து இருப்பார் அதான் யோசித்து விட்டுட்டார்.
ஏன் இந்த தலைப்பு ஹுஸைனாம்ம்மாவுக்கு போட்டியா வச்சமாதிரி இருக்கு.
அதனால இன்றைக்கு மட்டும் அவ்ங்களுக்கு மட்டும் புகை பிடிக்க அனுமதியாம், என்ன கொடுமையிது, அவர்களுக்கு நமது விதிமுறையை எடுத்துச் சொல்லலாமே எனக் கேட்டால், ஷ்ஷ்ஷ் அவங்க பெரிய ஆளுங்க, அதனால நாம தான் அனுசரிச்சு போகணுமாம்!!
.......இதுக்கும் அந்த போலீஸ் அஜீஸ்மென்ட்டுக்கும் இடிக்குதே....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... ரூல்ஸ் அண்ட் regulations ??????
//நாஸியா said...
ஆஹா ரொம்ப நல்ல போலீஸ்கார்! :))//
ஆமாம் இங்கே போலிஸ்காரங்க ரொம்ப அலட்டிக்கமாட்டாங்க, அதனால பயம் அவ்ளோ இருக்காது!!
//Jaleela said...
அப்ப இது வரை அங்கு சிக்ரேட் கீழே போய் குடித்தவர்களுக்கு காதுல ரொம்ப புகை வந்து இருக்கும்.//
ஆமாம் அதே தான்..
//போலிஸ் காரருக்கு ஷபிய பார்த்ததும் அவருக்கு மேலே பெரிய போலிஸா தெரிந்து இருப்பார் அதான் யோசித்து விட்டுட்டார்.//
அவ்ளோ பெரிய தொப்பை இல்லீங்க :)
நாஸியா said...
//ஆஹா ரொம்ப நல்ல போலீஸ்கார்! :))//
Idha avar ketrundha...
Enna romba nallavaanu oru vaartha sollitaanga... aavvvvvvuvuuuuunu aludhrupaaru.....
//Jaleela said...
ஏன் இந்த தலைப்பு ஹுஸைனாம்ம்மாவுக்கு போட்டியா வச்சமாதிரி இருக்கு.//
ஏங்க சும்மா இருக்கிற டரங்குப் பெட்டிய திறந்துடாதிங்க, அதுக்குள்ள என்னன்ன இருக்கப் போவுதோ..
//.......இதுக்கும் அந்த போலீஸ் அஜீஸ்மென்ட்டுக்கும் இடிக்குதே....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... ரூல்ஸ் அண்ட் regulations ??????//
Exactly, இதான் மனித இயல்பு, நமக்குன்னு வரும்போது குறுக்கு வழி ஏதாச்சும் இருக்காதான்னு யோசிப்போம் இல்லையா.
//அன்புத்தோழன் said...
நாஸியா said...
//ஆஹா ரொம்ப நல்ல போலீஸ்கார்! :))//
Idha avar ketrundha...
Enna romba nallavaanu oru vaartha sollitaanga... aavvvvvvuvuuuuunu aludhrupaaru.....//
அவரு ரொம்ப நல்லவர்தாம்ப்பா!!
Romba nalaikaprm back to forma brother.... kalakunga.... :-)))
ஒரு வாட்டி ஏறும்போது ஒரு ரேட்டு பேசிட்டு இறங்கும்போது நான் அவ்ளோ தான் பேசினேன்னு கூடுதலா காசு கேட்ட டாக்ஸி காரன் கூட ப்ரச்சனையானப்போ... அட பக்கி காசில்லடா.... அவ்ளோ தான் இருக்குனு எங்கள் தரப்பு வாதமும், தந்தா தான் போவேன்னு அவனும் வாதம் பண்ணிட்ருக்க...
சும்மா ரோட்ல போய்கிட்டு இருந்த போலீஸ்காரர பஞ்சாயத்துக்கு இழுக்க... தீர்ப்பு சொல்ல முடியாம கொலம்பி கடைசில அவர் பாக்கட்லேந்து முப்பது ரியால் எடுத்து குடுத்து... கலாஸ்(over)னு அவர் சொல்ல... ஆடி போய்டோம்....
உடனே சுத்தி நின்ன பங்காலி, இந்தியர்னு நாங்க தரோம் போலீஸ் காரர்கிட்ட அந்த காச திருப்பி குடுக்க சொல்ல.... அதை வாங்க மறுத்த அவர்.. கை குழந்தையோட நிக்குறீங்க.... இது நான் இறைவனுக்காக செஞ்சேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார்... அவர பாத்து எல்லாரும் சல்யூட்டு அடிச்சாங்க... இப்படியும் சில பேரு...
கொஞ்சம் கலர் கம்மின்னாலும்
நல்லாருக்கு ...
துணுக்கு மாதிரி எழுதியிருக்கிற ஒவ்வொன்றும் படிக்க சுவராஸ்யமா இருக்குது... நல்லாயிருக்கு...
படிக்க சுவராஸ்யமா இருக்கு..
