|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!

சமீபத்தில் மின்னஞ்சலில் வந்தது...கொஞ்சம் யோசிச்சுப்பார்த்தால், இதுல நிறைய விஷயம் இருக்குங்கோ.


நாம சந்தோஷமா இருக்கும்போது எந்தவிதத்திலும் உத்திரவாதமோ, அத செய்வேன், இத செய்வேன்னு அலப்பரையோ, நிலாவ பிடிச்சு நீ நிற்க்கும் இடத்தில் நிறுத்துவேன் வானத்துக்கு குதிக்கிறதோ, ஏதோ ஒரு மூடில் அடுத்த மாசம் சம்பளம் வரட்டும் என்னோட செல்லத்திர்க்கு அரை கிலோ 'கவுனர் மாலை' வாங்கித்தர்ரேன்னு அலம்பல் பன்னிட்டு...அப்புறம் அடுப்பங்கரை பக்கம் உக்காந்து யோசிக்கக்கூடாதாம்.
அப்புறம் நாம கோவமா இருக்கும்போது, வாயை கம்னு மூடிக்கிட்டு கொஞ்சம் அமைதியா இருந்தால் பல வேன்டாத பின் விளைவுகளை தவிர்க்கலாம்னு சொல்ராங்க. இது இப்போ உள்ள‌ ஈமயில்/SMS உலகத்திர்க்கு உஷாரான ஒரு பரிந்துரை!! கொஞ்சம் 'SEND' க்ளிக்குவதர்க்கு முன்னால் மூனு முரை யோசிங்க. (ஹலோ ரொம்ப டெக்னிக்கலா 'RECALL' அப்படி இப்படீன்னு போவாதீங்கப்பா)
இன்னொன்னு என்னன்னா, ரொம்ப கவலையா இருக்கும்போது எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாதாம், என்னடா இது இப்படி ஆயிடுச்சேன்னு பட்டுன்னு எடுத்தேன் கவிழ்த்தேன்னு ஏதாவது செஞ்சுட்டு, அடடா, கொஞ்சம் பொறுத்து இருந்தால் அப்படி ஆயிருக்குமே, அதை மிஸ் பன்னி இருக்கமாட்டோமேன்னு நம்மள நாம்மாளே திட்டி தீர்க்குரதுக்கு பதில், ஏதாவது கவலை நம்மை தாக்கும்போது ‌'This too will pass' இதுவும் கடந்துவிடும்னு சொல்லி பொறுமையாய் இருக்கனுமாம்.


நம்மள்ள சிலபேரை பார்த்திருப்போம், லோலோன்னு ஒருத்தவங்க பின்னாடி அலைவாங்க, ஆனா இந்த பார்ட்டிய இவர் கேர் பன்னவே மாட்டார். ஒருத்தர் சின்சியரா விரும்புவாங்க ஆனா இந்த மன்மதனோ i dont mind தான் (இதை க‌ல்லூரி ப‌ருவ‌த்தில் கண்ணால் க‌ன்ட‌து...சில‌ பேரின் தாடிக‌ள் சொல்லும்).


உங்களை பற்றி லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் எல்லோரிடமும் சொல்லனும்னு தேவையில்லை.
ஒருத்தருக்கு உங்களை பிடிச்சுருச்சுன்னா அவங்களுக்கு அது தேவையில்லை!! அப்படிக்கு பிடிக்கலைனா நீங்க என்ன சொன்னாலும் அதை நம்ப போவது இல்லை!! கால விரயம்தான்.


உறவு என்பது ஒருத்தரை சமமாக புரிஞ்சுக்குற‌தில தான் இருக்காம். நீங்க ஒருத்தரை ஏதோ பெரிய ஆலமரம்னு நினைச்சு பழகுவீங்க, ஆனா அவரோ நீ ஒரு கில்லு கீரை ரேஞ்சுக்குத்தான்னு உங்களை மதிச்சார்னா, சாரி..குட்பை சொல்ரது நலம்.10 comments

சப்ராஸ் அபூ பக்கர் on June 20, 2009 at 6:09 PM  

///ரொம்ப கவலையா இருக்கும்போது எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாதாம்,///

உண்மை தான் நண்பா.....