சப்பான்காரங்களை ரொம்ப உழைப்பாளிகள்னு ரொம்பப் புகழ்ந்துதான் கேள்விப்பட்டிருக்கேன். இது புது செய்தி.
//வழக்கம்போல் மார்க்கெட் பகுதியில் பார்க்கிங் கிடைக்கவில்லை//
அங்கியுமா? :-(
//கால் மணி நேரம் சுற்றி சுற்றி வந்தும் //
என்னது, கால் மணிநேரம்தானா? உங்க காரை இல்லை, உங்களத்தான் சங்கிலியால கட்டிருக்கணும்!! இங்கல்லாம், ஒருமணி நேரம் சுத்துனாலே பார்க்கிங் கிடைக்காது தெரியுமா?
//அப்புறம் போலிஸிடம் போய் ஹாதா..ஹூதான்னு ஏதோ நமக்கு தெரிஞ்ச அரபியில் சொல்லி//
இப்பத்தான் புரியுது, நீங்க பேசின அரபி கொடும தாங்காமத்தான், போய்ட்டு வாப்பான்னு அனுப்பிருக்கார்!!
ஆனா, நெசமாவே, அரபு நாடுகள்ல போலீசுக்குப் (நம்மூரு போலீஸ் போல) பொழைக்கத் தெரியலன்னுதான் சொல்லணும்!! ;-)))
//என்ன காரணமென்றால், ’அமேரிக்க அதிபர் ஒபாமாவே//
பின்ன, சீன அதிபரச் சொல்லாம, (பனிப்போர்) எதிரி நாடான அமெரிக்க அதிபரச் சொன்னா? சீனாவாகப் போய் அபராதத்தோட விட்டிருக்காங்க!! இதுவே இந்தியா - பாகிஸ்தான் அதிபர்னு இருந்தா?
//Exactly, இதான் மனித இயல்பு, நமக்குன்னு வரும்போது குறுக்கு வழி ஏதாச்சும் இருக்காதான்னு யோசிப்போம் இல்லையா//
ம்ம்.. ஆமா..
//அன்புத்தோழன் said...
இது நான் இறைவனுக்காக செஞ்சேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார்... அவர பாத்து எல்லாரும் சல்யூட்டு அடிச்சாங்க... இப்படியும் சில பேரு.//
This is great!!
//நட்புடன் ஜமால் said...
கொஞ்சம் கலர் கம்மின்னாலும்
நல்லாருக்கு.//
அடிக்கடி வரமுடியலைப்பா
//அஹமது இர்ஷாத் said...
துணுக்கு மாதிரி எழுதியிருக்கிற ஒவ்வொன்றும் படிக்க சுவராஸ்யமா இருக்குது... நல்லாயிருக்கு...//
மகிழ்ச்சி இர்ஷாத், நன்றி.
// Mrs.Menagasathia said...
படிக்க சுவராஸ்யமா இருக்கு.//
மிக்க மகிழ்ச்சி, நன்றி மேனகா.
//ஹுஸைனம்மா said...
சப்பான்காரங்களை ரொம்ப உழைப்பாளிகள்னு ரொம்பப் புகழ்ந்துதான் கேள்விப்பட்டிருக்கேன். இது புது செய்தி.//
போட்டி போட்டு ஊதித்தள்ளிட்டாங்க, இப்போ உலகமயமாக்கலால் மாறிட்டாங்களோ?
ஹுஸைனம்மா said...
//என்னது, கால் மணிநேரம்தானா? உங்க காரை இல்லை, உங்களத்தான் சங்கிலியால கட்டிருக்கணும்!! இங்கல்லாம், ஒருமணி நேரம் சுத்துனாலே பார்க்கிங் கிடைக்காது தெரியுமா?//
உங்க ஊரு ரொம்ப கொடுமை பார்க்கிங்க்கு மணிக்கு 10, 20 திர்ஹம் வாங்குறீங்க
//ஆனா, நெசமாவே, அரபு நாடுகள்ல போலீசுக்குப் (நம்மூரு போலீஸ் போல) பொழைக்கத் தெரியலன்னுதான் சொல்லணும்!! ;-)))//
மேல் மட்டத்தில் இப்பவெல்லாம் லஞ்சம் புழங்க ஆரம்பிடுச்சுடுச்சு இங்கேயும்!!
கலைடாஸ்கோப் கலர் கலரா இருந்துச்சு ...
அருமையான தலைப்பு
நீங்களும் ஆரம்பிச்சாச்சா
/ஹாதா ஹூதா/ என்னா எப்படி பேசிருப்பீங்கனு நினைச்சுப்பார்த்தேன் சிரிப்பு சிரிப்பா வருது ஷஃபி
//ஆசிய நாடுகளில் ஏதேனும் ஒன்று இறுதி வரை வந்திருந்தால் இன்னும் நன்றாக ரசித்து பார்த்திருக்கலாம்.//
அதுவும் சரிதான், இருந்தாலும் இங்கிலாந்து முதன்முறையா சரித்திரம் படைச்சிருக்கு, வாழ்த்துக்கள்
//goma said...
கலைடாஸ்கோப் கலர் கலரா இருந்துச்சு ...
அருமையான தலைப்பு//
மிக்க மகிழ்ச்சிக்கா..
அபுஅஃப்ஸர் said...
நீங்களும் ஆரம்பிச்சாச்சா
// இருந்தாலும் இங்கிலாந்து முதன்முறையா சரித்திரம் படைச்சிருக்கு, வாழ்த்துக்கள்//
நன்றி அபூ, இப்ப கிரிக்கெட்டு ஏதோ நம்மளோட விளையாட்டு மாதிரில ஆயிடுச்சு!!
தலைப்பும் நன்று!
செய்தித் துணுக்குகளும்
மொறுமொறு!
//ஷ்ஷ்ஷ் அவங்க பெரிய ஆளுங்க, அதனால நாம தான் அனுசரிச்சு போகணுமாம்!!//
இருக்காதா பின்னே.
//அதனால நான் இந்த சீட்டுல ஏதாச்சும் எழுதிக்கிறேன்னு பேரு, ஐ.டி. நம்பர் மட்டும் எழுதிக்கொண்டார், //
பெரிய ஆளுதான் நீங்க எங்கேயெல்லாம் ஆள் வச்சிருக்கீங்க.
நல்லாயிருக்கு ஷஃபி உங்க கலைடாஸ்கோப் பார்வை.
//NIZAMUDEEN said...
தலைப்பும் நன்று!
செய்தித் துணுக்குகளும்
மொறுமொறு!//
மகிழ்ச்சி, நன்று நிஜாம்.
//அக்பர் said...
பெரிய ஆளுதான் நீங்க எங்கேயெல்லாம் ஆள் வச்சிருக்கீங்க.
நல்லாயிருக்கு ஷஃபி உங்க கலைடாஸ்கோப் பார்வை.//
அட நீங்க வேற அக்பர், ஹூசைனம்மா சொன்ன மாதிரி நான் பேசின அரபிய கேட்டுட்டு தொலஞ்சி போன்னு விட்டுட்டார் போல.
கலைடாஸ்கோப் -நல்ல தலைப்பு , அதே மாதிரி உள்ளே இருக்கிற விஷயமும் அருமை..
//ஸாதிகா said...
//இன்றைக்கு மட்டும் அவ்ங்களுக்கு மட்டும் புகை பிடிக்க அனுமதியாம், என்ன கொடுமையிது, அவர்களுக்கு நமது விதிமுறையை எடுத்துச் சொல்லலாமே எனக் கேட்டால், ஷ்ஷ்ஷ் அவங்க பெரிய ஆளுங்க, அதனால நாம தான் அனுசரிச்சு போகணுமாம்!!
// அதானே என்ன கொடுமை இது?கொள்கை பிடிப்பற்றதன்மை என்பதா?வியாபாரத்தில் நெளிவு சுளிவை கடைபிடித்து அட்ஜஸ்ட் செய்து தொழிலில் வெற்றிகாணும் முயற்சி என்பதா?//
ஒன்றைப் பெற வேண்டுமென்றால வேறாதவதொன்றை இழக்க நேரிடுமோ? கருத்துக்கு நன்றியக்கா!!
//ஜெய்லானி said...
கலைடாஸ்கோப் -நல்ல தலைப்பு , அதே மாதிரி உள்ளே இருக்கிற விஷயமும் அருமை..//
மிக்க மகிழ்ச்சி ஜெய்லானி, நன்றி.
தலைப்பே வித்த்யாசமாக உள்ளது..
ஒரே பதிவில் பல தகவல்கள்..
சைடு கேப்ல உங்க ஆதங்கத்தையும் சொல்லிருக்கீங்க..
நன்றாக இருந்தது நண்பரே..
பரவயில்லை தப்பிவிட்டிங்க...அபரதம் கட்டாமல்...சூப்பர்ப்...சிறிய சிறிய விஷ்யங்கள்...அருமை...
// இந்திரா said...
தலைப்பே வித்த்யாசமாக உள்ளது..
ஒரே பதிவில் பல தகவல்கள்..
சைடு கேப்ல உங்க ஆதங்கத்தையும் சொல்லிருக்கீங்க..
நன்றாக இருந்தது நண்பரே..//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//Geetha Achal said...
பரவயில்லை தப்பிவிட்டிங்க...அபரதம் கட்டாமல்...சூப்பர்ப்...சிறிய சிறிய விஷ்யங்கள்...அருமை...//
நேத்தும் அதே பக்கம் தான் போனேன், நல்ல வேளை பார்க்கிங் கிடைச்சுடுச்சு, கருத்துக்கு நன்றி
அன்பின் ஷஃபி
கலைடாஸ்கோப்பின் துணுக்குகள் - செய்திகள் அருமை. நல்லாவே இருக்கு - நல்வாழ்த்துகள் ஷஃபி
நட்புடன் சீனா
// cheena (சீனா) said... அன்பின் ஷஃபி கலைடாஸ்கோப்பின் துணுக்குகள் - செய்திகள் அருமை. நல்லாவே இருக்கு - நல்வாழ்த்துகள் ஷஃபி
நட்புடன் சீனா//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அண்ணே.
Post a Comment