தவறி எடுத்துட்டோம், ..................... (வேற என்னா?? எங்களையே எங்களுக்கு தெரியாமல் போய் விடும்....)

அப்படியே எங்க தோட்டப் பக்கமும் வாங்க.....
http://safrasvfm.blogspot.com


"ஷ‌ஃபி" உங்களில் ஒருவன் on June 20, 2009 at 7:56 PM  

சப்ராஸ் அபூ பக்கர் >>>வருகைக்கு மிக்க நன்றி நன்பரே!!


S.A. நவாஸுதீன் on June 21, 2009 at 10:11 AM  

படங்களில் உள்ள கருத்துக்களை வட்டார மொழியில் நல்ல எழுத்து நடையோடு நகைச்சுவையா அழகா சொல்லி இருக்கீங்க.

சொல்லி இருக்கும் கருத்துக்கள் எல்லாமே ரொம்ப நல்ல விசயம்தான்.


"ஷ‌ஃபி" உங்களில் ஒருவன் on June 21, 2009 at 10:17 AM  

நன்றி நவாஸ், எப்போதோ மின்னஞ்சலில் வந்தது, மொழிபெயர்த்து பகிர்ந்துக்கொள்கிரேன். உபயோகமாக இருந்தால் மகிழ்ச்சி தான்.


அபுஅஃப்ஸர் on June 21, 2009 at 12:56 PM  

நல்ல பயனுள்ள(??) டிப்ஸ்தான்

நல்லாயிருக்கு படிக்க‌


"ஷ‌ஃபி" உங்களில் ஒருவன் on June 21, 2009 at 1:02 PM  

//அபுஅஃப்ஸர் said...
நல்ல பயனுள்ள(??) டிப்ஸ்தான்..

நல்லாயிருக்கு படிக்க‌//

வாங்க!! புது வாப்பாவாகிய 'அபூ'


"ஷ‌ஃபி" உங்களில் ஒருவன் on June 21, 2009 at 1:29 PM  

//அபுஅஃப்ஸர் said...
நல்ல பயனுள்ள(??) டிப்ஸ்தான்//

மாத்தியாச்சு அபூ, ஊருக்கு போய் புதுசா கண்ணாடி போட்டுட்டு வந்திட்டியலோ? ஹி..ஹி..


நட்புடன் ஜமால் on June 21, 2009 at 3:55 PM  

ரொம்ப கவலையாக இருக்கும் போது எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாது என்பது கூட ஒரு முடிவு தானேப்பா


"ஷ‌ஃபி" உங்களில் ஒருவன் on June 21, 2009 at 4:19 PM  

//நட்புடன் ஜமால் said...
ரொம்ப கவலையாக இருக்கும் போது எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாது என்பது கூட ஒரு முடிவு தானேப்பா//

வாங்க ஜமால்... நீங்க சொல்ரது புரியுது, ஆனா நான் அத சொல்லலைனு புரிஞ்சுக்குங்க.


Jaleela on June 30, 2009 at 3:20 PM  

//அப்புறம் நாம கோவமா இருக்கும்போது, வாயை கம்னு மூடிக்கிட்டு கொஞ்சம் அமைதியா இருந்தால் பல வேன்டாத பின் விளைவுகளை தவிர்க்கலாம்னு சொல்ராங்க.//

ஷ‌பி
மிகச்சரியான டிப்ஸ்கள் தான்


//கோப‌ம் ரொம்ப‌ வ‌ரும் போது வாழ‌க்கையில் விழுந்து விழுந்து சிரித்த‌ அனுப‌வ‌ம் ஒன்றை எப்போது நினைத்து கொண்டே இருக்க‌னும், அதை நினைத்து பாருங்க‌ள், கோப‌ம் எப்ப‌டி வ‌ந்த‌து என்றே தெரியாது.//